விமர்சனம்.
காதலாவது கத்திரிக்காயாவது என்ற வைகோவின் சிறுகதைக்கு என் சிறு விமர்சனம். இதைப் படித்த பின் இந்த சிறுகதையைப் படிக்கத் தோன்றினால் இங்கே செல்லவும்.
காதலாவது கத்திரிக்காயாவது
என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதன் பொருள் என்னவென்றால் சமூகத்தில் வாழும்
சாதாரண மனிதர்களுக்கு காதல் என்பது ஒரு எட்டாக்கனி அல்லது காதல் அவர்கள் வாழ்க்கையில்
ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்பதேயாகும்.
ஆனாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் இயற்கையை ஒட்டிய
உணர்வுகள் வரும் என்பதை அன்றாட வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளுக்கிடையே பின்னியிருக்கும்
விதம் அருமை. ஒரு ஆதரவற்ற இளைஞனுக்கும் இளைஞிக்கும் தற்செயலாக ஏற்படும் சந்திப்பு,
பரஸ்பர நட்பாக மாறி இறுதியில் காதலாக உருவெடுக்கும் ரசாயன மாற்றத்தை கதாசிரியர் மிக
நுணுக்கமாக விவரித்துள்ளார்.
கதையில் குறிப்பிடும் நிகழ்வுகள் சாதாரணமாக யாருக்கும் ஏற்படக்கூடியவை.
அவைகளைப் பின்னி ஒரு காதல் கதையை புனைந்த வை.கோ. அவர்களை பாராட்டவேண்டும். கதையின்
ஓட்டம் ரோல்ஸ்ராய் காரில் பயணம் செய்வது போல் அவ்வளவு சுகமாக இருக்கிறது. இது அவரின்
ஒரு தனித்துவம்.
பரமு காமாட்சி ஜோடியின் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவேண்டும்
என்று கதையைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயற்கையாகவே தோன்றும்.
திரு வை.கோ அவர்களின் ‘காதலாவது கத்திரிக்காயாவது’ என்ற சிறுகைதைக்கு தாங்கள் செய்துள்ள மதிப்புரை சுருக்கமாக இருந்தாலும் கன கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!
பதிலளிநீக்குதங்களின் இந்த விமர்சனம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது.
பதிலளிநீக்குதங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
மிகச் சிறிய விமரிசனம். அலசல் ஆராய்ச்சி என்று ஏதுமில்லையே. இருந்தாலு ம் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கதே.
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குஎல்லோரும் விமர்சனம் அருமை என்று தான் சொல்கிறார்கள். கதையை படித்த மாதிரி தெரியவில்லை.கதையையும் படித்து விட்டு கதை எழுதியவரைபற்றியும் விமர்சனம் செய்தவரை பற்றியும் பாராட்டி இருக்கலாம். ம்ம்ம்.
பதிலளிநீக்குவிமர்சனம் அருமை ஐயா....
பதிலளிநீக்குகதை விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குவிமர்சனத்தைப்படித்தவுடன் கதையைப்படிக்கத்தூண்டியது.
கதையை கொண்டு போயிருக்கும் விதம் நன்றாக இருந்தது,
ஆனால் மனதை நெருடிய ஒரு விஷயம் என்னவென்றால் கதையின் நாயகியை கிண்டல் செய்ய உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள்தான் .
“தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு?” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே,
இது தேவையே இல்லை. அவன் அவளை கிண்டல் சித்தான் என்று சொன்னாலே போதுமானது.
இந்த வார்த்தைகள் கையாளப்பட்டது கதையின் தரத்தை தாழ்த்தி விட்டதாக நான் எண்ணுகிறேன்.
மற்றபடி கதை அருமை.
சேலம் குரு
என் விமர்சனத்தில் இந்த பாயின்டை வைகோவின் பேரில் உள்ள மரியாதையின் காரணமாக விட்டுவிட்டேன்.
நீக்குகதை விமர்சனத்தை படித்தபின் கதையை படித்தே ஆகவேண்டும் என்ற உணர்வை தோற்றுவித்தது விமர்சனம் செய்தவரின் வெற்றி.
பதிலளிநீக்குதிரு வைகோ உபயோகித்த வார்த்தைகள் அவரின் வயதை உடனே காட்டிகொடுத்து விடுகிறது.
"சகல சாமுத்ரிகா லக்ஷணங்களுடன் கூடிய"
"பூத்துக்குலுங்கும் பருவ வயதுப்பெண்"
" உற்சாக பானம்"
"கை தேர்ந்த சிற்பி"
"ஒரு வித ஈர்ப்பு"
"சன்மானத் தொகையிலும்"
"வளைத்துப் பிடித்து, சுண்டியிழுக்கும்"
"வாலிப வயதுக்கேற்ற"
"பக்குவமான பண்புள்ள இளைஞனான"
"சாதாரண சீட்டிப்பாவாடை
"சாப்பாட்டுத் தூக்குடன்"
"சுய விபரக் குறிப்பு ஒன்றும்"
" கீழே குனிந்த வண்ணம் கால் விரல்களால் தரையில் கோலம் போடுகிறாள்" .
"அந்தக் காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி
"தூக்கி தட்டாமாலை"
இத்தகைய வார்த்தைகளை இன்றைய கதைகளில் தேடி பார்த்தாலும் கிடைக்காது.
மனது நிறைவாக இருந்தது.
சேலம் காயத்ரி
விமர்சனம் அருமையோ அருமை.
பதிலளிநீக்குகதையையும் படித்தேன்.
எல்லா இடங்களிலும் தமில் வார்த்தைகளை உபயோகப்படுத்தும் திரு வைகோ அவர்கள் மற்றும் சில ஆங்கில வார்த்தைகளையும் தமிழ் படுத்தியிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
இன்றைய நவீன காதல் கலாட்டாக்கள் இல்லாத ஒரு கதையை ஆங்கிலக்கலப்பில்லாத தூய தமிழிலேயே படித்திருக்கலாம் என்ற ஆதங்கம்தான். வேறொன்றுமில்லை.
மார்க்கெட் (காய்கறி அங்காடி) ,
கிக் (போதை மயக்கம்),
சினிமா (திரைப்படத்துறை),
ரிசல்ட் (தேர்வு முடிவுகள்) ,
மெஸ்(சாப்பாட்டுக்கடை),
மொபெட் (இரு சக்கர வாகனம்),
பஸ் (பேருந்து),
பஸ் சார்ஜ் (பேருந்து கட்டணம்),
லக்கேஜ் சார்ஜ் (சுமைகூலி),
பெட்ரோல் (எரிபொருள்) ,
முனிசிபாலிடி (ஊராட்சி) ,
ஓசியில் (பணமே தராமல்),
ஃபேனுடன் (மின்விசிறியுடன்),
பிரேக் (சரியான தமிழ் வார்த்தை எனக்கு தெரியவில்லை) ,
ஆட்டோ (மூன்று சக்கர வாகனம்) ,
எக்ஸ்ரேவில் (போட்டோ பிடித்து பார்த்ததில்),
ஆஸ்பத்தரி (மருத்துவ மனை) ,
பிஸியோதெரபி (மருத்துவ உடற்பயிற்சி - சரியா என்று தெரியவில்லை),
கவர்(கடிதத்தை),
ஜூஸ் (சாறு) ,
ஜாலி மூடை (மகிழ்ச்சியான நிலைமையை)
நன்றி
திருச்சி அஞ்சு
அன்புள்ள அய்யா திரு.பழனி கந்தசாமி அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம். ‘காதலாவது கத்திரிக்காயாவது ’ அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் இயற்கையை ஒட்டிய உணர்வுகள் வரும் என்பதை அன்றாட வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளுக்கிடையே பின்னியிருக்கும் விதம் அருமை.
தங்களின் விமர்சனக் கண்ணோட்டம் அருமை. எனது கதைக்கும் தயவு செய்து விமர்சனம் பண்ணுங்களேன்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
பதிலளிநீக்குஎனது‘ வலைப்பூவில்’ பாலோயராக வருகை புரிந்தமைக்கு நன்றி.