செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஒரு நாடு எப்படி முன்னேறும்?


ஒரு நாட்டின் முன்னேற்றம் எப்படி நிகழும்? ஏன் இந்திய நாடு முன்னேற்றமடைவதில் இவ்வளவு இடர்ப்பாடுகள்? நம் நாடு சுதந்திர நாடாகி ஏறக்குறைய 65 ஆண்டுகள் ஆகியும் மற்ற நாடுகளின் முன்னேற்றத்தை அடைய முடியவில்லையே, ஏன்?

இந்த மாதிரி கேள்விகள் அடிக்கடி என் மூளையில் தூக்கம் வராத இரவுகளில் பிராண்டுவதுண்டு. நம் நாட்டில் பல துறைகளிலும் திறமை மிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் நம் நாடு வல்லரசாவதற்குத் தேவையான பல திட்டங்களைத் தயார் செய்ய முடியும். ஆனால் அவைகளை செயல்படுத்துவதற்குத் தேவையான Political Will இல்லை. ஏன்? ஆதிகாலத்திலிருந்தே நாம் கர்மா, கர்ம வினை, பாவ புண்ணியம், மறுபிறவி ஆகியவைகளில் ஆதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஒருவன் ஒரு தொழில் செய்து நஷ்டமடைந்தால் அது அவன் விதி என்று வெகு சுலபமாக கூறி ஆறுதல் அடைந்து விடுகிறோம்.

அவன் அந்த தொழிலை எவ்வாறு நடத்தினான், காரணம் இல்லாமல் ஒரு தொழில் நஷ்டமடையாதே, அவன் தொழில் ஏன் நஷ்டமடைந்தது? என்று ஒருவரும் சிந்திப்பதில்லை. நல்ல நிபுணர்களைக் கொண்டு அந்த சம்பவத்தை ஆராய்வதில்லை. என் தலையெழுத்து என்று விதியின் பேரில் பழி போட்டுவிட்டு தூங்குவான்.

இந்த மக்களில் சிலர் புத்தி கூர்மையுள்ளவர்கள். அவர்கள் கைதேர்ந்த சுயநலவாதிகள். மற்றவர்களை எப்படி கொள்ளையடித்து நாம் மட்டும் வசதியாக வாழலாம் என்று திட்டமிடுவதில் வல்லவர்கள்.

ஏன் அப்படி சிலர் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் எனக்கு நம் புராணக் கதைகள்தான் நினைவிற்கு வருகிறது. அவைகளில் பல நியாயமற்ற செயல்கள் தடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவைகளை நியாயப் படுத்தியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு கதை. தேவர்களின் பலம் குறைந்து விட்டது. அவர்களின் மந்திரி யோசனை சொல்லுகிறார். நீங்கள் பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும், அதை நீங்கள் பருகினால் மீண்டும் நீங்கள் பலசாலியாகிவிடுவீர்கள் என்கிறார். திட்டத்தில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதத்தைப் பாருங்கள்.

தேவர்களுக்கு தாங்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. கூட்டுச் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். யாரைக் கூட்டுச் சேர்க்கலாம் என்று யோசனை செய்யும்போது அசுரர்களின் நினைவு அவர்களுக்கு வருகிறது.

ஆனால் அசுரர்கள் அவர்களின் பரம்பரை எதிரிகள். அவர்களை அழிப்பதற்காகத்தான் தேவர்கள் தாங்கள் பலசாலிகளாக மாறவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் தாங்களே தனியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. அப்போது அவர்களின் மந்திரி சொல்லுகிறார். ஆபத்திற்கு பாவமில்லை. நாங்கள் அசுரர்களிடம் போய் நைசாகப் பேசி கூட்டுக்கு ஒப்புக்கொள்ள வையுங்கள் என்கிறார்.


அப்படி கூட்டு வைத்தால் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுக்கவேண்டுமே, அப்படி அவர்களும் அமிர்தம் சாப்பிட்டால் அவர்கள் நம்மை விட பலசாலியாய் விடுவார்களே, அப்புறம் நாம் எந்தக் காலத்தில் அவர்களை ஜெயிப்பது? என்று ஆட்சேபணை தெரிவிக்கிறார்கள். அப்போது அவர்கள் மந்திரி சொல்லுகிறார். முதலில் அமிர்தத்தை எடுங்கள், அப்புறம் அதை அசுரர்களுக்கு கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம் என்று நான் யோசித்து வைக்கிறேன் என்று சொல்கிறார்.


