திங்கள், 6 டிசம்பர், 2010

இந்தியாவில் உணவுப்புரட்சிஇந்தியாவில் உணவுப்புரட்சி


இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட அரசியல், சமூக, மதக் குழப்பங்கள் தீர்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1960 களின் கடைசியில் ஒரு குழு தெய்வாதீனமாக அமைந்தது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் பொறுப்பேற்றார். திரு.சி.சுப்பிரமணியம் மத்திய விவசாய அமைச்சராக இருந்தார். இருவரும் கலந்து ஆலோசித்து இந்திய உணவுப் பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். டாக்டர் எம்.எஸ். ஸ்வாமிநாதனுக்குத் தெரிந்த ஒரு அமெரிக்க விவசாய விஞ்ஞானி, நோபல் பரிசு வாங்கியவரான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரை இந்தியாவிற்கு வரவழைத்தார்கள்.

அவர் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள விவசாய தொழில் நுட்பங்களை ஆராய்ந்து இங்குள்ள விவசாய நிபணர்களிடமும் கலந்தாலோசித்து சில முடிவுகளைச் சொன்னார். இந்திய விவசாயத்தை மேம்படுத்த முக்கியமாக மூன்று அபிவிருத்திகள் செய்ய வேண்டும் என்றார். ஒன்று - நல்ல விதை. இரண்டுநல்ல உரம். மூன்றுநல்ல பயிர் பாதுகாப்பு. நல்ல விளைச்சல் தரக்கூடிய கோதுமை விதைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உரங்களும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும் பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. இவைகளை உபயோகப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதில் விளைச்சல் பலமடங்கு அதிகமாக விளைந்தது. இந்திய நாடு உணவு வகையில் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொண்டது.


பசுமைப்புரட்சிஎன்றழைக்கப்பட்ட இந்த விவசாயப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களினால் இந்திய மக்கள் பஞ்சத்திலிருந்து விடுபட்டார்கள். ஆனாலும் இந்திய மக்கள் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்தார்கள். அதாவது எலிகள் போல் பெருகினார்கள். முப்பது கோடியாய் இருந்தவர்கள் அறுபது வருடங்களுக்குள் நூற்று இருபது கோடியாய் பெருகி இருக்கிறார்கள். இந்தியாவின் சாபக்கேடே இந்த மனித உற்பத்திப் பெருக்கம்தான். சரி, இருக்கிற ஜனங்களாவது ஒழுங்காக, தேசப்பற்றுடன், நாடு முன்னேற பாடுபடுகின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஏறக்குறைய தரை மட்டமாக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்கர்களே பயப்படும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசப்பற்று இருக்கிறது. நமக்கு?????இந்தியர்களின் பசியைப் போக்கியதில் உரங்களும் பயிர்பாதுகாப்பு மருந்துகளும் முக்கிமான பங்கை ஆற்றியிருக்கின்றன. இவைகளின் உபயோகம் வருடாவருடம் அதிகரித்து வந்துள்ளது. இந்த உண்மையை மனதில் கொள்ளாமல் திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.

20 கருத்துகள்:

 1. இது போன்ற வித்யாசமான விபரங்கள் இங்கு இடம் பெறுவது பாராட்டுக்கு உரியது.
  டெம்ப்ளேட் அழகாக மாற்றி உள்ளீர்கள். பொருத்தமாக இருக்கிறது.
  :)))))

  பதிலளிநீக்கு
 2. ஐயா நடைமுறைக்கு இயற்கை வழி விவசாயம் ஏன் ஒத்துவராது?

  பதிலளிநீக்கு
 3. // திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.//

  அரசியல் வாதிக்கு பாக்கெட் நிறம்ப என்ன வேனாலும் சொல்வாங்க ..!! :-)

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பதிவுகளிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. ஜெய்லானி said...

  // திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.//

  //அரசியல் வாதிக்கு பாக்கெட் நிறம்ப என்ன வேனாலும் சொல்வாங்க ..!! :-)//

  வாங்க, ஜெய்லானி, ரொம்ப நாளாக்காணலியா? எங்கூட டூ விட்டிட்டீங்களாக்கும்னு நெனச்சேன். அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்களே?

  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. கக்கு - மாணிக்கம் said...

  இது போன்ற வித்யாசமான விபரங்கள் இங்கு இடம் பெறுவது பாராட்டுக்கு உரியது.
  டெம்ப்ளேட் அழகாக மாற்றி உள்ளீர்கள். பொருத்தமாக இருக்கிறது.
  :)))))
  ----------------------------------
  நன்றி, கக்கு-மாணிக்கம்.

  பதிலளிநீக்கு
 7. jai said...

  //ஐயா நடைமுறைக்கு இயற்கை வழி விவசாயம் ஏன் ஒத்துவராது?//

  இதைப்பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன், ஜெய். நிறைய விஷயங்கள் எழுத வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. G.M Balasubramaniam said...

  //உங்கள் பதிவுகளிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்//

  வாங்க, GMB, ஒவ்வொருத்தர் இடமும் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன, கற்றுக்கொள்ள மனம் இருந்தால் !!!

  பதிலளிநீக்கு
 9. //இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஏறக்குறைய தரை மட்டமாக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்கர்களே பயப்படும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள்.//

  இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாய்மொழி கல்வியும் முக்கியமானது. நம்ம இங்லீசுல சொல்லி கொடுத்தோம், சுலாவா பறந்துட்டாங்க.

  அதுவும் இல்லாம அங்க அரசாங்கம், விதிமுறை கடுமையா இருக்கும்னு கேள்வி. ஒருத்தர் குப்பைய கொட்ட பட்ட பாட்ட கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சோம்.

  பதிலளிநீக்கு
 10. //திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.//

  நல்லா கேட்டீங்க. சரியா.
  திடீருன்னு இயற்கை வெவசாயம்னு சொல்றதுல முக்கால்வாசி பேரு; organic farming, export potential, சரியான சில்லறங்குற கணக்குல தான் இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 11. நல்ல விளைச்சல் தரக்கூடிய கோதுமை விதைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உரங்களும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும் பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.

  //

  அமெரிக்கா , பார்த்தீன செடியின் விதைகளை, கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்கு அனுப்பினர் என்று, சிறுவயதில் கேள்விப்பட்டது உண்டு...

  அந்த செய்தி உண்மையா சார்?...

  பதிலளிநீக்கு
 12. பட்டாபட்டி.... said...

  //அமெரிக்கா , பார்த்தீன செடியின் விதைகளை, கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்கு அனுப்பினர் என்று, சிறுவயதில் கேள்விப்பட்டது உண்டு...
  அந்த செய்தி உண்மையா சார்?..//

  உண்மை. இது போல்தான் கள்ளிப்பூச்சியும் சப்பாத்திக் கள்ளியை அழிப்பதற்காக இறக்குமதி செய்தோம். சப்பாத்திக்கள்ளி முழுவதும் அழிந்தபிறகு அவைகளுக்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காததால் அவை இப்போது எல்லாச் செடிகளையும் சாப்பிடுகின்றன. ஜாடியிலிருந்து வெளியில் விட்ட பூதம் கதைதான்.

  பதிலளிநீக்கு
 13. வார்த்தை said...

  //நல்லா கேட்டீங்க. சரியா.
  திடீருன்னு இயற்கை வெவசாயம்னு சொல்றதுல முக்கால்வாசி பேரு; organic farming, export potential, சரியான சில்லறங்குற கணக்குல தான் இருக்காங்க//

  ஐயா, பின்னூட்டத்தில இதை சாதாரணமா எழுதிட்டீங்க. இதுதான் உண்மை. இதை நான் காரண காரியங்களோட பதிவாப் போடணும். அப்ப பாருங்க, எத்தனை பேரு என்னைக்கடிச்சு கொதறப் போறாங்கன்னு?

  பதிலளிநீக்கு
 14. அய்யா, ஆரம்பிச்சு 7 பதிவும் போட்டுட்டேன்......
  (லிங்க் வேல செய்யலயோ...???)
  நம்ம கட இப்ப @
  http://ezuththukkal.blogspot.com
  அவசியம் வாங்க‌

  பதிலளிநீக்கு
 15. ///அமெரிக்கா , பார்த்தீன செடியின் விதைகளை, கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்கு அனுப்பினர் என்று, சிறுவயதில் கேள்விப்பட்டது உண்டு...அந்த செய்தி உண்மையா சார்?..////

  இதை இப்பத் தான் இங்கு பார்த்தேன். வெகுஜனப் பத்திரிக்கைகள் காமாரஜரை அசிங்கப் படுத்த செய்த முயற்சி. வதந்தி. என் கேள்வி? இந்த P.L. 480 - உதவி பெறாத நாடே ஏழை நாடுகளே இல்லை.

  முதல் கேள்வி?
  தமிழ் நாட்டில் எங்கு கோதுமை விளைகிறது என்று சொன்னால் நலம்!!!


  இந்தியாவில் மற்ற மாகாணங்களில் இந்த செடிகள் உள்ளதா?
  மற்ற நாடுகளில் உள்ளதா?

  பார்த்தீன செடியின் விதைகளை வேண்டுமென்ற கலந்து அனுப்பக் காரணம் என்ன? நம் நாட்டில் பத்திரிக்கைகள் சொல்வதையெல்லாம் நாம் நம்புவது தான் காரணம்.

  பதிலளிநீக்கு
 16. மேலும், தமிழ் நாட்டில் அதுவும் கிராமங்களில் அந்த சமயம் கோதுமை சாப்பிட்பவர்கள் மிக மிக கம்மி. கிடையவே கிடையாது என்று சொல்லாம். அவ்வளவு ஏன். இப்போ கூட கோதுமை வாங்க வேன்டுமானால் பழனி தான் செல்லனும். பெரிய பெரிய கிராமங்களில் கூட கோதுமை வாங்க ஆள் கிடையாது. கோதுமையை கடையில் வைத்து இருக்க மாட்டார்கள்.பஞ்சாபில் என்று சொன்னால் ஓரளவுக்கு நம்பலாம். தமிழ் நாட்டில்....

  காலா காந்தி என்று சொல்லபப்பட்டவரை (எதோ காந்தி அப்பிடியே வெள்ளைக்காரன் மாதிரி)கருப்பு காக்கை என்று கிண்டல் செய்த போலி அறிஞர் & co வேலை அது....

  காமராஜரவது கும்முன்னு அழகா இருப்பார்; நம்ம காந்தி மற்றும் அந்த அறிஞர் எல்லாம் சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி தான் இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு