பல குடும்பங்களில் முதிர் கன்னிகள் இருப்பதைக்கண்டு மனம் வருந்துகிறோம். அதே மாதிரி பல குடும்பங்களில் முதிர் காளைகள் இருப்பதைப்பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலைக்கு பெரும்பாலும் ஜோதிடர்களே காரணம் என்றாலும், சில குடும்பங்களில் வேறு சில சுயநல எண்ணங்களும் காரணமாக அமைகின்றன.
அவர்கள் தங்களுடைய சுயநலத்தை மறைப்பதற்காக ஜோசியர்கள் மேல் பழியைப் போடுவார்கள். ஆனால் காரணம் தங்கள் சுயநலமே. கீழ்க்கண்ட காரணங்கள்தான் உண்மையானவை.
1. பையன் தங்கள் பிடியிலிருந்து நழுவி, மாமியார் வீட்டுக்கோ அல்லது தனிக்குடித்தனமோ போய்விட்டால் தங்களுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமே என்கிற பயம்.
2. பையனுக்கு குடும்பம், குழந்தைகள் என்று ஆகிவிட்டால், தாய் தந்தையரின் பேரில் உள்ள பாசம் குறைந்து தங்களை ஒதுக்கி விடுவானோ என்ற பயம்.
3. தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய தன் மகன் இன்று நல்ல சம்பாத்தியம் பெறுவதை எங்கிருந்தோ வந்த ஒருத்தி அனுபவிப்பதா என்ற பொறாமை.
4. தன் பையனை ஒருத்தி தன் முந்தானைக்குள் போட்டுக்கொள்வதை பொறுக்க மாட்டாமை.
இதற்கு ஒரே தீர்வு அந்தப் பையன் தனியாக தன் திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பதுதான்.