திங்கள், 14 பிப்ரவரி, 2011

சமைத்ததை சாப்பிடும் முறைகள்

பல பதிவர்கள் குறிப்பாக பெண் பதிவர்கள் சமையல் குறிப்புகளைப் பற்றி எழுதுகிறார்கள். அவை சமையல் தெரியாத ஆண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனானப்பட்ட ஜெய்லானியே வெந்நீர் வைப்பது எப்படி? என்று ஒரு பதிவு இட்டிருக்கிறார்.

ஆனால் ஒருவராவது இப்படி சமையல் செய்த பிறகு, அதைச் சாப்பிடுவது எப்படி என்று ஒரு பதிவாவது போட்டிருக்கிறார்களா என்றால் இதுவரை இல்லை. ஏன் என்றால் அப்படி அந்தக் குறிப்புகளை வைத்து செய்யப்படும் பண்டங்கள், படம் எடுக்க மட்டும்தானே தவிர அதைச் சாப்பிடச் சொல்ல அவர்களுக்குத் துணிவு இல்லை. (அவை சாப்பிட லாயக்கில்லை என்று நான் என் வாயால்/பேனாவால் சொல்லமாட்டேன்). இது பதிவுலகிற்கு ஒரு களங்கம்.  

அந்தக் களங்கத்தைத் துடைக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்ளுகிறேன். முதலில் கொங்கு நாட்டு ஸ்பெஷல் ஸ்வீட்டுடன் ஆரம்பிக்கிறேன். அவ்வப்போது மற்ற ஸ்பெஷல் ஐட்டங்களைப்பற்றி பதிவிடுகிறேன். (முக்கியமான குறிப்பு: இந்த ஐட்டங்களில் எதுவும் தங்க்ஸ்கள் செய்ததாக இருக்கக் கூடாது. அம்மாமார்களோ அல்லது நல்ல சமையல்காரரோ செய்ததாக இருக்க வேண்டும்). 

படம் 1 ஐப் பார்க்கவும்.
இதுதான் ஒப்பிட்டு என்று கொங்கு நாட்டிலும் போளி என்று மற்ற மாவட்டங்களிலும் அழைக்கப்படும் பழங்காலத்திலிருந்து பெயர் போன ஸ்வீட்

இதை முறையாக சாப்பிடத் தேவையானவை, படம் 2 ல் பார்க்கவும்.
தேவையானவை:

ஒரு சம்புடத்தில் சுமாராக 30 ஒப்பிட்டு.
ஒரு சீப்பு பூவன் வாழப்பழம்.
ஒரு கிண்ணம் நெய்.
ஒரு தட்டு.
சாப்பிடும் முறை.

ரவுண்டு 1. (படம் 3)

தட்டில் கீழ்க்கண்டவைகளை எடுத்துக் கொள்ளவும்.
1.   இரண்டு ஒப்பிட்டுகள்எந்த ஸ்வீட்டையும் ஒத்தையாக சாப்பிடக்கூடாது. அது மகாப்பாவம்.
2.   இரண்டு நன்கு பழுத்த, உரித்த பூவன் வாழைப்பழங்கள். ஏன் உரித்து வைக்க வேண்டும் என்றால் தமிழ் மரபு பிரகாரம் சாப்பிடும்போது இடது கையால் சாப்பிடும் பொருள் எதையும் தொடக்கூடாது.
3.   ஒரு கிண்ணத்தில் உருக வைத்து நன்கு சூடாக இருக்கும் நல்ல மணம் உள்ள பசு நெய். 

சாப்பிடும் முறை:

4.   இவைகளை கையால் ஒன்று சேர்த்து நன்றாகப் பிசையவும். ஐயே!!! என்று முகத்தைச் சுளிப்பவர்கள் அடுத்த பதிவுக்குப் போய்விடவும். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்

இப்போது படம் 4 ல் உள்ளது போல் இருக்கும்


இதை ஒவ்வொரு கவளமாக எடுத்து வாயில் போட்டு சுவைத்து சாப்பிடவும். சாப்பிட்டு முடித்த பிறகு தட்டு படம் 5 ல் இருப்பது போல் இருக்கும்

 

ஒரு மிடறு தண்ணீர் குடிக்கவும்.