மக்களே, இங்கு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ஒரு திட்டம் தீட்டும்போதே, கூட்டாளியை ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள். மீதி கதை உங்களுக்குத் தெரியும்.

இந்தக் கதையை படித்து வளரும் ஒருவன் இந்த உலகில் எப்படி நியாயமாக நடந்துகொள்வான்? அதுதான் இந்தியாவில் இப்போது நடக்கிறது.

39 கருத்துகள்:

  1. //இந்தக் கதையை படித்து வளரும் ஒருவன் இந்த உலகில் எப்படி நியாயமாக நடந்துகொள்வான்? அதுதான் இந்தியாவில் இப்போது நடக்கிறது.//

    சரியாக சொன்னீர்கள். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று அதனால் தான் சொல்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. கடைசி பாராவில் நச்சென்று சொல்லி முடித்திருக்கிறீர்கள்...
    இருந்தாலும் எல்லோரும் செம்மறி ஆட்டுக்கூட்டமாய்தான் தொடர்கிறோம்....

    பதிலளிநீக்கு
  3. For every action we can correlate with a good or bad intention, based on from which side you look at it. Based on your writing, do you say India never enjoyed peace? Because I believe these stories are here for a long time. Already there are enough “keemayanam” to degrade us.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I have just quoted the story. Social degradation starts slowly. When the population was low, there was not much competition. But today, the population has exploded and the social aberrations have come.

      Suggest a way to improve our nation? That will be a constructive move rather than just criticizing my post.

      //Already there are enough “keemayanam” to degrade us.//

      If you accept that we have degraded, think of some way to get us lifted.

      நீக்கு
    2. Only in India, we have many so called "brainee" people but what we achieved is a mere nothing. The team work mentality is not seen among Indians even when they are in north america. Team work mentality is the only thing which can achieve anything impossible.

      There is an youtube video everyone should watch which talks about similar subject.

      http://www.youtube.com/watch?v=sAGEOKAG0zw

      நீக்கு
    3. டீம் ஒர்க் என்பது நம் ரத்தத்திலேயே இல்லாத ஒன்று போல இருக்கிறது.
      காரணம் நமது கல்வி முறை. பிரசித்தி பெற்ற ஐஐடி களில் கிரேட் முறை பின்பற்றபடுகிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி புரிந்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் சந்தேகம் தீர்ந்து விட்டால் நீயும் நானும் ஒன்றாகி விடுவோமே. கிரேட் ஒன்றாகி விடுமே. எனக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமே. இன்டிவிஜூவாலிட்டி அதிகமாக அதிகமாக இத்தகைய உணர்வுகள் அதிகமாகிறது. இப்போது கணவன் மனைவிக்கு இடையே கூட இத்தகைய இன்டிவிஜூவாலிட்டி கிளாஷ்கள் அதிகமாகிவிட்டன. டிவி சீரியல்களுக்கும் பெண்கள் இயக்கத்திற்கும்தான் நாம் இதற்காக "நன்றி" சொல்ல வேண்டும். விட்டு கொடுத்து போதல் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுதல் போன்றன சில வருடங்களில் இல்லாமலே போய் விடும் போல இருக்கிறது.
      என்றைக்கு "எது என்னுதோ அது உன்னுது எது உன்னுதோ அது என்னுது" உண்மையிலேயே நடைமுறைபடுத்தப்படுகிறதோ அன்று டீம் ஒர்க் தானாக வந்துவிடும்.
      இன்று கணினி துறையில் நாம் சிறப்பாக செயல் பட காரணம் அங்கு எல்லாமே இன்டிவிஜூவல் வேலை (குருப் லீடர் தவிர. இவர்களை இணைக்க அவர் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது).
      "ராவணன் ஆண்டால் என்ன ராமன் ஆண்டால் என்ன" மற்றும்
      "நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரி" போன்ற பழமொழிகள் இருக்கும் வரை இந்த நிலைதான்

      சேலம் குரு

      நீக்கு
  4. //Suggest a way to improve our nation? That will be a constructive move rather than just criticizing my post.//

