செவ்வாய், 20 ஜனவரி, 2015

பெண்கள் பொட்டு வைத்தல் - ஒரு ஆராய்ச்சி


பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வது பற்றி கூகுளில் தேடியபோது கிடைத்தவை.

http://senthilvayal.com/2012/04/08/ என்ற தளத்தில் வந்த பதிவு. தளத்தின் உரிமையாளரிடமிருந்து உரிய அனுமதி பெற்று மீள் பதிவாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

அழகிற்கு அழகு சேர்க்கும் பொட்டு

பெண்களின் முகத்திற்கு அழகையும் வசீகரத்தையும் தருவதுவது நெற்றி பொட்டுதான். நம் முன்னோர்கள் அனைவரும் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டின் அழகே தனி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் முகத்திற்கேற்றவாறு பொட்டு வைக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலும் சிந்தனைத்திறனும் திறனுக்கும் உரிய இடம் நெற்றி. யோகக் கலையில் இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை நாம் உணர்ந்திருப்போம்.
நாம் வெறும் நெற்றியாக இருக்ககூடாது என்று முன்னோர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.
இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் மங்கையர்கள் பல வித டிசைன்களில் முகத்தை அழகுபடுத்தி கொள்கின்றனர். நாம் வைக்கும் பொட்டு நம் முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். ஆதலால் முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை தேர்வு செய்து முகத்தின் அழகை அதிகரிக்க செய்யுங்கள் என அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீல் வடிவ பொட்டு
வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

இதய வடிவ முகம்
இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

வட்ட பொட்டு
ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.
சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.
முக்கோணப் பொட்டுக்கள்
முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.
முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான்.

http://www.valaitamil.com/what-are-benefit-of-applying-kumkum-than-a-bindi_10132.html என்ற தளத்தில் இருந்து எடுத்த ஸ்கிரீன் ஷாட்
இந்த விடியோவையும் பார்க்கவும்



கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா கூடாதா என்பதற்கு நல்ல விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

http://jothidanilayam.blogspot.in/2014/02/blog-post_9.html

என் பதிவு ஒன்றில் பெண்கள் கண்டிப்பாக பொட்டு வைத்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருந்தேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் விதவைகள் என்ன செய்வது என்று கேட்டிருந்தார். அவருக்கான அறிவியல் பூர்வமான பதில் மேற்குறிப்பிட்ட பதிவில் இருக்கிறது.  

15 கருத்துகள்:

  1. பொட்டு வைத்த பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அப்ப பொட்டு வைக்காத பெண்களை பிடிக்காதா என்று கேட்க கூடாது . வைக்காதவர்களையும் பிடிக்கும் ஆனால் வைத்தவர்களை சற்று அதிகமாக பிடிக்கும். அழகுக்காவது மாற்று மதத்தினரும் வைத்து கொள்ளலாம் லிப்ஸ்டிக் இடுவது போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏங்க மதுரை, உங்களுக்கே இது ஓவராக தெரியலயா? என்னமோ எல்லாப் பொண்ணுங்களும், உங்களுக்கு பிடிக்கணும்ன்னு அலையுறா மாதிரி பிற மதத்தினரும் கூட பொட்டு வைச்சினும்ன்னு கண்டிசன் போடுறீங்க!!!

      நீக்கு
  2. அட! புடவை சமாச்சாரத்தில் ஜீரோன்னு சொல்லிட்டு, இப்ப பொட்டு சமாச்சாரத்தில் எக்ஸ்பெர்ட்டாக இருக்கீங்க:-))))

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மகளிர் திலகம் வைத்துக்கொள்வது பற்றிய தங்களது பதிவு மூலம் பல புதிய செய்திகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. பொட்டு வைத்த முகத்திற்கு எப்பவும் ஒரு அழகு உண்டு...
    நல்லதொரு கட்டுரைப் பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  5. பொட்டு வைப்பதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள். அடுத்த பதிவு ‘நீறில்லா நெற்றி பாழ்’ பற்றி தானே?

    பதிலளிநீக்கு
  6. சும்மா புகுந்து விளையாடுறீங்க...
    ஆராய்ச்சி பண்ணி பண்ணி இன்னும் மீட்டுங்க

    பதிலளிநீக்கு
  7. பொட்டு வைப்பதில் இத்தனை விவரங்களா? அருமை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, பொட்டு வைத்தமுகமோ, குங்குமப் பொட்டின் மங்கலம், போன்ற திரைப்படப் பாடல்கள் இருக்கின்றன.

    ஏதோ, எனக்கு நினைவுக்கு வந்தது!

    :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுகள்தான் வாழ்க்கை, இல்லையா, ஸ்ரீராம்.

      பொட்டு வைப்பதைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் இருக்கிறது. குடும்பப் பெண்கள் பொட்டில்லாமல் இருக்கக் கூடாது என்று ஒரு பதிவில் நான் எழுதப் போக, அதைப் படித்த ஒரு பெண்மணி, அதை மூடத்தனம் என்று விமரிசிக்க, என் மனம் சுக்கு நூறாக உடைந்து போக, அப்புறம்தான் இந்த பொட்டு சமாசாரத்தைப் பற்றி மற்ற மக்கள் என்ன சொல்கிறார்க்ள என்று தேடினேன். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

      நீக்கு
    2. அய்யா பல சிறப்பான தகவல்களை பகிரும் தங்கள் மனம் எவ்வளவு வருந்துகிறது என்பதை உணர முடிகிறது. தயவு செய்து அந்த 'மூடத்தனமான' குப்பைகளை விட்டொழித்துவிட்டு விலகி வாருங்கள். உங்களிடம் ஒளிந்துள்ள மற்ற பல நல்லவற்றை பகிருங்கள்.

      நீக்கு
    3. அன்பிற்கு நன்றி. செஞ்சுடறேன், அன்பே சிவம்.

      நீக்கு