வெள்ளி, 18 அக்டோபர், 2013

புலி வருகிறது, புலி வருகிறது ஆஹா புலி வந்தே விட்டது.


புலி வருது, புலி வருது என்ற மாட்டுக்காரப் பையன் கதை எல்லோருக்கும் தெரியும். அதேபோல் மைக்ரோசாஃப்ட்-காரன் "விண்டோஸ் 8.1" வருது வருது என்று மூன்று மாசமா கூவிக்கொண்டு இருந்த இந்த புது ஆபரேட்டிங்க் சிஸ்டம் இன்று வந்தே வந்து விட்டது.

மைக்ரோசாஃப்டின் அத்யந்த விசுவாசி என்கிற முறையில் அந்த விண்டோஸ் 8.1 மென்பொருளை இன்று டவுன்லோடு செய்து என் கணினியில் நிறுவி விட்டேன். இன்னும் அதை முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லை.

இந்த மென்பொருளை டவுன்லோடு செய்யவேண்டுமானால் நீங்கள் உங்கள் கணினியில் அதிகார பூர்வமான விண்டோஸ் 8 Pro ஆபரேட்டிங்க் சிஸ்டத்தை நிறுவியிருக்க வேண்டும். உங்களுக்கு இந்த விண்டோஸ் 8.1 Pro அப்கிரேடு விண்டோஸ் ஸ்டோர் மூலமாக இலவசமாகக் கிடைக்கும்.

தவிர நீங்கள் ஒரு நல்ல பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருக்கவேண்டும். அதில் இலவச டவுன்லோடு சௌகரியம் இருந்தால் உத்தமம். இல்லாவிட்டால் இந்த மென்பொருளை, (ஏறக்குறைய 4 GB உள்ளது) டவுன்லோடு செய்ய ஏகப்பட்ட பணம் ஆகிவிடும். தவிர இந்த மென்பொருள் முழுவதும் டவுன்லோடு ஆகி இன்ஸ்டால் ஆவதற்கு ஏறக்குறைய நான்கரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

இந்த தகவல்கள் சிலருக்காவது உபயோகப்படும் என்று நம்புகிறேன். மற்றவர்கள் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்த கதையைத் திரும்பவும் நினைவுக்கு கொண்டு வரவும்.

24 கருத்துகள்:

 1. தகவல்கள் பகிர்வுகளுக்கு நன்றிகள் ஐயா...!

  பதிலளிநீக்கு
 2. 4½ மணி நேரமா...? நான் இந்த விளையாட்டிற்கு வரலே... பயன்படுத்தி விட்டு எப்படி இருக்கு என்று ஒரு பதிவு போடுங்க... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 3. உண்மையிலேயே பயனுள்ள தகவல் ஐயா... குறைந்த பயன்பாடு இணையம் உள்ளோருக்கு நிச்சயம் உதவும்....

  பதிலளிநீக்கு
 4. இன்னும் நான் Windows 7 யே முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை. இருப்பினும் தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. இந்த இளம் வயதிலும் கம்பியூட்டர் குறிப்பாக மைக்ரோ சாப்ட் மீது உங்களுக்கு உள்ள ஆர்வம் பாராட்டத்தக்கது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன வயசாயிடுச்சு எனக்கு? இப்பத்தான் 78 ஐத் தாண்டியிருக்கேன். இதெல்லாம் ஒரு வயசா?

   நீக்கு
  2. Hats off to you Sir. இந்த வயதிலும் தளராமல் கணினியின் புதுப்புது மென்பொருட்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் உங்கள் ஆர்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
   யானையை பார்க்கும் பட்டிகாட்டான்களுக்கு நடுவே யானை என்ன பெரிய யானை அதை அடக்கும் அங்குசம் என்னிடமிருக்கிறது என்று தன்னம்பிக்கையுடன் ஈடுபடும் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை hats off

   சேலம் குரு

   நீக்கு
  3. அதுமட்டுமில்லீங்க சார்... இந்த OS ஒழுங்கா வேலை செய்யணும்னா நம்ம பிசியோட ram ரெண்டு ஜிபிக்கு மேல இருக்கணுமாமே.... இல்லன்னா அப்பப்போ hang ஆயிருமாம்.....

   நீக்கு
  4. கம்ப்யூட்டருக்கு அப்பப்போ வாய்க்கரிசி போட்டுட்டே இருக்கணுமுங்க. அப்பத்தான் நாம நெனைக்கிற வேலை எல்லாம் செய்யும்.

   நீக்கு
 6. நிறுவி விட்டீர்கள்! அப்புறமாய் சாதக பாதகங்களை எழுதுங்கள். தெரிந்து கொள்கிறேன்! :))

  பதிலளிநீக்கு
 7. மென்பொருட்கள் பயன்பாட்டில் உங்களுக்கு இன்னும் சுதந்திர உணர்வு வரவில்லை என்பதை இப்பதிவு தெளிவாக உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் செல்லும் வழியில் சென்றால் காலில் முள் குத்தாது. தவிர, நிர்வாணபுரியில் கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்று நம்புகிறவன் நான்.

   நீக்கு
 8. உங்கள் பதிவிலிருந்து சில தகவல்கள் இங்கே நன்றி : http://4tamilmedia.com/knowledge/useful-links/18026-windows-8-1-now-ready-for-pcs

  பதிலளிநீக்கு
 9. உங்கள் அடுத்த பதிவுக்கு ஒரு தகவல்.
  ஒரு வலைபதிவில் படித்தேன்
  இது ஏன் என்று எழுதுங்களேன்


  2012 இந்தியாவின் குற்ற வீதப் பட்டியல் படி, கேரள மாநிலத்திலேயே அதிக குற்றங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

  ஒரு லட்சம் பேருக்கு சுமார் 455.8 சம்பவங்கள் படி இங்கு குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

  நாகலாந்து மிகக்குறைவான குற்றச்சாட்டுக்கள் பதிவான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள தலைநகர் கொச்சியில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சுமார் 879.9 குற்றச்சம்பவங்கள் படி பதியப்பட்டுள்ளன.

  தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேருக்கும் 294.8 குற்றங்கள் படி பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் கல்வியறிவைப் பொருத்தவரை எப்போதும் முதல் நிலையில் இருக்கும் கேரளா அதிக குற்றங்கள் பதியப்பட்ட மாநிலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 10. இதெல்லாம் கணினி அறிவு இருக்கிறவுங்குக்குதானே. >

  பதிலளிநீக்கு
 11. GMB அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்!
  (நானும் ரொம்பவும் தன்னடக்கம் ஐயா!)

  பதிலளிநீக்கு
 12. பெர்சு...சும்மா சொல்லக் கூடாது! நீர் ஒரு கூகிள் புலியாகத்தான் இருக்க வேண்டும்! ஜன்னல்-8.1 இயக்கியை ஐ நிறுவுவதற்கு ஜன்னல் அங்காடி மூலம் தான் தரை இறக்க வேண்டும் என்ற தகவல் மிக உபயோகமானது! உம்மட பேரக் குழந்தைகளுக்கே கணிணி கற்றுத் தரும் விதையை யாம் மெச்சியே ஆக வேண்டும்!

  பதிலளிநீக்கு
 13. start பட்டனைத் தவிர வேறு ஒன்றும் புதிதாகத் தெரியவில்லை! எதாவது மறைமுகமான பிழைதிருத்தங்கள் இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 14. starter பொத்தான் , sky drive நேடியாக சேமிக்கும் வசதி ,ms account மூலம் கணனியை திறக்கும் வசதி , மென்பொருள் சில அவ்வளவு தான் எனக்கு தெரிந்தது .

  பதிலளிநீக்கு