சனி, 6 செப்டம்பர், 2014

கதை கதையாம்...


பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தில் இன்பம் கண்டவர். தாம் பெற்ற இன்பத்தை இவ்வைகயமும் பெறட்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு ஒரு விமர்சனப்போட்டி நடத்தி வருவது அனைத்துப் பதிவர்களும் அறிந்ததே.

இந்தப் போட்டியில் பல பதிவர்கள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பேர்களுக்கு பரிசு கொடுக்கிறார். எனக்கும் கூஊஊஊஊஊஊஊஊட ஒரு மூன்றாம் பரிசு கிடைத்ததென்றால் பாருங்களேன்.

இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் பரிசு ஒன்றும் கிடைப்பதாகக் காணவில்லை. இருந்தாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முதுமொழிக்கேற்ப விடாமல் ஒவ்வொரு போட்டிக்கும் விமர்சனம் எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக ஒரு ஆறுதல் பரிசாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பரிசு பெற்ற விமர்சனங்களை வைகோ தன்னுடைய பதிவில் பிரசுரிக்கிறார். அந்தப் பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன. இவ்வளவு திறமை உள்ளவர்கள் ஏன் தாங்களாகவே கதை எழுதாமல் அடுத்தவர் கதைகளுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற என் சந்தேகத்திற்கு இது வரை விடை கிடைக்கவில்லை.

சரி, அது எப்படியோ போகட்டும். நான் ஒவ்வொரு சிறுகதைக்கும், 80 வயதானபின் எஞ்சியிருக்கும் கொஞ்நஞ்ச  என் மூளையைக் கசக்கிப் பிழிந்து விமர்சனங்கள் எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறேன். சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் நன்னூல் சூத்திரத்தை சிறுவயதில் படித்த காரணத்தினால் மற்றவர்கள் ஒரு நாவல் அளவிற்குச் சொல்வதை நான் ஒரு வரியில் சொல்லி விடுவேன்.

என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் இந்த அளவுகோலின்படி எழுதப்பட்டவை. பரிசு பெறாத விமர்சனங்களை வைத்துக்கொண்டு வைகோ என்ன செய்யப்போகிறார்? ஆகவே அவருடைய அனுமதி உண்டு என்கிற நம்பிக்கையில் நான் எழுதிய விமர்சனங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

விமர்சனம் 1.

ஜாங்கிரி. நினைத்தாலே இனிக்கும் ஒரு இனிப்பு. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை இன்பங்களும் இதற்கு உண்டு. இதை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இதை உருவாக்குபவனும் ஒரு மனிதன்தான். அவன் உருவாக்கும் இந்த ஜாங்கிரி.

மற்றவர்களுக்குத்தான் இனிமையே தவிர, அதை உருவாக்குபவன் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. எந்த உணவும் அப்படித்தான். அதை செய்பவன் அதை ரசித்து உண்ண முடியாது.

தவிர, அவன் வாழ்க்கையில் இனிப்பு சுவை இல்லாததுதான் ஒரு சோகமான உண்மை. இந்த உண்மையை ஒரு நிகழ்வின் மூலம் நம் கண்முன் நிறுத்தும் கதைதான் “ஜாங்கிரி”. மனிதர்களின் பல பரிமாணங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
நிறைய செலவு செய்து பெரிய விழா நடத்தும் பெரிய மனிதர்களுக்கு சாதாரண மனிதப் பண்பு இல்லாமல் போனது நடைமுறையில் பல இடங்களில் சந்தித்திருந்தாலும் இக்கதையில் அது ஆணித்தரமாக காட்டப்பட்டுள்ளது.


சிறுகதையின் வெற்றியே வாசகர்களை கதாபாத்திரங்களோடு கட்டிப்போடுவதுதான். அதை மிகத் திறம்பட இந்த கதையில் ஆசிரியர் செய்திருக்கிறார். அந்த சமையல்காரர் ஏன் வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சிகள் செய்யவில்லை என்று அவர் மீது கோபம் வருகிறது. அதுதான் கதாசிரியரின் வெற்றி.  


கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

26 கருத்துகள்:

 1. பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன.

  தங்களின் நன்னூல் போன்ற சுருக்கமான சுவையான விமர்சனம் அருமை..!

