வெள்ளி, 1 ஜனவரி, 2016

புது வருட வாழ்த்துகளும் தீர்மானங்களும்.

எல்லோரும் புது வருட வாழ்த்து சொல்லும்போது  நான் மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும். அதனால நானும் எல்லோருக்கும் புது வருட வாழ்த்தினைச் சொல்லிக்கொள்கிறேன்.                

                        Image result for new year greetings 2016

இந்த மாதிரி ஒருத்தரைப்பார்த்து ஒருத்தர் செய்வதைத்தான் இங்கிலீஸ்ல Peer Pressure அப்படீங்கறாங்க. ஒலகத்தில தனி மனிதனுக்கு வருகிற துன்பங்களெல்லாம் இந்த சனியனாலதான் வருகிறது என்பது என் அபிப்பிராயம்.

அடுத்த வீட்டுல ஏசி மிஷின் வாங்கீட்டாங்களா? நாமும் வாங்க வேண்டியதுதான். இந்தப் பக்கத்து வீட்டில கார் வாங்கீட்டாங்களா? நாமும் வாங்கோணும். அடித்த வீட்டுப் பையன் கிளாஸ்ல முதல் ரேங்க்கா? நீ ஏண்டா முதல் ரேங்க் வாங்கலேன்னு நம்ம பையனுக்கு அடி அல்லது டோஸ்.

இப்படித்தான் உலகம் போய்க்கொண்டு இருக்கிறது. பையன் அல்லது பெண் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போது அவர்கள் ஒரு மாயா லோகத்தில் வாழ்கிறார்கள். அடுத்தவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்யவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தி, நம் தகுதிக்கு ஏற்ப நாம் வாழ்வோம் என்ற கருத்தை ஒவ்வொரு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.

இதுவே நாம் இளைய தலைமுறைக்குச் செய்யும் சேவையாகும்.

                                    Image result for குடும்பம்

18 கருத்துகள்:

 1. நன்றி அய்யா! நம் தகுதிக்கு ஏற்ப நாம் வாழ்வதோடு, இருக்கும் தகுதியை உயர்த்தவும் முயற்சி செய்வோம். எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. நல்ல அறிவுரை. நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  பதிலளிநீக்கு

 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நன்றிங்க.... நானும் சொல்லிக்கறேன் உங்களுக்கு வாழ்த்து!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருகுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  தம +1 (ஹிஹிஹி)

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

 6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. ஒவ்வொருவர் செயல்களும் இன்னொருவரை பாதிக்கிறது என்பது உண்மை. உணர்ந்து நடந்தால் நன்மை.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 8. இதைத்தான் வள்ளுவரும் உலகத்தோடு ஓட்ட ஒழுகல் என்று சொன்னாரோ. நன்மை பயக்காவிடினும் தீமை பயக்காது என்றால் மற்றவர்களுடன் ஒத்துப் போகலாம்.

  எல்லா ஆண்டுப் பிறப்பின் போதும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்போம் நன்மை பல உண்டாகட்டும் என்று.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 9. முனைவர் ஐயா அவர்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்
  நல்லதொரு விடயம் அருமை ஐயா
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 10. நல்ல அறிவுரை ஐயா...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. நம் தகுதிக்கு ஏற்ப நாம் வாழ்வோம் என்ற கருத்தை ஒவ்வொரு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.
  முற்றிலும் உண்மை  மாலி

  பதிலளிநீக்கு
 12. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (இது பீர் ப்ரெஷரால் அல்ல) உளமாற வேண்டுகிறோம்

  பதிலளிநீக்கு
 15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். "நம்ம தகுதிக்கேற்ப நாம் வாழ்வோம்" என்று எப்படிப் புரியவைப்பது? எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்கள் தான் நினைத்தபடியெல்லாம் செலவு செய்து வாங்கித்தரவில்லை என்ற குறை அவர்களது பதின்பருவத்தில் எப்போதும் இருக்குமல்லவா? இதற்கு மிகச் சிறிய விதிவிலக்குகள்தானே உண்டு.

  பதிலளிநீக்கு
 16. //நம் தகுதிக்கு ஏற்ப நாம் வாழ்வோம் என்ற கருத்தை ஒவ்வொரு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும். இதுவே நாம் இளைய தலைமுறைக்குச் செய்யும் சேவையாகும்.//

  சொல்லலாம். ஆனால் இதையெல்லாம் எவன் காது கொடுத்துக் கேட்கப்போகிறான்? :(

  தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு