சமீபத்தில் நான் "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுதியது பதிவுலக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
பதிவுலகில் சில எழுதாத கோட்பாடுகள் உண்டு. இது அந்தந்தப் பதிவர்கள் தாங்களாகவே கடைப்பிடிக்கவேண்டியவை. நான் கடைப்பிடிக்கும் சில கோட்பாடுகள்.
1. பதிவில் எழுதும் கருத்துகள் அந்தந்தப் பதிவரின் சொந்தக் கருத்தானாலும், இரவல் கருத்தானாலும், அந்தக் கருத்துகளுக்கு அவர் பொறுப்பாளி ஆகிறார். அதற்கு எதிராக யாராவது பின்னூட்டம் போட்டால் அதற்கு பதிலளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு அவருக்கு உண்டு.
2. பதிவில் எழுதப்பட்ட அனைத்தும் பொதுச் சொத்தாகிறது. ஏனென்றால் இது ஒரு பொது வெளி. ஒருவர் தனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதிவிட்டு, இது என் சொந்தக் கருத்துகள். இதைப் பற்றி விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது.
2. அது மாதிரியே அந்தப் பதிவில் பின்னூட்டம் எழுதுபவர்களும் அவர்கள் கூறும் கருத்துகளுக்குப் பொறுப்பாளி ஆகிறார்கள்.
நான் எழுதிய "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்ற பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.
எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.
--
--
இந்தப் பின்னூட்டம் எனக்கு கோபத்தை வரவழைத்தது. (கோபம் வருவது குற்றம் அல்ல என்று நான் நினைக்கிறேன்.) அதனால் அந்தப் பின்னூட்டத்திற்கு நான் கொடுத்த பதில்.
கலாசாரம்னா எவ்வளவு பழைய காலத்துக்கு உள்ள நடைமுறைகளை தொடர்வீர்கள்? நமக்கு ஒத்துவர்றவரைக்கும்தான் கலாசாரம். தருமி ஐயா தங்களை “மூடனாக” என்று சொல்ல விரும்பாததால்தான் ”க” என்று சொல்லியிருப்பதை தாங்கள்தான் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவிளக்கத்திற்கு நன்றி.
நீக்கு"புலவர்களுக்குள் விவாதம் இருக்க வேண்டியதுதான். ஆனால் அது சண்டையாக மாறக்கூடாது.... புலவர்களே சமாதானமாகப் போங்கள்!"
பதிலளிநீக்குஹிஹிஹி... இது திருவிளையாடல் தருமி காட்சியில் இடம்பெறும் வசனம்தான்!
என்னமோ போங்க...!
பதிலளிநீக்குகலாச்சார நடைமுறையும் அறிவியல் கருத்துக்களும் பல இடங்களில் ஒத்துப் போனாலும் சில இடங்களில் முரண்படுவதுண்டு. நீங்கள் சொன்னது போல் நாம் இரட்டை வாழ்வு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவியலுக்கு ஒவ்வாதவை காலப்போக்கில் நிச்சயம் மாறும். மாறிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.எனவே உங்கள் கருத்தை நீங்கள். சொல்லுங்கள்.அதோடு ஒத்துப்போகாதவர்கள் தங்கள் கருத்தை சொல்லட்டும். I agree to disagree with you என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வோம்
பதிலளிநீக்குவர வர உங்கள் மன அலைகள் சாலமன் பாப்பையா பட்டி மன்றம் போல் ஆகிறது.
பதிலளிநீக்குJayakumar
//8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.//
பதிலளிநீக்குyuck...buy better floor cleaner instead...
அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்களது இந்த பதிவு சம்பந்தமாக, நான் எனது வலைத் தளத்தில் “மறைந்த பதிவரின் பெயரில் கேள்வியும் - பதிலும் என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2015/01/blog-post_9.html ஒரு பதிவினை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.
பதிலளிநீக்குகந்தசாமி சார்,
பதிலளிநீக்குநீங்க ஒரு பி எச் டி வாங்கியவர். அதை வெளியில் அப்பட்டமாகவும் சொல்லிக் கொண்டு இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து இதுபோல் ஒரு பதிவை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை.
தருமி சார் ஒரு நாத்திகர், மேலும் ரொம்பப் படித்தவர். அவர், உங்களையும் அவர் போல் சிந்திப்பவர் என்று நினைத்து இருக்கலாம். (இதில் யாரு சிந்தனை சரி என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை) ஆனால் நீங்க விஞ்ஞானத்தை ஒரு கண்ணிலும், கடவுள், கலாச்சாரம் போன்றவற்றை இன்னொரு கண்ணிலும் பார்ப்பவர் என்பதை உணராமல் இருந்து இருக்கிறார்..
The following is my response in that "earlier post"!
-----------------
****தருமிபுதன், 7 ஜனவரி, 2015 ’அன்று’ 8:55:00 முற்பகல் IST
மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்! ****
:-)))))))))))))))
-------------------
கார்த்திக அம்மா ஆனஸ்ட்டா அவரங்க உணர்வுகளை வெளியே சொல்லீட்டாங்க போல! பேசாமல் "சிறப்பான பதிவு"னு வாயளவில் சொல்லீட்டு, தான் சொன்ன கருத்தை மனநாக்கில் பேசி முடித்து இருக்கணும். கந்தசாமி ஐயா வுக்கும் கோபம் வந்து இருக்காது.
என்னவோ போங்க!
---------------------------
Please dont get mad at me too! It is very hard to understand your separate "scientific" and "cultural" views for anyone like me! It may be my ignorance but I have to tell you my ignorance here so that you can understand lots of "ignorant people" around here. Not just Karthik ammA or, dharumi sir.. There are many more..
கார்த்திக் அம்மாவிற்கான என் பதில்.
நீக்குநீங்க்ள சுட்டிக் காட்டியுள்ள கேள்வி ஒரு பெண்மணி கேட்டது என்று தெரிந்திருந்தால் என் பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதுவும் கமனை இழந்த ஒரு தாய் என்றால் அவர்கள் கேட்கும் கேளவிகளை வேறு ஒரு தளத்தில் இருந்து பார்க்கவேண்டும். இந்த விவரங்கள் எனக்குத் தெரியாததால் தவறான பதில்கள் வெளிப்பட்டு ஒரு வேண்டாத விவாதத்தைத் துவங்கி விட்டது. நிகழ்வுகளுக்காக நான் வருந்துகிறேன். அந்த சகோதரிக்கு என் வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.
*****அறிவியல் தெரியாத....க ஆக இருக்க முடியும்.***
பதிலளிநீக்குLet me try fill the blank.. :)))
அறிவியல் தெரியாத "முனைவர் கந்தசாமி" ஆக இருக்க முடியும்னு எடுத்துக் கோங்க!
உங்க சாதி எல்லாம் என்னைமாதிரி ஒரு சிலருக்குத்தான் தெரியும். தருமி சாருக்கெல்லாம அது தெரியாதுனு நெனைக்கிறேன். அதனால நீங்க நினைப்பதை அவர் நினைத்து இருக்கமாட்டார். :)))