வியாழன், 1 செப்டம்பர், 2016

எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்

                           Image result for காதலர்கள் படங்கள்
எல்லோருக்கும் சுதந்திரம் வந்து விட்டதென்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

நாங்களும் இந்நாட்டு மக்கள்தான். எங்களுக்கும் ஓட்டுரிமை இருக்கிறது. நாங்களும் ஓட்டுப் போடுகிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பட்சபாதம்? எங்கு சென்று சற்று இளைப்பாறினாலும் எங்களை போலீசும் பொது மக்களும் விரட்டுகிறார்கள்.

ஏன் நாங்கள் மட்டும் இவ்வாறு கஷ்டப்படவேண்டும்? எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். இதற்காக நாங்கள் எங்கள் உயிரையும் விடத்தயார்.

இப்படிக் கேட்பவர்கள் யார் தெரியுமா? குடிகாரர்களும் காதலர்களும். ஏன் இவர்களுடைய உரிமையைப் பறிக்க வேண்டும்? எங்கு போனாலும் இவர்களை விரட்டுகிறார்கள்.

ஊரில் உள்ள பார்க்குகளில் சிலவற்றை இவர்களுடைய முழு உபயோகத்திற்காக ஒதுக்கித் தரவேண்டும். உபயோகமில்லாத அரசு கட்டிடங்களை இவர்களுடைய உபயோகத்திற்காக ரிசர்வ் செய்யவேண்டும்.

இதையெல்லாம் செய்ய வக்கற்ற அரசும் ஒரு அரசா? இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறோம்.

                           Image result for குடிகாரன் படங்கள்

15 கருத்துகள்:

 1. அதானே? அதுவும் அரசாங்கமே டாஸ்மாக்கைத் திறந்துவிட்டு இப்படி அவர்களைத் துரத்துவதும், வாகனங்களைச் சோதனை போடுவதும் என்ன நியாயம்!

  பதிலளிநீக்கு
 2. இவர்களுக்காக நீங்கள் கேட்பதற்கான காரணம் ஏதாவது உள்ளதோ என நினைக்கத்தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 3. குவாட்டர் அடிச்சிட்டு குப்பரபடுக்கறது இதுதானோ?

  பதிலளிநீக்கு
 4. காதலுக்கும் குடிக்கும் மிகவும் சம்பந்தம் உண்டு.

  காதல் வேதனையால் குடிக்கிறார்கள்.
  காதல் போதையால் குடிக்கிறார்கள்.
  காதல் தோல்வியால் குடிக்கிறார்கள்.
  காதல் வெற்றி பெற்றாலும் அதனைக் கொண்டாடக் குடிக்கிறார்கள்.
  காதல் ஒருவேளை கல்யாணத்தில் முடிந்தால் குஷியாகிக் குடிக்கிறார்கள்.
  காதல் ஒருவேளை கல்யாணத்தில் முடியாவிட்டால் வேதனையில் குடிக்கிறார்கள்.
  கல்யாண வாழ்க்கை இனிக்கும் போது அதனைக் கொண்டாடக் குடிக்கிறார்கள்.
  கல்யாண வாழ்க்கை கசக்கும்போது அதனை மறக்க மீண்டும் குடிக்கிறார்கள்.

  தாங்கள் சொல்வது போல இந்தக்குடிமக்களுக்கும், காதலர்களுக்கும் ஏதேனும் உடனடி உதவிகளாகச் செய்துகொடுத்துத்தான் ஆகவேண்டும்.

  சமுதாய விழிப்புணர்வு ஊட்டிடும் பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. சார்.. மும்பைல எல்லாப் பார்க்குகளிலும் முதல் படங்களைப்போல் பார்க்கலாம். வீட்டுல தனிமையான இடம் கிடைக்காதவர்களெல்லாம் பார்க்கைக் குத்தகை எடுத்துக்குவாங்க.

  இரண்டாவது படம் பரிதாபமான நிலைமையைக் காண்பிக்கிறது. உள்ளே செல்லும்போது Self Respect வெளியே சென்றுவிடும்போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. நீங்கள் சொல்வது நியாயம்தான் ஆனாலும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் அல்லவா?

   நீக்கு
  2. நீங்கள் சொல்வது நியாயம்தான் ஆனாலும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் அல்லவா?

   நீக்கு
 7. நியாயமான போராட்டம்...
  அரசு செவி சாய்க்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 8. vidunga bro chinna pasanga kalyanam aana pinnale child doctor kitte treatmentikku pogum pothu avangale ippadi nadanthukka mattanga .....

  பதிலளிநீக்கு