செவ்வாய், 25 அக்டோபர், 2016

நான் ஒரு பாபியானேன்.

                      Image result for punishments in hell in hinduism

நான் நன்றாகத்தான் இருந்தேன். தினம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு, இரண்டு தடவை காப்பி குடித்து விட்டு, பகலில் மூன்று நான்கு மணி நேரம், இரவில் ஒரு ஆறு மணிநேரம் தூங்கி விட்டு, அவ்வப்போது நண்பர்களைப் பார்த்து அளவளாவி விட்டு, வாரம் ஒரு பதிவு எழுதி அன்பர்களைத் திருப்திப் படுத்தி விட்டு நானும் திருப்தியாக இருந்தேன்.

நான் இதுவரை எனக்குத் தெரிந்து யாரையும் கொலை செய்ததில்லை. ஆனால் நான் செய்த உணவைச் சாப்பிட்டு ஒருவர் இறந்திருக்கிறார். அது கொலைக் குற்றத்தில் சேராது என்று நம்புகிறேன். தவிர சில-பல பதிவுகள் அறுவையாகப் போட்டிருக்கிறேன். அதைப் படித்துவிட்டு யாரேனும் தற்கொலை செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

நான்  இப்படியிருக்க, என் சந்தோஷம் அந்தக் கடவுளுக்கே பொறுக்கவில்லை போல் இருக்கிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலை திருப்பணி செய்கிறோம்  என்று இடித்துப்போட்டு ஆறேழு வருடங்களாக ஒன்றும் செய்யாமல் சும்மா கிடந்தது. திடீரென்று ஒரு மகானுபாவன் தலையிட்டு அந்தக் கோவிலின் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகமும் வைத்து விட்டார்.

என் வீட்டு அம்மணிக்கு அந்தக் கோவில் என்றால் உயிர். கும்பாபிஷேகம் நடக்க யாகசாலைகள் அமைக்கும்போதே அங்கு போய்விடுவார்கள். யாகசாலை அமைத்து ஐந்து காலங்கள் யாகம் நடந்து கும்பாபிஷேகம் முடியும் வரை அம்மணிக்கு 24 மணி நேரமும் கோயில் ட்யூட்டிதான். இதில் எனக்கு என்ன தொல்லை என்றால் கோயிலில் ஆன்மீகப் பிரசங்கம் நடக்கிறது, நீங்கள் ஒரு நாளாகிலும் வந்து கேட்கக்கூடாதா ? என்று வசவு வேறு.

சரி, வந்தது வரட்டும் என்று ஒரு நாள் அந்தப் பிரசங்கத்தைக் கேட்டகப் போனேன். பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு பக்கத்து அரங்கில் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்கப்போனேன். உபன்யாசகர் அட்டகாசமாக மேக்கப் போட்டுக்கொண்டு கூடவே ஒரு அழகிய நங்கையையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்தப் பொண் பின்பாட்டு பாடுவதற்காம். (அவர்கள் போட்டோ கிடைக்கவில்லை).

அந்தப் பொண்ணு நன்றாகவே பாடியது. அதைக் கேட்பதற்காகவே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். நடு நடுவில் உபன்யாசகரும் அவர் சரக்கை எடுத்து விட்டுக்கொண்டிருந்தார். அவர் கூறியவைகளில் சக்கையை நீக்கி சாரத்தை மட்டும் கொடுக்கிறேன்.

நீங்கள் பிறந்த்தின் நோக்கம் ஆண்டவன் அடைவதே. அப்படி ஆண்டவனை அடைய நீங்கள் புண்ணியம் செய்யவேண்டும். பாப கர்மாக்களை செய்யக் கூடாது. கொலை செய்வதும் திருடுவதும் மட்டுமே பாப காரியங்கள் என்று நீங்கள்  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு.

ஒருவன் தன் முயற்சியால் பாடுபட்டு பணக்காரன் ஆகிறான். அவனைப் பார்த்து அற்பனுக்கு வந்த வாழ்வைப் பார் என்று பொறாமைப் பட்டால் அதுவும் பாப காரியமே.

உன் நண்பணின் பெண் காதல் கல்யாணம் செய்து கொண்டாளா? அவளைப் பற்றி கேலமாகப் பேசினால் அதுவும் பாவமே. யாராவது புருஷன் பெண்டாட்டி சண்டை போட்டுக் கொண்டார்களா, இல்லை பொண்டாட்டி புருஷன் தலையில் அம்மிக்குழவியைப் போட்டாளா என்று ஊரில் நடக்கும் வம்புகளைப் பற்றி நாலு பேர் கூடிப் பேசுகிறீர்களா? இவைகளை எல்லாம் சித்திரகுப்தன் உங்கள் பாபக் கணக்கில் ஏற்றி விடுவான்.

நீங்கள் யமபட்டணம் போனதும் அவன் இந்தக் கணக்குகளையெல்லாம் விலாவாரியாக யமனிடம் விஸ்தாரமாகச் சொல்லுவான். யமன் அவைகளை எல்லாம் கேட்டு விட்டு, சரி, இவனை ஆறு மாதம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் போடுங்கள் என்று தார்ப்பு சொல்லி விடுவான்.

இப்படியாக அவருடைய உபன்யாசம் நடந்தது. வீட்டுக்கு வந்து அன்று படுக்கையில் படுத்தவுடன் அவர் சொல்லிய பாப லிஸ்ட்டுகள் மனதில் ஓடின. நாம் தினமும் இவைகளைத்தானே செய்து வருகிறோம். இவைகளைதானே நாம் பொழுது போக்க உதவுகின்றன. அப்படியானால் நாம் யம பட்டணம் போனால் நம்மை எண்ணைக் கொப்பறையில்தான் போட்டு கொதிக்க வைப்பார்களே?

ஐயோ, கடவுளே, என்னை இப்படி ஒரே நாளில் பாபியாக்கி விட்டாயே, நான் இனி என் செய்வேன் என்று நினைத்துக் கொண்டே
தூங்கி விட்டேன். கனவில் யம கிங்கரர்கள் என்னை எண்ணைக் கொப்பறையில் போட்டு வேக வைப்பதாகவே கனவுகள் வந்தன.

தூங்கி எழுந்ததும் அந்த உபன்யாசகரிடமே போய் இந்தப் பாவல்களுக்கு என்ன விமோசனம் என்று கேட்டு வரவேண்டும் என்று முடிவு பண்ணி விட்டுத் திரும்பவும் தூங்கினேன்.

இந்தப் பாபங்களுக்கு விமோசனம் உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தவறாமல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

25 கருத்துகள்:

  1. பாவத்தில் இருந்து விமோசனம் பெற டாஸ்மாக்கில் தீர்த்தம் வாங்கி வாயினுள் தெளித்து கொள்ளுங்கள் அது ஒன்றுதான் சுலபமான வழி

