வெள்ளி, 23 ஏப்ரல், 2010

இடைச்செருகல் - ரத்த பூமி


 ஒண்ணும் புரியல,
ஒரு நாளைக்கு ரத்தம் ஆறா ஓடுது,
அடுத்த நாள் பன்னீரும் ரோஜாவுமா மணக்குது.
நடுவில நம்ம மண்டெய நொழச்சா
காணாம போயிடும்போல இருக்குது.
இதுல எப்படி நானு நீஞ்சி
கரை சேரப்போறேன்னு தெரியல.
முருகனே நீதான் துணை.

24 கருத்துகள்:

  1. இதெல்லாம் இல்லாமயா? நீங்க சும்மா அடிச்சி விளையாடுங்க...

    பதிலளிநீக்கு
  2. ஒன்னும் பெரிசா கவலைப்படாதீங்கையா
    இதுவும் கடந்து போகும். உங்களுக்கு அந்த முருகன் துணை இருப்பான்.

    பதிலளிநீக்கு
  3. பழமைபேசி, தாமோதர் சந்துரு,
    ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ்ஸுங்க. கமெண்ட்ஸ் போடறதுக்கே பயமா இருக்குதுங்க. எப்படியோ தாக்குப்புடிச்சுப் பாக்கறனுங்க.

    பதிலளிநீக்கு
  4. நீங்க சொல்வதும் உணருவதும் சரிதான்.
    ஆனால் இவைகள் எல்லாம் வெறும் நிழல்கள்
    தானே. ஒன்று போய் ஒன்று வரும்.
    "தம்பி உடையான் படைக்கஞ்சான்"
    நாங்கல்லாம் இன்னாத்துக்கு கீறோம் அண்ணாத்தே!?

    பதிலளிநீக்கு
  5. Robin said:

    //எல்லாம் மாயை !//

    மாறுவது எல்லாம் மாயை. ஏனென்றால் இந்த நிமிடம் இருப்பது அடுத்த நிமிடம் இல்லை அதாவது மாறிவிட்டது. ஆனால் யாராவது திட்டினாலோ, அடித்தாலோ வருத்தம் ஏற்படுவது நிஜமாகத்தானே இருக்கிறது?
    நான் வேறு, என் உடல் வேறு என்று கருத முடிவதில்லையே?

    பதிலளிநீக்கு
  6. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    நீங்க சொல்வதும் உணருவதும் சரிதான்.
    ஆனால் இவைகள் எல்லாம் வெறும் நிழல்கள்
    தானே. ஒன்று போய் ஒன்று வரும்.
    "தம்பி உடையான் படைக்கஞ்சான்"
    நாங்கல்லாம் இன்னாத்துக்கு கீறோம் அண்ணாத்தே!?

    நீங்க எல்லாம் ஒருக்கீங்கங்கற தைரியத்துலதான் இருக்கிறனுங்க.

    பதிலளிநீக்கு
  7. ஜெய்லானி சொன்னது:

    //யாமிருக்க பயமேன்!!!!//

    தைரியம் வந்திருச்சுங்க, ரொம்ப தேங்க்ஸுங்க.

    பதிலளிநீக்கு
  8. நான் துணைக்கு அவர் அண்ணனையும் சேர்த்து கூப்டுவேங்க.

    பதிலளிநீக்கு
  9. சுசி சொன்னது:

    //நான் துணைக்கு அவர் அண்ணனையும் சேர்த்து கூப்டுவேங்க.//

    அண்ணன் அவசரத்துக்கு ஓடி வர முடியாதில்லீங்களா, அதனால அவரை ஜாஸ்தி தொந்திரவு பண்றதில்லைங்க.

    பதிலளிநீக்கு
  10. Malar said:

    //எதுக்கு இந்த பதிவு...//

    நல்ல கேள்வி. கீழ்க்கண்ட இரண்டு பதிவுகளையும் தயவு செய்து பார்க்கவும்.

    http://pattapatti.blogspot.com/2010/04/blog-post_21.html

    http://pattapatti.blogspot.com/2010/04/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  11. செத்து செத்து விளையாடுறது தான் வாழ்க்கை... வாங்க விளையாடலாம்... :-)))

    பதிலளிநீக்கு
  12. ஓ அந்த இரண்டு பதிவுகளையும் சொல்றீங்களா??

    முதல் பதிவு ரொம்ப சீரியஸ். அந்தப் பதிவே ரொம்ப நாள் ஓடிக் கொண்டிருந்தாள் இன்னும் பிரச்சனை, தனி மனித தாக்குதல் எல்லாம் அதிகமாகும். கமெண்ட் போடுரவங்களும் பதிவு போட்டவனை ஏத்தி விட்டுருவாங்க... இன்னும் பிரச்சனை விபரீதமாப் போகும்.

    அதை தவிர்க்க பதிவர்கள் கடைபிடிக்கிற உத்தி இது... ஒரு நகைச்சுவைப் பதிவையோ, கதை, கவிதைப் பதிவையோ போட்டுட்டா சூடு குறைஞ்சிடும். வேணும்னாப் பாருங்க, அந்த விஷயத்தைப் பதிவு செய்தவங்க எல்லோரும் வேற பதிவு போட்டிருப்பாங்க... (நானும் கூடத் தான்...)

    என்னா பண்றது எப்போது சண்டையே போட்டுகிட்டும் இருக்கக் கூடாதுல்ல.

    பதிலளிநீக்கு
  13. ரோஸவிக் சொன்னது:

    //என்னா பண்றது எப்போது சண்டையே போட்டுகிட்டும் இருக்கக் கூடாதுல்ல.//

    ரொம்ப கரெக்டுங்க.

    பதிலளிநீக்கு
  14. ரோஸ்விக் சொன்னது:

    //செத்து செத்து விளையாடுறது தான் வாழ்க்கை... வாங்க விளையாடலாம்... :-)))//

    நான் அந்த வெளயாட்ட ஒரு தடவதான் வெளயாடலாம்னு இருக்கேன் தம்பி. அடிக்கடி வெளயாடறதுக்கு ஒடம்பு தாங்காதுங்க தம்பி :-)

    பதிலளிநீக்கு
  15. நீங்க தொடர்ந்து பதிவுகள போடுங்க
    தாத்தா, முடிஞ்சா கதை போடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  16. சைவகொத்துப்பரோட்டா சொன்னது:

    //நீங்க தொடர்ந்து பதிவுகள போடுங்க
    தாத்தா, முடிஞ்சா கதை போடுங்களேன்.//

    போட்டறலாமுங்க தம்பி. நான் வேலை பார்த்த கதையை கொஞ்சம் சொல்லிப்புட்டு அப்பறம் கதைக்கு வந்தறனுங்க.

    பதிலளிநீக்கு
  17. யூர்கன் க்ருகியர் சொன்னது;

    //have a break! have a beer,,,//

    கோயமுத்தூரு ரொம்ப மோசமான ஊரு தம்பி, கம்பெனி கொடுக்க ஒரு பதிவரும் வரமாட்டேங்கிறாங்க. அதுக்கெல்லாம் சென்னைதான் சரி. நல்ல பாருக்குப்போனமா, ஊத்துனமா, மூக்குல குத்துனமான்னு போய்ட்டே இருக்கலாம் தம்பி. (மூக்குல குத்தி மூக்கொடஞ்ச கதை தெரியமில்ல தம்பி?)

    பதிலளிநீக்கு
  18. அய்யா.. என்னங்கய்யா இப்படி சொல்லீட்டீங்க..?

    ஆடுற மாட்டை ஆடிக்கறக்கறதும்,
    பாடுற மாட்டை பாடிக்கறக்கறதும் சகஜம்தானே..

    ( காலங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும்..)

    இனி பேசாம, நமக்கு என்ன வெருதோ அதை எழுதீட்டுப்போலாமுனு இருக்கேன்..

    எதையும் மனசுல வெச்சுக்காதீங்க..

    பதிலளிநீக்கு
  19. பட்டாபட்டி சொன்னது:

    //அய்யா.. என்னங்கய்யா இப்படி சொல்லீட்டீங்க..?

    ஆடுற மாட்டை ஆடிக்கறக்கறதும்,
    பாடுற மாட்டை பாடிக்கறக்கறதும் சகஜம்தானே..

    ( காலங்கள் ஓடிக்கொண்டேயிருக்கும்..)

    இனி பேசாம, நமக்கு என்ன வெருதோ அதை எழுதீட்டுப்போலாமுனு இருக்கேன்..

    எதையும் மனசுல வெச்சுக்காதீங்க.. //

    இதுல என்ன மனசுல வச்சுக்கறதுக்கு ஒண்ணுமில்ல தம்பி.

    ஒரு வருத்தம் மட்டும் இருக்குது. நீங்கெல்லாம் மனசில பட்டதெ படார்னு எழுதிப்புடறீங்க, நான் அப்படி எழுத முடியலேங்கற வருத்தம் மட்டும் இருக்குது.

    ஆனா, ஒண்ணு, பெரியார் இல்லேன்னா நாமெல்லாம் இப்படி இருக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  20. //(மூக்குல குத்தி மூக்கொடஞ்ச கதை தெரியமில்ல தம்பி?) //


    வரும் பதிவுகளில் இந்த கதையை சொல்லவும் .

    நன்றி

    பதிலளிநீக்கு