ஞாயிறு, 24 ஜூலை, 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.

இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை!  எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

11 கருத்துகள்:

 1. வாங்கிக் கொள்பவர்கள் இருக்கும் வரை கொடுப்பவர்களும், கொடுப்பவர்கள் இருக்கும்வரை வாங்கிக் கொள்பவர்களும் இருந்து கொண்டே இருப்பார்கள். ம்....

  பதிலளிநீக்கு
 2. இந்த இலவசங்களெல்லாம் எங்கிருந்து வருகிறது? இலவசங்களின் முக்கிய வருமான கேந்திரம் டாஸ்மார்க் கடைகள். ஏழைகள் குடித்து நாசமாகப் போய் அந்த பணத்தில் இலவசங்களை வாரி இறைத்தால் இந்த சமூகம் உருப்படுமா?

  யாருக்கும் வெட்கமில்லை.

  பதிலளிநீக்கு
 3. Ur complaint s valid only in a country where the entire population s above poverty line and where there s no exploitation, where the rich do not swindle everything and the poor do not become poorer. In our own TN, the politicians and the realtors corner all land meant for others as v hav come to know now.

  So, govt has to step in to protect the poor.

  The freebies and subsidies which u complaint abt r not in TN only. It is all India basis. Last week FM Mukherjee said instead of free quota of k oil, people will b given cash through banks.

  Aadhar cards r being given to BPL families. Only that card will b allowed. The families shd carry that card. Thus, it will b ensured that the freebies go to the deserving poor directly.

  By helping the poor thro such freebies, v don't make them lazy. Rather, the benefit will transform itself into different things to better their lives and, in the final analysis, to better the quality of life in our countyr for all.

  No econmist has even said that such freebies r bad. It s only from persons like u such complaint comes.

  Dr Kandasamy, it s economics more than a common matter. And it shd be approached only through economical analysis.

  பதிலளிநீக்கு
 4. இலவசத்தை வாங்காமல் விட்டாலும் நம்முடைய பெயரில் யாராவது (( ஹி..ஹி.. )) வாங்கிடத்தான் போகிறார்கள் .இது உங்களுக்கு தெரியாதா..?

  இன்னும் எங்கள் ஊருக்கு கலைஞர் டீவீ வரவில்லைன்னு புலம்புகிறவர்களும் இருக்கிறார்களே..!!

  பதிலளிநீக்கு
 5. ஓட்டுக்கு இலவசமும். இலவசத்துக்கு ஓட்டுமாக, இந்த பரிமாற்ற முறை ஒழிய வேண்டும், அப்போதுதான் நாடும் நாட்டு மக்களும் தேச முன்னேற்றம் பற்றி சிறிது யோசிப்பார்கள். அதுவரை மானாட மயிலாட, பார்ப்பதும், டிவி வால்யூம் கம்மி பன்னவுமே நேரம் சரியாருக்கும் மக்களுக்கு.

  பதிலளிநீக்கு
 6. கண்ணைக் குத்திக்கொள்வது தன்கையே அல்லவா...

  பதிலளிநீக்கு
 7. //ஜெய்லானி said...
  இலவசத்தை வாங்காமல் விட்டாலும் நம்முடைய பெயரில் யாராவது (( ஹி..ஹி.. )) வாங்கிடத்தான் போகிறார்கள் .இது உங்களுக்கு தெரியாதா..?

  இன்னும் எங்கள் ஊருக்கு கலைஞர் டீவீ வரவில்லைன்னு புலம்புகிறவர்களும் இருக்கிறார்களே..!!//

  உண்மைதான் ஜெய்லானி அவர்களே, ஆனால் இந்த மனப்பான்மை நம் நாட்டை எங்கு கொண்டு செல்லும் என்று சிந்திக்க வேண்டாமா?

  பதிலளிநீக்கு
 8. //இராஜராஜேஸ்வரி said...
  கண்ணைக் குத்திக்கொள்வது தன்கையே அல்லவா...//

  உண்மை, சகோதரி.

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள simmakkal அவர்களுக்கு,

  உண்மையில் இந்த விஷயம் மிகுந்த விவாதத்திற்கு உரியது. அப்படி ஒரு விவாதத்தை வழி நடத்தும் திறன் எனக்கில்லை. ஒரு சாதாரணக் குடிமகன் என்ற முறையில் எனக்குத் தோன்றியதைப் பதிவிட்டேனே தவிர வேறு நோக்கங்கள் இல்லை.

  தங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. My view is that there should be no freebies - but subsidies could be extended for essential items for ensuring minimum standard of living to certain targeted segments, purely based on their income levels. Such subsidies should also be time-bound. There is no doubt that the poor should be protected in any society. But, the subsidies should not become tools to gain political power. Political parties have a vested interest in keeping the people poor for ever.

  பதிலளிநீக்கு