டாக்டர்களைத்தவிர மற்றவர்கள் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம். இது ஒரு அபூர்வமாக வரும் ஒரு நோய். நோய் என்று சொல்வது கூடத் தவறு. ஒரு மருத்துவச்சிக்கல் என்றுதான் கூறவேண்டும்.
கெண்டைக்காலில் ஏதாவது அடிபட்டு இருந்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உண்டு. அபூர்வமானது என்றாலும் இதைப்பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் தேவை. கருவுற்று இருக்கும் பெண்மணிகளுக்கும் பிரசவத்திற்கு முன்போ, பின்போ இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
என் நண்பர் ஒருவரின் மாப்பிள்ளை போன வாரம் ஒரு நாள் தன் மனைவியுடன் ஸ்கூட்டரில் போகும்போது குறுக்கே ஒரு கார் எதிர்பாராமல் வந்ததால் சடன்பிரேக் போட்டு சறுக்கி விழுந்து விட்டார். சாதாரணமாக ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி விபத்து ஏற்பட்டிருக்கும். நண்பரின் மாப்பிள்ளை பக்கத்திலுள்ள ஒரு பெரிய தனியார் ஆஸபத்திரிக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கெண்டைக்காலின் எலும்பில் சின்னதாக இருக்கும் “பிஃபியா” என்ற எலும்பில் ஒரு லேசான கீறல். அதற்கு கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவருடைய மனைவிக்கு சாதாரண, லேசான காயங்கள் மட்டும்தான். அதற்கும் மருந்து போட்டு அனுப்பி விட்டார்கள்.
அடுத்த நாள் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். மனுஷன் நன்றாக உற்சாகமாக இருந்தார். ஒரு மாதம் என்னைப் படுக்க வைத்து விட்டார்கள் என்று தமாசு பண்ணினார். மூன்றாவது நாள் காலையில் திடீரென்று மயக்கம் போட்டுவிட்டார் பேச்சுமூச்சு இல்லை. நாடித்துடிப்பு நின்று விட்டது. கைகால்கள் சில்லென்று ஆகிவிட்டன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆஸப்த்திரிக்குப் போனார்கள். இதற்கு ஏறக்குறைய அரை மணி நேரம் ஆகி விட்டது.
எமர்ஜென்சி வார்டுக்குப் போனவுடன் ட்ரீட்மென்ட் கொடுத்து இருதயத்தை துடிக்க வைத்து விட்டார்கள். அதுவே பெரிய சாதனை. அரை மணிநேரம் இயங்காமல் இருந்த இருதயம் இயங்க ஆரம்பித்தவுடன் நுரையீரலுக்கும் வென்டிலேட்டர் என்ற ஒரு மிஷினைப் பொருத்தி நுரையீரலையும் ஒழுங்குபடுத்தினார்கள். இருதயம் தொடர்ந்து வேலை செய்ய பலவிதமான ஊசிகள். நுரையீரல் வேலை செய்ய மிஷின். மூளையை இயங்கச்செய்ய பலவித ஊசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால் மூளை தனியாக இயங்கவில்லை. ஏனென்றால் மூளை இயங்கினால் நுரையீரல் தானே இயங்கவேண்டும். அது நடக்காததால் மூளை இயக்கம் இன்னும் வரவில்லை என்று டாக்டர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.
இது ஒரு சிக்கலான சூழ்நிலை. பணம் தண்ணீராக செலவாகிறது. மனுஷன் எப்போது சுய நினைவுக்கு வருவார் என்று சொல்லமுடியாத நிலை. என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.
கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!
எனக்குத் தன் சுடு சோறு
பதிலளிநீக்குஐயா ஒரு சந்தேகம்... ஒருவரின் இதயத்திற்கு 3 நிமிடத்திற்கு இரத்த விநியோகம் கிடைக்காவிடில் அது இறந்து விடுமல்லவா..?
பதிலளிநீக்குப்புலா என்பிற்கு பாதிப்பு வருகையில் அருகிலுள்ள நாடி ஏதாவது அறுந்ததால் குருதி கசிவு ஏற்பட்டு இந்நிலை வர சந்தர்ப்பம் உண்டல்லவா..??
அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்.
நல்ல படியாக விரைவில் குணம் பெற பிராத்தனைகள்.
பதிலளிநீக்குநம்பிக்கையும் துணிவும் குறையாது பார்த்துக்கொள்ளும் துணை மிக அவசியம்.
உங்கள் நண்பரின் மாப்பிள்ளை விரைவில் நலமடைந்து வீடு திரும்ப ஆசை, பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅல்லாஹ்வே!! இதை வாசிக்கவே கொடுமையா இருக்கே!! ஆண்டவந்தான் எல்லாரையும் காப்பாத்தணும். அவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஅவர் நல்லா ஆனதும் தெரிவியுங்க.
சிக்கலான நோய் தான்.
பதிலளிநீக்குஇப்பொழுது அவர் எப்படி இருக்கிறார்?
ம.தி.சுதா said...
பதிலளிநீக்கு//ஐயா ஒரு சந்தேகம்... ஒருவரின் இதயத்திற்கு 3 நிமிடத்திற்கு இரத்த விநியோகம் கிடைக்காவிடில் அது இறந்து விடுமல்லவா..?
பிஃப்புலா என்பிற்கு பாதிப்பு வருகையில் அருகிலுள்ள நாடி ஏதாவது அறுந்ததால் குருதி கசிவு ஏற்பட்டு இந்நிலை வர சந்தர்ப்பம் உண்டல்லவா..??
நீங்கள் சொல்வது சரி. முழங்காலிலிருந்து கணுக்கால் வரை எங்கு அடிபட்டாலும் அங்குள்ள இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைவதற்கு வாய்ப்பு இருக்குறது. அந்த உறைந்த ரத்தக்கட்டி அந்த இடத்திலிருந்து விடுபட்டு ரத்த ஓட்டத்துடன் சென்று இருதயத்திற்குப்போய் அங்கிருந்து நுரையீரலுக்குப் போகும்போது அங்கு அடைப்பு ஏற்படுகிறது. அதனால் நுரையீரல் செயல் இழக்கிறது. அதைத்தொடர்ந்து இருதயமும் நின்று போகிறது. அதனால் மூளைக்கு இரத்தம் செல்வதில்லை. ஐந்து நிமிடத்துக்கு மேல் மூளைக்கு இரத்தம் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன.
என் நண்பருடைய மாப்பிள்ளைக்கு முப்பது நிமிடங்களுக்கு மேல் மூளைக்கு ரத்தம் செல்லவில்லை.
Jay said...
பதிலளிநீக்கு//சிக்கலான நோய் தான்.
இப்பொழுது அவர் எப்படி இருக்கிறார்?//
இன்னும் சீரியஸ் நிலையில்தான் இருக்கிறார். வென்டிலேட்டரை எடுத்து விட்டார்கள். ஞாபகம் திரும்பவில்லை.
மாப்பிள்ளை உடல் நலம் பெற பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு//வென்டிலேட்டரை எடுத்து விட்டார்கள்.//
பதிலளிநீக்குஏன் என காரணம் சொன்னார்களா...?
உறுதியான மனமும் தைரியமும் உங்கள் அனைவரிடமும் நிறையட்டும்.
பிராத்தனைகளுடன்.
வார்த்தை said...
பதிலளிநீக்கு//வென்டிலேட்டரை எடுத்து விட்டார்கள்.//
ஏன் என காரணம் சொன்னார்களா...?
உறுதியான மனமும் தைரியமும் உங்கள் அனைவரிடமும் நிறையட்டும்.
பிராத்தனைகளுடன்//
அவர் வென்டிலேட்டர் உதவி இல்லாமலேயே சவாசிக்க முடிவதால் இனி வென்டிலேட்டர் தேவை இல்லை என்று டாக்டர்கள் முடிவு செய்துள்ளார்கள். ஆனாலும் ஏதாவது எமர்ஜென்சி வந்தால் அதை சமாளிப்பதற்காக ஐசியூவிலேயே வைத்திருக்கிறார்கள். நுரையீரல் வேலை செய்வது நன்றாக இருந்தால் அப்புறம் ரூமுக்கு மாற்றுவார்கள்.
அய்யா..மிகவும் வருத்தபடதக்க செய்திங்க..விரைவில் அவர் குணமடைய இறைவனை வேண்டுவோம்.
பதிலளிநீக்குநண்பரின் மாப்பிள்ளை விரைவில் குணமடைய ....
பதிலளிநீக்குப்ரார்த்தனைகளுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
அவர் விரைவில் சுகம் பெற பிரார்த்தனைகள். வேறு யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது
பதிலளிநீக்குநண்பர் குடும்பத்தில் மகன் இது போன்று சாதாரண சிறிய விபத்தில் சிக்கி சுய நினைவு இழந்து கடந்த 16 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். வயதான பெற்றோர்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். இதுவரைக்கும் நிலத்தை விற்று 6 லட்சம் செலவு செய்து இப்போது கருணைக்கொலை செய்ய மனமில்லாமல் செத்த பிணம் போல் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஇது போன்ற நிகழ்வுகள் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஜோதிஜி said...
பதிலளிநீக்கு//நண்பர் குடும்பத்தில் மகன் இது போன்று சாதாரண சிறிய விபத்தில் சிக்கி சுய நினைவு இழந்து கடந்த 16 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். வயதான பெற்றோர்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். இதுவரைக்கும் நிலத்தை விற்று 6 லட்சம் செலவு செய்து இப்போது கருணைக்கொலை செய்ய மனமில்லாமல் செத்த பிணம் போல் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்//
கொடுமையிலும் கொடுமை இதுதான். கடவுளே, ஏன் மக்களுக்கு இவ்வாறு தண்டனை கொடுக்கிறாய்?
வருத்தமாக இருக்கிறது. நலம்கிடைக்க பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவருத்தமாக இருக்கிறது. நலம்கிடைக்க பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஅடப் பாவமே:(
பதிலளிநீக்குஎன் பிரார்த்தனைகளும் இத்துடன்.
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//அடப் பாவமே:(
என் பிரார்த்தனைகளும் இத்துடன்//
உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி, துளசி கோபால் அவர்களே.
//கொடுமையிலும் கொடுமை இதுதான். கடவுளே, ஏன் மக்களுக்கு இவ்வாறு தண்டனை கொடுக்கிறாய்?//
பதிலளிநீக்குஆண்டவோட கணக்கு இந்த ஜன்மத்து கணக்கு மட்டும் இல்லைங்க ஐயா! அது எல்லா ஜன்மத்தோட கணக்கு. எந்த ஜன்மத்தில, எந்த மாதிரி கர்மங்கள் செய்கிறோமோ அந்த கர்மங்களுக்கு ஏற்ற மாதிரி பலன்களும் நல்லவையாகவும், தீயவையாகவும் வரும்கிறது தான் எல்லா வேதங்களும் சொல்லுகின்றன ஐயா!
இதை நீங்கள் தெரிந்து தான் வைத்திருப்பீர்கள் என்று திடமாக நம்புகின்றேன். இந்த வினைப்பயனை நினைத்தாவது நாம் எப்போதும் நன்மை செய்யும் குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் ஐயா!
என்னது நானு யாரா? said...
பதிலளிநீக்கு//கொடுமையிலும் கொடுமை இதுதான். கடவுளே, ஏன் மக்களுக்கு இவ்வாறு தண்டனை கொடுக்கிறாய்?//
ஆண்டவோட கணக்கு இந்த ஜன்மத்து கணக்கு மட்டும் இல்லைங்க ஐயா! அது எல்லா ஜன்மத்தோட கணக்கு.
சரியாச்சொன்னீங்க, தம்பி. இருந்தாலும் மாயை அவ்வப்போது கண்ணை மறைக்கத்தான் செய்கிறது. முற்றும் துறந்த ஞானி என்பது மிகவும் கடினம் என்று நினைக்கிறேன்.
இறைவா வேதனை குறைத்து வாழ வைத்து உன்னைத் தொழுது மக்களுக்கு சேவை செய்ய வழி செய்
பதிலளிநீக்கு