செவ்வாய், 24 மே, 2011

மனித வாழ்வில் வக்கிரங்கள்நடைமுறை வாழ்வில் பலதரப்பட்ட மனித இயல்புகளைப் பார்க்கிறோம். பெரும்பாலானவை நடைமுறை பண்புகளுக்கும் நாகரீகத்திற்கும் ஒத்துப் போகின்றன. சில சமயங்களில் மனித மனங்களின் வக்கிரங்களும் வெளிப்படுகின்றன. ஆனால் அதை நாம் வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்வதில்லை.

உண்மைதான் என்றாலும், எல்லா உண்மைகளையும், எல்லா இடங்களிலும் சொல்ல முடியாது. சொல்லத் தேவையுமில்லை. உண்மைகளையும் மறைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. இது ஒரு வகை நாகரிகம் அல்லது ஒரு வகை பண்பு என்று கூறலாம்.

பத்திரிக்கைகளில் பல செய்திகள் போடுகிறார்கள். சில செய்திகளைப் பார்த்துவிட்டு அடுத்த செய்திக்குப் போய்விடவேண்டும். அந்த செய்திகளைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டியதில்லை. அதுவும் பதிவுலகம் மூலமாக இதைச் செய்ய வேண்டியதில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.