திங்கள், 26 மே, 2014

இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க !


கண்காட்சிகளைப் பார்த்திருப்பிர்கள். ஒரு இடத்தில் நாலு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தால் உடனே அங்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அங்கு என்னவோ நடக்கிறது, அதில் நாமும் சேர்ந்து கொள்ளலாமே என்ற மனப்பான்மை மனிதர்களுக்கு இயற்கையாகவே வேறூன்றி இருக்கிறது.

இலவசம் அல்லது சும்மா கிடைக்கிறது என்றால் அதற்காக உயிரைப் பயணம் வைத்து அதைப் பெற்றுக்கொள்ள அடித்துக் கொள்வார்கள். இத்தகைய நிகழ்வுகள் நம் தங்கத் தமிழ்நாட்டில் பலமுறை அரங்கேறியுள்ளன.

உங்கள் பணம் 100 நாளில் இரட்டிப்பாகும் அல்லது மூன்று மடங்காகும் என்றால் முன்பின் யோசிக்காமல் பணத்தைக் கொண்டுபோய் கொட்டுபவர்களில் தமிழர்களை மிஞ்ச யாரும் இல்லை. நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு என்று அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல சீட்டுகள் நடக்கும். எல்லாம் ஏமாற்று வேலைகள்தான்.

இந்த வகையில் தற்போது தோன்றியிருப்பது "இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்" என்ற கோஷம். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பல பதிவுகள் இதை ஊக்கப்படுத்துகின்றன. இணையத்தில் பதினைந்து நிமிடங்கள் செவழித்தால் போதும். மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று தடாலடியாக எழுதுகிறார்கள்.

நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் என்பது ஒருவன் தன் உழைப்பைக்கொட்டி சம்பாதிக்க வேண்டும். அதுதான் உண்மையான சம்பாத்தியம். கானல்நீரைக்கண்டு ஏமாந்து போகாதீர்கள்.

23 கருத்துகள்:

  1. கடைசி வரிகள் அட்சரலட்சம் பெறும். ஒருகாலத்தில் வாராந்தரிகளின் சொந்த வீடு கூப்பன், லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டிருந்தபோது என் மாமா எனக்குச் சொன்ன அதே வார்த்தைகள்!

    பதிலளிநீக்கு
  2. பதிவர்கள் நமக்கே இணையத்தின் பைசா பெயரவில்லை என்பதையும் சொல்லுங்கள் அய்யா !
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. // இலவசம் அல்லது சும்மா கிடைக்கிறது என்றால் அதற்காக உயிரைப் பயணம் வைத்து அதைப் பெற்றுக்கொள்ள அடித்துக் கொள்வார்கள்.//

    இலவசமாகக் கிடக்கிறதென்றால் விஷத்தைக் கூட நம்மவர்கள் ஓடோடி சென்று வாங்குவார்கள் என வேடிக்கையாக சொல்லுவதுண்டு. சுய உழைப்பின் மூலம் சம்பாதிக்கும் எண்ணம் வரவர குறைந்து கொண்டே போகிறது என்பதுதான் வருத்தம் தரக்கூடிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  4. யாருக்கு 30000 ரூபாய் கிடைக்கும் என்பது தான் சிந்திக்க வேண்டும்... ஹா...ஹா...

    பதிலளிநீக்கு
  5. உழைத்து சம்பாதிப்பதே நிற்கும்சூது, லாட்டரிச் சீட்டு போன்ற விஷயங்களில் ஈடுபடுவோர் நாமும் எளிதாக சம்பாதிக்கலாமே என்னும் பேராசையால்தான் செய்கிறார்கள் ஸ்ரீராம் சொன்னதுபோல் கடைசி வரிகள் அட்சரலட்சம் பெறும். ...சரி...எத்தனை அட்சரங்கள் இருக்கின்றன ...?

    பதிலளிநீக்கு
  6. விழிப்புணர்வுபதிவு ஐயா
    ஆசை இருந்தால் மட்டும் போதுமா
    உழைக்காமல் வந்த பணம் நிலைக்காது

    பதிலளிநீக்கு
  7. நல்ல விழிப்புணர்வு விசயம் என்னைப்போன்ற பாமரனுக்கு உபயோகம் ஐயா நன்றி.
    Killergee
    www.Killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. sir, please care. i am earning last 4 year ptc gpt sites come on http://www.emoneyspace.com for guide all business cheating available your safe earning some forum guide follow. ok 100 % not scam.

