திங்கள், 28 அக்டோபர், 2013

பெற்றோரின் பொறுப்புகளும் கடமைகளும்.


இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்ல பொறுப்புள்ள மனிதர்களாக்குவது எப்படி என்று சிந்திக்கக்கூட நேரம் இருப்பதில்லை. எப்படியோ குழந்தைகள் பிறந்தார்கள், எப்படியோ வளர்கிறார்கள் என்ற அளவில்தான் சிந்தனைகள் இருக்கின்றனவே தவிர, அவர்களை பொறுப்பான மனிதனாக உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று பெரும்பாலான பெற்றோர்கள் உணருவதில்லை. அப்படி உணர்ந்தாலும் அந்த நோக்கத்தை எப்படி அடைவது என்ற ஞானம் இருப்பதில்லை.

ஒவ்வொரு குழந்தையின் குணங்கள் கரு உற்பத்தியாகும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.  அந்த குணங்கள், அந்தக் குழந்தைகள் வளரும் பருவத்தில் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டு, ஒருவனுடைய திறன் வெளிப்படுகிறது. பெற்றோர்கள் இந்த சூழ்நிலையை அந்த குழந்தை நன்கு வளர்ந்து அவனுடைய திறமைகள் வெளிப்படுமாறு அமைத்துக் கொடுக்கவேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.

குழந்தை வளர்ப்பை யாரும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வருவதில்லை. இந்த அறிவு அனுபவத்தால் மட்டுமே வருவது. அதனால் இந்த அனுபவத்தைப் பெற ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இருக்கவேண்டும். வேலைப்ளுவைக் காரணம் காட்டி இந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.

குழந்தை பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறக்கலாம். அதை நல்ல டாக்டரிடம் காண்பிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலில் குறையிருக்கலாம் அல்லது மூளையில் குறையிருக்கலாம். இதை முதலிலேயே தெரிந்து கொண்டால் அந்தக் குழந்தையை வளர்க்கும்போது தேவையான சிகிச்சைகளைச் செய்ய வசதியாயிருக்கும்.

குழந்தைகள் பள்ளிப் பருவத்திற்கு முன்னால் வூட்டில் பெற்றோர்களின் கண்காணிப்பில் வளருகின்றன. பள்ளிக்குச் சென்ற பிறகு அவர்களைப் பாதிப்பவர்கள் ஆசிரியர்களும் உடன் பயிலும் மாணவர்களும்தான். அவர்கள் வளர வளர சக மாணவர்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வரும். இதைத்தான் ஆங்கிலத்தில் Peer Pressure என்கிறார்கள். இது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

இந்த சூழ்நிலை பாதிப்பை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களை சரியான வழியில் நடத்துவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. பெற்றோர்களின் முதல் கடமை, தங்கள் பொறுப்புகளை உணருவதுதான். வழிமுறைகளை சிறிது முயற்சித்தால் கற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களை நன்கு கண்காணித்து அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளவேண்டியவைகளை பக்குவமாகச் சொல்லிப் புரியவைக்கவேண்டும்.
தவிர பெற்றோர்களும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு வேண்டிய சௌகரியங்களை தேவைக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு அவர்கள் தானாக வளர்ந்து நல்ல குடிமகன்களாக வளர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது பேதமை.

16 கருத்துகள்:

 1. வணக்கம்
  சரியாக சொன்னிர்கள் ...... கருத்துக்கள் எல்லாம் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. //பெற்றோர்களும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும்.//
  குழந்தைகள் நல்ல குடிமகன்களாக வளர இதுதான் முக்கியம் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. குழந்தை பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் செலவிடும் நேரத்தின் அளவைப் பொருத்துத்தான் இருக்கும் வளர்ந்தபிறகு அவர்கள் பெற்றோருடன் செலவழிக்கும் நேரமும். பெற்றுவிட்டோமே என்று கடமைக்காக அவர்களை வளர்க்கும் பெற்றோருக்கு பிள்ளைகளும் வளர்ந்தபிறகு இவர்களுக்கு பிறந்துவிட்டோமே என்ற கடமைக்காகத்தான் எதையும் செய்வர்கள். அப்போது அவர்களிடமிருந்து அன்பையும் பாசத்தையும் காணவில்லையே என்று குறைபடுவதில் எந்த பயனும் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. Dear sir ,
  First of all Thankyou for your Font size and style. Good to Visible and read. and your blog is good keep on writting. sorry to type in tamil.

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கு அந்த வயதில் கிடைக்காததை தம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற அவா !

  பதிலளிநீக்கு
 6. வாயால் போதிக்கும் அறிவை விட, தம் பெற்றோர்களின் நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டே குழந்தைகளின் அறிவு-முன்னேற்றம் நிகழ்கிறது என்பது தான் உண்மை. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  பதிலளிநீக்கு
 7. // குழந்தைகளுக்கு வேண்டிய சௌகரியங்களை தேவைக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு அவர்கள் தானாக வளர்ந்து நல்ல குடிமகன்களாக வளர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது பேதமை.//

  இதுதான் உண்மை! நாட்டில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு இதுவே காரணம்.  பதிலளிநீக்கு
 8. தங்கள் கருத்து அனைத்தும் அருமை! பெற்றவர் மட்டுமல்ல மற்றவரும் உணர வேண்டும்

  பதிலளிநீக்கு
 9. அருமையானதொரு கருத்தை முன்வைக்கும் பகிர்வு.
  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 10. குழந்தைகளுக்கு வேண்டிய சௌகரியங்களை தேவைக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு அவர்கள் தானாக வளர்ந்து நல்ல குடிமகன்களாக வளர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது பேதமை.

  அருமையான அனுபவப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 11. //தங்கள் குழந்தைகளை நல்ல பொறுப்புள்ள மனிதர்களாக வளர்ப்பது எப்படி என்று சிந்திக்கக்கூட நேரமில்லை//

  இந்த மாதிரி நல்ல பதிவுகளைப் படிக்கவும் நேரமில்லை! நடப்பது நடக்கட்டுங்க.

  பதிலளிநீக்கு
 12. ஐயா தாங்கள் கூறுவது சரிதான். ஒரு நாளுக்கு, சராசரியாக பெற்றோர்கள் பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரம் எவ்வளவு? இந்தக் காலத்தில் பெற்றோர் இருவரும் வேலை செய்கின்றனர். வீட்டைவிட்டு குழந்தைகள் வெளியே சமூகத்துடன் பழகுவதும் குறைவு. சனிக்கிழமையும் வேலை செய்யும் நிலை. எங்கே செல்கிறோம், எதற்கு செல்கிறோம் என்று புரியவில்லை.

  பதிலளிநீக்கு