திங்கள், 8 செப்டம்பர், 2014

பாசப் போராட்டம்

VGK 02 ] தை வெள்ளிக்கிழமை

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்.

தாய்மை என்பது ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் இயற்கை உணர்வு. ஐந்தறிவு மட்டும் இருக்கும் மிருகங்களில் கூட இந்த உணர்வை பல நேரங்களில் பார்க்கலாம். அந்தப் பாசப்பிணைப்புக்கு முன்னால் வேறு எந்த உணர்வும் இணையல்ல. இந்த உணர்வை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இந்தக் கதாசிரியர்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு சமயம் எடுக்கும் முடிவுகள் வேறொரு சமயத்தில் மாறி விடுகின்றன. இதுதான் இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதை குற்றம் என்று சொல்ல முடியாது. பிரசவம் பார்த்த டாக்டர் இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அந்த கதா பாத்திரம் மனதில் நிலை பெறுகிறது.

சராசரி இந்தியக் குடும்பங்களில் நடைபெறும் பாசப் போராட்டங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களை நாம் நம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியும். சிறுகதையின் சிறப்பே அதுதான். நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக் கூடிய மனிதர்களையும் சம்பவங்களையும் நம் முன்னால் நிறுத்துவதுதான் ஒரு கதாசிரியரின் வெற்றி.


அந்த வகையில் இந்தக் கதை நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறது.

இந்த விமர்சனத்திற்குத்தான் இரண்டாம் பரிசு கிடைத்தது.

11 கருத்துகள்:

 1. 'ரசித்தேன்' என்கிற உங்கள் சுருக்கமான கமெண்ட் பழக்கத்தை மீற வைத்துள்ளது விமர்சனப் போட்டி. ஒரு பின்னூட்டம் என்ற வகையில் இதுதான் உங்கள் நீளமான பின்னூட்டமாக இருந்திருக்கும் சமீப காலங்களில்! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். திங்கள், 8 செப்டம்பர், 2014 6:05:00 முற்பகல் IST

   வாங்கோ, ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //'ரசித்தேன்' என்கிற உங்கள் சுருக்கமான கமெண்ட் பழக்கத்தை மீற வைத்துள்ளது விமர்சனப் போட்டி. ஒரு பின்னூட்டம் என்ற வகையில் இதுதான் உங்கள் நீளமான பின்னூட்டமாக இருந்திருக்கும் சமீப காலங்களில்! :)))//

   மிகச்சரியாகவே புரிந்து நன்கு சொல்லியுள்ளீர்கள். இவரைப்பொறுத்தவரை இது மிகப்பெரிய நீ.......ண்......ட.......தொரு, கருத்துரை / கட்டுரைதான்.

   நம்மொழியில் சற்றே பெரியதொரு பின்னூட்டம் என்றும் நாம் இதைச் சொல்லலாம்.

   இவர் என்னுடைய அனைத்துப்போட்டிகளிலும் பங்கு பெற்று வருகிறார். மிக அருமையான கருத்துக்களை ரத்ன சுருக்கமாக எழுதி விமர்சனம் என்ற பெயரில் அனுப்பி வைக்கிறார்.

   ஆனால், விமர்சனங்கள் 40 வரிகள் அல்லது 200 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்ற நம் போட்டியின் முக்கிய விதிமுறைகளின்படி அமையாததால், உயர்திரு நடுவர் அவர்களால் பெரும்பாலும் பரிசு அளிக்கத் தேர்வாகாமல் போய் விடுகின்றன என்பது என் தாழ்மையான எண்ணம்.

   நம் நடுவரைப்பற்றியும், அவரின் எதிர்பார்ப்புகள் பற்றியும் தங்களுக்குத் தெரியும். அதே சமயம் இவரைப்பற்றியும் இவரின் எழுத்துக்கொள்கைகள் பற்றியும் தங்களுக்குத் தெரியும். :))))))

   மிகவும் வேடிக்கையானவர்கள் தான் இந்த இருவரும்.

   இதற்கு முன் நேற்று முன்தினம் இவர் வெளியிட்டுள்ள ‘ஜாங்கிரி’ கதைக்கான விமர்சனம் + அதில் நான் கொடுத்துள்ள பல பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் தயவுசெய்து படியுங்கோ. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
  2. ஸ்ரீராம். செவ்வாய், 9 செப்டம்பர், 2014 8:14:00 முற்பகல் IST

   //நன்றி ஸார். அவசியம் படிக்கிறேன்.//

   மிக்க நன்றி .... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   அன்புடன் VGK

   நீக்கு
 2. மனித மனம் விசித்திரமானது. ஒரு சமயம் எடுக்கும் முடிவுகள் வேறொரு சமயத்தில் மாறி விடுகின்றன. இதுதான் இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் இந்த நிகழ்வு அரங்கேறுகிறது.


  பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 3. இரண்டாம் பரிசு பெற்ற விமர்சனம் நன்று. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. //இந்த விமர்சனத்திற்குத்தான் இரண்டாம் பரிசு கிடைத்தது.//

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். இதனைத் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 5. தாய்மையின் சிறப்பைப்போற்றும் கதைக்கு அருமையான திறனாய்வு. இரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா.

  எனது வலைப்பதிவில் உங்களுக்கு ஓர் விருது பரிந்துரை செய்திருக்கிறேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். இதோ இணைப்பு:

  http://wp.me/p244Wx-HR

  நன்றி,
  அன்புடன்,
  ரஞ்சனி

  பதிலளிநீக்கு