    பதிலளிநீக்கு
  9. கானல் நீரைக் கண்டு ஏமாறாதீர்..... நல்ல அறிவுரை.

    பதிலளிநீக்கு
  10. நானும் இங்க கொஞ்சம் மாறுப்பட்ட கருத்தையே சொல்ல விரும்பறேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியல அப்படிங்கறதுக்காக அதை தவறுன்னு சொல்றதை ஒத்துக்க முடியாது. நான் இணையத்தில ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இருபத்து ஐந்து டாலார் வரை சம்பாதிக்கிறேன்.

    எல்லாரும் உழைக்காம வர காசு ஒட்டாதுன்னு எழுதி இருக்கீங்க. இணையத்தில் சம்பாதிக்கிறவங்க எல்லாம் உழைக்காம தான் சம்பாதிக்கிராங்கன்னு தெரியுமா உங்களுக்கு ? இந்த இருபத்து ஐந்து டாலர் வரவை கட்டமைக்க எனக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆச்சி. அதுக்கு அப்புறம் அதிகபட்சம் நான் செலவு பண்றது வெறும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. மண்வெட்டி எடுத்து வயல்ல வேலை செய்தாலோ இல்ல காலை முதல் மாலை வரை அலுவலகம் போயிட்டு வந்தா மட்டும் தான் உழைக்கரதுன்னு அர்த்தமா ? தெரியலன்னா விட்டிடுங்க. ஏமாற்றும் இணைய தளங்களும் நிறைய உண்டு. அதை பிரித்து அறியும் திறம் இல்லாமல் நீங்க போய் ஏமாந்து வந்தா, அதுக்காக மொத்தமா குற்றம் சொல்லாதிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லையே. உங்கள் பின்னூட்டம் செய்தியை சொல்வது போல் இல்லை. வசை பாடுவது போல் இருக்கிறது. இதைப்போன்ற பின்னூட்டங்களினால் நான் உணர்ச்சி வசப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது இல்லை.

      நீங்கள் என்ன கருத்தை பின்னூட்டமிட்டாலும் அதைப் பிரசுரிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். உங்களால் யாராவது பயனடைந்தால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

      நீக்கு
    2. இதை வசைபாடுவதாக எடுக்க வேண்டாம். நானும் மற்றவர்கள் கருத்தை சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்பவனே. உழைக்காமல் ... உழைக்காமல் என கூறுவதை மறுக்கிறேன். அவ்வளவே...!!!!

      நீக்கு
  11. ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்பறேன். உங்களால் இணையத்தில் சம்பாதிக்க முடியலன்னாலோ அல்லது ஏமாந்திருந்தாலோ அது உங்களுடைய தவறே அன்றி இணையத்தின் தவறு அல்ல. பணம் சம்பாதிக்க எவ்வளவோ எளிய நேர்மையான வழிகள் இணையத்தில் உண்டு. அதை நீங்கள் தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும். தேவைன்னா என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு தெரிந்தவற்றை நான் பகிர்ந்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாறுவதும் ஏமாறாமலிருப்பதுவும் அவரவர்கள் சுதந்திரம். எனக்கு இணையத்தில் கிடைக்கும் பணம் அவசியமில்லை. அவசியப்பட்டவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

      நீக்கு
  12. உங்களுக்கு ஒரு விஷயம் புடிக்கல, விருப்பம் இல்ல, ஒத்துக்க முடியலன்னா அதை செய்ய வேண்டாம். இங்க யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால் தடாலடியா அதை பற்றி தவறான பிரச்சாரம் செய்யாதிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வெளியிட அனைவருக்கும் உரிமையுண்டு. அது தனி மனித சுதந்திரம். அதைக் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை.

      உங்கள் கருத்தை தாராளமாக சொல்லலாம். கண்டிப்பாக அவைகளை வெளியிடுவேன்..

      நீக்கு
  13. neobux, clixsense, probux - இதெல்லாம் உண்மையா பணம் கொடுக்கும் இணைய தளங்கள். இதில் நாம் செய்ய வேண்டியது இந்த தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் மூன்று வினாடிகளில் இருந்து முப்பது வினாடிகள் வரை உள்ள விளம்பரங்களை பார்வையிட வேண்டும். இதில் சேருவதற்கு எந்த கட்டணமும் இல்லை. ஒரு விளம்பரத்தை பார்வையிட 0.001/0.0005/0.01 டாலர்கள் வழங்கப்படும். இந்த கட்டணம் தளத்திற்கு தளம் அல்லது விளம்பரம் பார்வையிட வேண்டிய விநாடிகளை பொறுத்து மாறும். ஒரு நாளைக்கு பதினைந்தில் இருந்து முப்பது விளம்பரங்கள் வரை வழங்கப்படும். ஒரு நாளைக்கு நீங்கள் தனியாளாக அதிகபட்சம் 0.05 - 0.07 டாலர்கள் சம்பாதிக்க முடியும். இதை படிக்கும் போது முப்பதாயிரம் வருமானம் ஒவ்வொரு மாதமும் என்ற கணக்கு பொய்யானது போல தோன்றும்.

