திங்கள், 29 ஏப்ரல், 2013

18. நாட்டின் தலைவிதி மாறியது

பிரதம மந்திரி. நிதி அமைச்சர், கட்சித்தலைவர் ஆகியார் குழு வந்தார்கள். பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.

நான் சில கருத்துகளைக் கூறினேன்.

1. இப்போது உள்ள தேசீயக் கட்சியே வேட்பாளர்களை நிறுத்தும். இதில் 33 சதம் பெண்கள். இந்த  வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

2. எதிர்க் கட்சிக்கு 10 சதம் இடம் கொடுப்போம். ஏனெனில் எதிர்க்கட்சி இல்லாவிடில் அதை ஜனநாயக நாடு என்று ஒருவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

3. பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.

4. தேர்தலுக்கான அறிவிப்புகளும் வேட்பாளர் தேர்வும் உடனடியாக ஆரம்பிக்கட்டும்.

5. தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்தி முடித்து விடவேண்டும்.

இந்த கருத்துகளுக்கு அவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

நிதி அமைச்சர் மட்டும் ஒரு சந்தேகம் எழுப்பினார். நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். சந்தோஷத்துடன் அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்லொரும் மும்முரமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். தேசீயக் கட்சி வேட்பாளர்கள் சீக்கிரம் முடிவு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து விட்டார்கள். எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. அவர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் வேட்பாளர்களை நானே ஏற்பாடு செய்தேன்.

வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு ஓட்டுச் சீட்டுகள் அடித்தாகிவிட்டது தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. அனைத்து ஓட்டர்களும் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.

தேர்தல் நாளைக்கு முன்தினம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து சாதனங்களும் தேர்தல் அதிகாரிகளும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்பட்டிருந்த அனைத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் "வை-ஃபி" முறையில் தேவலோகத் தூதரகத்திலுள்ள சூபர் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு யம கிங்கரனைக் காவலுக்குப் போட்டிருந்தேன். எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.

மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.

30 கருத்துகள்:

  1. //மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.//
    எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டிருந்தது.என்ன ஆயிற்று வாக்குப்பதிவு முடியுமுன்பு?

    பதிலளிநீக்கு
  2. அட சஸ்பென்ஸ்....

    அது சரி சஸ்பென்ஸ் இல்லாத எலக்‌ஷன் ஏது!

    பதிலளிநீக்கு

  3. எதிர்கட்சி வேட்பாளரையும் 10% இடத்துக்கு நீங்களே அறிவித்து, அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்..........ஆஹா... என்ன ஜனநாயகம். very interesting......

    பதிலளிநீக்கு
  4. ஓட்டு போடுவதற்கு ஓட்டு சீட்டுகள் தயார் செய்த பிறகு ஏன் மின்னணு வாக்கு இயந்திரம் வைபை எதற்கு என்று சொன்னால் நல்லது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டுச்சீட்டுகளை எண்ணுவதற்கு போதிய ஆள் வசதி இல்லையென்பதால் மின்னணு இயந்திரங்களுக்கு கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அது தவிர, ஓட்டுச்சீட்டில் நம் ஆட்களை மட்டும் வெற்றி பெறச்செய்ய சரியான வழி கிடைக்கவில்லை.

      பதிவை இப்படி நுணுக்கமா படிச்சிட்டு சேம் சைடு கோல் போடறீங்களே, இது நியாயமா?

      நீக்கு
    2. அய்யா அவர்கள் பழைய ஆள் இல்லையா
      அதுதான் பழக்க தோஷத்தில் ஓட்டு சீட்டு என்று பதிவு செய்து விட்டார்.
      ஆனால் கணினி எல்லாம் உபயோக்கிக்க ஆரம்பித்த பிறகு நம்மை போன்ற யாராவது ஒருத்தர் "எந்த காலத்தில் இருக்கிறீர்கள் இந்த காலத்துக்கு வாருங்கள் மின்னணு இயந்திரங்கள் வந்த பிறகும் ஓட்டு சீட்டு என்றே சொல்லிகொண்டிருகிரீர்களே" என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக ஓட்டு சீட்டை மின்னணு இயந்திரமாக மாற்றினார்.
      ஆனால் ஓட்டு சீட்டில் நம்மவரை வெற்றி பெற செய்ய முடியவில்லை என்பது DMKகருணாநிதி அவர்களுடைய டெக்னிக்குக்கு அசிங்கமில்லையா அவருக்கு கோபம் வந்து விட போகிறது.

      திருச்சி அஞ்சு




      நீக்கு
    3. பின்னே உங்கள் பின்னூட்டகாரர்களை சாமான்யர்கள் என்று நினைத்து விட்டீர்களா
      கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கொண்டு படிக்கிறோமாக்கும்

      சேலம் குரு

      நீக்கு
  5. சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கிறதே என்று நினைத்தேன்... சஸ்பென்ஸ் அறிய ஆவல்...

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அப்புறம் என்ன.
      நானும் உங்களை போல ஆவலுடன் காத்துகொண்டிருக்கிறேன்
      இன்னும் இரண்டு நாட்கள் பொறுமை தேவை.

      திருச்சி தாரு

      நீக்கு
  7. என்ன சார் டக்குனு நிறுத்திட்டீங்க... அடுத்தது என்ன?

    பதிலளிநீக்கு
  8. மாலை 5 மணிக்கு பத்து நிமிடம் இருக்கும்போது ஒரு அவசரச்செய்தி.//

    current poyidussaa sir?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரென்ட் எல்லாம் போனால்தான் என்ன
      அய்யா அவர்கள் இன்வேர்ட்டர் வைத்திருப்பார்.
      இது அதையும் மீறிய ஒரு சஸ்பென்ஸ்
      என்ன என்று தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டியதுதான்

      சேலம் குரு

      நீக்கு
    2. //எதிர்க்கட்சிகளுக்கு வேட்பாளர்கள் யாருமே முன்வரவில்லை.//

      சரியான முட்டாள்களாக இருக்கிறார்களே.
      10% தான் எதிர் கட்சி வேட்பாளர்கள் என்று முடிவு தெரிந்த பிறகு சற்று சிந்தித்திருந்தால் நமது வெற்றி முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பது புரிந்திருக்குமே பின்னர் தானாக வந்திருப்பார்கள்.
      எதிர் கட்சிகள் அய்யா அவர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  9. 33 சதம் பெண்கள். இந்த வேட்பார்களே 90 சதம் வெற்றி பெறுவார்கள்.

    நல்லது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் 33% மட்டும்.
      அர்த்தநாரீஸ்வரர் தன்னில் பாதியை பெண்ணுக்கு கொடுத்திருக்கும் போது 50% தானே நியாயம்.

      சேலம் குரு

      நீக்கு
    2. பார்த்து. இந்த ஆண் சமுதாயம் எல்லா கலாட்டாவும் செய்து விடும்.
      வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து ஆண்களையும் வெற்றி பெற செய்து விட்டு தோற்கும் 10% மொத்தத்தையும் பெண்களிடம் தள்ளி விட்டு விட போகிறது. பிறகு 90% இல் 67% ஆண்கள் போக மீதி 23% தான் பெண்கள் வெற்றி பெறுவார்கள்.

      சேலத்தான்

      நீக்கு
    3. //தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை. ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் வைத்ததோடு சரி. //

      ஏதோ ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை (சில சமயங்களில் அதை விட குறைவான வருடங்களில் கூட) நாங்கள் ஸ்பீக்கர், பிரச்சார வேன், விளம்பரதட்டிகள் என கொஞ்சம் சம்பாதித்துகொண்டிருந்தோம். எங்கள் பிழைப்பில் மண் வாரி போட்டு விட்டீர்களே அய்யா
      பரவாயில்லை நாடு நன்றாக இருந்தால் பரவாயில்லை.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  10. //இப்போதுள்ள நாடாளுமன்றம், அனைத்து சட்டசபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் உத்திரவு வாங்கி அமுல்படுத்துங்கள்.//

    ஜனாதிபதி ஒரு ரப்பர் ஸ்டாம்ப்தான் என்பது உங்கள் ஆட்சியிலும் மாற்ற முடியாதா?

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  11. //அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.//

    நம் ஜனங்களுக்கு அன்று பிரியாணி மட்டும்தானா?
    ஆவலோடு கூடவே ஒரு குவார்ட்டருக்கு காத்திருந்தவர்கள் ஏமாந்து போக வேண்டியதுதானா.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  12. //அனைவருக்கும் ஓட்டுப் போட்டவுடன் பிரியாணி விருந்து கட்சி பேதமில்லாமல் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.//

    ஏதாவது ஒரு வகையில் நம் ஜனங்களுக்கு லஞ்சம் கொடுத்தால்தான் ஓட்டு சாவடிக்கு வருகிறார்கள்
    பரவாயில்லை. முன்பு ஓட்டு சாவடிக்கு வரும் நாள் மட்டும்தான் அவர்களுக்கு பிரியாணி. மற்ற சமயங்களில் அரசியல்வாதிகளுக்கு ஜனங்கள் பிரியாணி வாங்கித்தர வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. இப்போது உங்கள் புது ஆட்சியில் அத்தகைய நிலை வராது என்று நம்புகிறோம்.

    சேலம் குரு


    பதிலளிநீக்கு
  13. //எந்தச்சாவடியிலும் எந்த விதமான சலசலப்பும் இல்லை. //

    இருந்தால்தான் யம கிங்கரர்கள் தூக்கிக்கொண்டு போய் நரகத்தில் போட்டு விடுவார்களே என்ற பயம்தான் காரணம்.
    நடத்துங்கள் உங்கள் கற்பனை உலகத்தை.
    இது ஒரு ideal உலகமாக உருவாகட்டும்.
    நாளை யாராவது இப்படிப்பட்ட உலகத்தை உருவாக்க திட்டமிட்டால் அதற்கு உங்கள் ஆலோசனைகள் ஒரு ப்ளூ பிரிண்ட் ஆக உபயோகப்படும்.

    சேலத்தான்

    பதிலளிநீக்கு
  14. //தேர்தல் பிரசாரம் என்பதே மருந்துக்குக்கூட இல்லை//

    அத்தகைய நன்னாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
    சரியாக குழந்தைகள் தேர்வின் போது தேர்தலை அறிவித்து விட்டு நாள் முழுக்க ஒரே சத்தம். படிக்க முடியாமல் குழந்தைகள் தவித்து விடுவார்கள்.
    இப்படி ஒரு நாள் வந்தால் அதை கொண்டு வரும் கட்சிக்கு எங்கள் எல்லார் ஓட்டுக்களும் உண்டு.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  15. //மக்கள் ஒழுங்காக வந்து ஓட்டுப்போட்டு விட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள்.//

    இதைத்தான் கை மேல் பலன் என்பார்களோ?
    இந்த கையில் ஓட்டு அந்த கையில் சாப்பாடு

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  16. //நம் வேட்பாளர்கள் 90 சதம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினீர்களே, அது எப்படி சாத்தியமாகும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன்//

    ஆளும் கட்சிக்கு இருந்த நாம் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமே என்ற அந்த கவலையையும் நீங்கள் போக்கி விட்டீர்கள். இனி என்ன ஜாலியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியதுதான் வீட்டில் போய் நிம்மதியாக தூங்க வேண்டியதுதான். வெற்றி பெற செய்யத்தான் நீங்கள் இருக்கிறீர்களே

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  17. இப்படி ஒரேயடியா பின்னூட்டம் போட்டு என்னை மூச்சுத்திணற வைக்கிறீர்களே, இது நியாயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய்ந்த மரம்தானே கல்லடி படும்.
      உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன
      எனவே பின்னூட்டங்களும் அதிகமாக வருகின்றன.
      ஒரு கவலை எங்களுக்கு
      பின்னூட்டங்களில் உங்கள் நேரம் செலவழிந்து விட்டால் பதிவுகளுக்கு நேரம் பற்றாமல் போய்விடுமே என்று.

      சேலம் குரு

      நீக்கு
    2. சேலம் குரு சொன்னது சரிதான் போலிருக்கிறது
      நான்கு நாட்கள் ஆயிற்று
      அடுத்த பதிவை காணோமே
      ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறோம்

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  18. //பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதைப்பற்றி தீவிரமாக விவாதித்தோம்.//

    சரியான முடிவுதான்.
    ஆனால் இன்றைய சூழ்நிலையில் பொது தேர்தலை எப்படியெல்லாம்
    நடத்தகூடாது என்றுதான் ஆலோசனை நடத்தவேண்டும்.

    வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்பார்கள். பிரச்சாரம் நடக்கும். கட்சியை பொறுத்தோ வேட்பாளரை பொறுத்தோ மக்கள் ஒட்டு சாவடியில் உள்ள பெட்டியில் (அல்லது மின்னணு சாதனத்தில்) தங்கள் ஓட்டை பதிவு செய்வார்கள். இது சாதாரணமாக
    தேர்தல் நடத்தும் முறை என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன்.

    ஆனால் தேர்தல் நடக்கும் நாளில் படித்தவர்கள் எல்லாம் அந்த பக்கமே எட்டி பார்க்க மாட்டார்களாமே. அங்கு ஒரே கலாட்டாவாக இருக்குமாமே. நமக்கு ஏன் வம்பு. கிடைத்த விடுமுறையை தொலை காட்சி பீடி முன்னே கழித்து விடலாம் என்றுதான் எண்ணுவார்களாமே.

    என்னென்ன செய்யகூடாது என்பதற்கு இன்று நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் இருந்தாலே போதும் போல இருக்கிறது.

    ஆமாம் அய்யா அவர்களும் படித்து பட்டம் வாங்கியவர்தானே. மனசை தொட்டு சொல்லுங்கள் எத்தனை முறை நீங்கள் ஒட்டு போட்டிருகிறீர்கள்?

    சேலத்தான்

    பதிலளிநீக்கு