    Sorry. I am not as wise as you. But I won't rub, chilli on a wound.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு பேசாமல் இருக்கலாம்.
      பிரச்சினை என்னவென்று வெளிப்படையாக பேசினால்தான் அதற்கு இன்றில்லாவிட்டால் நாளைக்காவது ஒரு தீர்வு கிடைக்கும்.
      வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச மாட்டேன் என்றிருந்தால் வேலைக்காகாது. இங்கு நான் வேல் பாய்ச்ச சொல்லவில்லை. மருந்து எரிந்தாலும் போட்டுத்தானே ஆகவேண்டும். இல்லையென்றால் உடம்புக்கே ஆபத்தாயிற்றே.
      தலையெழுத்து, விதி, தோல்வி பயம்,தன்னம்பிக்கையின்மை, திட்டமிடுதல் இல்லாமை போல இதுவும் (இயலாமை என்று சொல்வதா இல்லை ஒதுங்கிபோதல் என்று சொல்வதா) ஒரு தடை கல்தான்.
      வேண்டும் வேண்டும் இவையெல்லாம் வேண்டும்
      நம் மேல் நமக்கு ஒரு நம்பிக்கை
      அடுத்தவனை மதித்து நடத்தல்
      விட்டு கொடுத்தல்
      கூட்டு முயற்சி
      விடா முயற்சி
      தோல்வி கண்டு தளராமை
      வெற்றி கண்டு ஆணவம் கொள்ளாமை
      பகிர்ந்தளித்தல்
      சுயநலமின்மை
      பொதுநல விரும்பி
      சிந்திக்கும் ஆற்றல்
      முடிவெடுக்கும் திறன்
      தீர்க்கமான முடிவுகள்
      எடுத்த முடிவை செயல்படுத்தும் திறன்
      பின் வாங்காமை
      இன்னும் பல
      இவையெலாம் இன்று உடனே வேண்டும்
      இருந்தால் வெற்றி உன்னை தீண்டும்

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    2. என்ன ஒரு தெனாவெட்டு
      என்ன ஒரு லொள்ளு
      என்ன ஒரு நக்கல்
      நம் நாட்டில் இல்லாததையெல்லாம் வேண்டும் வேண்டும் என்று சொல்லிவிட்டால் வந்து விடுமா என்ன
      ஒன்றாவது இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்று கூட இல்லையே
      இதை பார்த்தால் எப்படி நம்பிக்கை வரும்.
      முதல் அடியிலேயே பெரிய அடி விழுகிறதே
      இதெல்லாம் வேண்டும் என்றால் nothing less than a blood revolution தான் வேண்டும்.
      நடக்குமா நம் நாட்டில் நடக்க விடுவார்களா
      காந்தி என்று ஒருத்தர் அஹிம்சை அஹிம்சை என்று சொல்லி விட்டு போய் விட்டாரே
      அடித்தால் பொறுத்துகொள் அடிப்பவனுக்கு கை வலிக்கும் வரை பொறுத்துகொள் பின்னர் உன் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் அன்று நம் மனத்தில் ஆழமாக பதித்து விட்டாரே
      இன்று நிலைமை வேறு. எதோ ஒரு படத்தில் ஒரு நகைச்சுவை நடிகரை கியூவில் நின்று அடித்து விட்டு போவார்களே. அண்டத நிலைதான் இன்று. அஹிம்சை தத்துவம் எல்லாம் காலாவதியாகிபோச்சு என்று புரிவதற்கே நமக்கு நாளாகிவிடும் போலிருக்கிறதே

      சேலம் குரு

      நீக்கு
  5. I believe that the same people invented caste system to degrade people. I have a friend who is of a higher caste and he calls himself optimist and when I talk about reality he says that I am a pessimist.

    பதிலளிநீக்கு
  6. தலையெழுத்து, விதி, தோல்வி, தன்னம்பிக்கையின்மை, திட்டமிடுதல் இல்லாமை, இன்னும் பிற அரக்க குணங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் அல்லது மாட்டிக் கொண்டால் தொழில் எப்படி நஷ்டமடையாமல் இருக்கும்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் கனவிலாவது என் ஆசையை, அதாவது, என் நாடு முன்னேறும் என்கிற ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. நன்றாக சொன்னிர்கள் அய்யா
      இதெற்கெல்லாம் சேர்ந்து ஒரு பெயர் கழிவிரக்கம். அது தன்னம்பிக்கையை கெடுத்து தோல்வி பயத்தை கொடுத்து திட்டமிடுதலை தடுத்து விதியை நினைத்து தலையெழுத்தை மாற்றலாம் என்ற எண்ணத்தை சிதைத்து மொத்தத்தில் மனிதனை ஒன்றுமில்லாமல் செய்து விடும். எனவே எப்போதும் கழிவிரக்கம் மட்டும் வேண்டவே வேண்டாம்
      தோல்வி நிலை என நினைத்து மனிதன் வாழ்வை இழக்கலாமா?
      துணிந்து நில் தொடர்ந்து செல் வெற்றி உனதே
      அதை விடுத்து
      "எல்லாம் அவன் செயல்"
      "மரம் வைத்தவன் கஞ்சி ஊத்தாமலா போய்டுவான்"
      "எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு"
      என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்தால் முன்னேற முடியாது

      சேலம் குரு

      நீக்கு
    3. இதற்கு தேவை ஒருவிதமான மாற்று எண்ணங்கள்
      Attitude change
      Successful people don't do different things
      They do things differently
      இதை மனதில் கொண்டால் போதும்
      செக்கு மாடு போல போய்கொண்டிராமல் செய்யும் ஒவ்வொன்றிலும் ஒரு முன்னேற்றத்தை, அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, செய்து கொண்டே வந்தால் தேவையான மாற்றங்கள் நிகழ்ந்து விடும்.
      "பழையன கழிதலும் புதியன புகுதலும்" போன்று தேவையற்றவற்றை நீக்கி அவசியமானவற்றை ஏற்று நடந்தாலே போதும்

      சேலம் குரு

      நீக்கு
  7. //நம் நாட்டில் பல துறைகளிலும் திறமை மிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் நம் நாடு வல்லரசாவதற்குத் தேவையான பல திட்டங்களைத் தயார் செய்ய முடியும். ஆனால் அவைகளை செயல்படுத்துவதற்குத் தேவையான Political Will இல்லை.//

    உண்மையிலும் உண்மை
    சில நாட்களுக்கு முன்பு ஒரு முக்கியமான ஒரு கமிட்டி உறுப்பினர் ஒருவர் ஆற்றிய உரையை கேட்க நேர்ந்தது. அருமையான உரை.
    இவ்வளவு அரசியல் கலாட்டாகளுக்கு நடுவிலும் விண்வெளி துறையில் நாம் எந்த அளவு முன்னேறி இருக்கிறோம் என்று பேசிய அவர் காவிரி ஆறு பிரச்சினை ஈசியாக தீர்த்துவிடலாம். இப்படி எக்ஸ்பெர்ட் டீம் எல்லாம் வந்து வயல்களை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை அதெல்லாம் ஒரு பொலிடிகல் ஸ்டன்ட்டுக்காகதான். மற்றபடி நாம் விண்ணில் செலுத்தியிருக்கும் செயற்கை கோள்களின் வழியாக நிமிடத்தில் கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களின் வயல்வெளிகளின் பயிர்களை பற்றிய தகவல்களை எடுத்து விடலாம். ஆனால் அதற்கு தேவையான பொலிடிகல் வில் இல்லை என்பதே உண்மை என்றார். அனைத்தும் ஒட்டு வங்கிக்காக இந்த அரசியல்வாதிகள் செய்யும் கூத்து என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  8. அரசு கஜானவில் பணம் இல்லை என்று சாராயம் விற்றால், குடிமகன் குடிக்க பொண்டாட்டியையும் அடுத்தவன் பொருளையும் விற்க்கிறான் அவ்வளவுதான். பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் அரசுக்கு இருக்கும்போது குடிமக்கள் என்ன வேறுவழியிலா செல்வார்கள் , பங்குச்சந்தையில் செய்யும் தின வனிகத்தினால் நாட்டின் ஜி டி பி வளருமா? இதுவும் லாட்டரியும் ஒன்றுதான் ஒருத்தன் கையில் இருக்கும் பணம் இன்னோருத்தன் கைக்கு போவதுதான் பங்குச்சந்தை தினவனிகம், எம் எல் எம் போன்றவைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக் அரசாங்கம் பணம் சம்பாதிக்க நடத்தப்படுகிறது என்பது தவறான கண்ணோட்டம்.
      - இலவசங்கள் ஜனங்கள் மேல் உள்ள அக்கறையினால் நடத்தப்படுகிறது என்பதும் தவறான கண்ணோட்டம்.

      அதனால்தான் போராட்டங்கள் எல்லாம் தோல்வி அடைகின்றன.
      எதற்காக என்று தெரிந்தால் போராட்டங்களை நாள் திசையில் நடத்தலாம்

      - டாஸ்மாக்கில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் யாருக்கு எவ்வளவு காசு போகிறது என்று யாருக்காவது தெரியுமா
      இல்லை டாஸ்மாக்கிற்கு யாரிடமிருந்து சரக்கு வருகிறது என்றாவது தெரியுமா (இது கொஞ்சம் தெரியும் என்று நினைக்கிறேன்)
      ஒவ்வொரு கடைக்கும் போலீசிலிருந்து லோக்கல் தாதாக்கள், அரசியல் வாதிகள் அனைத்து பேருக்கும் வசூல் இருக்கிறதல்லவா
      ஒரு பாட்டிலுக்கு 1 ரூபாய் என்று வைத்தாலே போதுமே கோடி கோடியாக கொட்டுமே.
      இதை நிற்க வைக்க தேவை மனமாற்றம்
      அந்த காலத்தில் பெரியார் மதுவிலக்குக்காக தன தென்னந்தோப்பையே வெட்டி சாய்த்தார் (அல்லது பனந்தோப்பா?). அவர் வழிதோன்றல்கள் யாராவது இப்படி செய்ததாக சரித்திரம் உண்டா?

      இலவசங்கள் அதே கதைதான்.
      இலவசங்கள் இருந்தால்தானே அதில் கொள்ளை அடிக்கமுடியும். மூல பொருட்களை வாங்குவதில் இருந்து விநியோகம் செய்யும் இடம் வரை எல்லா இடத்திலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்.
      யார் இலவசங்களை நிறுத்துவார்கள்.
      நிறுத்தினால் ஜனங்கள் அவஸ்தை படுவார்கள் என்ற எண்ணம் அல்ல நிறுத்தினால் நமக்கு வரவேண்டிய மாமூல் வராமல் போய்விடுமே என்ற எண்ணமே நிறுத்தாமல் இலவசங்கள் வழங்க காரணம்.
      பங்கு சந்தை சரிந்தால் உடனே அங்கு சென்று தூங்காத சிவந்த கண்களோடு நிற்கும் அரசியல்வாதிகள் , ஏழை விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் போது எங்கிருந்தார் என்று யாருக்காவது தெரியுமா?
      எம்எல்எம் அவசர தடுப்பு சட்டம் உடனடியாக இயற்ற முடியாதா என்ன?
      எல்லாம் பணம்
      இல்லை அங்கு மனம்
      அவ்வளவுதான்

      XXXXXXXX

      நீக்கு
    2. இப்படி உண்மைகளை பிட்டு பிட்டு வைக்கிறீர்களே
      உமக்கு உண்மையிலே தைரியந்தான்
      நல்ல வேலை
      அய்யா அவர்களின் இந்த பதிவுகளை போலீசோ லோக்கல் தாதாக்களோ இல்லை அரசியல்வாதிகளோ படிப்பதில்லை (இதை படிக்கும் நேரத்தில் "வேறு வேலை" பார்த்தால் நாலு காசாவது பார்க்கலாம் அல்லவா
      எனவே நீர் தப்பித்தீர்

      YYYYYY

      நீக்கு
  9. //ஒரு திட்டம் தீட்டும்போதே, கூட்டாளியை ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள்.//

    அது காரியத்தை பொறுத்தது
    நல்ல காரியத்துக்காக என்றால் அது சாணக்கியத்தனம்
    கெட்ட காரியத்துக்காக என்றால் அது சகுனித்தனம்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க சரி.
      இலக்கியங்களில் இரண்டுக்கும் உதாரணங்கள் உண்டு.
      பாலில் தண்ணீரை பிரித்து பாலை மட்டும் உண்ணும் அன்னபறவை போல நாம் நமக்கு தேவையான உதாரணத்தை மாட்டும் எடுத்து நடந்தால் நல்லதே நடக்கும்.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    2. இதை நான் ஒத்துகொள்ள மாட்டேன்.
      சாணக்கியத்தனத்தை பற்றி மட்டுமே சொல்லியிருக்கலாமே. ஜனங்கள் அதை பற்றி மட்டுமே நினைப்பார்கள்.
      சகுனித்தனதை பற்றி ஏன் சொல்லவேண்டும்.
      உலகில் உள்ள பறவைகளில் அன்னப்பறவை சதவீதம் ரொம்ப குறைவு. பாலிலிருந்து தண்ணீரை பிரிக்கும் சக்தி எல்லாப்பறவைகளுக்கும் கிடையாதல்லவா.
      அல்லதை நீக்கி நல்லதை நாடும் குணம் இருக்கும் பொது இது சரி. அந்த குணம் இல்லாததால்தானே இன்றைய நிலை.