    அதையும் இங்கேயே விளக்குகிறேன். இந்த தளங்களில் சேர்ந்த பின் நீங்கள் உங்கள் நண்பர்களை பரிந்துரை செய்து அவர்களும் இணைந்தால், உங்கள் நண்பர் சம்பாதிக்கும் பணத்தில் உங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்படும். நீங்கள் சேரும்போதே இதற்காக உங்களுக்கு பரிந்துரை லிங்க் - referral link வழங்கப்படும். உங்கள் நண்பர் இந்த லிங்க் உபயோகப்படுத்தி சேரும்போது தானாகவே அவரது கணக்கு உங்களின் கீழ் வந்து விடும். இது ஒரு வழி.

    இரண்டாவது, இந்த தளங்களில் இருவிதமான கணக்குகள் உள்ளன. இலவச மற்றும் கட்டண உறுப்பினர் கணக்கு. கட்டண கணக்கு மூலம் சேர பணம் கட்ட வேண்டி இருக்கும். இவர்கள் பார்வையிடும் விளம்பரங்களுக்கு இரட்டிப்பு பணம் வழங்கப்படும். நண்பர்கள் மூலம் வரும் கமிசனும் இரட்டிப்பாகும்.

    நான் எனது referral link - ஐ இணையத்தில் விளம்பரப்படுத்தி இது வரை பலர் (என்னுடைய ஒரு கணக்கில் 1040 பேர் ) இணைத்துள்ளனர். இதற்கு எனக்கு ஆன காலம் கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கும் மேல். நான் செலவழித்த காலம், எனது referral link - ஐ பலரிடமும் கொண்டு சேர்க்க நான் எடுத்த முயற்சிகளும் கூட உழைப்பே. இது போல நான்கு வேறு வேறு இணையதளங்களில் உறுப்பினராக உள்ளேன். அதன் பலன் நான் தற்போது பெரும் 25 டாலர்கள் ஒரு நாளைக்கு.

    நல்லவர்களும் ஏமாற்றுகாரர்களும் எங்கும் இருப்பார்கள். இணையமும் விதிவிலக்கல்ல. சரியாக ஆராய்ந்து பாதுகாப்பாக செயல்படுவது நம் கையிலேயே உள்ளது. எடுத்த எடுப்பிலேயே தவறாக சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கத்திற்கு நன்றி. இதைப் படிப்பவர்கள் இதில் கூறியுள்ள வழி முறைகளை கடைப்பிடித்து பயனடையலாம்.

      நீக்கு
    2. கொஞ்சம் வேறு மாதிரி பார்க்கலாம். விளம்பரத்தை பார்த்தால் காசு என்பது அதில் கிளிக் பண்ணினால் காசு என்று மாறி வருகிறது. அதில் க்ளிக் செய்யும்போது அதனால் வைரஸ் தொந்தரவு வரலாம். இன்னும் கீ லாகர் போன்ற மென்பொருட்கள் நம் கம்ப்யூட்டரில் நாம் கிளிக் செய்வதன் மூலம் நுழையுமேயானால் இதனால் சிக்கல்கள் இன்னும் அதிகமாகும்.

      எளிமையாக.. வெறும் விளம்பரத்தை பார்க்க வைக்க எதற்கு காசு கொடுப்பார்கள்? நமக்கு காசு கொடுப்பதில் அவர்களுக்கு என்ன லாபம்? கிட்டதட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் இதே போல பல கம்பெனிகள் காசு கொடுத்துக் கொண்டிருந்தன. மிக குறைந்த காலத்தில் (<1 வருடம்) அனைத்தும் மூடப் பட்டன. மற்றவை வைரஸ் போன்றவற்றை நம்மிடம் தள்ளி படுத்தி எடுக்கிறார்கள்.

      There is no such thing like a free lunch!

      நீக்கு
    3. இதற்கும் என்னிடம் விளக்கம் உண்டு. அந்த விளம்பரங்கள் அனைத்தும் பல்வேறு இணைய தளங்களை சார்ந்தவை. பல்வேறு இணையதளங்களால் இவர்களுக்கு வழங்கப்பட்டவை. அதை வெளியிட இவர்கள் பணம் வாங்கியிருப்பார்கள். வெறுமனே வெளியிடுவது என்பது மட்டும் இன்றி, இந்த விளம்பரங்களை இத்தனை நபர்களை பார்க்க வைப்பதாகவும் ஒப்பந்தம் இருக்கும். அதனாலேயே விளம்பரங்களை பார்க்க உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.

      உதாரணம் என்னுடைய referral link - இது நான் இணைந்திருக்கும் இணைய தளத்தின் முகவரியே. இதை நான் விளம்பரப்படுத்துவதன் மூலம் பல நண்பர்களை எனக்கு கீழே இணைய செய்ய முடியும். அதற்கு நான் பணம் செலுத்தி, இவர்களிடம் கொடுத்தால் இவர்களின் இணைய தளத்தில் வெளியிடுவார்கள். இந்த கட்டணம் எத்தனை நபர்கள் என்னுடைய விளம்பரத்தை பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேனோ அதை பொறுத்து மாறுபடும். அவர்கள் விளம்பரதாரர்களிடம் வசூலிக்கும் பணத்தில் சிறிதளவு உறுப்பினர்களுக்கு வழங்கி அதை பார்க்க வைக்கிறார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்கள் பார்த்து முடித்ததும் அந்த விளம்பரம் நீக்கப்படும். இந்த எண்ணிக்கையை கணக்கிட அவர்களிடம் மென்பொருள் இருக்கிறது.

      இந்த தளங்களின் பலம் இவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை. எந்த தளம் அதிக உறுப்பினர் எண்ணிக்கை வைத்துள்ளதோ அவர்களிடம் விளம்பரதாரர்கள் நாட விரும்புவார்கள். அதனாலேயே இந்த தளங்கள் தங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறையாமல் பராமரிக்க, பணம் வழங்குகின்றன. இந்த தளங்களும் அப்படி ஒன்றும் அள்ளிக்கொடுத்துவிடுபவை அல்ல. அவர்களின் வருமானம் நூறு சதவிதம் எனில் இவர்கள் உறுப்பினர்களுக்கு வழங்குவது அதில் ஒரு இருபது சதவீதம் இருக்கும். அவ்வளவே....!!!!

      வைரஸ் தொந்தரவு என கூறி இருக்கிறீர்கள். இந்த ஒரு வழியில் மட்டும் தான் வைரஸ் வருகிறது என்கிறீர்களா ? இணையத்தில் பொதுவாகவே வைரஸ் எங்கிருந்தும் வரலாம். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக்கொள்வது நம் கையிலேயே உள்ளது.

      நான் மேலே குறிப்பிட்ட நிறுவனகள் கடந்த எட்டு வருடங்களாக உள்ளன.
      இவைகள் instant payment முறையில் செயல்படுபவை. நீங்கள் பார்வையிடும் விளம்பரத்திற்கான பணத்தை நீங்கள் பெற ஒரே ஒரு விதி முறை மட்டுமே உண்டு. குறிப்பிட்ட குறைந்த அளவு - இரண்டு டாலர்கள் பணம் சேரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். இரண்டு டாலர்கள் சேர்ந்ததும் பணம் தேவை என நீங்கள் கேட்டதும் அடுத்த சில வினாடிகளில் உங்கள் பணம் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். இதற்கு Paypal கணக்கு தேவைப்படும்.

      இது யாரையும் நம்ப செய்யவோ அல்லது சேர்ந்தே ஆக வேண்டும் என கட்டாயபடுத்தவோ அல்ல. எனக்கு தெரிந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமே.

      நீக்கு
    4. ///////விளம்பரத்தை பார்த்தால் காசு என்பது அதில் கிளிக் பண்ணினால் காசு என்று மாறி வருகிறது/////

      இது தவறான கருத்து. சொல்வது மட்டுமே வேறு வேறாக இருக்கிறது. ஆனால் செய்யும் வேலை ஒன்று மட்டுமே. சொல்லும்போது கிளிக் பண்ணா போதும் அப்படின்னு சொன்னாலும் அது விளம்பரங்களை பார்ப்பதையே குறிக்கிறது.

      நீக்கு
  14. இணையத்தின் மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.......

    நட்பை!

    பதிலளிநீக்கு