பிறகு ரவுண்ட் 2 ஆரம்பிக்கலாம். ரவுண்டு 2, ரவுண்டு 1 ஐப் போலவேதான்

இப்படியே 3, 4, 5, 6, …….. ரவுண்டுகளுக்குப் போகவும். எப்போது வாந்தி வரும் போல் தோன்றுகிறதோ அப்போது நிறுத்திவிடவும்.
இதுதான் கொங்கு நாட்டில் ஒப்பிட்டு சாப்பிடும் ஒழுங்கான பாரம்பரிய முறை.

பத்தியம்: மறுநாள் வயிற்று வலி வந்தால் (கட்டாயம் வரும்) பக்கத்து பெட்டிக்கடையில்ஓமத்திராவகம்என்று ஒரு மருந்து கிடைக்கும். அது ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு வந்து ஒரு மணிக்கு ஒரு தடவை ஒரு அவுன்ஸ் சாப்பிடவும். இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கிலீஸ் மருந்துக் கடையில்யூனிஎன்ஸைம்என்று ஒரு மருந்து கிடைக்கும். அதை வாங்கி வேளைக்கு 2 மாத்திரை வீதம் மூன்று வேளை சாப்பிடவும்.  

23 கருத்துகள்:

  1. சாப்பிட்டுவிடுவோம்


    நம்ப பதிவு

    ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

    http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

    பதிலளிநீக்கு
  2. இணையத்துள் வந்தாலே உங்கள் இடுகை ஏதேனும் வந்துள்ளதா என முதலில் பார்க்கும் வண்ணம் கலக்கறீங்க சார்.:))))))))))))

    பதிலளிநீக்கு
  3. எங்க அம்மா இது மாதிரி பிசைஞ்சு எல்லாருக்கும் கையில ஒரு ஒரு உருண்டையா தருவாங்க. கடைசி உருண்டைக்கு எப்பவும் சண்டைதான் வரும். உடனே சாப்பிடணும் போல இருக்குதுங்க. பார்சல் ப்ளீஸ்!!

    பதிலளிநீக்கு
  4. :}}}}}}}}}}}}}
    எதன் னோடும் ஒப்பிடமுடியாத ஒப்பிட்டு
    கச்சாயம் கூட இந்த முறையில் உண்ணலாம் **********

    பதிலளிநீக்கு
  5. கூடவே ஆன்புலன் போன் நம்பரையும் சரியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று போடாமல் விட்டது பிசகு அல்லவா?
    அண்ணாதே இந்த மேரிக்கி போலி துன்னுகினா அம்புட்டுதேன். அப்புறம் சங்கு ஊதிகினுதேன் காரியம் பாக்கோணும்.

    பதிலளிநீக்கு
  6. “ஓமத்திராவகம்” இது இப்போதும் கிடைக்கிறதா சார்?? ஆச்சர்யம்.. என் சிறுவயதில் இதை மூக்கை பொத்திக்கொண்டு குடித்த அனுபவம் இருக்கிறது, ஆனால் இது நாங்கள் அப்போது வாங்கிய அந்த குடும்பத்தின் ஃபார்முலா என்று அதே சின்ன வயதில் கேட்ட ஞாபகம்?? பகிர்ந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இப்படியே 3, 4, 5, 6, …….. ரவுண்டுகளுக்குப் போகவும். எப்போது வாந்தி வரும் போல் தோன்றுகிறதோ அப்போது நிறுத்திவிடவும்.
    இதுதான் கொங்கு நாட்டில் ஒப்பிட்டு சாப்பிடும் ஒழுங்கான பாரம்பரிய முறை
    //

    அண்ணே.. ரொம்ப ஓவரு..
    :-)

    கடைசியா, சாப்பிட்ட தட்டை எப்படி கழுவனுமுனு சொல்லாம விட்டுட்டீங்க..!!!!
    ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  8. பட்டாபட்டி.... said...