    பதிலளிநீக்கு
  2. நரகம் இப்போது HOUSE FULL ஆகி விட்டது. எமனுக்கே தான் இப்போது பழைய எமனா, புதிய எமனா என்று சந்தேகம் வந்துவிட்டது. சித்திரகுப்தன் இப்போது குமாரசாமியிடம் டிரெயினிங் எடுப்பதற்காக போய் விட்டான். பூத கணங்கள் தீபாவளி போனஸ் கேட்டு ஸ்டிரைக். – எனவே நீங்கள் எப்போதும் போல இந்த பாப காரியங்களைத் தொடரலாம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பத்து வருடங்களுக்கு முன்பு “கடவுள் கிடையாது” என்பதல்ல; ஆனால் கடவுளைப்பற்றி நம் எல்லோரைப் போலவுமே நானும் கண்டுகொள்ளவில்லை. எல்லோரையும் படைத்த கடவுள் ஒருவர் உண்டு என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தாலும் எனக்கு எல்லாம் தெரியும் என்றும் எல்லாமே நாம் தான் என்கின்ற அகம்பாவம் என்னுள் இருந்தது. அநேகமாக எல்லோருடைய நிலையும் அதுதான். ஆனால் ஒருவரும் அதை ஒப்புக்கொள்ளுவது இல்லை. ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையோ அல்லது துணிவோ இல்லை என்பதுதான் காரணம். உங்களின் பெருந்தன்மை என்னை வியக்க வைக்கிறது.
    ஒரு கால கட்டத்தில் எல்லோரையும் படைத்த இறைவன் என்னையும் அவரின் ஒரு நோக்கத்திற்காகத்தான் படைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு என்னில் வந்தது. அப்படியானால் அவரின் நோக்கத்தின் அடிப்படையில் நான் செயல்படுகிறேனா என்று ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. இந்த சுய பரிசோதனையில் நான் தோல்வியுற்றவனாகவே கருதினேன். நிச்சயமாக அவரின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் நான் செயல்படவில்லை என்று என் உள் உணர்வு சொல்லியது. அனேகமாக எல்லோருமே அப்படித்தான் என்றாலும் பலர் அதை ஒப்புக்கொள்ளுவது இல்லை. என்னுடைய தவறை என்னைப்படைத்த கடவுள் எப்படி எடுத்துக்கொள்ளுவார்? என்னுடைய பார்வையில் மற்றவர்களுடைய தவறுகளை நான் எப்படி எடுத்துக்கொள்ளுகிறேன்? பல சமயங்களில் பிறர் தவறு செய்யும்போது அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்கின்ற வெறி என்னுள் எழுவதுண்டு. பலரும் அப்படித்தானே எண்ணுகிறார்கள். மனிதர்களாகிய நாம் பல சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள். எனவே நம் இஷ்டம்போல் யாரையும் தண்டிக்க முடியாது. ஆனால் அனைத்தையும் படைத்த சர்வ வல்லமை உள்ள கடவுள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே. யார் அவரைக் கேள்வி கேட்க முடியும்? அந்த அடிப்படையில் தெய்வங்கள் என்று கருதப்படும் பல விக்கிரகங்களின் தோற்றம் என் கனவில் வந்து என்னை பயமுறுத்தியது.
    .........தொடரும்............

    பதிலளிநீக்கு
  4. இதிலிருந்து தப்பிக்கொள்ள நான் என்ன செய்வேன்? “பயம்” என்னைத் தொற்றிக்கொண்டது. அன்றாடம் என்ன எதிர்மறை நிகழ்வுகள் என் வாழ்வில் வந்தாலும் என்னுடைய தவறின் பலன்தான் இதுவோ என்கின்ற பயமே என் வாழ்க்கையாய் மாறியது. இந்த நிலை மாற நான் என்ன செய்வேன்? இதற்குப் பரிகாரம் என்ன என்கின்ற சிந்தனையே என்னை ஆட்கொண்டது. பலர் பரிகாரம் என்று சொல்லிக்கொண்டு செய்த நல்ல மற்றும் பயங்கரமான அல்லது நகைப்புக்குரிய காரியங்களினால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்று என் அறிவு எனக்கு உணர்த்தியது.

    அப்போதுதான் பல காலம் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருந்த ஒரு நற்செய்தி என் மனதைத்தொட்டது!!! நீ இதுவரை செய்த தவறுகளுக்கு ஒரு பிராயச்சித்தம் இயேசு என்கின்ற ஒருவரால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே செலுத்தப்பட்டுவிட்டது. மனிதர்கள் அனைவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டு நமது பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துவிட்டார் என்பதுதான் அந்த நற்செய்தி. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் தான் பாவங்கள் என்பதில்லை, அடுத்தவரைப் பாதிக்கும் சிறிய செயல் கூட பாவம் தான். கடவுளின் பார்வையில் அவரை முகம் சுளிக்க வைக்கும் எந்தவொரு செயலும் பாவமே. பாவம் நம்மோடு இருக்கும்போது கடவுள் நம்மை விட்டு தூரமாகிப் போவதால் அவர் அளித்திருக்கும் பாதுகாப்பு நம்மை விட்டு தூரமாகி விடுகிறது. நாம் கடவுளிடமிருந்து தூரமாக இருக்கும்போது நமக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய எந்த ஒரு சக்தியின் பார்வையிலும் நாம் பட்டு விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே நாம் கடவுளின் பாதுகாப்பில் இருப்பது அவசியம் ஆகின்றது. நம்மை கடவுளோடு மறுபடியும் இணைக்க நாம் செய்ய வேண்டுவது எல்லாம் அவர்மீது நிபந்தனை அற்ற நம்பிக்கை வைப்பது ஒன்றே என்பது தான் அந்த நற்செய்தி. அவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை அவரது அளவற்ற கிருபையினால் நம்மை மன்னிப்புப் பெற்றவராக்கி மறுபடியும் அவரோடு நம்மை இணைக்கிறது. ஆனால் இதை எப்படி நம்புவது? அதற்கான ஆதாரம் என்ன என்று நான் தேடி அலைந்தேன். பல புத்தகங்களைப் புரட்டினேன். இதனை உறுதி செய்தது பைபிள் என்கின்ற புத்தகம் ஒன்றே. அதில் இந்த உண்மையை ஆணித்தரமாக ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் எழுதியிருக்கக்கண்டேன்.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறிவந்த கருத்துக்கள் மாறின. என் மனதில் ஒரு அபூர்வமான சமாதானமும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. நான் பெற்ற இந்த அனுபவத்தை நான் நேசிக்கும் பலரும் உணர்ந்து பயன் பெற வேண்டும் என்கின்ற ஆவலே இதை அறிவிக்க என்னைத்தூண்டுகிறது. இதுவே உங்கள் பதிவிற்கு பதிலாக என்னைப் பதிவிட வைக்கிறது. “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்பதே இதன் அடிப்படை.

    கிறிஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு வாழும் முறை. கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்பவர்களைப் பார்க்க வேண்டாம். கிறிஸ்துவை மட்டுமே பாருங்கள். பைபிள் சொல்லாத ஒரு நல்ல கருத்தை வேறு ஒரு புத்தகம் சொல்லுமானால் அதைப் பின்பற்ற நான் தயார். ஆனால் அப்படி ஒன்று இருக்க முடியாது என்பது என்னுடைய அனுபவம். அப்படி ஏதாவது இருந்து அதை யாரும் எனக்கு தெரிவித்தால் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்தப் பதிவில் நான் தெரிவித்து உள்ள கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எந்த நேரத்திலும் அதற்கான விளக்கத்தை அளிக்க நான் தயாராக இருக்கிறேன். இப்படியே எழுதிக்கொண்டு போனால் அதற்கு முடிவே இல்லை. மனதில் உள்ளது ஓராயிரம். எழுத முடிந்தவை சிலவே. ஏதாவது ஒரு வார்த்தை உங்களின் உள்ளத்தைத் தொட்டால் ஆண்டவருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //உபன்யாசகர் அட்டகாசமாக மேக்கப் போட்டுக்கொண்டு கூடவே ஒரு அழகிய நங்கையையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்தப் பொண் பின்பாட்டு பாடுவதற்காம்.//

    அச்சா, பஹூத் அச்சா !

    //(அவர்கள் போட்டோ கிடைக்கவில்லை).//

    அடாடா .... வாசகர்களுக்கு அது மிகவும் முக்கியமல்லவா ! :(

    //அந்தப் பொண்ணு நன்றாகவே பாடியது. அதைக் கேட்பதற்காகவே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன்.//

    சபாஷ் :)

    //நடு நடுவில் உபன்யாசகரும் அவர் சரக்கை எடுத்து விட்டுக்கொண்டிருந்தார். //

    சூப்பர் !

    நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் பாணியில் நன்கு நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. //நான் இதுவரை எனக்குத் தெரிந்து யாரையும் கொலை செய்ததில்லை.//
    ​​
    ​திரு GMB ​அவர்கள் திரு சிவகுமாரனுக்கு இவன் இப்படித்தான் என்ற பதிவில கூறிய பதிலில் இருந்து சில வரிகள்.
    ​​
    ​//​
    அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள் நிறைந்திருக்கிறது. நீரிலும் காற்றிலும் மண்ணிலும் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன.. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது உயிர் வாழ முடியாது.. இதுவே இயற்கையின் அமைப்பு. கண்மூடித்தனத்தை அகற்றிவிட்டு கொலைக்களமாகக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்/
    ​//​

    ஆக நீங்கள் தினம் தினம் கொலை செய்கிறீர்கள். உயர் உள்ள சைவம் மற்றும் அசைவம் ஆகியவற்றை புசிக்காது உங்களால் வாழ முடியாது. ஆக உங்களால் பாபச் செயல்களில் இருந்து விடு பட முடியாது.

    இந்தப் பாபங்களில் இருந்து விடுதலை,மேலே செல்வதுதான். நரகத்தில் இடம் இல்லையாதலால் உங்களுக்கு ஸ்பெஷல் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே இந்திரா லோகம் சென்று வந்த அனுபவம் கை கொடுக்கும்.

    ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
  7. ji do no be jealous..
    do not carry tales...
    this is what the speaker insisted...is it not?
    then why you beat the bush...
    we could avoid jealousy and the habit of carrying tales?
    very simple

    பதிலளிநீக்கு
  8. எண்ணெய் கொப்பறையில் போட்டு பொறிக்கத்தானே முடியும் எப்படி அவிக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  9. அந்த உபன்யாசகர் பெயரைச் சொல்லுங்க ,நானும் கேட்டு ரசிக்கிறேன்...இல்லை இல்லை ...பார்த்து ரசிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கு angiography செய்து விட்டு நீங்கள் discharge ஆகிறீர்களே எனற வருத்தத்துடன் தங்களுக்கு 'பிரியா ..' விடை கொடுத்த டாக்டர் போலத்தான் தங்களுக்கு பிராயச்சித்தம் கூறும் பாகவதரும் ..purse ஜாக்கிரதை ..தங்களுக்கு தெரியாததல்ல ..wish you best of Luck

    மாலி

    பதிலளிநீக்கு
  11. Mr. Selvadurai,

    //பைபிள் சொல்லாத ஒரு நல்ல கருத்தை வேறு ஒரு புத்தகம் சொல்லுமானால்//

    Bible may have some good Thoughts. But it has hundreds of Error scientifically, numerically and logically.

    If God has written, there cannot be a mistake. So it is clear that it was man made. Anyone who believes that Bible is from God is a absolute fool. (BTW, I was a born christian before).

    பதிலளிநீக்கு
  12. தினமும் கோவிலுக்குச் சென்று உபன்யாசம் கேளுங்கள் பாப மோட்சம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததா. ஆஞ்சியோ செய்தார்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 20 வருடங்களுக்கு முன் ஒரு ஏன்ஜியோ செய்தேன். இப்பவும் செய்யப் பார்த்தார்கள். நான் அனுமதிக்கவில்லை.

      நீக்கு
  14. உபன்யாசகர் சரக்கை விட்டுக் கொண்டு வந்திருந்தார் என்று படித்து விட்டேன்./

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் என்னென்ன பாபங்கள் செய்தீர்கள் எனத் தெரியவில்லை. அப்படியே செய்திருந்தாலும் அவைகளுக்கு விமோசனம் அவைகளை திரும்ப செய்வதுதான்! ‘Hair of the dog that bit you’ என்ற வழக்கு மொழியை நினைவில் கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு