சனி, 17 மே, 2014

நானும் GMB யும்.


திரு GMB  யின் பிளாக்கை அறியாதவர்கள் பதிவுலகை அறியாதவர்கள் என்றே கூறலாம். தன்னுடைய எழுத்துக்களினாலும் எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊரிலுள்ள பதிவர்களைச் சந்திப்பதிலும் அவர் தனித்து நிற்கிறார். அவர் பதிவுலகத்தில் கால் பதித்த நாட்களிலிருந்து அவர் பதிவுகளை ரசித்து வந்திருக்கிறேன். மத்திய அரசு நிறுவனமான BHEL ல் வேலை பார்த்து ஓய்வு பெற்று பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஒரு முறை அவர் கோவைக்கு வந்திருந்தபோது என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். நான் இதிலென்ன கஷ்டம் தாராளமாக வாருங்கள் என்று பதில் போட்டிருந்தேன். அவர் என் வீட்டை கண்டுபிடித்து தம்பதி சமேதராக வந்தே விட்டார். நேரம் போறாமையினால் சிறிது நேரமே இருந்து விட்டுப் புறப்பட்டார். இது நடந்து ஏறக்குறைய மூன்று வருடம் இருக்கும்.

போன வருடம் நானும் என் நண்பர் ஒருவரும் பெங்களூர் போகவேண்டி இருந்தது. நான் இவரை சந்திக்க ஆவல் கொண்டு அவருடைய வீட்டு விலாசம், டெலிபோன் நெம்பர் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் பெங்களூரில் நாங்கள் எங்களை வரவேற்ற நண்பரின் அன்புப் பிடியில் சிக்கி விட்டபடியால் இவருடைய வீட்டிற்கு செல்ல இயலாமல் போனது. போன் செய்து என் இயலாமையைக் குறிப்பிட்டு சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டிருந்தேன்.  அவரும் பெரிய மனதுடன் மன்னித்தேன் என்றார்.

ஆனால் இந்த நிகழ்வு அவருடைய மனதிலிருந்து மறையவில்லை என்று பிற்பாடுதான் தெரிய வந்தது. அது எப்படியென்றால், சென்ற மாதம் நான் திருச்சிக்கு என் பேரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்குப் போயிருந்தேன். அப்போது ஒரு இடைவெளி கிடைத்ததைப் பயன்படுத்தி
திரு.வைகோ. அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன். அவரை அறியாதவர்களும் யாரும் இருக்கமாட்டார்கள்.

{ஒரு முக்கிய குறிப்பு: பிரபல பதிவர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த மாதிரி (என்னையும் சேர்த்து?!) பிரபல பதிவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதைப்பற்றி பதிவுகள் போடவேண்டும்.}

நிற்க, நான் வைகோவை சந்தித்தது பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு GMB. என் மீது ஒரு அஸ்திரம் ஏவிவிட்டார். அது என் நடு மனத்தில் ஆழமாகப் பாய்ந்து விட்டது. "பெங்களூர் வந்திருந்தும் என்னைப் பார்க்காது போய்விட்டீர்களே" என்ற அஸ்திரம்தான் அது.

இனி என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போதுதான் எங்கோ படித்திருந்த ஒரு பொன்மொழி நினைவிற்கு வந்தது. பாக்கி வைக்காமல் தீர்க்கவேண்டிய சமாசாரங்கள் மூன்று உண்டு. 1. மனிதனின் கடமைகள். 2. தான் வாங்கிய கடன். 3. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு. இவைகளைத் தீர்க்காவிட்டால்
அவை மீண்டும் வளர்ந்து ஒருவனை கஷ்டத்திற்குள்ளாக்கும். ஆகவே GMB யை சந்திக்கவேண்டிய கடமை இருக்கிறது. அதை தீர்க்கவேண்டும். அதுவும் எனக்கு வயதாகிக்கொண்டு இருப்பதால் அதை தள்ளிப்போட முடியாது என்று முடிவு செய்து, உடனடியாக பெங்களூருக்கு போகவர ரயில் டிக்கட் புக் செய்து விட்டு இவருக்கு செய்தி அனுப்பினேன்.

உங்கள் வீட்டு விலாசமும் வரும் வழியையும் தெரிவியுங்கள் என்று பல முறை மெயில் அனுப்பியும் மனுஷன் பதிலே போடவில்லை. சரி என்ன ஆனாலும் ஆகட்டும், பிளான் பிரகாரம் பெங்களூர் போவோம் என்று முடிவு செய்திருந்தேன். நான் புறப்படும் தினத்திற்கு முதல் நாள் இவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் என்ன சொல்லியிருந்தார் என்றால்............

மீதி அடுத்த பதிவில்.

20 கருத்துகள்:

  1. நான் உங்களைப் பார்க்க கோவை வந்திருக்கிறேன் என்று எழுதி இருந்தாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். நீங்களும் அவருடைய பிரிய நண்பர் என்று புரிந்தது. ஆகவே நமக்குள் நாரதர் வேலை கூடாதல்லவா?

      நீக்கு
  2. எதிர் பாராத திருப்பமாக தொடரும் என்று போட்டுவிட்டீர்களே ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதிலும் ஒரு சஸ்பென்ஸ் இருந்தால்தானே சுவாரஸ்யம் கூடும்.

      நீக்கு
  3. //பிரபல பதிவர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த மாதிரி (என்னையும் சேர்த்து?!) பிரபல பதிவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதைப்பற்றி பதிவுகள் போடவேண்டும்//

    பதிவுலகில் வெற்றிபெற மிக முக்கியமான இரகசியத்தை போட்டு உடைத்துவிட்டீர்கள். இது எனக்கு முன்பே தெரியாததால், திரு GMB அவர்கள் 20-02-2014 இல் சென்னை வந்திருந்தபோது, அவரை வேளச்சேரியில் அவரது மகன் வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்குமேல் பேசிக்கொண்டிருந்ததை பதிவிட்டிருப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதான் நீங்களும் பிரபல பதிவர் ஆகியாய் விட்டதே. இனி என்ன கவலை?

      நீக்கு
    2. நான் பதிவுலகில் பிரபல பதிவரோ இல்லையோ, நீங்கள் என்னை அங்கீகரித்ததே போதும். நன்றி ஐயா.

      நீக்கு
  4. ஆகா, பதிவர் சந்திப்பிலேயே இத்தனை சஸ்பென்ஸா

    பதிலளிநீக்கு
  5. அவர் பதிவில் நான்காவதாக சொன்னது "தீர்க்கவேண்டும்" என்பது தானோ...?

    ஒரு முக்கிய குறிப்பு - ஹிஹி...

    பதிலளிநீக்கு
  6. நங்கள் பேசாமல் தொடர்கதை ஒன்று தொடங்கலாம்!

    பதிலளிநீக்கு
  7. முக்கியமான இடத்தில் ’தொ ட ரு ம்’ அருமை.

    ரஸித்....தேன்.

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் அவரை சந்தித்தீர்களோ இல்லையோ அதைப்பற்றி எங்களுக்குக் கவலையே இல்லை. இருப்பினும் 2-3 பதிவுகள் தேத்தி விட முடிவு எடுத்துள்ளீர்கள். அதற்கு என் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. பதிவர் சந்திப்பிலும் இப்படி சஸ்பென்ஸ்....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. என் பதிவில் கேள்வி கேட்டு பதிவர்களின் பதில்களைப் படித்து ரசித்து வருகிறேன் நானும் உங்கள் வருகை குறித்து ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன் உங்கள் அடுத்த பதிவைக் காண ஆவல்.

    பதிலளிநீக்கு
  11. CMB...கடைசி வரை இவரது முழுப் பெயர் எழுதவே இல்லையே......
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். அவர் பெயர் திரு G.M. பாலசுப்பிரமணியம்.

      நீக்கு