      சேலம் குரு

      நீக்கு
    3. இந்த மாதிரித்தான் இன்றும் நடக்கிறது
      அரசியலில் மட்டுமல்ல எங்கும் சானக்கியர்களை காணவில்லை
      சகுனிகள்தான் இருக்கிறார்கள்
      சகுனி படம்தான் ஓடவில்லையே தவிர சகுனிகள் காடும் படங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன

      திருச்சி தாரு

      நீக்கு
    4. இப்போதெல்லாம் பாலிலிருந்து தண்ணீரை பிரித்தெடுத்து பாளி அன்னப்பறவை குடித்து விட்டு போன பிறகு பிரித்த தண்ணீரை சேகரிக்க ஒரே கூட்டமாம்
      அவ்வளவு தண்ணீர் கஷ்டம் எங்கும்

      நீக்கு
  10. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
    நாடு முன்னேறுமா என்று நினைக்கவாவது ஒரு ஆள் இருக்கிறாரே என்று.
    பழைய காலத்து ஆளல்லவா. இன்னும் நல்ல எண்ணங்கள் இருக்கிறது
    நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  11. மக்களே, இங்கு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ஒரு திட்டம் தீட்டும்போதே, கூட்டாளியை ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள். மீதி கதை உங்களுக்குத் தெரியும்.

    எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று சரித்திரம் ,புராணங்கள் எல்லாம் சொல்வது அதை எல்லாம் தெரிந்துகொண்டு அந்த வழிகளில் எல்லாம் ஏமாறாமல் உஷாராக இருப்பதற்கான பாடமாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது ஐயா ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் பாலிலிருந்து தண்ணீரை பிரித்து விட்டு பாலை மாட்டும் உண்ணும் அன்னப்பறவை போலத்தான்.
      அன்னப்பறவைகளின் சதவீதம் மிகவும் குறைவு. நாளத்தை மாறுமே எடுத்துகொள்ளகூடியவர்களும் குறைவுதான். அத்தகையவர்களின் சதவீதம் திகைப்பூட்டும் எண்ணிக்கையில் குறைந்து கொண்டு வருகிறது என்பதே உண்மை.
      எத்தனை பேர் நல்லதை எடுத்துகொள்கிறார்கள் என்பது கேள்விகுறிதான்
      மதில் மேல் பூனையாக " நீ நல்லவனா இல்லை கெட்டவனா" என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த மாதிரி இரண்டு வழியும் காட்டினால் பாதிபேர் கெட்ட வழி தேர்ந்தெடுக்க நாமே வழி வகுத்து கொடுப்பது மாதிரி ஆகி விடக்கூடும் அல்லவா
      நல்லதை மட்டுமே காட்டினால் இன்னொன்றை பற்றி நினைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா
      எத்தனை பேர் உஷாராக ஆகிறார்களோ அவர்களை விட அதிகமாக கெட்ட வழிக்கு போகிறவர்களை உருவாக்கி விடுகிறோம்
      நல்லதை மட்டுமே காட்டுவது ஒரு வகையில் மூளை சலவை செய்வது போன்றதுதான். ஆனால் நல்லதுக்கு செய்யும் போது ஆடு வரவேற்கத்தக்கது அல்லவா

      சேலம் குரு

      நீக்கு

  12. //ஒரு திட்டம் தீட்டும்போதே, கூட்டாளியை ஏமாற்றலாம் என்று திட்டம் போடுகிறார்கள்//
    .
    மிக ஆழமான வரிகள்.
    .
    நிறைய எழுதுங்கள்.
    .
    காய்க்கும் மரம் கல்லாடி படும்.
    .
    கவலை வேண்டாம்.
    .

