ஐயா
கொஞ்சம் நாளாக பதிவுலகில் காணவில்லை. பார்க்கிலேயே ரிசர்வ் செய்து உட்காந்திருக்கிறீர்களா? அல்லது ஆசுபத்திரியில் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறீர்களா? அல்லது கணினி பழுதாகி விட்டதா? வீட்டுக்காரம்மா தடா போட்டு விட்டார்களா? பதிவு ஒன்றும் காணோம். ஒரு மொக்கையாவது எழுதுங்கள்.
இதோ ஒரு மொக்கை எழுதி விட்டேன்.
பதிவுலகம் நசிந்து கொண்டு வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரு கால கட்டத்திற்குப் பின் எழுதுவதில் ஒரு சலிப்பு தோன்றுகிறது. குறிப்பாக ஆயிரம் பேருக்கு க் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்த பதிவுகளை சில நூறு பேர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றால் அந்த பதிவிற்கு மவுசு இல்லை என்று ஆகிறது.
கொள்வார் இல்லாமல் கடை நடத்துவதில் என்ன பயன்? அதனால் கொஞ்சம் விலகி விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
என்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பார்த்தார்கள். நான் ஒரேயடியாக மறுத்து விட்டேன். செத்தால் வீட்டில்தான் சாவேன், ஆஸ்பத்திரியில் சாகமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.
மொக்கையிலும் அருமையான மொக்கை. உங்களைப்போன்ற கிழம் கட்டைகளுக்கு கணினியும் பதிவுலகத்தையும் விட்டால் போக்கிடம் ஏது. ஏன் கடன் பதிவு எழுதி இருப்பதே என்று எழுதுங்கள். வருபவர் வரட்டும்.
பதிலளிநீக்கு--
Jayakumar
//என்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பார்த்தார்கள். நான் ஒரேயடியாக மறுத்து விட்டேன்//
பதிலளிநீக்குஜோக்கா,ஜோக்கா, உண்மையா தெரியவில்லை. எனினும் உண்மை எனில், உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஆஸ்பத்திரிக்கு அவசியம் சென்று செக் அப்கள் செய்து கொள்ளுங்கள்.
தமாஷா சொன்னாலும் உண்மைதான் ஸ்ரீராம். லேசா நெஞ்சு வலிக்குதுன்னு ஒரு நாள் பொண்டாட்டிகிட்ட சொல்லிப்பிட்டேன். அவ உடனே மகள்கிட்ட வத்தி வச்சு என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போய்ட்டா. அங்க என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் பண்ணி, எல்லாம் சரியா இருக்கு அப்படீன்னாங்க, ஆனா பெரிய டாக்டருக்கு என்னை விட மனசு வரல்லே. ஏனுங்க ஒரு ஏன்ஜியோ பண்ணிப் பாத்துடலாமே அப்படீன்னாரு. நானு அதப் பண்ணினதுக்கு அப்புறம் ஏன்ஜியோபளாஸ்ட்டி இல்லேன்னா பைபாஸ் சர்ஜரி அப்படீப்பீங்க. எனக்கு 82 வயசாச்சு. நான் அதெல்லாம் பண்ணாமயே போய்ச்சேர்ந்துடறேன் அப்படீன்னேன். டாக்டருக்கு ரொம்ப வருத்தம்.
நீக்குஅப்டியும் மருந்து டெஸ்ட்டுன்னு 10000 ரூபாய் புடுங்கிட்டாங்க. நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் பத்து வருஷம் வண்டி ஓடும்னு நம்பறேன்.
இப்படித்தான் பாருங்க ஒரு மாசத்துக்கு முன்னே ரொடீன் கண் டெஸ்ட் செய்யப் போனேன். ஒரு பிரச்சினையும் இல்லை. கண் நல்லாத் தெரியுது. இருந்தாலும் அந்த டாக்டர் காடராக்ட் ஆபரேஷன் செஞ்சுக்குங்களேன், ஆயுசுக்கும் கண் நல்லாத் தெரியும் அப்படூன்னார். நான் இப்பத் தெரியறதே போதும் அப்டீன்னுட்டு ஓடியாந்துட்டேன்.
உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். பதிவுலகம் எங்கே போய்விடப் போகிறது!
பதிலளிநீக்குமொக்கை நல்லாத்தான் இருக்கு....
பதிலளிநீக்குகடைசி வரியில் உடல் நலமில்லையோன்னு நினைச்சேன்... ஸ்ரீராம் அண்ணாவுக்குச் சொன்ன கருத்தில் விவரம் அறிந்து கொண்டேன்... அவர்களும் சம்பாதிக்கணுமே...
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் ஐயா...
உடல் நலமும் பேணுங்கள்...
நன்றி.
//நான் நல்லாத்தான் இருக்கேன். இன்னும் பத்து வருஷம் வண்டி ஓடும்னு நம்பறேன்.//
பதிலளிநீக்குஇந்தத் தன்னம்பிக்கை தான் நமக்கு இன்று மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது.
தாங்கள் மேலும் பல்லாண்டு நீடூழி வாழவும் மேலும் பல (மொக்கைப்) பதிவுகள், இதுபோலத் தந்துகொண்டே இருக்கவும் ப்ராப்தம் ஏற்பட வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
//அங்க என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் பண்ணி, எல்லாம் சரியா இருக்கு அப்படீன்னாங்க, ஆனா பெரிய டாக்டருக்கு என்னை விட மனசு வரல்லே. ஏனுங்க ஒரு ஏன்ஜியோ பண்ணிப் பாத்துடலாமே அப்படீன்னாரு. நானு அதப் பண்ணினதுக்கு அப்புறம் ஏன்ஜியோபளாஸ்ட்டி இல்லேன்னா பைபாஸ் சர்ஜரி அப்படீப்பீங்க. எனக்கு 82 வயசாச்சு. நான் அதெல்லாம் பண்ணாமயே போய்ச்சேர்ந்துடறேன் அப்படீன்னேன். டாக்டருக்கு ரொம்ப வருத்தம். //
பதிலளிநீக்கு//இப்படித்தான் பாருங்க ஒரு மாசத்துக்கு முன்னே ரொடீன் கண் டெஸ்ட் செய்யப் போனேன். ஒரு பிரச்சினையும் இல்லை. கண் நல்லாத் தெரியுது. இருந்தாலும் அந்த டாக்டர் காடராக்ட் ஆபரேஷன் செஞ்சுக்குங்களேன், ஆயுசுக்கும் கண் நல்லாத் தெரியும் அப்படூன்னார். நான் இப்பத் தெரியறதே போதும் அப்டீன்னுட்டு ஓடியாந்துட்டேன்.//
:)))))
இந்த வரிகளைப் படித்துவிட்டு குபீரென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.
’மொக்கைப் பதிவு’ என்று தலைப்பில் சொல்லிவிட்டு எத்தனை நகைச்சுவைகளை அள்ளித் தெளித்து ஆனந்தப் ப-டு-த்-தி-யுள்ளீர்கள் ! பாராட்டுகள். வாழ்த்துகள்.
மிகவும் வயதான காலத்தில் யார் யாரோ பக்கம் பக்கமாக மொய் மொய் என்று ஏதேதோ எழுதி வருகிறார்கள். மொய் போல பின்னூட்டமும் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிறார்கள். அவை அனைத்தும் மொக்கையோ மொக்கையாக இருந்து, படிக்கும்போதே நமக்கு நல்ல தூக்கத்தை மட்டுமே வரவழைக்கின்றன.
அவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது தாங்கள் மட்டுமே ’நச்’சென்று நாலே வரிகளில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்து .... சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து அசத்தி வருகிறீர்கள். தங்களின் இந்தத் தனித்திறமைக்கு என் ராயல் சல்யூட் !
நன்றி வைகோ.
நீக்கு" ஒரு கால கட்டத்திற்குப் பின் எழுதுவதில் ஒரு சலிப்பு தோன்றுகிறது." - அப்படில்லாம் கிடையாது சார். எழுதுவதற்கு விஷயமா இருக்காது? தொடர்ந்து எழுதுங்கள். இது பழைய காலத்து பேனா நட்பு போன்றது. முகம் தெரியாத பலர் இணையம் மூலம் தொடர்வர்.
பதிலளிநீக்கு///ஆயிரம் பேருக்கு க் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்த பதிவுகளை சில நூறு பேர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றால் அந்த பதிவிற்கு மவுசு இல்லை என்று ஆகிறது.///
பதிலளிநீக்குபடிப்பவர்களுக்கு குறைவே இல்லை .நீங்கள் தமிழ்மணத்தில் மட்டும் உங்கள் பதிவுகளை இணைக்கிறீர்கள் என நினைக்கிறேன் அதனால்தான் வருகை குறைவு
"ஆனா பெரிய டாக்டருக்கு என்னை விட மனசு வரல்லே. ஏனுங்க ஒரு ஏன்ஜியோ பண்ணிப் பாத்துடலாமே அப்படீன்னாரு. நானு அதப் பண்ணினதுக்கு அப்புறம் ஏன்ஜியோபளாஸ்ட்டி இல்லேன்னா பைபாஸ் சர்ஜரி அப்படீப்பீங்க. எனக்கு 82 வயசாச்சு. நான் அதெல்லாம் பண்ணாமயே போய்ச்சேர்ந்துடறேன் அப்படீன்னேன். டாக்டருக்கு ரொம்ப வருத்தம். "
பதிலளிநீக்குஇரண்டு மாதமாக மூச்சிறைப்பு ..என் நண்பர் ஒருவர் அவருக்கு தெரிந்த டாக்டரிடம் செல்லும்படி வற்புறுத்தினார் என் அண்ணன் பையனை துணைக்கு
அழைத்துக்கொண்டு சென்றேன் ..டாக்டர் உடனேஅட்மிட் ஆகிக்கொள்ளும்படி அட்வைஸ் சேய்ததுமில்லாமல் விஜயா மருத்துவ மனைக்கும் போன் செய்து அங்கே தன் நண்பர் டாக்ட்ரிடமும் சொல்லிவிட்டார்..போன எங்களுக்கு யோஜிக்கவே நேரம் கொடுக்கவில்லை ..தாங்கள் கூறியிருப்பதைப் போலவே angiogram எடுத்தார்கள் ..அந்தமாசத்து quota -க்கு ஒரு ஆள் அகப்பட்டேன்.. ..எதோ ஒரு block இருப்பதாக சொன்னார்கள் ..அதற்காக ஒரு stent பொருத்தினார்கள் ....அந்தமாசத்து stent quota -க்கும் ஒரு ஆள் அகப்பட்டேன்.. மூன்று லட்ஷம் செலவு ..மாதம் Rs 5000/--க்கு மருந்து மாத்திரைகள் ...மூன்று மாதம் கழித்து செக்ப்பிற்கு சென்ற பொழுது என் மூச்சிறைப்பு அப்படியே இருப்பதை கூறினேன் ..அதற்கு டாக்டர் "அது ஆஸ்த்மா இறைப்பு" என்று சொன்னார் .." பின் ஆஸ்த்மா இறைப்பு -க்கு ஏன்
stent பொருத்தினீர்கள்" என்று நான் கேட்டால் சண்டை தான் வருமே தவிர வேறு ஒன்றும் காரியத்துக்கு உதவாது என்று இருந்து விட்டேன் ..
நான் என்றுமே ஆஸ்த்மா patient இல்லை ..ஆனால்
என் மூச்சிறைப்பு-புதிதாக வந்தது ..அப்படியே இருக்கிறது ...அதற்கு வேறு டாக்டரிடம் போக வேண்டும் ..அப்படியிருக்கிறது இன்றைய மருத்துவம் ..
மாலி
மாலி
என்னையையும் அந்த டாக்டர் அவருடைய ஏன்ஜியோ டார்கெட்ல சேர்க்கப் பார்த்தாரு. இப்பவே அட்மிட் ஆகிக்கிறீங்களா இல்லே காலைல வந்து அட்மிட் ஆகிக்கிறீங்களா என்று மடக்கினார். நான் மசியவில்லை. நான் எப்பவுமே ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிக்க மாட்டேன் அப்படீன்னு ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டு திரும்பி வந்துட்டேன்.
நீக்குகார்ப்பரேட் ஆஸ்பத்திரியில வேல பாக்கற டாக்டர்களுக்கு இப்படி டார்கெட் வச்சுடறாங்க. நாம ஜாக்கிரதையா இல்லாட்டி மாட்டிக்கிட்டு முளிக்க வேண்டி வரும்.
தாங்கள் புகை பிடித்து கொண்டு இருந்து விட்டு அண்மையில் நிறுத்தினீர்களா? அதுவும் மூச்சிரைப்புக்கு காரணம் ஆகும். அதற்காக மீண்டும் புகைக்க சொல்ல வில்லை. COPD மருந்துகள் தொடர்ந்து எடுக்க வேண்டி வரும்.
நீக்கு--
Jayakumar
சிறிது வயதானாலேயே சின்னச் சின்ன பிரச்சனைகளையெல்லாம் பூதாகாரமாக்கிப் பார்க்கும் மனசு பிறகு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலும் இருட்டில் விசில் அடிப்பது போலும் மனசைத் தேற்றி கொள்ளத் தோன்றும் நீங்கள் தைரிய சாலி. எல்லாம் நன்கே கழியும்
பதிலளிநீக்குஎன்னங்க ஆகும்? உயிர் போகும். அவ்வளவுதானே. போனாப் போகட்டுமே.
நீக்குபதிவுகளை எழுதத்தால் ஆள் இல்லை! படிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் சார்! தொடர்ந்து எழுதுங்கள்!
பதிலளிநீக்குIYYAH TAKE CARE OF YOUR HEALTH PL
பதிலளிநீக்குஉண்மையில் பதிவு எழுதுபவர் எண்ணிக்கை குறைய பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா நலம்தானே ?
பதிலளிநீக்குநலம் பெற வேண்டுகிறேன்....
தொடர்ந்து முடிந்ததை எழுதுங்கள்
த.ம.5