  பதிலளிநீக்கு
 2. // மற்றவர்களுக்குத்தான் இனிமையே தவிர, அதை உருவாக்குபவன் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. எந்த உணவும் அப்படித்தான். அதை செய்பவன் அதை ரசித்து உண்ண முடியாது.’’

  இது யதார்த்தமான உண்மை.

  நான் அந்த கதையைப் படிக்கவில்லை. மேலே குறிப்ப்ட்டது போன்ற உங்களின் விமர்சனத்தை படித்தபின் அந்த கதையை படிக்கஆவல் ஏற்படுகிறது. இதுவே உங்கள் கருத்துக்கு கிடைத்த வெற்றி என்பேன் நான்.

  பதிலளிநீக்கு
 3. //பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தில் இன்பம் கண்டவர். தாம் பெற்ற இன்பத்தை இவ்வைகயமும் பெறட்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு ஒரு விமர்சனப்போட்டி நடத்தி வருவது அனைத்துப் பதிவர்களும் அறிந்ததே.//

  அன்புள்ள ஐயா, வணக்கம்.

  இந்தப்பதிவின் மூலம் மிகச் சாதாரணமானவனாகிய அடியேனைப்பற்றி தங்கள் பதிவின் வாசகர்களுக்கு அசாதாரண முறையில் விளம்பரம் செய்துள்ளீர்கள். அதற்கு முதற்கண் என் நன்றிகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 4. //இந்தப் போட்டியில் பல பதிவர்கள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பேர்களுக்கு பரிசு கொடுக்கிறார். //

  ஒவ்வொரு கதைக்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகள் தரப்பட்டு வருகின்றன என்பதே சரியாகும்.

  ஒவ்வொரு கதைக்கும் பரிசு பெறுபவர்கள் மூன்று அல்லது ஆறு எனவும் போய் உள்ளது.

  மிகப்பெரும்பாலான கதைகளுக்கு ஐந்து நபர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளன.

  உயர்திரு நடுவர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே இது தீர்மானிக்கப்படுகிறது.

  கூடுதலாகத் தரப்படும் போனஸ் பரிசு + ஹாட்-ட்ரிக் பரிசு போன்றவைகள் மட்டும் என்னால் தனிப்பட்ட முறையில் அளிக்கப்படுபவைகளாகும்.

  //எனக்கும் கூஊஊஊஊஊஊஊஊட ஒரு மூன்றாம் பரிசு கிடைத்ததென்றால் பாருங்களேன்.//

  அந்தத் தங்களின் விமர்சனத்தில் ஏதோ சிலவிஷயங்கள் சிறப்பாக நடுவர் அவர்களைக் கவர்ந்திருக்கலாம். அதனால் தங்களின் அந்த விமர்சனத்தை பரிசளிக்க அவர் பரிந்துரைத்திருக்கலாம்.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதும்போதே இதில் தவறு இருக்கிறதே என்று மனதில் தோன்றியது. இருந்தாலும் என் ரத்தத்தில் ஊறியுள்ள சோம்பேறித்தனத்தால் அதை அப்படியே விட்டு விட்டேன்.

   நீக்கு
  2. AS ON DATE [08.09.2014] POSITION:

   VGK-01 TO VGK-32 ஆகிய 32 கதைகளுக்கான
   விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

   இதில்

   VGK-01 இல் மூவருக்கு மட்டுமே பரிசுகள். அதுபோலவே
   VGK-19 இல் மூவருக்கு மட்டுமே பரிசுகள்.

   VGK-16 இல் ஆறு பேர்களுக்கு சரிசமமான பரிசுகள்.

   மேலேயுள்ள இவை மூன்றும் தவிர மீதி 29 கதைகளுக்கும் தலா 5 பேர்களுக்கு பரிசுகள் வழங்கட்டுள்ளன.

   ஆகமொத்தம் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள பரிசுகள்:

   29*5 = 145
   2*3 = 6
   1*6 = 6
   ==========
   TOTAL: 157
   ==========

   இவையாவும் உயர்திரு நடுவர் அவர்களால், விமர்சனங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட பரிசுகள் மட்டுமே.

   இவை தவிர தொடர் வெற்றிக்காக அடியேனால் ஆராய்ந்து அவ்வப்போது அறிவிக்கப்படும் ஹாட்-ட்ரிக் பரிசுகள், குதூகல போனஸ் பரிசுகள், போட்டிக்குள் போட்டி பரிசுகள் போன்றவைகள் வேறு தனியாக உள்ளன.

   இவை தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
  3. //எனக்கும் கூஊஊஊஊஊஊஊஊட ஒரு மூன்றாம் பரிசு கிடைத்ததென்றால் பாருங்களேன்.//

   ஐயா, ஒரு சிறிய திருத்தம். தங்களுக்குக்கிடைத்தது ’முத்தான மூன்றாம் பரிசு’ அல்ல. அது ’இனிப்பான இரண்டாம் பரிசு’ என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   Ref: http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-02-03.html

   இரண்டுக்கும் என்ன பெரிய வித்யாசம் என உடனே கேட்டு விடாதீர்கள். :)))))) உயர்திரு. நடுவர் அவர்கள் பார்வையில் எவ்வளவோ வித்யாசங்கள் இதில் உள்ளனவாம். :))))))))))

   அன்புடன் VGK

   நீக்கு
 5. /இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன்.//

  மிக்க மகிழ்ச்சி ஐயா. மிக்க நன்றி ஐயா.

  //ஆனாலும் பரிசு ஒன்றும் கிடைப்பதாகக் காணவில்லை.//

  அதானே ! :)

  //இருந்தாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முதுமொழிக்கேற்ப விடாமல் ஒவ்வொரு போட்டிக்கும் விமர்சனம் எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறேன். //

  மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கோ. தங்களின் இந்த ஊக்கத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.

  //கடைசியாக ஒரு ஆறுதல் பரிசாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன்.//

   ஆஹா, தங்களுக்குக்கிடைத்தது ’முத்தான மூன்றாம் பரிசு’ அல்ல. அதன் பெயர் ’இனிப்பான இரண்டாம் பரிசு’ என்பதாகும். இந்த இனிப்பான இரண்டாம் பரிசினை வேறு ஒரு வெற்றியாளருடன் தாங்கள் பகிர்ந்துகொள்ள நேர்ந்துள்ளதால், தங்களுக்கு அது மூன்றாம் பரிசுபோலவே காட்சியளித்துள்ளது. :)

   இதுபோலவே இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற பலருக்கும் இதில் ஒரு குழப்பமும், பல்வேறு சந்தேகங்களும் உள்ளன. :)

   ஆனால் யாரும் இதுவரை இதைப்பற்றி துணிந்து கேட்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. ஏனெனில் மூவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவதை விட ஐவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான Possibilities அதிகமே என நினைத்துத் தங்களைத்தாங்களே சமாதானம் செய்துகொண்டுள்ளனர்.

   VGK-01 மற்றும் VGK-19 ஆகிய இரண்டு போட்டிகளில் வென்றுள்ள தலா மூன்றே மூன்று நபர்களைப்பற்றிய செய்தியினை, மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பரிசுபெற்றுள்ள தலா ஐந்து நபர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தங்களுக்கு நான் சொல்ல வருவது என்னவென்று ஓரளவுக்குப் புரியக்கூடும்.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. //இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன்.//

   ஆஹா, தங்களுக்குக்கிடைத்தது ’முத்தான மூன்றாம் பரிசு’ அல்ல. அதன் பெயர் ’இனிப்பான இரண்டாம் பரிசு’ என்பதாகும். இந்த இனிப்பான இரண்டாம் பரிசினை வேறு ஒரு வெற்றியாளருடன் தாங்கள் பகிர்ந்துகொள்ள நேர்ந்துள்ளதால், தங்களுக்கு அது மூன்றாம் பரிசுபோலவே காட்சியளித்துள்ளது. :)

   இதுபோலவே இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற பலருக்கும் இதில் ஒரு குழப்பமும், பல்வேறு சந்தேகங்களும் உள்ளன. :)

   ஆனால் யாரும் இதுவரை இதைப்பற்றி துணிந்து கேட்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. ஏனெனில் மூவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவதை விட ஐவரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான Possibilities அதிகமே என நினைத்துத் தங்களைத்தாங்களே சமாதானம் செய்துகொண்டுள்ளனர்.

   VGK-01 மற்றும் VGK-19 ஆகிய இரண்டு போட்டிகளில் வென்றுள்ள தலா மூன்றே மூன்று நபர்களைப்பற்றிய செய்தியினை, மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பரிசுபெற்றுள்ள தலா ஐந்து நபர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தங்களுக்கு நான் சொல்ல வருவது என்னவென்று ஓரளவுக்குப் புரியக்கூடும்.

   அன்புடன் VGK

   நீக்கு
 6. /பரிசு பெற்ற விமர்சனங்களை வைகோ தன்னுடைய பதிவில் பிரசுரிக்கிறார்.//

  பரிசு பெறுபவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த அங்கீகாரம் அல்லவா !

  எழுத்துத்திறமை வாய்ந்த அவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்விக்க வேண்டியதும், பிறருக்கு அவர்களை அடையாளம் காட்டி சிறப்பிக்க வேண்டியதும் என் கடமையல்லவா !!

  // அந்தப் பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன. //

  அதனால் மட்டுமே பரிசுக்குத் தேர்வாகின்றன என்பதையும் தாங்கள் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும்.

  முன்பெல்லாம் நாம் பள்ளியில் தேர்வு வினாக்களுக்கு விடை எழுதும் போது பக்கம் பக்கமாக எழுதினால் தான் ஒரு 60% க்கு மேல் மதிப்பெண் தருவார்கள்.

  [இப்போது போல 100 க்கு 100 எல்லாம் அன்று நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. கணிதத்தில் மட்டுமே நமக்கு100க்கு 100 கிடைக்கும்]

  அதுபோலவே தான் இதுவும் என்று வைத்துக்கொள்ளலாம்.

  //இவ்வளவு திறமை உள்ளவர்கள் ஏன் தாங்களாகவே கதை எழுதாமல் அடுத்தவர் கதைகளுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற என் சந்தேகத்திற்கு இது வரை விடை கிடைக்கவில்லை.//

  விமர்சனப்போட்டி என்பதால் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களின் திறமையை பிறருக்குக் காட்டிட இதனை ஓர் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

  மற்றபடி தாங்களாகவே கதை எழுதத்தெரியாதவர்கள் என நாம் நினைக்கவோ சந்தேகப்படவோ கூடாது.

  தலைப்பு கொடுத்தோ அல்லது ஒரு படத்தைக் கொடுத்தோ அதற்குக் கதை எழுதச்சொல்லி போட்டி வைத்தால் நிச்சயமாக பலரும் கதை எழுதி பரிசு பெறக்கூடியவர்களே என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  போட்டி என்ற அறிவிப்பும், அதற்கு ஒரு கெடு தேதியும் இல்லாவிட்டால் எழுத சிரத்தை ஏதும் ஏற்படாது என்பதே இதிலுள்ள உண்மை.

  >>>>> இன்னும் தொடரும் ..... இப்போது சற்று இடைவேளை >>>>>

  பதிலளிநீக்கு
 7. //சரி, அது எப்படியோ போகட்டும். நான் ஒவ்வொரு சிறுகதைக்கும், 80 வயதானபின் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச என் மூளையைக் கசக்கிப் பிழிந்து விமர்சனங்கள் எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறேன். //

  You are SO Great Sir. I really appreciate your Talent and Interest in this connection, that too at this age of 80. :))))) My Special Congratulations to you, Sir.

  //சுருங்கச்சொல்லி விளங்க வைத்தால் என்னும் நன்னூல் சூத்திரத்தை சிறுவயதில் படித்த காரணத்தினால் மற்றவர்கள் ஒரு நாவல் அளவிற்குச் சொல்வதை நான் ஒரு வரியில் சொல்லி விடுவேன்.//

  அதற்கும் [For precis writing] ஓர் தனித்திற்மை வேண்டும்தான். பாராட்டுக்கள்.

  //என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் இந்த அளவுகோலின்படி எழுதப்பட்டவை.//

  ஆனால் இந்த சிறுகதை விமர்சனப் போட்டியின் விதிமுறைகளின்படி [அளவுகோலின்படி] தாங்கள் அனுப்பும் விமர்சனங்கள் 40 வரிகள் அல்லது 200 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்றல்லவா சொல்லப்பட்டுள்ளது !

  >>>>>

  பதிலளிநீக்கு
 8. //பரிசு பெறாத விமர்சனங்களை வைத்துக்கொண்டு வைகோ என்ன செய்யப்போகிறார்?//

  என்றும் பொக்கிஷமாகப் பாதுகாத்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்து, என்னை நானே செம்மைப் படுத்திக்கொண்டு, என் பிற்கால எழுத்துக்களை மேலும் மேலும் மெருகூட்டிக்கொள்வேன்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 9. //ஆகவே அவருடைய அனுமதி உண்டு என்கிற நம்பிக்கையில் நான் எழுதிய விமர்சனங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.//

  என் ஒவ்வொரு கதைக்கும் விமர்சனங்களுக்கான பரிசுகள் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்புகள் என் பதிவினில் வெளியிடும் வரை மட்டுமே, விமர்சனதாரர்கள் தங்கள் பதிவினில் தங்களின் விமர்சனங்களை வெளியிட வேண்டாம் என மட்டுமே கேட்டுக் கொண்டுள்ளோம் .... இப்போதும் கேட்டுக் கொள்கிறோம்.

  அதுவும், அவ்வாறு ஒருவேளை அவர்கள் தங்கள் பதிவினில் வெளியிட்டு, அது எங்கள் கவனத்திற்கும் வருமானால், அவர்கள் அந்தக் கதைக்கான விமர்சனத்திற்கு பரிசுபெறும் வாய்ப்பினை இழக்கக்கூடும் என்பதால் மட்டுமே.

  மற்றபடி பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இதுபோன்ற பழைய கதைகளுக்கான விமர்சன வெளியீடுகளுக்கு என் அனுமதி ஏதும் தங்களுக்குத் தேவையே இல்லை.

  தாராளமாகத் தாங்கள் வெளியிடலாம்.

  இந்த என் போட்டியின் மூலம் தங்களின் மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கையில் ஒரு 40 கூடுவதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.

  மேலும் தாங்கள் கஷ்டப்பட்டு மிகவும் சிரத்தையுடன் எழுதி அனுப்பிய தங்கள் விமர்சனங்களைப் பலரும் படிக்க ஓர் அரிய வாய்ப்பாகவும் இது அமையக்கூடும்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 10. ஏற்கனவே இந்தப்போட்டிகளில் அவ்வப்போது கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள், திரு. ஜி. பெருமாள் செட்டியார் அவர்கள், திரு. ரமணி அவர்கள் போன்றோர் ... தங்களைப்போலவே [இதுபோலவே] பரிசு கிடைத்தாலும், பரிசு கிடைக்காவிட்டாலும் தங்கள் பதிவினில் தங்கள் விமர்சனங்களைப் பதிவாக்கி வெளியிட்டுள்ளனர் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

  தாங்கள் இதுபோல செய்வது மிகவும் ஆரோக்யமானதோர் விஷயமாகும்.

  இதை போட்டியில் கலந்துகொள்ளும் மற்ற பலரும்கூட பின்பற்றலாம்.

  ஆனால் அடிக்கடி பரிசு பெற்றுவரும் சிலரும் கூட இதுபோலெல்லாம் தங்கள் பதிவுகளில் பெருமையாக வெளியிட்டுக் கொள்வது இல்லை.

  அவர்களின் தன்னடக்கமே இதற்குக் காரணமாக இருக்குமோ என்னவோ ! :)

  >>>>>

  பதிலளிநீக்கு
 11. தங்களின் இந்தப்பதிவு பற்றி என் டேஷ் போர்டில் ஏதும் தெரியவே இல்லை.

  தாங்களும் எனக்கு மெயில் மூலம் [LINK] தகவல் ஏதும் அனுப்பவில்லை.

  அதனால் இது என் கவனத்திற்கே வரவில்லை.

  இன்றைய இன்ட்லியில் பிரபலப்படுத்தப்பட்ட பதிவுகளை நான் பார்க்கும் போது அகஸ்மாத்தாக இது என் கண்களில் பட்டது.

  அதனால் தாமதமாக இங்கு வந்து பின்னூட்டமிட முடிந்தது.

  தொடரட்டும் இதுபோன்ற தங்களின் தினசரிப்பதிவுகள் அடுத்த பல நாட்களுக்கும்.

  முதல் 32 விமர்சனங்களைக் கண்ணை மூடிக்கொண்டு வரிசையாக தினம் ஒன்றாக வெளியிடுங்கள். அதன் பிறகு VGK-33 to VGK-40 க்கு அதிகாரபூர்வமான பரிசு அறிவிப்புகள் என் பதிவினில் வெளியாகி விட்டனவா என பார்த்துக்கொண்டு பிறகு வெளியிடுங்கள்.

  தங்களின் இந்த அருமையான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய இந்த ஒரு சாதாரண பதிவிற்கு நீங்கள் அளித்திருக்கும் பின்னூட்டங்கள் உங்களின் பெரும் உழைப்பையும் ஊக்கத்தையும் பிரதிபலிக்கிறது. அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி. எங்காவது தவறு ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

   நீக்கு
  2. பழனி. கந்தசாமிஞாயிறு, 7 செப்டம்பர், 2014 4:17:00 முற்பகல் IST

   //எங்காவது தவறு ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.//

   அடாடா, இதில் தவறேதும் கொஞ்சமும் கிடையாதே ஐயா !

   மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் பெரியவராகிய தங்களிடமிருந்து எனக்கு வரவே கூடாது, ஐயா.

   நாளை திங்கட்கிழமை மாலை என் பதிவுக்கு வருகை தாருங்கள், ஐயா.

   அதில் இந்தப்போட்டியின் உயர்திரு நடுவர் அவர்கள், பல்வேறு கருத்துக்களை விமர்சகர்களுக்காக எடுத்துக்கூறியுள்ளார்கள்.

   அவை தங்களுக்கும் மிகவும் பயன்படக்கூடும்.

   அதில் தங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தாங்கள் தங்களின் பின்னூட்டம் மூலம் கேட்டு அறியலாம்.

   தங்களுக்குத் தொடர்ந்து பரிசளிக்க இயலாத நடுவர் அவர்களின் நிலைமையையும் தங்களால் உணர முடியும்.

   மேலும் கீழ்க்கண்ட இணைப்புகளுக்கும் சென்று அவற்றையும் ஊன்றிப்படித்துப் பாருங்கள், ஐயா.

   அவற்றில் தங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கக்கூடும்.

   அடுத்த சில போட்டிகளிலாவது தாங்களும் பரிசுகளை வென்று குவிக்க அவை பயனளிக்கக்கூடும்.

   முதிர்ந்த பார்வையுடன் நடுவர் பேசுகிறார்
   http://gopu1949.blogspot.in/2014/09/blog-post.html

   மனம் திறந்து நடுவர் பேசுகிறார்
   http://gopu1949.blogspot.in/2014/07/blog-post_29.html

   சிறுகதை விமர்சனப்போட்டிகளில் வெற்றிபெற சில ஆலோசனைகள்
   http://gopu1949.blogspot.in/2014/07/tips-suggestions-for-winning.html

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 12. நல்ல விமரிசனம் தான். ஏதேனும் ஒரு பரிசு மீண்டும் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. முயற்சியை விடாதீர்கள். ஜாங்கிரி விமரிசனம் ஒருவேளை நடுவர் கண்களுக்கு ஜாங்கிரிச் சிக்கல் மாதிரித் தென்பட்டதோ? எதுக்கும் தொடர்ந்து எழுதுங்கள். மற்றப்படி தொடர்ந்து பரிசு பெற்றவர்களைப் பார்த்து பொறமைப் படவெல்லாம் தோணலை. ஒரு முறையாவது வேறே யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கும் திறமை வேண்டுமே!

  பதிலளிநீக்கு
 13. //பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன.//

  உண்மை.

  ////பரிசு பெறாத விமர்சனங்களை வைத்துக்கொண்டு வைகோ என்ன செய்யப்போகிறார்?//

  என்றும் பொக்கிஷமாகப் பாதுகாத்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்து, என்னை நானே செம்மைப் படுத்திக்கொண்டு, என் பிற்கால எழுத்துக்களை மேலும் மேலும் மெருகூட்டிக்கொள்வேன்.//

  மனம் நெகிழ்ந்தது.

  பின்னூட்டங்கள் ரசிக்க வைக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். செவ்வாய், 9 செப்டம்பர், 2014 8:25:00 முற்பகல் IST

   //மனம் நெகிழ்ந்தது. பின்னூட்டங்கள் ரசிக்க வைக்கின்றன.//

   மிக்க நன்றி .... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   அன்புடன் VGK

   நீக்கு
 14. //பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன.//

  ஜெயகாந்தனின் "முன்னுரைகள்" படித்த பாதிப்போ??

  பதிலளிநீக்கு