    பதிலளிநீக்கு

  13. அடடா... நீங்களும் தொடங்கி விட்டீர்களா. ? நம்முடைய இந்த நிலைக்கு காரணமே நமது கடவுள் சார்ந்த கலாச்சாரம்தான். என்றுதான் விழிப்போமோ.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க GMB. என்னமோ என் ஆதங்கத்தை பதிவில் கொட்டித் தீர்க்கிறேன். அவ்வளவுதான். வேறெங்கே கொட்டமுடியும்?

      நீக்கு
  14. இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே சொல்லி சொல்லி நம்மை ஏமாற்றும் கூட்டம் இருக்கும்வரை உருப்படவே முடியாதோ?

    பதிலளிநீக்கு
  15. உங்களது ஆராய்ச்சி முடிவுகளை அப்படியே ஏற்க முடியவில்லை. அத்தகு புராணங்களை படித்த பல பேர் தன்னலமின்றி பணியாற்றி இருக்கிறார்கள். புராண கதைகளை வசை பாடிய பலரும் மிகுதியாக நாட்டை களவாடி இருக்கிறார்கள். ஆளும் நபர்களின் வரையற்ற தன்னலமே நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கல்லாய் உள்ளது. மன மாற்றத்திற்கு ஆணி வேர் கல்வி கற்றுக்கொடுக்கும்போது ஒழுக்கம், பரந்த மனப்பான்மை, அன்பு, எளியவர்க்கு உதவல்,பேராசை தவிர்த்தல் போன்றவற்றை ஆழப்பதியவைப்பது. அதனால் இனி வரும் சமுதாயம் வளம் பெற்று வாழும். Parents and Teachers have an important role to play. Policy makers in education should not just rely on emphasising developments in technology, but also in building up good moral values. To whip the current system we need a Lee Kuan Yew, Seshan and the like in each field to eradicate lying lawyers, falsifying accountants,corrupt bureaucracy,swindling politicians,whimsical media etc

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய கல்வி முறை இந்தப் பண்புகளை வளர்க்கிறது என்று நம்புகிறீர்களா?

      நீக்கு
    2. //இன்றைய கல்வி முறை இந்தப் பண்புகளை வளர்க்கிறது என்று நம்புகிறீர்களா? //

      Do you mean, in todays education we are taught these stories? And that is why we are bad?

      நீக்கு
    3. இந்த மாதிரி கதைகள் மட்டுமல்ல, இன்னும் ஏராளமான கதைகள் வாழ்வியலுக்குப் புறம்பானவை இருக்கின்றன. இத்தகைய கதைகளை உண்டாக்கியவனும் கேட்கின்றவனும் இந்திய நாட்டுப் பிரஜைகளே. அவர்கள் குணம் அந்த வகையில்தான் வளர்ந்திருக்கிறது. தேசப்பற்று இருக்கும் ஒருவனையாவது பார்க்க முடியவில்லை. இந்தியனின் ரத்தத்தில் அந்தக் குணம் இல்லை. சுயநலம்தான் இருக்கிறது. இதை மாற்றுவது எப்படி என்பது ஒரு முக்கியமான பிரச்சினை.

      நாம் சீரழிந்து போய்விட்டோம் என்பதை உணரும் நேரத்தில் அதை மாற்றி நம்மை நன்மக்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்ற உந்துதல் வேண்டும். இதை எல்லாம் யார், எப்படி செய்வார்கள் என்று புரியவில்லை.

      இதைத்தான் நான் இந்த பதிவில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

      நீக்கு
  16. அளவுக்கு பணம் வைத்திருப்போரின் அதிகமான பணத்தை பயனற்றுப்போக செய்வதே ஊழலை ஒழித்து ஒரு நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லும்.

    வழி முறைகள்: ஒழிக்கவேண்டியவைகள்:
    1. 5நட்சத்திர ஓட்டல்கள்.
    2. ரயிலில் முதல் வகுப்பு .
    3. வானூர்தியில் பிசினஸ் கிளாஸ்.
    4. அதிகவிலை சொகுசு கார்கள்.
    5. அனைத்து தனியார் மருத்துவமனைகள்.
    6. அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள்.

    ஒருவனிடம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் உள்ளதை செலவு செய்யமுடியாத நிலையை உருவாக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு