புதன், 12 மே, 2010

இன்றைய செய்தி-சென்னை பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைக்கு தினமலரில் வந்த செய்தி.

ஏழைகள் சொந்தமாக சொத்து வாங்குவதை ஊக்குவிக்க, 3,000 ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளை வாங்கும் போது, அந்த ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என, 1998ல் அரசு உத்தரவிட்டது. தற்போது நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால், 5,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.

ஆகவே சென்னையில் 5,000 ரூபாய்க்கு சொத்து வாங்க முடியும் என்று தெரிகிறது. பதிவுலக நண்பர்கள் அப்படி ஏதாவது சொத்து கிடைப்பதாயிருந்தால் உடனடியாக எனக்கு தகவல் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


30 கருத்துகள்:

  1. அய்யா, சிரிச்சு மாளல..

    சரி ஜோக் போங்க

    பதிலளிநீக்கு
  2. முகுந்த் அம்மா,
    நான் இந்த மாதிரி பதிவு போடற வழக்கம் இல்லை. ஆனாலும் இந்த செய்தியைப் பார்த்தவுடன் ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது, போட்டுவிட்டேன். ரசித்ததிற்கு நன்றி.
    ஆனா ஆட்டோ வருமோன்னு பயமா வேற இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. அய்யா இப்படி செய்யமுடியுமா?
    பெரிய சொத்தை பிரித்து சிறிது சிறிதாக பத்திரப்பதிவு செய்தால் இதை பயன்படுத்தமுடியும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //ஆகவே சென்னையில் 5,000 ரூபாய்க்கு சொத்து வாங்க முடியும் என்று தெரிகிறது. பதிவுலக நண்பர்கள் அப்படி ஏதாவது சொத்து கிடைப்பதாயிருந்தால் உடனடியாக எனக்கு தகவல் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்//

    ஐயா நீங்க ஏழையா ?
    :)

    பதிலளிநீக்கு
  5. சின்னத்திரை நடிகர் ஆகிவிட்டால் இலவசமாக வீடு கிடைக்கிறதாம்.
    :)

    பதிலளிநீக்கு
  6. கோவி கண்ணன் சொன்னது:
    //ஐயா நீங்க ஏழையா ?
    :)//

    என்னங்க இப்படி ஒரு கேள்வி என்னப்பாத்து கேட்டுட்டீங்களே, தற்கொலை பண்ணீக்கப்போறனுங்க, அந்தப்பாவம் உங்களை சும்மா விடாதுங்க.

    என்னங்க இருக்கு எனக்கு, ஒரு காருதான் இருக்கு, கோயமுத்தூர்ல ஒரு வீடுதான் இருக்கு, பேங்க்ல கொஞ்சம் பணம் இருக்கு(எத்தனைன்னு சொல்லப்படாது, இன்கம்டாக்ஸ்காரன் புடிச்சுக்குவான்), ஏதோ இன்கம்டாக்ஸ் கட்டற அளவுக்கு பென்சன் வருது, இவ்வளவுதானுங்க. நான் ஏழையில்லைன்னு சொன்னா, சொன்னவங்களுக்கு தூக்கத்துல கண்ணு தெரியாமெ போயிடும்?

    பதிலளிநீக்கு
  7. இன்னும் நம் முதல்வர் 60 வருஷ பழைய மயக்கத்தில இருக்கார்.

    பதிலளிநீக்கு
  8. உண்மையில் இந்த செய்தியை தினமலரில் படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது.
    விதி வளியது. எல்லாவற்றையும் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.
    சிரித்துவிட்டு போகலாம்.இதை சொல்ல ஒரு மந்திரி.அதை கேட்டுகோள்ள நாம், திருவாளர் பொதுஜனம்.

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் தகவல் சொல்லி அனுப்புங்க

    பதிலளிநீக்கு
  10. நசரேயன் சொன்னது:

    //எனக்கும் தகவல் சொல்லி அனுப்புங்க//

    கட்டாயம் சொல்லி அனுப்பறேனுங்க,ஆனா எனக்கு புரோக்கர் கமிஷனை மறக்காமல் கொடுத்துவிடவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. ஆட்டோ வந்தா காசுக்கொடுக்காம அழக ஏறினோமா போகவேண்டிய இடத்துக்கு போனாமா திரும்பவந்தோமான்னு இருக்கலாம்
    இதுக்கெல்லாம் பயப்புடலாமா டாக்டர்.

    அப்படி இடம் கிடைச்சா சொல்லுங்கோ நானும் அப்ளைபண்ணாலாமுன்னு ஒரு ஐடியா இருக்கு..

    பதிலளிநீக்கு
  12. //நசரேயன் சொன்னது:

    //எனக்கும் தகவல் சொல்லி அனுப்புங்க//
    //

    எனக்கும் சொல்லி உடுங்கொ.

    //கட்டாயம் சொல்லி அனுப்பறேனுங்க,ஆனா எனக்கு புரோக்கர் கமிஷனை மறக்காமல் கொடுத்துவிடவேண்டும்.//

    நானு நெம்ப ஏளங்கோ... தள்ளுபடி ஏதும் உண்டா?

    மத்தபடி சூப்பர் நெக்கலுங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  13. @Dr.P.Kandaswamy said...
    நான் இந்த மாதிரி பதிவு போடற வழக்கம் இல்லை. ஆனாலும் இந்த செய்தியைப் பார்த்தவுடன் ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது, போட்டுவிட்டேன். ரசித்ததிற்கு நன்றி.
    ஆனா ஆட்டோ வருமோன்னு பயமா வேற இருக்கு.
    //

    இதுக்கே ஆட்டோனா.. என்னோட கதி சார்..?

    பதிலளிநீக்கு
  14. பட்டாபட்டி சொன்னது:

    //இதுக்கே ஆட்டோனா.. என்னோட கதி சார்..?//
    ஆட்டோ கடல் தாண்டி வராதுங்க!

    பதிலளிநீக்கு
  15. Indian said:

    //நானு நெம்ப ஏளங்கோ... தள்ளுபடி ஏதும் உண்டா? //

    உண்மையான ஏழைகளுக்கு ஜீரோ பர்சென்ட் தள்ளுபடி உண்டு.

    பதிலளிநீக்கு
  16. செய்தியை படித்ததும் சிரித்துக் கொண்டேன். ஆமாம், தனியா உட்கார்ந்து சிரிச்சா என்னமோன்னு சொல்லுவாங்களே, அப்படி எதுவும் எனக்கு ஆயிட்டா? யார்கிட்ட போய் கேட்கிறது?

    பதிலளிநீக்கு
  17. அமைதி அப்பா சொன்னது;

    //செய்தியை படித்ததும் சிரித்துக் கொண்டேன். ஆமாம், தனியா உட்கார்ந்து சிரிச்சா என்னமோன்னு சொல்லுவாங்களே, அப்படி எதுவும் எனக்கு ஆயிட்டா? யார்கிட்ட போய் கேட்கிறது?//

    யார் கிட்டயும் போகவேண்டாம், நேரா சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி போங்கோ, ஒண்ணும் சொல்ல வேண்டாம், உங்களைப் பார்த்தவுடன் உங்களைக் கவனித்துக் கொள்வார்கள்.(???)

    பதிலளிநீக்கு
  18. அஹமது இர்ஷாத் சொன்னது;

    சிரிச்சி சிரிச்சி.....

    ரொம்ப சிரிக்காதீங்க இர்ஷாத், அப்புறம் உங்களை கீழ்ப்பாக்கத்துக்கு தள்ளீட்டுப்பொயிடுவாங்க.

    பதிலளிநீக்கு
  19. சார், தயவுசெஞ்சி எனக்கும் இந்த மாதிரி ஒரு இடத்தைச் சொல்லுங்க சார்!! (அட, கீழ்ப்பாக்கத்தச் சொல்லல!! 5000 ரூபா நிலத்தச் சொன்னேன்!!) நானும் ரொம்ப ஏழதாங்க!!

    ஆமா, பத்திரிகையாளர்களுக்கும் நிலம்/வீடு கொடுக்கிறாங்களாமே. பதிவரும் பத்திரிகையாளர்தானே? ;-))

    பதிலளிநீக்கு
  20. ஹுஸைனம்மா சொன்னது:

    //சார், தயவுசெஞ்சி எனக்கும் இந்த மாதிரி ஒரு இடத்தைச் சொல்லுங்க சார்!!//

    ஆஹா, உங்களுக்கு இல்லாமயா, முதல்வர் கிட்ட சொல்லி சென்ட்ரல் ஸ்டேஷன் கிட்டக்க பதிவர்களுக்கெல்லாம் ஆளுக்கு ரெண்டு சைட் (இதுலென்ன கஞ்சத்தனம்) கொடுக்கச் சொல்லீரலாமுங்கோ.

    பதிலளிநீக்கு
  21. அசல் கோயமுத்தூர் காரர்ங்கிறது சரிதான.

    பதிலளிநீக்கு
  22. ஆமாங்க, இப்பெல்லாம் கோயமுத்தூர்க்காரங்களுக்கு முழு நேரத்தோழிலே சைட்டு வாங்கரதுதானுங்க. கோயமுத்தூர்ல எந்த ரிஜிஸ்டர் ஆபீசுக்கு எப்ப போனீங்கன்னாலும் கொறஞ்சது 50 கார் நிக்கிமுங்க.

    பதிலளிநீக்கு
  23. '''ஆட்டோ வருமோன்னு பயமா வேற இருக்கு.'''

    எதுக்கும் ஆட்டோவை கண்டால் விலகியே நிலுங்கள்....

    பதிலளிநீக்கு
  24. அநியாயத்துக்கு உங்க பதிவை பார்து நம்பிட்டேன் பின்னர் தான் பதிவே கும்மி என்று தெரிந்தது..

    உங்களுக்கு என்ன ஐயா!!

    புது காரு ,புது வீடு,பேங்கில பணம் கலக்கல்...

    பதிலளிநீக்கு
  25. எனக்கு சென்னையில் எக்மோரெல்லாம் வேணும் என்று இல்லை கோயபுத்தூரில் கிடைத்தாலும் போதும்...

    பதிலளிநீக்கு
  26. Malar Said:

    //எனக்கு சென்னையில் எக்மோரெல்லாம் வேணும் என்று இல்லை கோயபுத்தூரில் கிடைத்தாலும் போதும்...//

    கோயமுத்தூர்ல எங்க வேணுமுங்க, ஆர் எஸ்.புரம், இல்லேன்னா ரேஸ் கோர்ஸ் இங்கதான் நெலம் ரொம்ப சலீசுங்க, சீக்கிரம் முடிவு பண்ணுங்க, வாங்கிப்போட்றலாம்.

    பதிலளிநீக்கு