திங்கள், 23 ஜூன், 2014

ரயில் கட்டணம் அதிகரிப்பு - மக்கள் கவலை!


சமீபத்தில் மோடி அரசு ரயில் கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது மிகவும் நியாயமான ஒரு நடவடிக்கை. ரயில்வே நிர்வாகம் தினமும் 30 கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை சந்திக்கிறதாம். எந்த ஒரு ஸ்தாபனத்தையும் இப்படி நஷ்டத்தில் நடத்த முடியாது. ஆகவே மோடி கட்டணங்களை அதிகரித்ததில் எந்த வித தவறும் கிடையாது.

ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இட்லி ஒரு ரூபாய்க்கு கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு பணம் எங்கிருந்தாவது வர வேண்டுமல்லவா? இப்படி மத்திய அரசு செய்வதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தால் அப்புறத் மத்திய சர்க்கார் எப்படி நடக்கும்?

சரி, அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஒரு சம்பிரதாயமான கடமை. மருமகள் கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்பது போல், மத்திய சர்க்கார் என்ன செய்தாலும் அதை எதிர்த்து ஒரு அறிக்கை விடுவது மாநில சர்க்காரின் பிறப்புரிமை. தினமும் தூங்கி எழுவது போல் இது ஒரு "நித்தியானுஷ்டானம்". ("நித்தியானுஷ்டானம்" அப்படீன்னா என்னன்னு கேட்கப்படாது. எனக்குத் தெரியாததைக் கேட்டால் நான் என்ன பண்ண முடியும்?)

இது புரிகிறது. ஆனால் இந்த பொது ஜனம் என்று சொல்லப்படுகின்ற ஜந்து எதற்காக ஊளையிடுகிறது என்று புரியவில்லை? தென்னாட்டில்தான் இந்த ஓலம். வடநாட்டில் இப்படி யாரும் ரயில் கட்டண உயர்விற்காக ஓலமிடுவதாய் தெரியவில்லை. அதனால்தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்கிறார்கள்.

வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி ஓலமிடவில்லை என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை. (சில அரசியல் வாதிகள் உட்பட.) நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.

வாழ்க மத்திய அரசு.

17 கருத்துகள்:

  1. //நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.//

    இதே போலத்தான், இந்த மண்டுகளின் இந்தி திணிப்பு எதிர்ப்பும். வடநாட்டில் யாராவது எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா பாருங்கள்? எத்தனை சமர்த்து.

    பதிலளிநீக்கு
  2. டிக்கெட் வாங்காமல் பயணிப்பவர்களுக்கு, கட்டண உயர்வைப் பற்றிய கவலை இருக்காதுதான்
    தம 2

    பதிலளிநீக்கு
  3. கட்டணத்தை ஏற்றுவது போலவே அதிலுள்ள குறைகளையும் களைந்தால் நன்றாயிருக்கும். அதைச் சொன்னால், அதற்கு இன்னும் கொஞ்சம் கட்டணம் ஏற்ற வேண்டும் என்பார்களோ என்னவோ!

    பதிலளிநீக்கு
  4. என்ன நீங்கள்...உங்கள் முன்னால் ஒரு காமிரா வைத்து மைக் கொடுத்து விலைவாசி பற்றி கேட்டால் என்ன சொல்வீர்கள்... என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்... எதிராக சொன்னால் மட்டுமே டிவியில் காட்டுவார்கள்..... இது சரி என்று சொன்னால் டிவியில் வராது.....ஆள்வது காங்கிரஸானால் என்ன பி ஜேபியானால் என்ன? சரி அது போகட்டும்.... முன்பு பஸ் கட்டணம் தமிழகத்தில் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை உயர்ந்தே வருகிறது. சாலையில் பாருங்கள் பஸ்களில் மக்கள் கூட்டம்... வாகனங்களின் கூட்டம்.... விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அனைவருக்கும் தெரியும்......எல்லாம் அரசியல்... இது நமக்கு தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  5. // டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை.//

    உண்மைதான். அப்படியே வாங்கினாலும் முன் பதிவு செய்யாவிட்டாலும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வது அவர்களது உரிமை என்று கூட வாதிடுவார்கள். வாழ்க சனநாயகம்!

    பதிலளிநீக்கு
  6. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்வது, ஏன் என்று தெரிந்து விட்டது ஐயா...

    பதிலளிநீக்கு
  7. //ஆனால் இந்த பொது ஜனம் என்று சொல்லப்படுகின்ற ஜந்து எதற்காக ஊளையிடுகிறது என்று புரியவில்லை? //

    பாவம் இல்லையா ஜனங்கள்.
    "ஜந்து" மற்றும் "ஊளையிடுகிறது" போன்ற வார்த்தை பிரயோகங்கள், ஏற்கனவே ரயில் கட்டண அதிகரிப்பால் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்போரை இன்னுமல்லவா கஷ்டப்படுத்தும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  8. //நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.//

    எல்லாம் சரிதான். ஆனால் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மாமாங்கமாகி விட்டதே. இன்னும் அதையே சொல்லி டிக்கெட் வாங்காமல் இருக்ககூடாதல்லவா?

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  9. //எந்த ஒரு ஸ்தாபனத்தையும் இப்படி நஷ்டத்தில் நடத்த முடியாது. ஆகவே மோடி கட்டணங்களை அதிகரித்ததில் எந்த வித தவறும் கிடையாது.//

    நூற்றுக்கு நூறு சரி. எந்த ஒரு நிறுவனமும் நஷ்டத்தில் இயங்க முடியாததுதான். ஆனால் நஷ்டம் ஏன் வருகிறது என்று ஆராயாமல் நஷ்டத்தை ஈடு கட்ட டிக்கெட் விலையை அதிகரிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இந்த அதிகப்படுத்தப்பட்ட கட்டணத்தில் செல்லும் போது சௌகர்யங்கள் அதிகப்படப்போவதில்லை. அதே நாற்றமடிக்கும் டாய்லெட்டுகள், மூட்டைபூச்சி வாழும் மரக்கட்டை சீட்டுகள், விலைக்கும் தரத்துக்கும் சம்பந்தமில்லாமல் விற்கப்படும் ரயில்வே கான்டீன் தின்பண்டங்கள் இத்யாதி இத்யாதி எதுவும் மாறப்போவதில்லை. இந்த சௌகர்யங்களை அதிகபடுத்தி விட்டு விலையை ஏற்றினால் யாரும் உண்மையாக சத்தம் போடபோவதில்லை.
    அந்த நாள் எந்நாளோ அதுவே நமக்கு நல்ல நாளாகும்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  10. //("நித்தியானுஷ்டானம்" அப்படீன்னா என்னன்னு கேட்கப்படாது. எனக்குத் தெரியாததைக் கேட்டால் நான் என்ன பண்ண முடியும்?)//

    நித்யானுஷ்டம் என்றால் வேறொன்றும் இல்லைங்காணும்.
    நித்தமும் நாம் எழுந்தவுடன் செய்யவேண்டிய (அல்லது செய்து தொலைக்க வேண்டிய) கருமங்கள் (காரியங்கள் என்பது இன்றிய காலத்து சொல்). பொதுவாக தெய்வ காரியங்களுக்கு இந்த வார்த்தை உபயோகபடுத்தப்படுவதால், இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை தீண்டத்தகாத வார்த்தை ஆகி விட்டதுங்காணும்.

    என்ன, நாம் காலையில் ஆபிஸ் வந்தவுடன் நமக்கு படியளக்கும் கடன்காரனுக்கு (அலுவலகத்தில் அந்த கடன்காரனுக்கு பெயர் மேனேஜர்) ஒரு கூழைக்கும்பிடு போடுகிறோமே, அவன் ஏதாவது திட்டினாலும் வாயெல்லாம் பல்லாக (அப்போதுதான் நமக்கு 32 பல் இருப்பது நமக்கே தெரியவரும், இல்லையங்காணும்) சரி சரி என்று தலையை ஆட்டுவது (வீட்டில் ஆம்படையாளுக்கு தலையை ஆட்டி ஆட்டி பழக்கமாகி விட்டதல்லவா?) போன்றவையெல்லாம் கூட இன்றைய லோகத்தில் நித்யானுஷ்டம்தான்.

    என்னங்காணும் நான் சொல்வது சரிதானே?

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  11. //ஆகவே மோடி கட்டணங்களை அதிகரித்ததில் எந்த வித தவறும் கிடையாது. //

    ஆஹா வந்து விட்டாரையா என்னை மாதிரி ஒரு மோடி ஆதரவாளர். சந்தோஷமாக இருக்கிறது.
    அவர் எது செய்தாலும் சரி என்று சொல்ல இப்படி ஒரு கூட்டம்.
    ஆனால் இதுவெல்லாம் எதிர்கட்சியாக இருக்கும் போது எப்படி தெரியாமல் போயிற்று? என்பதுதான் நமக்கு புரியவில்லை.
    நீங்கள் சொல்வது மாதிரி, "மருமகள் கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம்".

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  12. வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி ஓலமிடவில்லை என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை//

    அதச் சொல்லுங்க முதல்ல :)

    பதிலளிநீக்கு
  13. வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது... அருமை... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  14. //வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி ஓலமிடவில்லை என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை//

    ஐயாவின் குத்தல் குசும்பை மிக ரசித்தேன்.
    திருச்சி தாரு சொல்வது போல், நஸ்டத்துக்கான காரணத்தை ஆராந்து, ரயில் பயணத்தை ரசிக்கும் படி செய்து கட்டணத்தை அதிகரிப்பதையே எல்லோரும் விரும்புவர்.

    பதிலளிநீக்கு
  15. கடைசி வரிகள் தான் இந்த பதிவின் அம்சமாக இருக்கிறது. காசு கொடுத்து பயணசீட்டு வாங்கினால் தானே கவலை பட வேண்டும்.பின்பு அவர்கள் ஏன் கேள்வி கேட்கிறார்கள் .

    பதிலளிநீக்கு
  16. :)))

    காசு கொடுக்காதது மட்டுமல்ல, முடிந்தால் ரயில் நிர்வாகத்திடமிருந்தே, தாங்கள் பயணிப்பதற்கு காசு வாங்கிக் கொள்வார்கள்!

    பதிலளிநீக்கு
  17. நல்ல வேளை காங்கிரஸ் ஆட்சில கட்டணத்தை உயர்த்தவே இல்ல, அவங்களும் ஏற்றி இருந்தாங்கன்னா எப்படியும் அதை எதிர்த்திருப்பீங்க, இப்போ இவங்க ஏற்றுவதை ஆதரிக்க வேண்டிய கேவலமான சூழ்நிலை வந்திருக்கும். அய்யாவை காப்பாற்றிய காங்கிரஸ் வாழ்க

    பதிலளிநீக்கு