கஞ்சா என்றால் என்ன ? இது சாப்பிடும் பொருளா? அல்லது குடிக்கும் திரவமா ? அல்லது புகைக்கும் வஸ்துவா ? எதுவென்று அறியாமல் அஞ்ஞானத்தில் உழலும் மானிடரைக் கடைத்தேற்றி மெய்ஞ்ஞானம் போதிப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.
ராமன் என்று பெயர் கொண்டவனை அழைக்க வேண்டுமானால் "ராமா" என்று கூப்பிடுவோம் அல்லவா. அந்த மாதிரி ஒரு கஞ்சனை அழைக்கவேண்டுமானால் "கஞ்சா" என்று கூப்பிடுவார்களாக்கும் என்றுதான் இதுநாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன். என் நம்பிக்கையில் இப்போது மண்ணை வாரிக்கொட்டி விட்டார்கள்.
கஞ்சா என்பது ஒரு சர்வதேச பொருளாதார, கலாச்சார, அரசியல் விவகாரமாமே. பல கோடிகள் புரளும் விஷயமாமே. என் இளம் வயதிலேயே தெரிந்திருந்தால் நான் இப்போது கோடிகளில் புரண்டு கொண்டிருப்பேன்.(அல்லது ஏதாவது ஜெயிலில் களி சாப்பிட்டு நன்றாக புஷ்டியாக இருந்திருப்பேன்). விதி வலியது இல்லையா? விதி அப்படி என்னை அதிர்ஷ்டக்காரனாக்கவில்லை.
Better late than never அப்படீன்னு இங்கிலீஸ்ல ஒரு பழமொழி இருக்கு. அதனால வயசானா பரவாயில்ல, இது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணினேன். கூகுளாண்டவரைத் தேடிப்போய் வேண்டினால் அவர் சொல்கிறார் - "மகனே, உன்னுடைய வயதில் இது வேண்டாம், விட்டுடு" - அப்படீங்கறார். நாம விட்டுடுவோமா? அதெல்லாம் முடியாது, எனக்குத் தெரிந்தே ஆகணும் அப்படீன்னு இரண்டு காலிலேயும் நின்றேன். ஒத்தைக் காலிலே நிக்கற வயசா எனக்கு.
அவர் சொன்னது எல்லாம் முழுவதும் எனக்கு மனசிலாகல. எனக்குப் புரிஞ்ச மட்டில் சொல்றேன். கேட்டுக்கோங்க.
கஞ்சா என்பது ஒரு செடியிலிருந்து வருவது. அந்தச் செடியின் பெயர்: Cannabis sativa. எங்கியோ கேட்ட பேரா இருக்குதே என்று மூளையைக் கசக்கியதில் காலேஜ்ல படிக்கறப்போ பாட்டனி வாத்தியார் இதைச்சொல்லிக்கொடுத்த ஞாபகம் வந்தது. "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்று சௌகார் ஜானகி பாட்டு பின்புலத்தில் கேட்டது.
உத்தரப் பிரதேசத்தில் டூர் போகும்போது ரயில்வே லைன் ஓரத்தில் இந்தச் செடி ஏகத்திற்கு முளைத்துக் கிடக்கும். படம் பாருங்கள்.
இந்தச்செடியில் Tetrahydrocannabinol என்கிற ஒரு வேதியியல் பொருள் இருக்கிறது. இது பல மருத்துவக் குணங்கள் கொண்டது.
இந்த மருத்துவ குணங்களுக்காக இதை அந்தக் காலத்தில் பல நோய்களைக் குணப்படுத்த உபயோகித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது இரண்டாவது வரியில் இருக்கிறது. அதாவது கனவு காணுவது. (dreams) இந்தக் குணம் மனிதனை இயல்பு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது.அதாவது பூலோகத்திலிருந்து ஆகாயத்திற்கு அதாவது சொர்க்கலோகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இது ஒரு பரவச நிலையாகும். தன்னைச்சுற்றி அப்சரஸ்கள் நடனமாடுவது போல் இருக்கும். ஒரு முறை இந்தப் பரவச நிலையை அனுபவித்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்த நிலைக்குப் போவதற்கு ஆசைப் படுவது இயற்கையே அல்லவா?
இதுதானுங்க "கஞ்சா". இதற்கு மார்க்கெட்டில் பல பெயர்கள் உண்டு. ஹஷீஷ், பாட், மரிஜுவானா, இப்படி பல பெயர்கள்.
இப்படி பூலோகத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தைக் காணும் இந்த மருந்திற்கு பல நாட்டு அரசு படுபாவிகள் தடை விதித்திருக்கிறார்கள். நம் நாட்டிலும்தான். ஆனால் எந்தப்பொருளுக்கும் தடை விதித்தால் அதற்கு மதிப்பு கூடி விடும் அல்லவா? அப்படி கஞ்சாவிற்கும் மதிப்பு அதிகம். நன்றாக சுத்தப்படுத்தப்பட்ட கஞ்சா ஒரு வெள்ளைப் பவுடராக இருக்கும். இது ஒரு கிலோ கோடிக்கணக்கில் விலை மதிப்புப் பெற்றது.
தெருவிற்குத் தெரு டாஸ்மாக் விற்பனை நிலையங்களை அனுமதிக்கும் அரசு ஏன் இதற்கு கடை விரிக்கக் கூடாது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கஞ்சா கிடைக்காத இடம் இல்லை. பள்ளிக்கூட வாசலில் இருக்கும் பெட்டிக்டைகளில் கூட இது கிடைப்பதாக வதந்தி.
முன்னேற்றமடைந்துள்ள அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் இதை சட்டபூர்வமானதாகச் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தைப் பற்றிய விவரம் வேண்டுவோர் இங்கே செல்லவும். ஆகவே வசதி படைத்த பதிவர்கள் பூலோக ஸ்வர்க்கத்தைக் காணத் தயாராகுங்கள்.
Thanks for the info . Please do not recommend to any one to see the heaven by through this.
பதிலளிநீக்குஇந்தப் பதிவைப் படிப்பவர்கள் கெட்டுப்போகமாட்டார்கள். ஏற்கெனவே கெட்டுப்போனவர்கள் இந்தப் பதிவைப் படிக்கமாட்டார்கள்.
நீக்குஅட...! பஞ்ச்...!
நீக்குஇந்தச் செடி வளர்ப்பது என்பது சட்ட விரோதமாயிற்றே... ரயிலில் போகும்போது பார்க்க முடிகிறது என்றால் காவல்துறை கவனிக்கவில்லை என்று அர்த்தமா?
பதிலளிநீக்குமேலும் அந்தச் செடியின் படத்தைப் பார்த்தால் நாம் பார்க்கும் பல சேடிப் புதர்களில் தானாகவே வளர்ந்திருக்கும் செடிகளில் இதும் இருக்கும் போலத் தோன்றுகிறதே!
இந்த செடிகள் அந்த காலத்தில் இருந்து இருப்பதுதான். அதை மருந்துக்கு உபயோகப்படுத்தும் வரை எந்த தொந்திரவும் இல்லை - ஆயுர்வேத மருந்துக்கு பயன்படுவது போல.
நீக்குஎன்று அதை வியாபாரத்திற்காக வளர்க்க ஆரம்பித்தார்களோ அன்று அதற்கு சனி பிடித்துகொண்டது.
திருச்சி அஞ்சு
திரு.வெங்கட் நாகராஜ் கூறியிருப்பது போல் இது வட இந்தியாவில் பல இடங்களில் களை மாதிரி வளர்வதுதான். இதில் இருந்து கஞ்சா எடுப்பதற்கு தனி வழிகள் உண்டு. எல்லோராலும் முடியாது.
நீக்குஅந்த வழி முறைகளை பற்றி ஒரு பதிவு போட்டால் பல தொழில் முனைவர்களை உருவாகிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்குமே
நீக்குதிருச்சி தாரு
என்னது ஆயுர்வேத மருந்தா...?
பதிலளிநீக்குஉங்களுக்கு இப்போது தான் ஐயா வயது திரும்புகிறது... ஹா... ஹா...
பாருங்க தனபாலன், நீங்க எல்லாம் வயசுப் பசங்க, இன்னும் நீண்ட நாள் வாழப்போறவங்க, இந்த மாதிரி சமாச்சாரங்களை எல்லாம் எப்ப வேணா அனுபவிச்சுக்கலாம்.
நீக்குஆனா, என்னைப் பாருங்க, ராத்திரி தூங்கப்போனா, காலைல எந்திரிச்சாத்தான் நெஜம், ஒவ்வொரு நாளையும் பொன் போலப் பாதுகாத்து வாழ்க்கையைக் கொண்டு போகணும். சில சுகங்களை இப்ப அனுபவிக்கலேன்னா, அப்புறம் எப்பவும் அனுபவிக்க முடியாமப் போயிடுமே, அதை மனசில வச்சுக்குங்க.
//இந்தப் பதிவைப் படிப்பவர்கள் கெட்டுப்போகமாட்டார்கள். ஏற்கெனவே கெட்டுப்போனவர்கள் இந்தப் பதிவைப்
நீக்குபடிக்கமாட்டார்கள்.//
அய்யா அவர்களே சூப்பர் ஸ்டார் அவர்கள் ரேஞ்சுக்கு இப்படி ஒரு பஞ்ச் டயலாக்கை பின்னூட்டத்திற்கு பதிலாக கொடுத்துவிட்டு
"ராத்திரி தூங்கப்போனா, காலைல எந்திரிச்சாத்தான் நெஜம்," என்கிறீர்களே. இது உங்களுக்கே நியாயமாகப்படுகிறதா?
எங்களை பொறுத்த வரை, சோம்பேறிதனமே படாமல் கூகுளாண்டவரே துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடுமளவுக்கு உள்ளே புகுந்து எந்திருக்கும் நீங்கள் நவீன உலக மார்கண்டேயர்தான்.
வீட்டுக்காரம்மாவிடம் சொல்லி ஒரு திருஷ்டி சுற்றி போட சொல்லுங்கள்.
திருச்சி தாரு
//சில சுகங்களை இப்ப அனுபவிக்கலேன்னா, அப்புறம் எப்பவும் அனுபவிக்க முடியாமப் போயிடுமே, அதை மனசில வச்சுக்குங்க. //
நீக்குஆனால் அத்தகைய சுகங்கள் வேண்டுமா என்று யோசனை செய்யவேண்டும் இல்லையா?
எப்படியும் நமது காலம் தீர்ந்த பிறகு சொர்க்க லோகம் போகத்தான் போகிறோம். இப்போதே எதற்கு சொர்க்க லோகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல்?
சேலம் துளசி மைந்தன்
//சில சுகங்களை இப்ப அனுபவிக்கலேன்னா, அப்புறம் எப்பவும் அனுபவிக்க முடியாமப் போயிடுமே, அதை மனசில வச்சுக்குங்க. //
நீக்குஆனால் அத்தகைய சுகங்கள் வேண்டுமா என்று யோசனை செய்யவேண்டும் இல்லையா?
எப்படியும் நமது காலம் தீர்ந்த பிறகு சொர்க்க லோகம் போகத்தான் போகிறோம். இப்போதே எதற்கு சொர்க்க லோகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல்?
சேலம் துளசி மைந்தன்
உங்களுக்கு உண்மையான சொர்க்கம் வேண்டுமா இல்லை இந்த மாதிரி தற்காலிக சொர்க்கம் வேண்டுமா என்பதில் முதலில் தெளிவாக இருந்தால் நாம் கஞ்சா அருந்த வேண்டுமா இல்லையா என்று தீர்மானித்துக்கொள்ளலாம்.
நீக்குஇப்போதே சொர்க்கம் வேண்டுமென்றால் கஞ்சா தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக நாம் இறந்த பிறகு சொர்க்கம் கிடைக்காது.
இப்போது கஞ்சா போன்ற இன்னபிற லாகிரி வஸ்துக்களை உபயோகிக்காமல் இருந்தால் சொர்க்கத்தில் நமக்கு ஒரு இடம் கண்டிப்பாக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும்.
சேலம் குரு
உங்களுக்கு உண்மையான சொர்க்கம் வேண்டுமா இல்லை இந்த மாதிரி தற்காலிக சொர்க்கம் வேண்டுமா என்பதில் முதலில் தெளிவாக இருந்தால் நாம் கஞ்சா அருந்த வேண்டுமா இல்லையா என்று தீர்மானித்துக்கொள்ளலாம்.
நீக்குஇப்போதே சொர்க்கம் வேண்டுமென்றால் கஞ்சா தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக நாம் இறந்த பிறகு சொர்க்கம் கிடைக்காது.
இப்போது கஞ்சா போன்ற இன்னபிற லாகிரி வஸ்துக்களை உபயோகிக்காமல் இருந்தால் சொர்க்கத்தில் நமக்கு ஒரு இடம் கண்டிப்பாக ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும்.
சேலம் குரு
என்ன தைரியம்.
நீக்குஒரே ஒரு சந்தேகம்தான்.
பார்யாள் பக்கத்திலே இல்லையா?
திருச்சி தாரு
வயது என்பது நமது மனதைப்பொறுத்தது.
நீக்குநாம் 20 வயதில் இருக்கும்போது 50 வயது என்பது முதிய வயது.
நாம் ஐம்பதை நெருங்கும்போது 70 தான் முதிய வயது.
எழுபதை நெருங்கும்போதோ 90 தான் முதிய வயது.
உடல் நமக்கு ஒத்துழைக்காதே என்று சொல்லலாம். ஆனால் இந்த மாதிரி மனதளவில் இளமையாக இருந்தால் உடல் கண்டிப்பாக பிரமாதமாக ஒத்துழைக்கும். அதற்கு இந்த கஞ்சா போன்றவற்றின் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.
(அதன் பக்கமெல்லாம் போகக்கூடாதென்றால் அப்பறம் எதற்கு 90 வயது வரை வாழ வேண்டும் என்று கேட்பது காதில் விழுகிறது).
என்ன செய்வது ஒன்று வேண்டுமென்றால் இன்னொன்றை தியாகம் செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.
சேலம் காயத்ரி மணாளன்
என்னை என்னவென்று நினைத்தீர்கள்? பெண்டாட்டி தாசன் என்றா நினைக்கிறீர்கள்? இருங்கள், என் பெண்டாட்டியிடம் சொல்லி உங்களை என்ன செய்கிறேன் பாருங்க்ள !
நீக்குஒத்துகொள்கிறோம் அய்யா.
நீக்குBehind every successful man, there is a woman என்பது உங்கள் விசயத்தில் முற்ற முழுக்க உண்மை.
இந்த வயதில் அக்கடா என்று உட்கார்ந்திருக்காமல் பதிவுகள் போட, பின்னூட்டங்களுக்கு பதில் போட, சண்டையிடும் பதிவர்களுக்கு பதில் கருத்து சொல்ல அனுமத்திருகிர்ரகள் அல்லவா.
அவர்களுக்கு ஒரு special நன்றி
சேலம் துளசி மைந்தன்
///இப்படி பூலோகத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தைக் காணும் இந்த மருந்திற்கு பல நாட்டு அரசு படுபாவிகள் தடை விதித்திருக்கிறார்கள். ///
பதிலளிநீக்குகடுமையாக கண்டிக்க வேண்டும் ஐயா
ஆமாங்க ஜெயக்குமார். ஒரு தேசிய இயக்கம் ஆரம்பிக்கலாமா என்று தோன்றுகிறது.
நீக்குஅய்யா அவர்களே
நீக்குஅந்த தேசிய இயக்கத்தில் என்னை முதல் ஆளாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
(நான் முதலில் துண்டு போட்டு விட்டேன்)
திருச்சி அஞ்சு
"எங்கேடா அய்யா அவர்கள் மன அமைதி கெட்டு தன பதிவை மூடி விடுவார்களோ என்றெல்லாம் கூட அச்சப்பட்டுக்கொண்டிருந்தோம். "
நீக்குஎன்னங்க இதுக்கெல்லாம் போயி எறும்புக் குழியில ஒளிஞ்சக்க முடியுமா? இந்தப் பதிவுலக நிகழ்வுகள் எப்பொழுதும் என் நிஜ வாழ்க்கையைப் பாதிக்காது.
தவிர, வலுவான எதிர்ப்புகள் இருந்தால்தான் எந்த ஒரு செயலும் சுறுசுறுப்பாக நடக்கும். இல்லையென்றால் சோம்பிவிடும். இவையெல்லாம் எனக்கு புத்துணர்வு தரும் டானிக்குகள்.
அதுதானே பார்த்தேன்
நீக்குஅய்யாவா கொக்கா.
யாரும் எங்கள் அய்யாவை ஒன்றும் செய்து விட முடியாது (அவர் பாரியாளை தவிர)
திருச்சி தாரு
தம4
பதிலளிநீக்குஇன்றைக்கும் சிலர் பயிர்களுக்கு ஊடே அரசுக்குத் தெரியாமல்(தெரிந்தே?) கஞ்சா செடி வளர்க்கிறார்கள். தெருவிற்குத் தெரு டாஸ்மாக் விற்பனை நிலையங்களை அனுமதிக்கும் அரசு ஏன் இதற்கு கடை விரிக்கக் கூடாது என்று தெரியவில்லை எனக் கேட்டு அரசுக்கு வருமானத்திற்கு வழியை காட்டிவிட்டீர்கள்! இது இனி நடந்தாலும் நடக்கலாம்.
பதிலளிநீக்குஎங்க ஊருக்கும் பக்கத்துல "கஞ்சா நகரம்" னு ஊரே இருக்கு. காஞ்சன நகரம் அப்படி மாறிட்டு.
பதிலளிநீக்குகஞ்சாவும் கசகசாவும் ஒரே தாவரத்தைச் சேர்ந்ததா?
கஞ்சாவும் கசகசாவும் வெவ்வ்வேறு என்றாலும் இரண்டுமே போதைபொருட்கள் போன்றுதான் பட்டியலிடப்படுகின்றன.
நீக்குஎன்ன கசகசா நமது அய்யா போன்று soft variety கஞ்சா கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
உண்மையில் கசகசா ஒரு மருத்துவ மூலிகையாகும். இது ஆயிரகணக்கான வருடங்களாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்ததும் கூட. பேதி நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு.
இந்த பாப்பி செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பைமுற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவது தான் கசகசா.
ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது - அதாவது உள்ள விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் போது - அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்அதுதான் ஓபியம் எனும் போதைப்பொருள்
அதாவது "பிஞ்சிலே பழுத்துப்போனால்" என்று சொல்வோமே அது போல பிஞ்சிலே எடுப்பது ஓபியம் முற்றிய பின் எடுப்பது கசகசா.
ஆனால் கஞ்சா என்பது முற்றிலும் வேறு வகை தாவர வகை.
அது ஒரு பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். கஞ்சா ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும்
பெரும்பாலும் போதைக்காகவே பயிரிடப்பட்டாலும் இதன் சணல் இழைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காது என்பதால் இத்தாவர சணலை கொண்டு பைகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் ஒரு புதுமையான செய்தி.
கஞ்சா செடியின் அசைவுகளில் இருந்து எழும் ஒலி இனிமையாக இருந்ததாக 1960-களில் கண்டறியப்பட்டது. அந்த காலகட்டத்தில் கஞ்சா செடி அசைவில் உருவாகும் ஒலியை ராக் இசையில் பயன்படுத்தியது சுவாரஸ்ய தகவல். அந்த ராக் இசையை கேட்டால் கஞ்சா சாப்பிடாமலே போதை வந்தது என்பது அய்யா போன்று அந்த காலத்து ஆசாமிகளுக்கு நன்றாகவே தெரியும்.
இந்தியாவை பொருத்தவரை கசகசா போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ்வரவில்லை ஆனால் ஓபியம், கஞ்சா கண்டிப்பாக போதை பொருளாகவே கருதப்படுகிறது.
சேலம் குரு
கசகசாவும் கஞ்சாவும் ஒருவகை போதை பொருள்கள்தான்.
நீக்குஎன்ன கசகசா அந்தக்காலத்து கதாநாயகி மாதிரி - இலை மறைவு காய் மறைவு கவர்ச்சி. கஞ்சா என்பது இந்தக்காலத்து கதாநாயகி மாதிரி. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
திருச்சி காயத்ரி மணாளன்
கசகசாவும் ஒரு வகை போதை பொருள்தான். கஞ்சா அளவுக்கு இல்லை.
நீக்குகுழந்தைகளுக்கு தூங்குவதற்கு - தலைக்கு குளித்த பின்னர் - பாலுடன் சேர்ந்து கசகசாவை அரைத்து கொடுப்பார்கள். குழந்தை நன்கு அயர்ந்து தூங்கும்.
குழந்தை அந்தப்பக்கம் தூங்கிய பிறகு தந்தை கஞ்சா அடித்து விட்டு இந்தப்பக்கம் தூங்காமலிருந்தால் சரி என்கிறீர்களா?
திருச்சி அஞ்சு
புதர்களில் சர்வ சாதாரணமாக வளர்ந்திருக்கும் செடி தான். இதை process செய்த பிறகு தான் போதை! :)
பதிலளிநீக்குதில்லியில் பல இடங்களில் கிடைக்கிறது - காவல் துறையும் கிடைத்ததை வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாது இருக்கிறது - எப்போதாவது இரண்டு பேரை கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதாய் காண்பிக்கிறது!
மீண்டும் சர்ச்சை வரும் என்று அஞ்சாமல் நீங்கள் சொன்ன கஞ்சாப் புராணம் அருமை ,படிக்கும் போதே அப்சரஸ்கள் கண்முன் ஆடுகிறார்கள் :)
பதிலளிநீக்குத ம +1
சர்ச்சைகளே எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஒரு சண்டையில் நல்ல எதிராளி இருந்தால்தான் அந்த சண்டை சோபிக்கும் அல்லவா?
நீக்குஅப்பாடா எங்கள் கவலை தீர்ந்தது.
பதிலளிநீக்குஎல்லா பதிவர்களும் அய்யாவை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருந்தார்கள் ஒரு பதிவில் சிலபல தகவல்களை சொன்னதற்காக. எங்கேடா அய்யா அவர்கள் மன அமைதி கெட்டு தன பதிவை மூடி விடுவார்களோ என்றெல்லாம் கூட அச்சப்பட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் கஞ்சா பற்றிய பதிவில் இயற்கையாகவே வரும் தனது நகைச்சுவை வரிகளை அங்கங்கே கஞ்சத்தனம் இல்லாமல் தெளித்திருக்கிறார்.
//அஞ்ஞானத்தில் உழலும் மானிடரைக் கடைத்தேற்றி மெய்ஞ்ஞானம் போதிப்பதே//
//விதி வலியது இல்லையா? விதி அப்படி என்னை அதிர்ஷ்டக்காரனாக்கவில்லை//
//ஒத்தைக் காலிலே நிக்கற வயசா எனக்கு.//
//இப்படி பூலோகத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தைக் காணும் இந்த மருந்திற்கு பல நாட்டு அரசு படுபாவிகள் தடை விதித்திருக்கிறார்கள்//
//வசதி படைத்த பதிவர்கள் பூலோக ஸ்வர்க்கத்தைக் காணத் தயாராகுங்கள்.//
அய்யாவுக்கு ஒரு சலாம். இப்படியே தொடருங்கள்.
சேலம் குரு
இதைப் போல் பல சலசலப்பைப் பார்த்து விட்டுத்தான் இந்த பனங்காட்டு நரி வந்திருக்கிறது.
நீக்குஅய்யா அவர்களே
பதிலளிநீக்குஎங்களுக்கு கஞ்சா எல்லாம் தேவையே இல்லை,
உங்கள் பதிவை படிக்கும் பொது நிஜமாகவே நாங்கள் இந்த உலகத்தில் இருப்பதில்லை, வேறு ஒரு உலகத்தில் - அது சொர்க்க லோகமா இல்லையா என்று சொல்லத்தெரியவில்லை - தான் சஞ்ஜாரித்துக்கொண்டிருக்கிறோம்.
எங்களை பொறுத்த வரை எங்கள் கஞ்சா உங்கள் பதிவுதான்.
திருச்சி காயத்ரி மணாளன்
நன்றி, காயத்ரி மணவாளன்.
நீக்குஐயா
பதிலளிநீக்குகந்தசாமி கஞ்சாசாமி ஆக்கிட்டீங்களே
--
Jayakumar
"கந்தசாமி கஞ்சா சாமி ஆகிட்டீங்களே" என்று இருக்கவேண்டும் ஜெயக்குமார். எப்படியும் சாமி சாமியாத்தானே இருக்கிறது.
நீக்கு//நம்மூர் சாமியார்கள் சொர்க்கத்தைக் காணுவதற்காகவும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். //
பதிலளிநீக்குஓஹோ சில பிரபலங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள சிலபல மலைகளுக்கு செல்வதும் இப்படிப்பட்ட விசயங்களுக்குத்தானா?
திருச்சி அஞ்சு
ஐயா நல்லாதான போய்கிட்டு இருக்கு, திடீர்னு இந்த கஞ்சா ஞாபகம் எப்படி உங்களுக்கு வந்தது ?
பதிலளிநீக்குஏதோ ஒரு பின்னூட்டத்தில என்னைக் கஞ்சன் என்று குறிப்பிட்டிருந்தார்கள். கஞ்சனை எப்படிக் கூப்பிடுவது என்று யோசித்தபோது இந்தக் கஞ்சா நினைவிற்கு வந்து விட்டது.
நீக்குஎல்லாத்தையும் பார்த்தாய் விட்டது. இது ஒன்றைத்தான் பார்க்கவில்லை. இப்படி ஒரு பதிவு போட்டால் யாராவது துணைக்குக் கிடைப்பார்களென்று பார்த்தால் ஒருவரும் தேறமாட்டார்கள் போலிருக்கிறதே?
தப்பா நினைக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் உங்களிடம் ஒன்று கேட்கலாம் என்று நினைக்கிறேன்? கேட்கட்டுமா?
உங்களுக்கு இதில் ஏதாவது அனுபவம் இருக்கா?
இது உங்களைப் போல் வயதானவர்களுக்குநல்லது அல்ல. என் போன்ற இளைஞர்கள் கெட்டுப் போக வழிகாட்டுகிறீர்கள்
பதிலளிநீக்குஆமாங்க, இந்த வயசானதுகளே இப்படித்தான். கூச்சநாச்சமில்லாமல் பேசுமுங்க. உங்களைப் போன்ற இளைஞர்கள் இவர்கள் கூட சேராதீங்க. கெட்டுப்போயிடுவீங்க.
நீக்குகஞ்சா பற்றிய பதிவை இப்படி எடுத்து கொள்கிறேன் அண்ணா
பதிலளிநீக்குகஞ்சாவின் உணர்வை அதித பக்தியும் தருகிறது
ஆகவே அளவு தெரியாத எதுவும் நஞ்சாகும் ......
எனது நண்பர் ஒருவர் கான்சர் நோய்க்கு இது தான் மருந்தாக தருகிறாகள் என்பதை இந்த
கட்டுரை உறுதி படுத்துகிறது ......
கஞ்சா போடாமல் வாழ்பவர்க்கு கஞ்சன் என்பது ஜோதிடத்தில் சுக்கிரனை குறிக்கும்
நன்றி அண்ணா s.a.balasubramaniam ..............sakthiengineerings
இந்த பதிவு உங்களுக்கு சூப்பர் ஹிட். எத்தனை பிண்ணூட்டங்கள்.
பதிலளிநீக்குஇதில தலைப்பைத்தான் கொஞ்சம் வித்தியாசமா, கவர்ச்சியா வைத்தேனே தவிர மேட்டர் சப்பைதான். ஆகவே தலைப்புதான் மக்களை ஈர்க்குதுன்னு நினைக்கிறேன்.
நீக்குகஞ்சன்_கஞ்சா பயன்பாடு வித்தியாசமாக இருந்தது.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா
ITS A NOT DRUG ITS A MEDISION
பதிலளிநீக்குஅப்பாடா, 2015 ஜனவரியில் போட்ட பதிவிற்கு இவ்வளவு சீக்கிரம் பின்னூட்டம் போட்டு விட்டீர்களே, வாழ்த்துகள்.
நீக்கு