ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

அப்துல் கலாமுக்கு தர்ப்பணம்.

                                     Image result for அப்துல் கலாம் quotes

சில நாட்களுக்கு முன் தினத்தாள்களில் ஒரு செய்தி படித்தேன். சிலர் அப்துல் கலாமைப் புதைத்த பகுதியிலிருந்து கொஞ்சம் மண் எடுத்து சட்டியில் போட்டு அதை அவருடைய அஸ்தியாகப் பாவித்து அதை காவிரியில் கரைத்து அய்யரை வைத்து அப்துல் கலாமுக்கு தர்ப்பணம் கொடுத்தார்களாம்.

அப்துல் கலாம் மனித நேயம் மிக்க ஒரு நல்ல மனிதர். யாரும் இதை மறுக்கமாட்டார்கள். ஆனாலும் அவர் பேரில் ஏதோ தங்களுக்கு மட்டும்தான் தனியாக பக்தி இருப்பது மாதிரியும், அவருக்காக தாங்கள் உயிரையே வேண்டுமானாலும் அர்ப்பணிப்போம் என்கிற மாதிரி சிலர் விளம்பரத்திள்காக பண்ணும் முறைகேடான காரியங்கள் பயித்தக்காரனின் காரியத்தை ஒத்திருக்கின்றன.

மேலும் அப்துல் கலாம் கடைப்பிடித்த மதத்தில் இந்த செயலை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இதே மாதிரி தாங்கள் கொண்டாடும் ஒரு அரசியல்வாதிக்கு ஏதாவது சங்கடம் என்றால் அந்த சங்கடம் நீங்க கோவில்களில் தனியாக பூஜைகள், யாகங்கள் இவைகளை நடத்துகிறார்கள். இது முற்றிலும் விளம்பரே. கடவிள் யார்யாருக்கு எந்தெந்த சமயத்தில் என்ன நடக்கவேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். இவர்கள் யாகம் நடத்துவதால் கடவுளின் கணக்கு மாறப் போகிறதா என்ன?

இதைப் போலவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று செல் போன் டவர்களின் மேல் ஏறிக்கொண்டு சிலர் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். இது எல்லாம் மட்ட ரகமான விளம்பரம் தவிர வேறு ஒன்று மில்லை.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதுதான் இந்திய மக்களின் மடத்தனம். இது என்று மாறுமோ அன்றுதான் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா பலிதமாகும்.

15 கருத்துகள்:

 1. முற்றிலும் சரியான கருத்து. சவுக்கடி போன்ற வார்த்தைகள். விளம்பர மோகங்களும், சில மக்களின் ஆதரவும் இவர்களை இப்படி கொண்டு போகின்றது.

  பதிலளிநீக்கு
 2. முற்றிலுமாக உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

  மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், 'அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை' என்பதை அறியாமல் அப்துல் கலாம் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாடு செல்லாமல் இருந்தார் என்று பாராட்டியவர்கள், இன்று சுந்தர் பிச்சையை ஆதரித்தும் அதே மக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். க்ஷணப்பித்தம்;க்ஷணச்சித்தம்!

  பதிலளிநீக்கு
 3. கவனத்தை தன பக்கம் திருப்ப ஒரு விளம்பரம் என்பது உண்மையே.

  பதிலளிநீக்கு
 4. ///ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது.///
  தங்களது இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் ஐயா
  அரசியல் வாதிகளால்,அவர்களது கட்சிக் காரர்களால் இது போன்ற
  ஒரு தேர்ற்றம் உருவாக்கப்படுகிறதே தவிர,
  இலங்கையை எடுத்துக் கொள்வோமே,
  இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து
  தமிழக மக்கள் வாக்கு அளித்திருப்பார்களே ஆனால்
  வைகோ என்றோ தமிழக முதல்வராகி இருக்க வேண்டும்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 5. ஒருவகையான விளம்பரத்திற்காகவே இவ்வாறு செய்கிறார்கள். விட்டுவிடுவோம். அவர்களை நாம் கண்டுகொள்ளவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 6. என்ன தவறு இதில்? இன்னொரு மதத்தினர் அப்துல் கலாமுக்கு தங்கள் வழியில் செலுத்த நினைத்த அஞ்சலி என்று எண்ண வேண்டியது தானே?

  பதிலளிநீக்கு
 7. இம்மாதிரி செய்கைகள் அல்லது விளம்பரம் மூலம் அவர்கள் அறுவடை செய்வது என்ன.?கண்டும்காணாமல் இருப்பதே நலம்

  பதிலளிநீக்கு
 8. இப்போது எல்லாமே விளம்பரத்திற்கென்று ஆகிவிட்டது. இதை மக்கள் கவனிக்காமல் விட்டால் தானே இவை அடங்கிவிடும்,

  பதிலளிநீக்கு

 9. உண்மையான கருத்தை சரியான முறையில் சொன்னீர்கள் ஐயா
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 10. விளம்பர மோகம்! இவ்வாறான செய்கைகளில் ஈடுபட வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 11. மற்றவர்களை கவர்வதற்காகவே இப்படியெல்லாம் செய்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 12. 100% உங்கள் கருத்துடன் நாங்களும்....இது விளம்பர உலகம் ஐயா!

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள அய்யா,

  அப்துல் கலாம் மனித நேயம் மிக்க ஒரு நல்ல மனிதர். தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார்.

  சிலர் அப்துல் கலாமைப் புதைத்த பகுதியிலிருந்து கொஞ்சம் மண் எடுத்து சட்டியில் போட்டு அதை அவருடைய அஸ்தியாகப் பாவித்து அதை காவிரியில் கரைத்து அய்யரை வைத்து அப்துல் கலாமுக்கு தர்ப்பணம் கொடுத்தார்களாம் என்பது அவருக்குப் புகழ் சேர்க்காது.

  நன்றி.
  த.ம. 8  பதிலளிநீக்கு
 14. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதுதான் இந்திய மக்களின் மடத்தனம். இது என்று மாறுமோ அன்றுதான் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா பலிதமாகும்.

  உண்மை ஐயா...

  இது திடீர் பக்தி... ஏன் இந்த நடிப்பு...

  பதிலளிநீக்கு