புதன், 15 நவம்பர், 2017

23. புத்தகம் படிக்கும்போது கண் சொருகுதல்


 இதே போல புத்தகம் படிக்க முடியாமல் கண்கள் கனமாவதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தால் அந்தக் குற்ற உணர்வும் நீங்கும்.

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் புத்தகம் படிக்கும் போது கண்கள் கனமாவது அதாவது கண்கள் சொருகுவது பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார். கேளுங்கள், கொடுக்கப்படும் என்பதுதானே நம் கொள்கை. அதன்படி இதோ விளக்கங்கள்.

நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களினால் ஆக்கப்பட்டது என்று அறிந்திருப்பீர்கள். இந்த உயிரணுக்களின் ஆயுள்காலம் மூன்று வாரங்கள்தான். ஆனால் எல்லா உயிரணுக்களும் இவ்வாறு மூன்று வாரத்தில் அழிந்து போவதில்லை. சில மாதக்கணக்கிலும் அழியாமல் இருக்கும். குறிப்பாக மூளையின் உயிரணுக்கள் ஒருவனின் ஆயுட்காலம் முழுவதும் அழிவதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

எது எப்படிப் போனாலும் நம் உடலில் உள்ள உயிரணுக்களினால்தான் நாம் வாழ்கிறோம். அவைகள் செயல்படுவதினால்தான் நாம் உயிருடன் இருக்கிறோம். ஆனாலும் இந்த உயிரணுக்கள் நாள்பட நாள்பட தங்கள் செயல் திறனை இழக்கின்றன. நாம் இளமையில் ஐந்து நிமிடத்தில் செய்த வேலையை வயதானபின் செய்ய ஒரு மணி நேரம் தேவைப் படுகிறது.

முக்கியமாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மாற்றம் சீக்கிரமே ஏற்பட்டு விடுகிறது. குளிர் பிரதேச நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த மாற்றம் மெதுவாகவே நிகழ்கிறது.

வயதானவர்கள் இந்த மாறுதலை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. 80 வயதான ஒருவர் நான் 80 வயது வாலிபன் என்று மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறார். இருக்கலாம். மனதளவில் அவர் வாலிபனாகவே இருந்து கொள்ளட்டும். ஆனால் அவரது உடல் அவர் மனதுடன் ஒத்துழைக்காது.

எந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தாலும் சில மணித்துளிகளிலேயே உடல் ஆயாசமடைந்து விடும். அப்படியே புத்தகம் படிப்பதுவும். புத்தகம் படிப்பது என்பது மூளை செய்யும் ஒரு வேலையே. வயதானபின் மூளையும் சீக்கிரத்தில் சோர்வடைந்து விடும். அப்படி மூளை சோர்வடைந்தால் முதலில் கொட்டாவி வரும். அடுத்ததாக கண்கள் தானாக மூடிக்கொள்ளும். தூக்கம் தன்னையறியாமல் வரும்.

இது எல்லாம் வயதாவதின் விளைவுகள் என்று அறிந்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதை விட்டு விட்டு பழைய நினைப்பில் முடியாத வேலைகளுக்குத் தலைப்படாதீர்கள்.

                                              Image result for வயதானவர்கள்

11 கருத்துகள்:

  1. ஆஹா... தன்யனானேன். அப்படி ஒன்றும் வயதாகவில்லை என்றாலும் கண்கள் களைத்து விடுகின்றன!

    பதிலளிநீக்கு
  2. ஓரே புத்தகத்தைப் படிக்காமல் வெவ்வேறு வகைகளில் மூன்று நான்கு புத்தகங்கள் வைத்து நாய் வாய் வைப்பது போல இது கொஞ்சம், அது கொஞ்சம் என்று படிக்கிறேன்!

    பதிலளிநீக்கு

  3. ​கூகிள் ஆண்டவர் கொடுத்த சில சுட்டிகள்.

    Getting sleepy and eventually falling asleep after reading a few pages is a phenomenon that many, if not most, of us can relate to. ... As your brain works hard and your eye muscles tire, it's only natural that they would need rest, leading to eyes slowly closing and sleep taking over. Reading isn't bad for your eyes.
    Why Does Reading Make You Sleepy? | Wonderopolis

    https://wonderopolis.org/wonder/why-does-reading-make-you-sleepy

    https://www.quora.com/Why-do-I-get-sleepy-when-I-start-reading

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. Ayya, Anukkal entru ezhuthi irukkireerkal.athai cell kal entru maththavum.

    kind request.

    best regards.

    kannan
    from abu dhabi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல் என்பது சரியான தமிழ்தானா என்பதில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆகவே அணுக்கள் என்பதை உயிரணுக்கள் என்று மாற்றியிருக்கிறேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

      நீக்கு
  5. படித்துத்தான் கண்சொருக வேண்டும் என்றில்லை வேலையற்று இருந்தாலும் கண் சொருகும் தானே

    பதிலளிநீக்கு
  6. நீங்க தெரிவித்த தகவல் அறிந்து கொண்டேன்.
    இப்போ தான் செய்தியில் அறிந்தேன். 93 வயதான வெப்ப நாடு ஜிம்பாப்வே ஜனாதிபதி ராணுவம் கைப்பற்றியதினால் இன்று தான் ஆட்சியை இழந்தார்.
    http://www.bbc.com/news/live/world-africa-41994362

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உட்கருத்தைப் புரிந்து கொள்ளும் வயதைக் கடந்து விட்டேன் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    2. உட்கருத்து எதுவும் கிடையாது ஐயா.
      இந்த செய்தியும் வந்தது.சிறிது குழப்பம். அவ்வளவே.

      நீக்கு
  7. அவ்வப்போது சிறிது ஓய்வு கொடுத்தால் இந்த சிக்கல் இல்லை.

    பதிலளிநீக்கு
  8. இப்போது அமேஸானில் ECHO,ECHO DOT என்று ஒரு கருவி வந்துள்ளது. பாட்டு கேட்க புத்தகம் படிக்க என்று சிலவேலைகளை செய்வதற்கு வசதியாய் இருக்கும்.
    http://indianexpress.com/article/technology/tech-reviews/amazon-echo-plus-and-amazon-alexa-review-the-smartest-speaker-around-4940077/
    நீங்கள் இத்தகைய புதிய முறைகளை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள் . You may find "alexa" in this technology quite useful. It will give some rest to the eyes as well. -Babu

    பதிலளிநீக்கு