வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிய அத்துணை நல்ல இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி தனித்தனியே வாழ்த்துக்கள் அனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும்.

ஒரு முக்கிய அறிவிப்பு. நாளை புத்தாண்டு தினத்தன்று நானும் என் நண்பர் ஒருவரும் காரைக்காலில் நடக்கவிருக்கும் ஒரு சதாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ளச் செல்கிறோம். வழக்கம்போல் போட்டோக்களும் விவரங்களும் இந்தப் பதிவில் வரும். அதைத் தவறாது பார்க்கவும். அப்படிப் பார்ப்பவர்கள் எல்லோரும் தங்கள் சதாபிஷேகத்தை மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளுடன் கொண்டாடுவார்கள் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.

18 கருத்துகள்:

 1. என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா

  பதிலளிநீக்கு
 2. கலாநேசன் said...

  //என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா//

  மிக்க நன்றி, கலாநேசன்.

  பதிலளிநீக்கு
 3. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. இன்பம் தொடர! இதயம் குளிர!
  துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
  நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
  இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
  என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.

  அன்புடன் வாழ்த்தும்,

  பதிலளிநீக்கு
 5. ஒரு திருத்தம் இது ஆங்கில புத்தாண்டு என சொல்வது முட்டாள்தனம். இப்படி இங்கு ஆங்கில நாட்டில் சொன்னால் சிரிப்பார்கள். இது கிரிகேரியன் காலண்டர் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டு என இவ்வளவு நாள் நாம் கொண்டாடிய சித்திரைப் புத்தாண்டும் தமிழர்கள் புத்தாண்டு இல்லை. அது இந்திய சோலார் காலண்டர் புத்தாண்டு. அது தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், இலங்கை, நேபாலம், தாய்லாந்து, போன்றா நாடுகளிலும் கொண்டாடுகின்றனர். தற்போது தமிழர்கள் தமக்கு என வள்ளுவர் காலண்டர் அமைத்து தமிழ் புத்தாண்டை பொங்கலுக்கு மாற்றியுள்ளனர்.

  பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா...

  பதிலளிநீக்கு
 7. ஆரம்பத்திலிருந்தே என் பதிவுகளுக்கும் எனக்கும் ஆதரவு தந்த உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கூறி என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


  மதி.சுதா.
  அழியா வடுக்கள்

  பதிலளிநீக்கு
 9. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  தங்களின் சதாபிஷேகம் எப்போது?
  வாழ்த்துக்களை பெற நாங்கள் எல்லாம் ரெடி! :)

  பதிலளிநீக்கு
 10. பாண்டிச்சேரி வலைப்பூ said...

  //ஒரு திருத்தம் இது ஆங்கில புத்தாண்டு என சொல்வது முட்டாள்தனம். இப்படி இங்கு ஆங்கில நாட்டில் சொன்னால் சிரிப்பார்கள். இது கிரிகேரியன் காலண்டர் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டு என இவ்வளவு நாள் நாம் கொண்டாடிய சித்திரைப் புத்தாண்டும் தமிழர்கள் புத்தாண்டு இல்லை. அது இந்திய சோலார் காலண்டர் புத்தாண்டு. அது தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், இலங்கை, நேபாலம், தாய்லாந்து, போன்றா நாடுகளிலும் கொண்டாடுகின்றனர். தற்போது தமிழர்கள் தமக்கு என வள்ளுவர் காலண்டர் அமைத்து தமிழ் புத்தாண்டை பொங்கலுக்கு மாற்றியுள்ளனர்.//

  இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? எப்படியோ முட்டாள் ஆனது ஆனதுதான். அதனால உங்ககிட்ட இருக்கிற சமாசாரங்களையெல்லாம் சொல்லிப்போடுங்க. அடுத்த வருஷம் சுதாரிச்சுக்கறோம்.

  பதிலளிநீக்கு
 11. கக்கு - மாணிக்கம் said...

  //புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  தங்களின் சதாபிஷேகம் எப்போது?
  வாழ்த்துக்களை பெற நாங்கள் எல்லாம் ரெடி! :)//

  இருங்க கணக்குப்போட்டு சொல்லறேன்.
  ரெக்கார்டு பிரகாரம் 15-6-1934.
  ஜாதகப்பிரகாரம் 15-7-1935 அதாவது ஆனி மாதம் மூல நட்சத்திரம். ஆகவே 2015 ம் ஆண்டு (தமிழ் வருஷம் கண்டுபிடிக்கோணும்) ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்னிக்கு எல்லாரும் கோயமுத்தூருக்கு வந்துடுங்க. இதையே அழைப்பா ஏத்துக்குங்க. சரீங்களா?

  பதிலளிநீக்கு
 12. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ஸார்!
  (எதுக்கு வம்பு? ஆங்கிலமோ,கிரிகோரியோ பொதுவா சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்க
  வேண்டியது தான்!)

  பதிலளிநீக்கு
 15. Sadhabisheham might be at "Thirukkadaiyur" or at "Annan Perumal Koil". Because Thirukkadaiyur is for Markandeyar (shiva followers) and Annan Perumal Koil is with similar story to vaishnava followers. Both are nearer to Karaikal.

  பதிலளிநீக்கு