வெள்ளி, 12 ஜூன், 2015

ஓவியமாம் ஓவியம்?

இந்த ஓவியம் 140 மில்லியன் டாலராம்.

அப்படீன்னா எத்தனைங்க?

most expensive paintings

இதுல என்ன இருக்கு? என் மர மண்டைக்கு ஒண்ணும் புரியல? உங்களுக்காவது எதாச்சும் புரியுதா பாருங்க.

அதைவிட இது கொடுமை. 186 மில்லியன் டாலராம்.

expensive painting

இந்தப் படம் அதைவிடக் கொடுமை. நம்ம வீட்டுப் பாப்பா இதை விட நல்லாப் படம் போடும்.

ஆதாரம். எனக்கு வந்த பாபா மெயில்.

ஒரு கணக்கு - எனக்கு கணக்கு கொஞ்சம் வீக். இருந்தாலும் ஒரு கணக்கு போட்டுப் பார்ப்போமா?

ஒரு மில்லியன்  =  10 லட்சம்
ஒரு டாலர்           =   60 ரூபாய்
10 லட்சம் டாலர் = 600 லட்சம் ரூபாய் அதாவது 6 கோடி
ஆகவே ஒரு மில்லியன் டாலர் என்பது 6 கோடி ரூபாய்.

அப்போ 140 மில்லியன் டாலர் என்பது 840 கோடி ரூபாய்.
                 186 மில்லியன் டாலர் என்பது 1116 கோடி ரூபாய்.

எனக்கு ஒரு சந்தேகம். இத்தனை பணம் அவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்? இந்தப் படத்திற்கே இப்படி கோடிக்கணக்காக செலவழிப்பவர்கள் மொத்தம் எத்தனை பணம் வைத்திருப்பார்கள்?

19 கருத்துகள்:

 1. "அப்போ 140 மில்லியன் டாலர் என்பது 840 கோடி ரூபாய்.
  186 மில்லியன் டாலர் என்பது 116 கோடி ரூபாய்."

  கணக்கு கொஞ்சம் உதைக்கிறாப்பல இருக்கில்ல..?

  சும்மா கொஞ்ச நேரம் இந்த ஓவியத்தைப் பார்த்ததுக்கே உங்களுக்கு இந்த எபெக்ட் னா..வரஞ்சவனுங்க எந்த நிலைமையில இத வரைஞ்சிருப்பானுவ...

  அதான் இத்தனை விலை..

  நான் ரொம்ப நாளா கேட்கனும்கற கேள்விய போட்டுல அடிச்சாப்பல கேட்டுட்டீங்க சார்..

  God Bless You

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணக்கு கொஞ்சம் என்ன? நல்லாவே ஒதைக்குது. இதுவரைக்கும் 20 பல்லு உளுந்திருச்சு. இன்னும் 12 தான் பாக்கி இருக்குது. அவைகளும் இன்னொரு உதை வாங்கினால் உளுந்து விடும். டாக்டர் பீஸ் மிச்சம்.

   ஒன்னே ஒன்னு மிஸ்ஸாயிருச்சு. சரி பண்ணீட்டேன்.

   நீக்கு
 2. விளங்காததுதான்
  அதிக விலை போகும் போல
  ஆச்சரியமாகவும் அதிசயமாகவும்
  ஒருவகையில் எரிச்சலாகவும் இருக்கு

  பதிலளிநீக்கு
 3. 140 மில்லியன் டாலர் என்பது 840 கோடி ரூபாய்.
  186 மில்லியன் டாலர் என்பது 116 கோடி ரூபாய்.

  கணக்கு இடிக்குதே......

  பதிலளிநீக்கு
 4. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்? நான் கூட இது போல வரையப் போகிறேன். எங்கு சென்று விற்க வேண்டும் ஸார்?

  :)))))))))

  பதிலளிநீக்கு
 5. என்னது கணக்கு கொஞ்சம் வீக்கா
  கை குடுங்க
  ஓய்வா
  சாய்வு நாற்காலியில்
  உக்காந்துக்குனே
  ஏதாவது ஒரு மன்றத்துக்கு
  நீதிபதியாவும் வர வாய்ப்பிருக்கு

  பதிலளிநீக்கு
 6. அவர்கள் அனைவரும் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். என்ன செய்வது.

  பதிலளிநீக்கு
 7. கொடுத்துள்ள இணைப்பில் உள்ள மற்ற படங்க(?)ளாவது பரவாயில்லை... அதுக்காக யம்மாடி...!

  பதிலளிநீக்கு
 8. ஐயா! இந்த ஓவியங்களை வாங்குவோர் மித மிஞ்சிய செல்வத்தை வைத்துக்கொண்டு எப்படி செலவு செய்வது என்று முடியை பிய்த்துகொள்பவர்களாக இருக்கக்கூடும். இந்த ஓவியங்கள் எதை குறிக்கின்றன என யோசித்தால் நமக்குத்தான் தலைவலி மிஞ்சும்.

  பதிலளிநீக்கு
 9. ஓ! இதெல்லாம் ஒவியமா? மரமண்டைங்க லிஸ்ட்ல எங்களையும் சேத்துக்கோங்க

  பதிலளிநீக்கு
 10. ஒரு வெள்ளைத்தாளை ஒருவன் உற்றுப் பார்த்துக்கொண்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்தானாம் அப்படி என்ன இருக்கிறதென்று கேட்டத்தற்கு வெள்ளிப்பனித்தரையில் வெள்ளைப் பசுமாடு மேய்வதை ஓவியம் கூறுகிறது என்றானாம் அந்தக் கதை ஏனோ நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 11. நவீன ஓவியங்கள் என்று சொல்லுவார்கள்! எனக்கும் இதெல்லாம் புரிவது இல்லை!

  பதிலளிநீக்கு
 12. ஓவியத்தில் ஒரு மண்ணும் இல்லாவிட்டாலும், அதை வரைந்த V V I P யார் என்று அறிவிக்கப்படும் அடிப்படையிலும், இதை அவ்வளவு விலைக்கு வாங்கக்கூடிய செல்வாக்குள்ள உலகப் பெரும் பணக்காரர்கள் யார் என வெளியுலகுக்குக் காட்டிடும் அடிப்படையிலும், இத்தகைய பெரும் தொகைகள் ஏலத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதுதான் இதில் உள்ள சுவாரஸ்யம்.

  மொத்தத்தில் இதெல்லாம் பெரும் பணக்காரர்களின் அன்றாடப் பொழுதுபோக்குகளே என ஏழை எளிய மக்களாகிய நாம் நினைத்துக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 13. பொதுவாக இது போன்ற விலை உயர்ந்த ஓவியங்கள் ஒரு முதலீடாகத்தான் வாங்கப் படுகின்றன. இருக்கும் பணத்துக்கு ஸ்டாக், வீடு, நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது போல இதுவும் ஒரு முதலீடு தான். வாங்கும் பெரும்பாலானவருக்கு ஓவியம் பற்றி பெரிய அக்கறை இருக்காது என்றே தோன்றுகிறது.. விலைக்கு முக்கிய காரணம் அந்த ஓவியர் உயிருடன் இல்லாமல் இருப்பது. அப்போது தான், அவர் வரைந்த ஓவியங்கள் இவ்வளவுதான் .. இனி அதைவிட அதிகமாகப் போவதில்லை என்ற விஷயம்தான்..

  186 மில்லியன் விற்ற ஓவியம் போன்ற அவரின் இன்னொரு ஓவியம் பற்றி அந்த ஓவியர்.. நான் வரைந்த ஓவியத்தின் வர்ணங்கள் ஒவ்வொரு உணர்ச்சியை குறிக்கின்றது.. சோகம்.. சந்தோஷம்.. கோபம்.. போல.. என் ஓவியத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுபவர்களை நான் பார்த்திருக்கிறேன்.. என்கிறார்.

  எனக்கென்னவோ.. அதன் விலையைப் பார்த்து (இதெல்லாம் இவ்வளவு விலையா?) அழுதிருப்பார் எனத் தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
 14. சாமீ! எவ்வளவு அழகான ஓவியம்! வாழ்க்கை மிகவும் கலர் ஃபுல்லானது, ஆனால் முட்கள் நிறைந்தது என்ற தத்துவம் ஐயா.....ஹஹஹ்ஹ் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்னு வருது....நாங்களும் வரைவோம் ...எங்க இப்படி விற்கராங்கனு கொஞ்சம் சொன்னீங்கனா நல்லாருக்கும்....வித்துச்சுனா உங்களுக்கும் பங்கு உண்டு சார்....

  பதிலளிநீக்கு