வெள்ளி, 19 ஜூன், 2015

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

19-6-2015  மணி மாலை 7.30

தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் இன்றைய பதிவைப் பார்த்தீர்களா?

http://www.tamilvaasi.com/2015/06/blog-post.html

படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும்.

ஜாடை போடுவது பற்றிய என்னுடைய பதிவையும் படிக்கவும்.

http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_19.html


என்னுடைய தலைப்பில் இருக்கும் கேள்விக்கு வருவோம்.

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

இல்லையே. என் கண்களுக்கு எதுவும் படவில்லையே. அப்படி நடந்தால் பதிவுலகம் பொங்கி எழாதா? பதிவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?

31 கருத்துகள்:

 1. இந்தப் பதிவிற்கும் பிரபல பதிவர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக யாராவது நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பில்லை. அது முற்றிலும் உங்கள் கற்பனையே என்று உறுதியாகக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. பதிவுக்குப் பின்னான உங்களது கருத்து சற்று சிந்திக்க வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 3. இதையெல்லாம் அநியாயம் என்றால் எப்படி?!
  இது தான் நியாயம் என்று பொது உடன்பாடு இல்லாத போது எது நியாயம்?

  பதிலளிநீக்கு
 4. தமிழ்வாசி பிரகாஷ் ஜியின் பதிவை ..இல்லை இல்லை ...உங்கள் கருத்தைப் படித்தபின் புரிந்து விட்டது !
  ஜாடை மாடையாக பேசுவதைப் பற்றி.... முன்பு பதிவுதான் போட்டிருந்தீர்கள் ,இப்போது அதை செய்தேவிட்டீர்கள் :)

  பதிலளிநீக்கு
 5. அய்யா, இதை ஆளாளுக்கு எடுத்துக்கொண்டு பேசினால் சம்பந்தப் பட்டவர்களது மனப்புண் ஆறாமல் கீறி விட்டபடியே இருக்கும்.
  இதுபற்றி இந்தப் பதிவு உங்களுடைய இரண்டாவது பதிவு.
  அமைதிதான் முக்கியம்.
  உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
  எல்லோருக்கும் மன அமைதி கிடைக்கட்டும்.

  God Bless You

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் கூறுவது மகா ஞானிகளுக்குப் பொருந்தும். நான் சாதாரண ஆசாபாசங்களுக்கு உட்பட்ட மனிதன்.

  திரு. தமிழ்வாசி சம்பந்தப்பட்ட பதிவில் போதுமான அளவு பின்னூட்டங்கள் போட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார்.

  மூன்று நாட்கள் கழித்து இந்தப் பதிவு போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒருவர் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம். அதை யாரும் கேட்கக் கூடாது? இதுதான் அமைதி காக்கும் வழியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கிரமம் என்றால் என்னவென்று ஒரு பதிவு போடவும்...!

   நீக்கு
  2. ம்ம்ம்ம்.... அக்கிரமம்.... நல்ல வார்த்தை சொல்லிட்டிங்க ஐயா... போங்க.. போயி திரும்ப என்னோட அந்த பந்தி பதிவை படிங்க ஐயா... அதுல முன்குறிப்பு இருக்கும், அதையும் படிச்சிருங்க.... அவர் எனது கமெண்ட்டை டெலீட் செஞ்ச அன்றைய தினமே அவர்கிட்ட சொல்லிட்டேன், இந்தக் கதையை எப்படியாச்சும் வெளியிடுவேன் என......

   நீக்கு
  3. என்னுடைய பதிவில் முதல் தடவையாக இந்த மேட்டருக்கு ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். நல்வரவாகட்டும்.

   வைகோ உங்கள் பின்னூட்டத்தை டெலீட் செய்தவுடன் நீங்கள் இந்தப் பதிவைப் போட்டிருக்கவேண்டும். மூன்று நாள் கழித்துப் போட்டதினால் இது ஒரு புது அத்தியாயமோ என்று எனக்குத் தோன்றியது. தவிர உங்கள் பதிவில் முன்னுரையும் பிறகு சேர்க்கப்பட்டது.
   அதை நான் பார்க்குமுன்பே என் பதிவை பிரசுரித்து விட்டேன்.

   உங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பல செய்திகள் பரிமாறப்பட்டிருக்கலாம். அது பற்றிய விவரம் வெளியில் தெரிய வாய்ப்பு இல்லை. அதன் பின்னணியில் நீங்கள் போட்ட பின்னூட்டங்கள் என்னைப் போன்றவர்களுக்குத் தவறான செய்தியையே தந்தது. அதுவே என்னுடைய பதிவுகளுக்குக் காரணம்.

   வைகோ வலைச்சரத்திற்கு பல பதிவர்களை சிபாரிசு செய்திலுக்கிறார் என்று அறிகிறேன். ஆகவே அவர் உங்களுக்கு நன்கு பழக்கமானவர். அப்படிப்பட்ட ஒருவரை அவமதிக்கும்படியான செயல்கள், நியாயமானவைகளாக இருந்தாலும் கூட, தவிர்க்கப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன்.

   பதிவர் ஒற்றுமை வளரவேண்டும் என்று வார்த்தைகளால் மட்டும் சென்னால் போதுமா? அவை மனதிலிருந்தும் வெளிப்படவேண்டும். அத்தகைய ஒற்றுமைக்கு இவ்வாறான நிகழ்வுகள் ஏற்றதல்ல.

   நடந்தவைகளை மறப்போம். பதிவுலகம் ஏற்கெனவே மிகவும் இளைத்துக் கிடக்கிறது. பல பதிவர்கள் பதிவுலகை விட்டுப் போய் விட்டார்கள். புதுப் பதிவர்களை ஊக்குவிக்க வலைச்சரம் மூலமாக வழிமுறைகளைச் செய்தால் வருங்கால வலைச்சர ஆசிரியர்கள் அறிமுகப்படுத்த கொஞ்சம் பதிவர்களாவது தேறுவார்கள். இல்லையென்றால் அரைத்த மாவையேதான் அரைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

   இந்த சர்ச்சையை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் உங்கள் பேரில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கள் கருத்துகளை கண்ணியமாகவே வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி பல.

   நீக்கு
  4. //திண்டுக்கல் தனபாலன்சனி, 20 ஜூன், 2015 ’அன்று’ 8:31:00 முற்பகல் IST
   அக்கிரமம் என்றால் என்னவென்று ஒரு பதிவு போடவும்...!//

   இந்தப் பதிவில் நடப்பவைதான் அக்கிரமம். புரிந்ததா?

   நீக்கு
 7. வேதனை தரும் நிகழ்வு. கவனம் கொடுக்கக் கொடுக்க இருந்து கொண்டே இருக்கும். விட்டு விடுங்கள்.

  பதிலளிநீக்கு

 8. ஐயா! இரு கை தட்டினால் தான் ஓசை வரும். எனவே இதை இத்தோடு விட்டுவிடுவோம். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதை தாங்கள் அறியாததல்ல.

  பதிலளிநீக்கு
 9. // நேரில் (வரும் வலைப்பதிவர்கள் மாநாடு) சந்தித்து உரையாடினால் அனைத்தும் சரியாகி விடும்... நாம் அல்ல... ஏற்பாடு செய்வது உங்கள் பொறுப்பு... தமிழ்வாசியை கூட்டி வருவது என் பொறுப்பு... // இது இங்கே (http://tthamizhelango.blogspot.com/2015/06/blog-post_20.html) சொன்ன கருத்துரையே...!

  பதிலளிநீக்கு
 10. இதை இத்துடன் மறப்து அனைவருக்கும் நல்லது...

  பதிலளிநீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

  http://vettipaechchu.blogspot.com/2015/06/blog-post_10.html?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது காலம் காலமாக அதிகார வர்க்கம் கூறும் வசனம்தான். இதைக்கூறிக்கூறித்தான் தமிழன் நாறிக்கொண்டிருக்கிறான்.

   நீக்கு
 13. ஆளே கிடைக்காமல், அங்க இங்க அலைந்து ஒருவழியாக ஒருவரை ஆசிரியராக நியமித்து,கடைசியில் அவரை வெத்துகாரணங்களுக்காக அவமானபடுத்தி பதிவு போடுவது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்வதில் வலைச்சரவாசிகள் தேர்தவர்கள் என்பதை இப்போது அறிய முடிகிறது....

  பதிலளிநீக்கு
 14. நடந்து முடிந்தவை எதிர்பாராதவை. சக பதிவருக்கு ( அதிலும் உங்களைப் போன்றே அவரும் ஒரு மூத்த பதிவர்) என்றவுடன் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுவது இயல்புதான். அதனால்தான் இது சம்பந்தமாக இதற்கு முன்பும், இப்போதும் , ஆக இரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த நிகழ்வுகளின் பின்னணி உங்களுக்கு நன்றாகத் தெரியும். பல காரணங்களால் தமிழ்மணம் இரண்டு மாதங்கள் நின்று விட்டது. இதற்குக் காரணம் தமிழில் எழுத புதிதாக யாரும் முன் வருவதில்லை. பழைய பதிவர்கள் பலரும் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். ஆகவே வலைச்சர ஆசிரியர் பதவிக்கு புதிதாக யாரும் கிடைக்கவில்லை. தவிர வலைச்சர நிர்வாகமும் சோர்ந்து விட்டது. ஆனாலும் வலைச்சரத்தை நின்று போகுமாறு செய்திருக்கக் கூடாது. அது ஒரு பெரும் சருக்கல்.

   நீங்கள் இதைப்பற்றி ஆதங்கத்துடன் ஒரு பதிவு எழுதினீர்கள். திரு வைகோ வலைச்சரத்திற்கு பல ஆசிரியர்களை பரிந்துரைத்திருக்கிறார். அந்தப் பரிந்துரைகளை வலைச்சர நிர்வாகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. திரு சீனா அவர்களுடன் வைகோ நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.

   வலைச்சரம் நின்று போனதில் வைகோ விற்கும் வருத்தம் ஏற்பட்டு, அவர் தானாகவே முன் வந்து 35 நாட்கள் தான் வலைச்சர ஆசிரியராக இருக்க ஒப்புக்கொண்டு, வலைச்சர நிர்வாகமும் அதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. வலைச்சர விதிகள் என்று ஒரு அறிக்கை வலைச்சரத்திற்கு புதிதாக வருபவர்களுக்குக் கொடுப்பது வழக்கம். அந்த நடைமுறை வைகோ விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. வைகோ விதிகளை அறிந்திருப்பார் என்று நினைத்ததாக தமிழ்வாசி கூறியுள்ளார்.
   வைகோ அவர்கள் "நாமார்க்கும் குடி அல்லோம்" என்ற தத்துவப்படி வலைச்சரத்தில் எழுதியுள்ளார். அது அவர் பாணி.

   இந்த வேற்றுமையைக் கண்ட வலைச்சர நிர்வாகம் உடனடியாக கரெக்ஷன்கள் செய்திருக்கவேண்டும். முடியாவிடில் வைகோ விடம் நாசூக்காகச் சொல்லி விலகச்சொல்லி இருக்கவேண்டும். எப்படியோ அவர் ஒரு கட்டத்தில் விலகி விட்டார்.

   இத்தோடு இந்த விவகாரம் முடிந்திருக்கவேண்டும். அவருடைய பதிவில் தமிழ்வாசி பல வேண்டாத பின்னூட்டங்களைப் போட்டு அவருடைய மனதை நோகடித்திருக்கவேண்டாம். அதைக் கண்ட நான் அதற்கு ஒரு கண்டனப்பதிவு உடனடியாக எழுதினேன்.

   இதற்கடுத்து மூன்று நாட்கள் கழித்து "பந்தி நாகரிகம்" பற்றி ஒரு தேவையில்லாத அவதூற்றுப் பதிவை அவர் வெளியிட்டார். இதில் அவர் கூறினது. ஒரு அழையா விருந்தாளி வந்து கலந்து கொண்டார் என்று. அவர் அசைவ உணவு கொண்டு வந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார். வைகோவை அறிந்தவர்களுக்குத் தெரியும். அவர் ஒரு ஆசாரமான வைதிகப் பிராமணர். அவரை அசைவ உணவுடன் சம்பந்தப் படுத்தியிருப்பது வடி கட்டின அயோக்கியத்தனம். இதைக் குறிப்பிட இதை விட மோசமான வார்த்தை எனக்குக் கிடைக்கவில்லை.

   வைகோ அழையா விருந்தாளியாக வரவில்லையே? வலைச்சரம் அழைத்துத்தானே அவர் வந்தார். பிறகு ஏன் அவரை அழையா விருந்தாளி என்றும் அவரை பலாத்காரமாக வெளியேற்றினோம் என்றும் கூற வேண்டும். இது ஒரு அக்கிரமமான வசை அல்லவா. உடனடியாக நான் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதினேன். நான் அக்கிரமம் என்று குறிப்பிட்டதற்கு திண்டுக்கல் தனபாலன் அக்கிரமம் என்றால் என்னவென்று ஒரு பதிவு போடுங்கள் என்று கூறுகிறார். அக்கிரமம் என்றால் என்ன என்று தெரியாத பச்சைக் குழந்தையா தனபாலன்?

   இப்படி ஒரு மூத்த பதிவரை, அதுவும் வலைச்சரத்திற்கு உதவ வந்தவரை வலைச்சர துணை நிர்வாகி அவமதிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மற்ற பதிவர்கள் பல சொந்தக் காரணங்களுக்காக மௌனமாக இருந்திருக்கலாம். ஆனால் நான் அப்படி இருக்கமாட்டேன். இந்த வலைப் பதிவுகளினால் எனக்கு ஆகப்போவது ஏதுமில்லை. ஏதோ பொழுது போக்கிற்காக எழுதுகிறேன். அவ்வளவுதான். சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அத்தகைய ஒரு நண்பரான வைகோ அவர்களுக்கு ஒரு அவமதிப்பு என்றால் என்னால் அதைத் தாங்கிக்கொண்டு வாளா இருக்க முடியாது.

   இதெல்லாம் போகட்டும். வலைச்சர முக்கிய நிர்வாகியான திரு சீனா அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்? அவருக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமில்லையா? அவர் வளர்த்ததுதானே வலைச்சரம்? பின் ஏன் இந்த மௌனம்? அல்லது அவருடைய துணை நிர்வாகி செய்வது சரியென்று நினைக்கிறாரா?

   நான் புதிதாக ஒரு பதிவும் இதைப் பற்றி எழுத மாட்டேன். ஆனால் என்னை மீண்டும் வம்பிற்கு இழுத்தால் அதற்கு பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டேன்.

   நீக்கு
  2. திரு சீனா ஐயா ஏன் இன்னும் மௌனம் காக்கிறார், இவ்வளவு நடந்தும் வலைச்சரத்துக்குப் பொறுப்பாளரான அவர் இதுபற்றி ஏன் இதுவரை பொதுவெளியில் கருத்து ஏதும் சொல்லவில்லை என்ற கேள்வி எனக்கும் இருக்கிறது. நண்பர் திரு தமிழ் இளங்கோ பதிவிலும் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளேன்.

   நீக்கு
  3. நடந்தது என்னவென்று இருபுறமும் விசாரிக்க வேண்டும்... தமிழ்வாசி 9080780981

   பேசவில்லை எனில் அது தான் இப்போதைய அக்கிரமம்...!

   நீக்கு
  4. நடந்தவைகளை மறப்போம். பதிவுலகம் ஏற்கெனவே மிகவும் இளைத்துக் கிடக்கிறது. பல பதிவர்கள் பதிவுலகை விட்டுப் போய் விட்டார்கள். புதுப் பதிவர்களை ஊக்குவிக்க வலைச்சரம் மூலமாக வழிமுறைகளைச் செய்தால் வருங்கால வலைச்சர ஆசிரியர்கள் அறிமுகப்படுத்த கொஞ்சம் பதிவர்களாவது தேறுவார்கள். இல்லையென்றால் அரைத்த மாவையேதான் அரைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

   இந்த சர்ச்சையை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் உங்கள் பேரில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கள் கருத்துகளை கண்ணியமாகவே வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி பல.////

   இந்த கருத்துரை வெயிட்ட தேதி 20.. ஆனால் இன்று 21 ம் தேதி பல புனைவுகள் கூறி என் பதிவை விமர்சித்து நீண்ட கருத்துரை போட்டிருக்கிங்க... பலரும் போதும் என சொல்லியும் இந்த கருத்துரை போட்டிருக்கிங்க.. ஏன் நீங்களும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்று சொல்லியும் இந்த கருத்துரை போட்டிருக்கிங்க... பரவாயில்லை ஐயா.... என் வாதங்களை முன் வைக்க விரும்பவில்லை. ஏன்னா நீங்களே சொன்னிங்க,... முடிச்சுக்கலாம்னு.. நான் முடிச்சுட்டேன். நீங்க தொடர்ந்திட்டேன்...

   அப்புறம் சிலர் சொல்லி இருக்காங்க.. பொதுவில் சொல்லாமல் தனியே சொல்லலாமே என!!!!..... என்னை பொது வெளியில் இழுத்தது வை.கோ அவர்கள் தான்... அவரது அறிமுகப் பதிவில் (நாங்கள் பதிவிட்டதில்) கணக்காளர் (cash) என்பது தவறு. அதை திருத்துங்கள் என எனக்கு மதியம் மூணு மணியளவில் அலைபேசி வழியே சொன்னார். அப்போது மின்னஞ்சலும் சேர்த்தே அனுப்பியதாக சொன்னார். அப்போது என் அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். சரிங்க ஐயா நான் பார்த்துக் கொள்கிறேன். சரி செய்கிறேன் என்றேன். எனக்கு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் நேரம் இரவு ஒன்று. ஆகையால் இரவு வீட்டிற்கு வந்ததும் திருத்தி விடலாம் என்றே அவரிடம் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். ஆனால் அவர் மாலை ஏழு மணியளவில் அந்தப் பதிவில் மறுமொழியாக பதிந்து விட்டார். அது ஏன் ஐயா? திரும்ப அலைபேசியில் என்னை அழைத்து ஏன் பிரகாஷ் இன்னும் மாற்றம் செய்யவில்லை? எனக் உரிமையோடு அதட்டி கேட்டிருந்தால் என் நிலையை விளக்கியிருப்பேனே (பேருந்தில் ஓட்டுனர் அருகே உட்கார்ந்திருந்தேன். ஆகையால் அப்போது விளக்காமாக பேசவில்லை. அதோடு அலுவலகமும் நெருங்கி விட்டிருந்தது).. ஆனால் அவர் சொன்னது சிறு திருத்தும் தான்.. அதை கூட பொறுக்க முடியாமல் பொதுவில் பகிர்ந்ததே என்னைத் தூண்டியது. நீங்க எப்படி வேணாலும் நெனச்சுக்கங்க.... இன்னும் என்னை என்னவேனாலும் சொல்லுங்க. பதிவுலகில் அமைதி வேணும்னு சொல்லிட்டு இன்னும் எத்துனை கருத்துரைகள் வரப் போகுதோ???

   நீக்கு
  5. என் பதிவிற்கு வரும் கருத்துரைகளுக்குப் பதில் போடுவது சர்ச்சையை வளர்த்துவது ஆகாது. இத்துடன் இந்த பிரச்சினையை விட்டு விட்டு வலைச்சரத்தைத் தொடர்வதைக் கவனிக்கவும்.

   நீக்கு
 15. வேதனை தரும் நிகழ்வுகள் இத்துடன் நிறைவு பெறட்டும்
  மகிழ்ச்சியான தருணங்கள் தொடங்கட்டும்
  தம +1

  பதிலளிநீக்கு
 16. திரு.தனபாலன் அவர்களுக்கு,
  நடந்தது என்னவென்று இருபுறமும் விசாரிக்க வேண்டும்... தமிழ்வாசி 9080780981

  பேசவில்லை எனில் அது தான் இப்போதைய அக்கிரமம்...!

  ஐயா, நான் பஞ்சாயத்து நடத்தவில்லை. நான் என் கருத்துகளை என் பதிவில் வெளியிடுகிறேன். அதற்கு மேல் எதுவும் செய்ய எனக்கு விருப்பமில்லை.

  பதிலளிநீக்கு
 17. தமிழ்வாசி அவர்களின் பதிவைப் படித்து விசுவாசம் இருக்கட்டும் துவேஷம் வேண்டாம் என்று கருத்திட்டேன்! பின்னர் அவர் என்னை அலைபேசியில் அழைத்து நீண்ட விளக்கம் தந்தார். அவருடைய விளக்கம் எனக்கு ஏற்புடையதாகவே இருந்தது. இந்த விளக்கம் அவர் தந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை எனினும் தன் சொந்த அழைப்பில் ஓர் அரைமணிநேரம் அவர் தரப்பு நியாயங்களைக் கூறினார். விதிகளை கூறாமல் விட்டது அவர் தவறு! விதிமுறைகளை கூறிய பின்னரும் பிடிவாதமாக இருந்தது கோபு சாரின் தவறு! இதற்குமேல் இதை வளர்க்க வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். சரி என்றார். ஆனால் இது வளர்ந்து கொண்டே செல்கிறது! இங்குதான் விதி விளையாடுகின்றது போலும்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள தளிர் சுரேஷ் அவர்களுக்கு,

   எனக்கு உங்கள் பெயர் பதிவுலகத்தில் பதிவிடுபவர்கள் என்ற முறையில்தான் தெரியும். இருந்தாலும் உங்கள் போட்டோவைப் பார்த்ததும். ஒரு ஸ்நேக பாவம் என்னுள் தோன்றியது. அதன் அடிப்படையில்தான் இந்த பதில் எழுதுகிறேன்.

   பதிவுலகம் என்பது ஒரு மாயா லோகம் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். நிஜ உலகிலேயே நாம் பல முகமூடிகள் அணிந்து கொண்டுதான் உலாவுகிறோம். பதிவுலகில் அது உச்ச கட்டமாக நிகழ்கிறது.

   இந்த நிகழ்வுகளை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு அதே நினைவாக இருப்பது ஒரு மனோ வியாதி என்று நான் நினைக்கிறேன்.

   இப்போது நாம் பார்த்தது வைகோ + தமிழ்வாசி விவகாரம், பதிவுலகில் அடிக்கடி நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான். இதற்கும் மேலே பதிவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழ்வாசி ஏன் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு கஷ்டப் படுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு ரிடைர்டு ஆனவன். நான் வலையுலகத்தை ஒரு பொழுது போக்கும் இடமாக வைத்திருக்கிறேன். ஆனால் தமிழ் இளங்கோ, திண்டுக்கல் தனபாலன் போன்றவர்கள் இளம் வயதில் இருப்பவர்கள். திண்டுக்கல் தனபாலன் இன்று எனக்கு போன் செய்து இதைப் பற்றிப் பேசினார். அப்படி போன் செய்து பேசும் அளவிற்கு இது என்ன வாழ்வா, சாவா என்பது போன்ற வாழ்க்கைப் பிரச்சினையா என்ன?அவர்களுக்கு நிஜ வாழ்வில் ஒரு தொழில் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. அவர்கள் நிஜ உலகில் சாதிக்க வேண்டியது அநேகம் இருக்கின்றன. அவர்கள் இந்தப் பதிவுலகத்தை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பது என் கருத்து. வலையுலகத்திற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கவேண்டுமோ அதற்கு அதிகமாகக் கொடுப்பது வீண்.

   பதிவுலகில் நபர்கள் வருவார்கள், போவார்கள். பதிவுலகில் ஒருவர் பெறும் மதிப்பு என்பது அர்த்தமற்றது.

   நிஜ வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால் அது ஒருவருடைய வாழ்க்கைக்கு பலனளிக்கும். பதிவுலகில் சாதித்து யாருக்கு என்ன பயன்?

   இதற்கு மேல் ஒரு தகப்பன் வயதில் இருந்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது எல்லாம் ஒரு நாடகமே. மேக்கப்பைக் கலைத்தால் நாடகம் முடிந்து விடும். இதை அனைத்து பதிவர்களும் கவனத்தில் கொண்டால் எல்லோருக்கும் நல்லது. ஆரோக்யமாக வாழலாம். மாயையில் சிக்கி மூழ்கவேண்டாம்.

   முடிந்தால் தமிழ்வாசிக்கு ஒரு அறிவுரை கூறுங்கள். இந்தப் பதிவுலகம் அவருக்கு உகந்ததல்ல. இதில் செலவிடும் நேரத்தையும் சக்தியையும் நிஜ வாழ்வில் உபயோகப் படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம். ஆனால் அது எங்களுக்குத் தெரியும் என்று சொன்னால் இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்று மில்லை.

   நீக்கு
  2. பதிவுலகத்தைப் பற்றிய மிக மிக சரியான கணிப்பு ஐயா...மூன்று வருடங்களுக்கு முன் இருந்த வீரியம் இன்று பதிவுலகில் இல்லை, சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் பதிவுலகமே காணாமல் போய்விடும் வாய்ப்புக்கள் இருப்பதையும் மறுப்பதட்க்கு இல்லை...

   பதிவுலகம் என்பது ஒரு கற்பனை உலகமே.... இதில் ஒருவர் விதிமுறைகளை தாங்கி பிடித்துக்கொண்டும், தானும் நிர்வாக குழு :)) :)) என்று செய்யும் வன்செயல்கள், தான் அனைவரையும் விட பெரியவன் என்ற போதையை பெற்று ஆடுவதும் நகைப்பையையும் அவர்களின் பேதமையையும் அளிக்கிறது....

   சொல்லபோனால் இதுபோன்றவர்கள் நிஜ வாழ்க்கையில் எங்கானும் அடிமைபட்டே வாழ்ந்துகொண்டிருப்பார்கள், அதனால் தான் கற்பனை உலகில் தங்களின் வக்கிரத்தை காட்டுகிறார்கள்...

   உடல்நல சிரமங்களுக்கு இடையேயும், பொறுப்பான குடும்பத்தலைவர் என்ற பொறுப்பின்இடையேயும் , வயது மூப்பின் சிரமங்களுக்கு இடையேயும் தன்னார்வத்துடன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று புத்துணர்ச்சியுடன் வலைச்சரத்தை நகர்த்த உதவிய பெரியவருக்கு கொடுக்கும் மரியாதை "" அவமானபடுத்துதல்"" , பொதுவில் அசிங்கபடுத்துதல்....

   பந்தி நாகரீகம் பேசும் தமிழ்வாசிக்கு சபை நாகரீகம் தெரியாதோ!!!!!

   இதற்க்கு திண்டுக்கல் தனபாலன் போன்ற பொறுப்பான பதிவர்கள் தோல் கொடுத்து ஏற்றி விடுவதை பார்க்கும் போது, சீனா ஐயா அமைதியாக இதை வேடிக்கை பார்பதையும் பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது...

   எது எப்படியோ, இவர்களின் உண்மை முகம் தெரிந்துவிட்டது...கெட்டதிலும் ஒரு நன்மை....

   நீக்கு
  3. "பதிவுலகில் நபர்கள் வருவார்கள், போவார்கள். பதிவுலகில் ஒருவர் பெறும் மதிப்பு என்பது அர்த்தமற்றது.

   நிஜ வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால் அது ஒருவருடைய வாழ்க்கைக்கு பலனளிக்கும். பதிவுலகில் சாதித்து யாருக்கு என்ன பயன்?

   இதற்கு மேல் ஒரு தகப்பன் வயதில் இருந்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது எல்லாம் ஒரு நாடகமே. மேக்கப்பைக் கலைத்தால் நாடகம் முடிந்து விடும். இதை அனைத்து பதிவர்களும் கவனத்தில் கொண்டால் எல்லோருக்கும் நல்லது. ஆரோக்யமாக வாழலாம். மாயையில் சிக்கி மூழ்கவேண்டாம்."

   இது நூற்றுக்கு நூறு உண்மை.

   முன்பு பதிவுலகில் மும்முரமாய் இருந்தவர்கள் இப்போது டிவிட்டர், வாட்ஸ்அப் புக்கு மாறிவிட்டார்கள்.

   ஆனாலும் உங்களது கோபம் உங்களது எழுத்துக்களைப் படித்து உறவை வளர்த்துக் கொண்ட எங்களுக்கு சற்று பதட்டத்தை உருவாக்கியது என்னவோ உண்மைதான்.

   God Bless You

   நீக்கு