செவ்வாய், 5 அக்டோபர், 2010

என் பிளாக்குக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள்?

என்னுடைய பிளாக்கில்  Add Images Gadget  வேலை செய்ய மாட்டேன் என்கிறது. போட்டோக்களை எப்படி போடுவது என்று தெரியவில்லை. யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். யாராவது இந்த சூன்யத்தை எடுப்பதற்கு தயவு செய்து ஏதாவது வழி சொல்லுங்கள்.

தமிழ் மணம், இன்ட்லி ஆகிய இரண்டு ஒட்டுப்பட்டைகளையும் காணோம்?

குடி முழுகிவிட்டது????

19 கருத்துகள்:

 1. சொந்தமா வெச்சிக்கிட்டீங்க போல..


  நெருங்கியவர்களிடம் பாஸ்வேர்டு கொடுத்து முயற்சி செய்யவும்.

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கு கூட சூனியமா?

  தமிழ்மண,இ(ண்)ட்லி பட்டை தெரிகிறதே!

  பதிலளிநீக்கு
 3. ஒன்னும் ஆகலை அய்யா ,டெம்ப்ளேட் மாத்தி இருப்பிங்க..அதான் மறைஞ்சு இருக்கு முன் போலவே ஒட்டு பட்டைகளை இணையுங்கள்...ஏதேனும் சந்தேகம் இருப்பின் என் மெயிலுக்கு தகவல் அனுப்பவும் //sathishastro@gmail.com

  பதிலளிநீக்கு
 4. அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றிக் கொண்டு இருந்தால் எல்லாம் சூன்யம் தான் வரும் ஐயா! வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்! பழைய டெம்ப்ளேட்டையே முயற்சி செய்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. பதிவர்களில் நிறைய பேர் தொழில் நுட்பம் பற்றித் தெரிந்தவர்கள். நன்கு தெரிந்த ஒருவரிடம் இது பற்றி மின்னஞ்சல் அனுப்புங்கள். அவர்கள் உதவி செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 6. template change பண்ணீங்களா? வாக்குப் பட்டி வச்சிக்கலாம். அது கஷ்டமில்லை. செட்டப்ல போய் நீயூ எடிட்டர் செலக்ட் பண்ணுங்க. இமேஜ் ஆட் பண்ணலாம். இல்லன்னா கூகிள் கணக்கில picasa.com ல போய் உங்க படத்தைச் சேருங்க. ஷேர் பண்ணுங்க. எம்பெட் கோட் இருக்கும். அதை காபி பண்ணி பதிவில போடலாம்.

  பதிலளிநீக்கு
 7. வானம்பாடிகள் சொன்னது:

  //template change பண்ணீங்களா? வாக்குப் பட்டி வச்சிக்கலாம். அது கஷ்டமில்லை. செட்டப்ல போய் நீயூ எடிட்டர் செலக்ட் பண்ணுங்க. இமேஜ் ஆட் பண்ணலாம். இல்லன்னா கூகிள் கணக்கில picasa.com ல போய் உங்க படத்தைச் சேருங்க. ஷேர் பண்ணுங்க. எம்பெட் கோட் இருக்கும். அதை காபி பண்ணி பதிவில போடலாம்.//

  எதப்பாத்தாலும் நோண்டற வேலை உடமாட்டேங்குதுங்க. என்னத்தையோ பண்ணப்போயி என்னமோ ஆயிடுச்சுங்க.

  எடிட்டரை மாத்தினேன். Add image சரியாப்போச்சு.

  தமிழ்மணம், இன்ட்லி சரியா இருக்குன்னு ரெண்டு பிளாக்கருங்க சொல்றாங்க, ஆனா, என்னுடைய கம்ப்யூட்டரிலே தெரியல. திரும்பவும் ஓட்டுப்பட்டையை சேர்த்துப்பார்க்கிறேன்.

  நன்றி, வானம்பாடிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. //யாராவது இந்த சூன்யத்தை எடுப்பதற்கு தயவு செய்து ஏதாவது வழி சொல்லுங்கள்.//

  தாயத்து மந்திருசு கட்டுங்க தத்தா ..!!

  பதிலளிநீக்கு
 9. பைத்தியம் படிச்சிருச்சு-ங்கறீங்க...
  சூனியம் வெச்சிட்டாங்க-ங்கறீங்க...
  என்னதான் நடக்குதுங்க இங்கே?
  (நான் சொன்னாமாதிரி செஞ்சீங்களா?
  எல்லாம் சரியாயிருச்சா? வெரிகுட்!)

  பதிலளிநீக்கு
 10. எப்போதுமே டெம்லேட் மாற்றும் போது அதனை முன்னாலேயே ஒரு காப்பி எடுத்து வைக்கனும் .இல்லாட்டி இதுப்போல சிக்கல் வரும். என் பிளாக்கிலேயே இதைப்பத்தி போட்டிருக்கேனே சார்..!!

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

  பதிலளிநீக்கு
 12. ஜெய்லானி,
  பட்டபிறகுதானே புத்தி வருகிறது. இனிமேல் ஜாக்கிரதையாக இருந்து கொள்வேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 13. பத்ரிநாதரை தரிசிக்கலாமென வந்தால் சூன்யம் ஆகிவிட்டதே.

  நண்பர்களால் சூன்யம் விலகிடும்.

  பதிலளிநீக்கு
 14. முதன்முதலாக உங்கள் பிளாகுக்குள் நுழைந்தேன் --””ஜீவனுள்ள பிளாக்””

  பதிலளிநீக்கு
 15. கமென்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. நண்பருடைய மாப்பிள்ளைக்கு ஒரு சீரியஸ் உடல்நலக்குறைவு. தனித்தனியாக பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும்.

  சூனியத்தை ஒரு மாதிரியாக தாயத்து மந்திரித்துக்கட்டி சரி செய்திருக்கிறேன். ஐடியாக்கள் கொடுத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ஐயா இண்ணைக்கத் தான் தங்களத தளம் பார்க்கிறேன்... முழுவதும் நன்கு ரசிக்கக் கூடிய பதிவுகள் நல்லாயிரக்க... அதோட சூனியம் விலக்கணுமுண்ணா அப்படியே ஒரு எட்டு எட்டி யாழ்ப்பாணம் வாங்க எடுத்துத் தரலாம் அதுக்கும் சிரமுமுண்ண நம்ம புளொக்கக்க வாங்க அங்க எகப்பட்ட திட்டங்கள் இருக்குது...

  பதிலளிநீக்கு