    //கடைசியா, சாப்பிட்ட தட்டை எப்படி கழுவனுமுனு சொல்லாம விட்டுட்டீங்க..!!!!//

    அதுதான் மாமூல் வேலையாச்சே. கை தானாகவே வேலை செஞ்சு தட்டு கிளீனாகிவிடும். அதுவுமில்லாம, இந்த தட்டைத் தனியாகவா கழுவப்போறோம்? எல்லாப்பாத்திரத்தையும் கழுவரப்ப இதையும் கழுவீடப் போறோம். இதுக்கு வேணுமின்னா ஒரு தனி பதிவு போட்டுடட்டுமா? நம்ம மானம் கொஞ்சம் கப்பலேறிடுமேன்னு பாக்கறேன்!

    பதிலளிநீக்கு
  9. //// இந்த தட்டைத் தனியாகவா கழுவப்போறோம்? எல்லாப்பாத்திரத்தையும் கழுவரப்ப இதையும் கழுவீடப் போறோம். இதுக்கு வேணுமின்னா ஒரு தனி பதிவு போட்டுடட்டுமா? நம்ம மானம் கொஞ்சம் கப்பலேறிடுமேன்னு பாக்கறேன்!////

    :))))))))))))))))

    பதிலளிநீக்கு
  10. இந்த மாதிரி ஒரு வீட்டில் விருந்துக்குச் சென்றவர் ஒப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று தொண்டை வரை முப்பத்திரண்டு ஒப்பிட்டுகளைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று, ஐயோ...அம்மா..வயிறு வலிக்கிறதே... என்று அலறினாராம். அவர் மனைவி ஓமத் திரவம் ஒரு ஸ்பூன் குடிங்களேன் என்றாராம், அதற்க்கு அவர் அடி சண்டாளி, அவ்வளவு இடம் வயிற்றில் இருந்திருந்தால் நான் இன்னும் முப்பத்திரண்டு ஒப்பிட்டு சாப்பிட்டிருக்க மாட்டேனா என்றானாம். ஹா....ஹா....ஹா....ஹா.... [ஏன் சார், வயிறு பசியாறும் வரை சாப்பிட்டுவிட்டு, வயிறு நிறைந்த உடன் நிறுத்திவிடக் கூடாதா, ஏன் இந்த கொடூர வகையில் சாப்பிட வேண்டும்?]

    பதிலளிநீக்கு
  11. லட்டு, இனிப்பு உளுந்து வடை யையும் இதே மாதிரி பழம் ,ரஸ்தாளியாக இருந்தால் சுவைகூடும். நெய்யுடன் சாபிடுவார்கள். அப்படியே சாப்பிட்டால் இரண்டுஅல்லது மூன்றுதான் சாப்பிடமுடியும். பிசைந்து சாப்பிட்டால் நிறைய சாப்பிட முடியும். இனிப்பு புட்டு இதே மாதிரி பூப்புனித நீராட்டுக்கு செய்வார்கள்.பெயரே புட்டு சுற்றுதல் தான்.

    பதிலளிநீக்கு
  12. இராஜராஜேஸ்வரி said...

    //லட்டு, இனிப்பு உளுந்து வடை யையும் இதே மாதிரி பழம், ரஸ்தாளியாக இருந்தால் சுவைகூடும். நெய்யுடன் சாப்பிடுவார்கள். அப்படியே சாப்பிட்டால் இரண்டு அல்லது மூன்றுதான் சாப்பிடமுடியும். பிசைந்து சாப்பிட்டால் நிறைய சாப்பிட முடியும். இனிப்பு புட்டு இதே மாதிரி பூப்புனித நீராட்டுக்கு செய்வார்கள்.பெயரே புட்டு சுற்றுதல் தான்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே. இப்போ ஆஸ்ட்ரேலியாவில் இருக்கிறீர்கள் போல. அடிக்கடி வாங்க. நானும் வரேன்.

    பதிலளிநீக்கு
  13. Had a hearty laugh. It will be mahapaavam if i laugh heartily and do not leave a comment. :)

    பதிலளிநீக்கு
  14. ellaam coimbatore kusumbu vayathu viththiyaasam illaama irukkarathaala vantha pirachinai. :))

    en sir, en? ippadi veliyur vaaz makkaloda vayirellam valikkanumnu pathiva? lolaay remba jaasthi. :))

    irunga appaavikitta solli idli anuppa solren. yaarange...

    பதிலளிநீக்கு
  15. அன்னு said...

    //எல்லாம் கோயமுத்தூர் குசும்பு. வயது வித்தியாசம் இல்லாம இருக்கிறதால வந்த பிரச்சினை:))

    ஏன் சார், ஏன்? இப்படி வெளியூர் வாழ் மக்களோட வயிரெல்லாம் வலிக்கணும்னு பதிவா?

    லோலாய் ரெம்ப ஜாஸ்தி:))

    இருங்க அப்பாவிகிட்ட சொல்லி இட்லி அனுப்ப சொல்றேன். யாரங்கே?//

    வந்தேனம்மா, உத்திரவிடுங்கள். இந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணீடறேன். ரொம்ப நாளாவே இந்த ஆளு இப்படித்தானுங்க ரவுசு பண்ணீட்டுத் திரியராருங்க. காரணம் என்னன்னா அவங்க ஊட்டு அம்மா சூடு சொரணையா ஆக்கிப்போட்டு இப்படிப் பண்ணிப் போட்டாங்க. கன்ட்ரோல் இல்லாமப் போச்சுங்க.

    பதிலளிநீக்கு
  16. //வந்தேனம்மா, உத்திரவிடுங்கள். இந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணீடறேன். ரொம்ப நாளாவே இந்த ஆளு இப்படித்தானுங்க ரவுசு பண்ணீட்டுத் திரியராருங்க. காரணம் என்னன்னா அவங்க ஊட்டு அம்மா சூடு சொரணையா ஆக்கிப்போட்டு இப்படிப் பண்ணிப் போட்டாங்க. கன்ட்ரோல் இல்லாமப் போச்சுங்க. //

    ஹ ஹ ஹா... சார்... வாய் விட்டு நான் சிரிக்கறது சில வலைப்பக்கங்கள்லதேன். அதுல உங்களுது இன்னும் (சொந்த ஊர்) பெருமையோட சிரிக்க வைக்குது... :))

    நான் அடுத்த தடவை ஊருக்கு வர்றப்ப கண்டிப்பா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட (அதாவது உங்க தங்ஸ் :)) சொல்லி கொஞ்சம் கண்ட்ரோல்லயே வெக்க சொல்றேன். ஹெ ஹெ :))

    பதிலளிநீக்கு
  17. அன்னு said...

    //நான் அடுத்த தடவை ஊருக்கு வர்றப்ப கண்டிப்பா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட (அதாவது உங்க தங்ஸ் :)) சொல்லி கொஞ்சம் கண்ட்ரோல்லயே வெக்க சொல்றேன்.//

    வாங்க, உங்கள் வரவு நல்வரவாகுக.

    பதிலளிநீக்கு
  18. நானும் ரொம்ப நாளா இப்படி ஒரு பதிவு போடனுமின்னு ஆசை . இன்னைக்கி இதை பார்த்தும் மனசு லேசாகிடுச்சி :-)


    ஒரு சீப்பு வாழைப்பழம் ரொம்பவும் குறைவா தெரியுதே ஏன் ? ஹா..ஹா..

    பதிலளிநீக்கு
  19. ஜெய்லானி said...

    //நானும் ரொம்ப நாளா இப்படி ஒரு பதிவு போடனுமின்னு ஆசை . இன்னைக்கி இதை பார்த்தும் மனசு லேசாகிடுச்சி :-)
    ஒரு சீப்பு வாழைப்பழம் ரொம்பவும் குறைவா தெரியுதே ஏன் ? ஹா..ஹா..//

    ஒரு கொலை(?)தான் வாங்ஙீட்டு வந்து வச்சிருந்தேன். போட்டோ எடுக்கறதுக்குள்ள எங்க ஊட்டு அம்மா அதை சீப்பு சீப்பா அறுத்து வச்சுட்டாங்க. அதனாலதான் இப்படி. இது எப்படி இருக்கு?

    பதிலளிநீக்கு
  20. உங்க வீட்டுக் காரம்மா போன ஜென்மத்ல உங்களை கணவராய் அடைய புண்ணியம் செய்து இருப்பாகளோ?

    பதிலளிநீக்கு