வியாழன், 6 அக்டோபர், 2016

போன மச்சான் திரும்பி வந்தாண்டி பூமணத்தோட

                       
                  Image result for a Tamil bride
இப்படி ஒரு பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மசான வைராக்யம், பிரசவ வைராக்யம் இந்த இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவைகளுக்கெல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரைகள் தேவையில்லாமலேயே எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடியவை. இவைகளைப் புரிந்து கொண்டவர்கள் நான் ஏன் பதிவுகள் போடாமல் ஒரு மாதம் இருந்தேன் என்பதையும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருப்பார்கள்.

கடைசியாக ஒரு சமகாலப் பிரச்சினை பற்றி என் மேலான (அல்லது சிலர் கருத்தில் கீழான) கருத்துக்களை ஒரு பதிவு போட்டிருந்தது படித்தவர்களுக்கு நினைவு இருக்கலாம். அதில் குறிப்பாக சிலருக்கு என் வயது ஒரு உறுத்தலாக இருந்திருக்கிறது. அதாவது வயது குறைவாக இருந்தால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வயது ஆன பின் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று கருத்து சொன்னார்கள். சரி போகட்டும் என்று அந்தப் பதிவை நீக்கினேன்.

நண்பர் தமிழ் இளங்கோ அவர்கள் தொலை பேசியில் என்னிடம் பேசி சில கருத்துக்களைச் சென்னார். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் இந்த உலகை சீர்திருத்த தனி மனிதனால் முடியாது என்பதுதான்.

சரி, இந்தப் பதிவுலகை விட்டு விலகி இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும் என் பதிவுகளைப் பார்வையிடுபவர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் புதிதாகப் பதிவுகள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் பதிவுகளை மகாஜனங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூகுளாரின் வரவு செலவு அறிக்கை கூறுகிறது.

இது வரையில் நான் ஆயிரம் பதிவுகளுக்கு மேல் எழுதி விட்டேன். இன்றைய தேதியில் பத்து லட்சம் மக்கள் என் பதிவுகளைப் பார்வையிட்டிருக்கிறார்கள். என் பதிவின் தமிழ் மணம் ரேங்க் ஒரு நூறையாவது எட்டியிருக்கும் என்று பார்த்தால் பனிரெண்டைத் தாண்ட மாட்டேன் என்கிறது.

ஆகவே என் பதிவுகளுக்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருப்பதை அறிந்தேன். அவர்களை ஏமாற்றக்கூடாது என்ற நல்ல அல்லது கெட்ட எண்ணத்தினால் திரும்பவும் எழுதலாம் என்று வந்து விட்டேன்.

பதிவுலக வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வழக்கம்போல் என்னைத்திட்டி பின்னூட்டம் போடுவதை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் குறிப்பு: இதுக்கு எதுக்கு பொம்பளை படம் என்று கேட்பவர்களுக்கு, அந்தப் பெண் பூ வைத்திருப்பதைப் பார்த்தீர்களல்லவா, தலைப்பிலும் பூமணம் இருப்பதைப் பார்த்தீர்களல்லவா, அதுதான் சம்பந்தம்.

14 கருத்துகள்:

  1. தலைப்பும், படமும், படத்தில் உள்ள தலைப்பூவும் அழகாக மணமாக உள்ளன.

    போன மச்சான் திரும்பி வந்துள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. Nanasthe/- Whenever I open my nett. in my Laptop, I instinctively look for you Blog Posts --(மொக்கையாக இருந்தாலும் , கூர்ப்பாக இருந்தாலும் )...I am happy , you have
    decided to resume...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி தொடர்ந்து முடிந்தவரை எழுதுங்கள் வாழ்க நலம்
    த.ம.1

    பதிலளிநீக்கு
  4. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதே போலவே நீங்களும் திரும்ப வந்து விட்டீர்கள். வாழ்த்துகள். வைராக்கியம் காப்பதில் வைகோ மட்டும் தீவிரமாக உள்ளார். அவரும் பதிவு எழுத விரும்புகிறேன்

    வர வர பதிவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் குமுதம் அட்டைப்படம் மாதிரி நீங்கள் படம் போடுகிறீர்கள் என்பது உண்மை தான். வயதானால் என்ன எங்கும் இளமை இனிமை புதுமை என்று தொடருங்கள். ஆனால் கொஞ்சம் கருத்துள்ள படித்து பயன் பெரும் பதிவுகளும் அவ்வப்போது எழுதுங்கள்.

    அறிவுரை சொல்ல ஆயிரம் பேர் உண்டு. ஆனால் பயனுள்ள கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்ல உங்களுக்கு மட்டுமே முடியும். விடாதீர்கள். கணினி உள்ளவரை இந்த கந்தசாமியும் பதிவுலகில் இருப்பேன் என்று சொல்லுங்கள்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. வயதில் பெரியவராக இருந்தாலும் மற்றவர்களுக்காக நீங்கள் பதிவில் சொல்ல விரும்பியதை நீக்கிய உங்களின் பெருந்தன்மையை பாராட்டுக்கிறேன். உங்களிடத்தில் நான் இருந்திருந்தால் படித்தால் படியுங்கள் இல்லையென்றால் போங்கடா வெங்காயங்களா என பெரியார் பாணியில் சொல்லி இருப்பேன்...

    பதிலளிநீக்கு
  6. இனிமேல் அந்த மாதிரி பதிவுகள் எழுதி ஆனால் அதை உங்கள் தளத்தில் வெளியிட விருப்பமில்லையென்றால் எனக்கு அனுப்பி வையுங்கள் அதை என் தளத்தில் வெளியிட்டு இது ஐயா பழனிச்சாமி அவர்கள் எழுதிய பதிவு அல்ல என்று சொல்லி வெளியிடுகிறேன் ஹிஹீ.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் மீள்வருகை மகிழ்ச்சி தருகிறது வருக வருக.

    பதிலளிநீக்கு
  8. ஒருவித பிணக்கோடு போன தாங்கள், மீண்டும் பூமணத்தோடு வலைப்பக்கம் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஏற்கனவே ஒருமுறை சொல்லியது போல, இந்த வலையுலகம் ஒரு மாயாலோகம்தான். சமூகத்தின் செயல்பாடுகளை, உங்கள் பாணியில் வழக்கம்போல நையாண்டி செய்து எழுதுங்கள். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  9. வருக ஐயா! வருக ஐயா!!
    ‘’போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
    ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்’’
    என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல் தங்கள் கருத்தை தயங்காது தருக. காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. மீண்டும் உங்கள் பதிவுகள் வெளிவருவதில் மகிழ்ச்சி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு