பொதுவாக ஆண்கள் யாரும் அடுத்தவர்கள் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். இருந்தாலும் ஏன் இந்தப் பதிவை எழுதுகிறேன் என்றால் பெண்களுக்கான அறிவுரைகள் சொன்னீர்களே, எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என்று சில ஆண்கள் கேட்டதால்தான். இந்தப் பதிவைப் பெண்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.
1. ஆண்கள் என்றால் ஏதாவது ஒரு உத்தியோகம் செய்து வருமானம் ஈட்டவேண்டும். அது மாதச் சம்பளமாகவோ அல்லது வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ இருக்கலாம்.
2. வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் "ஒன் ஸ்டெப் பேக்". உங்களுக்கான அறிவுரை கடைசியில் இருக்கிறது.
3. சம்பளக்காரர்கள் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே முழுவதையும் மனைவி கையில் கொடுத்து விட்டு அவ்வப்போது தேவைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.
4. வீட்டில் அனைத்து முடிவுகளையும் ஆண்கள்தான் எடுக்கவேண்டும். ஆனால் முதலில் இல்லாளிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும்.
5. எந்தக் காரியமும் வெற்றியடைந்தால் புகழை மனைவிக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும். தோல்வியடைந்தால் பழியை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
6. ஆண்களுக்குப் பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்ய பெண்களே பொருத்தமானவர்கள். ஆகவே உங்கள் உடைகளை அவர்கள் வாங்குவார்கள். அதைக் குறை சொல்லாமல் போட்டுக்கொள்வது உங்கள் கடமை.
7. வெளியில் செல்லும்போது நீங்கள்தான் குடும்பத்தலைவர் என்று காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் எந்த முடிவுகளையும் நீங்களாக எடுக்கக் கூடாது.
8. நண்பர்கள் வந்தால் காப்பி கொண்டு வரச் சொல்லக்கூடாது. அப்படி அவருக்குக் காப்பி கொடுக்கவேண்டுமானால் வெளியில் கூட்டிக்கொண்டு போய் நல்ல காப்பிக்கடையில் காப்பி வாங்கிக் கொடுக்கவும். அப்படியே நீங்களும் ஒரு நல்ல காப்பி குடித்துக் கொள்ளலாம் இதற்காக அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
9. மனைவி சமைக்கும் சாப்பாட்டில் எந்தக் குறையும் சொல்லக்கூடாது. உப்பு இல்லாவிட்டால் அப்படியே சாப்பிட வேண்டுமே ஒழிய உப்பு இல்லை என்று சொல்லக் கூடாது..
10. கடைசியாக வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டான ஆலோசனை. உங்கள் வியாபாரம் அல்லது தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதா? அப்படியானால் மேற்கண்ட எந்த யோசனைகளையும் கடைப்பிடிக்காதீர்கள்.
11. தொழிலோ அல்லது வியாபாரமோ சரியாக இல்லையா? மனைவியிடம் யோசனை கேட்டு அதன்படியே செய்யுங்கள். ஆறு மாதத்தில் தொழில் அல்லது வியாபாரம் முடிவுக்கு வந்து விடும். பிறகு மாதச்சம்பளத்தில் சேர்ந்து இங்கு சொன்ன அனைத்து அறிவுரைகளையும் கடைப்பிடிக்கவும்.
இன்னும் நிறைய யோசனைகள் கைவசம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இவ்வளவுக்குத்தான் பர்மிஷன் கிடைத்தது.
பதிவை கோபாலுக்கு ஃபார்வேர்டு செய்யறேன்.
பதிலளிநீக்குஒரு வேளை, இதில் சொல்லியிருப்பதை விட அதிகமாக கோபால் சார் செய்கிறாரோ என்னவோ? அப்படியிருந்தால் அதையும் சொன்னால் நாங்களும் பின்பற்றி எங்கள் வீட்டு பொம்மனாட்டிகளிடம் நல்ல பேர் வாங்க கொஞ்சம் ஹெல்ப் செய்யுங்களேன். உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்.
நீக்குசேலம் துளசி மைந்தன்
கோபால் சாருக்கு உபயோகமாக இதில் புதிதாக ஏதுமில்லையே !
நீக்குஹா....ஹா... ஹா...
பதிலளிநீக்குமற்ற பாயின்ட்ஸ்களுக்கும் சீக்கிரம் பெர்மிஷன் கிடைக்கட்டும்!
அட எல்லாமும் நான் கடைபிடிக்கும்
பதிலளிநீக்குஅபாயம் வராது காக்கும்
அற்புத உபாயங்களே
ஆலோசனைகளில் இழையோடும்
நகைச்சுவை உணர்வினை மிகவும் இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
// சம்பளக்காரர்கள் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே முழுவதையும் மனைவி கையில் கொடுத்து விட்டு அவ்வப்போது தேவைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.//
பதிலளிநீக்குஐயா வங்கியில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இப்போது சம்பளத்தை கையில் கொடுப்பதில்லை. வங்கி கணக்கில் சேர்த்து விடுகிறார்கள். என் செய்ய?
இதற்கான பதிலையும் வீட்டில் அனுமதி பெற்றே தர விழைகின்றேன்!
ATM கார்டு அவங்க கையில் அல்லவா உள்ளது.
நீக்குJayakumar
நான், நானேதான் எல்லாமும் எழுதுகிறேன். யாரும் சொல்லிக்கொடுத்தோ இல்லை பெர்மிசன் கொடுத்தோ எல்லாம் நான் எழுதுவது இல்லை. எனக்கென்ன தைரியம் இல்லையா, என்ன?
நீக்கு(பின்பக்கம் திரும்பி) என்னம்மா நீ சொல்லச்சொன்னதை நான் சரியாகத்தானே சொல்லியிருக்கிறேன்?
திருச்சி தாரு
கரெக்ட்டா பாய்ன்ட புடிச்சிட்டீங்க.
நீக்குஅனைத்தும் சக்தி மயம்...!
பதிலளிநீக்கு///பொதுவாக ஆண்கள் யாரும் அடுத்தவர்கள் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். ///
பதிலளிநீக்குஆரம்பமே தப்பு பொதுவாக ஆண்கள் யாரும் பெண்களின் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். இந்த வரியை தவிர மற்றவைகள் மிக சரி
இந்த அறிவுரைகள் எல்லாம் நீங்கள் சொந்தமாக எழுதியதா அல்லது வீட்டுகாரம்ம எழுதி கொடுத்து மிரட்டி போடஸ் சொன்னதா?
பதிலளிநீக்குஎன் வீட்டிலெல்லாம் என் ராஜ்யம்தானாக்கும். என் பார்யாள் எல்லாம் கப்சிப் கபர்தார்தான். வீட்டுக்காரம்மா மிரட்டவே வேண்டியதில்லை என்று கோவை கவுண்டர் கண்டிப்பாக சொல்லுவார். ஏனென்றால் அப்படித்தான் அவர் இல்லத்தரசி சொல்லச்சொல்லியிருக்கிறாராம். சரிதானே அய்யா?
நீக்குதிருச்சி அஞ்சு
மிரட்ட வேறு வேண்டுமாக்கும். ஒரு பார்வை பார்த்தாலே போதாதா?
நீக்குஅலறிக்கொண்டு போட்டுவிட மாட்டோமா என்ன?
திருச்சி காயத்ரி மணாளன்.
சரி, சரி, சரி. போதுமா?
நீக்குஐயா, நீங்கள் அனுபவஸ்தர். சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆகவே முடிந்தவரை பின்பற்ற முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குமரத் தமிழர்களுக்கான இந்த ஆலோசனைகள் மறத் தமிழனான எனக்கு ஒத்து வருவது போல் தெரியவில்லை. அதனால்தான் எனக்கு பல கஷ்டங்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குத.ம.5
அனுமதி பெற்றுவெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் அறிவுரைகளைப் படித்து வாய்விட்டுச் சிரித்தேன். சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த என் மனைவியும் படித்தார். இருவரும் சேர்ந்து ரசித்து, சிரித்து மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்குநன்றி...நன்றி.
மனைவியும் "படித்தார்" என்று மரியாதையோடு சொல்லும்போதே நான் புரிந்து கொண்டேன் உங்களை பற்றி. கவலையே படாதீர்கள். நானும் உங்களை மாதிரிதான். நான் சொல்லியிருந்தால் "மனைவியும் படித்தார்ர்ர்ர்" என்று ரொம்ப மரியாதை கொடுத்திருப்பேன்
நீக்குசேலம் காயத்ரி மணாளன்
புது வருசத்தைக் கொண்டாட தமிழர்களாகிய நமது உடன்பிறப்புகள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை 25௦ கோடி என்று ஒரு சித்தி வந்துள்ளது. ஆனால் இலவசங்களுக்கு இது பற்றாமல் போய்விடும் போலுள்ளது என்று அரசு கவலைப்படுகிறதாம்.
பதிலளிநீக்குஇதற்கு என்ன ஆலோசனை சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது நாளிதழில் இந்த செய்தியை பார்த்தேன்.
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் கஞ்சா பயிரிடவும்,விற்பனை செய்யவும் அரசாங்கமே அனுமதித்து உள்ளது.
நம் ஊரில் கஞ்சா வைத்து இருந்தால் கைது செய்கிறார்கள். மலேசியா ,சிங்கப்பூரில் மரண தண்டனை. ஆனால் கொலராடோவில் அனுமதி. ஏன் என்று கேட்டால் மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க இந்த மாதிரியான சட்டமாம்.
1 8 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம். இப்படியாக கஜானா நிரப்ப ஓர் வழியை கொலராடோ காட்டி உள்ளது.
நமக்குத்தான் வெள்ளைத்தோல்காரர்கள் எது செய்தாலும் சரிதானே. இத்தகைய சீரழிவுக் கலாச்சாரம் இங்கேயும் பரவும் காலம் வெகு தூரத்தில் இல்லை ...
தெருவுக்கு தெரு அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை திறந்தது போல கஞ்சாக் கடைகளையும் திறந்து வைத்து கஜானாவை நிரப்பி மக்களை இலவசங்களால் திக்குமுக்காட வைக்கப்போகிறது.
நினைத்துப்பார்க்கவே சந்தோசமாக இருக்கிறதா இல்லையா ?
இதைப்பற்றி அய்யா அவர்கள் ஒரு பதிவு வெளியிட்டால் என்ன?
சேலம் குரு
ஜமாய்ச்சுடுவோம். ஆமா, கஞ்சான்னா என்ன?
நீக்குcocaine என்ற போதை வஸ்து கனடாவில் மெடிக்கல் உபயோகத்திற்க்காக லீகலைஸ் பண்ணப்படு இருக்க்கிறது. அது போல அமெரிக்காவின் சில மாநிலங்களில் இது அனுமதிக்கப்பட்டி இருக்கிறது. இந்த cocaine நை டாக்கடரின் மருத்துவ சீட்டு மூலம்தான் மெடிக்கல் ஸ்டோர்களில் வாங்க முடியும்.. இது டாஸ்மாக் போல எங்கும் திறக்கபடவில்லை..
நீக்கு//18 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம். இப்படியாக கஜானா நிரப்ப ஓர் வழியை கொலராடோ காட்டி உள்ளது. //
நீக்குமிகவும் தவறான செய்தி நண்பரே
அய்யாவுக்கும் நமக்கும் தெரிந்ததெல்லாம் தமிழ் கஞ்சன்தான்.
நீக்குசெலவு செய்யாத ஆளை "கஞ்சா" என்று கூப்பிடுவோம். ஆனால் இது ஆங்கிலத்தில் "கஞ்சா" எனப்படும் போதை மருந்து. நம்மை மாதிரி நல்ல ஆட்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லைதான்.
திருச்சி அஞ்சு
தமிழில் கஞ்சனை கூப்பிடுவோமல்லவா. அந்த KANJA மட்டும்தான் நமக்கு தெரியும். இவர்கள் பேசுவது ஆங்கில GANJA பற்றி. நமக்கு அதேல்லாம் வேண்டாம். என்றும் போல நல்லபிள்ளைகள் ஆகவே நாம் இருப்போம்.
நீக்குதிருச்சி தாரு .
"கஞ்சனைப் பாடும் வாயால் கஞ்சாவைப் பாடுவேனோ" என்று MKT அந்தக் காலத்திலேயே பாடியதாக ஞாபகம். இருந்தாலும் இப்போது கஞ்சன் - கஞ்சா இவைகளைப் பற்றி விவாதம் தொடங்கிவிட்டபடியால் கூடிய சீக்கிரம் இதை ஒப்பிட்டு (சாப்பிடும் ஒப்பிட்டு வேறு - அதை தனியாக டீல் செய்யப்படும்) ஒரு பதிவு போடப்படும்.
நீக்குஆகா ஆகா
பதிலளிநீக்குஅறிவுரை அருமை.
பதிலளிநீக்குஅனுபவபாடமான ஆலோசனைகள் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குஆண்களுக்கான அறிவுரைகளை விரைவில் பெர்மிஷன் வாங்கி இன்னும் தொடருங்க ஐயா...
பதிலளிநீக்கு11 வது அறிவுரை முற்றிலும் உண்மை .ரசித்தேன் 😁😁😁
பதிலளிநீக்கு//இன்னும் நிறைய யோசனைகள் கைவசம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இவ்வளவுக்குத்தான் பர்மிஷன் கிடைத்தது.//
பதிலளிநீக்குசீக்கிரம் அனுமதி வாங்குங்க!
மீதமுள்ள அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறோம், அனுமதி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.
பதிலளிநீக்குஐயோ.... இப்படியெல்லாம் இருக்க வேண்டுமா....?
பதிலளிநீக்குநான் அடுத்த ஜென்மத்தில் கூட ஆணாகப் பிறக்கக்கூடாது....