சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது.
இது யார் வைத்த சட்டம் என்று நான் ஒரு ஆராய்ச்சியே செய்தேன். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ சொன்னதாக வைத்துக்கொள்வோம். ஆனால் பலர் இதை நம்புகிறார்களே என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம்.அவர்கள் சொல்லும் முக்கியமான வாதம் என்னவென்றால் செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் நீர்த்துப்போகுமாம். என்சைம்கள் என்றால் என்னவென்ற அறிவு இல்லாதவர்கள்தான் இவ்வாறு சொல்வார்கள். என்சைம்கள் அடர்வாக இருந்தாலும் நீர்த்துப்போனாலும் அதன் வேலையை எந்த சுணக்கமுமில்லாமல் செய்யும். இன்னும் சொல்லப்போனால் தண்ணீர் அதிகம் இருக்கும் உணவை இன்னும் சீக்கிரமாக செருக்க உதவும்.
இரண்டாவது இதனால் வயிற்றில் அசிடிடி அதாவது அமிலத்தன்மை அதிகரிக்குமாம். இதைப்போன்ற அறிவீனம் வேறொன்றுமில்லை. அமிலம் தண்ணீரினால் நீர்த்துத்தான் போகும். அது எப்படி அசிடிடியை உண்டாக்கும்?
இரைப்பையில் சேரும் உணவை இரைப்பை தன் அசைவுகளினால் அரைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டால் இரைப்பை கெட்டியாக இருக்கும் உணவை அரைக்க முடியாமல் திணறும்.
மேலும் செரிமானமான உணவை குடல் உறிஞ்சுவதற்கு அந்த உணவு நீர்த்ததாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் செரித்த உணவில் உள்ள உப்புகள் அதிகமாக உறிஞ்சப்பட்டு சிறுநீரகக்கற்கள் உற்பத்தி ஆகும்.
இந்தக்காரணங்களினால் சாப்பிடும்போது அளவாகத் தண்ணீர் அருந்தலாம். சாப்பிட்டபிறகு தேவையான தண்ணீரை கண்டிப்பாக அருந்தவேண்டும். மூடநம்பிக்கைகளை களைந்தெறியுங்கள். ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
தவறினால் விக்கல் வந்து செத்துப்போவீர்கள்.
நல்ல ஆராய்ச்சி.
பதிலளிநீக்குசமயத்துல நீங்க நிஜமாச் சொல்றீங்களா அல்லது கலாய்க்கிறீங்களான்னே தெரிய மாட்டேன் என்கிறது முனைவர் சார்.
பதிலளிநீக்குசாப்பிடும் முன்னர் கொஞ்சம் தண்ணீர் அருந்தலாம். சாப்பிட்டபின்னர் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்தலாம். விக்கல் போன்ற தேவை ஏற்பட்டால் சிறிது தண்ணீர் அருந்தலாம் என்றுதான் நான் படித்திருக்கிறேன்.
ஒருவேளை, சாப்பிடும்போது தண்ணீர் அருந்தினால் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு குறைந்துவிடுமோ? இல்லைனா, ஜாஸ்தி (அதாவது தொந்தி வரும் அளவு) ஆகிடுமோ? வயிற்றுக்கென்று ஒரு கொள்ளளவு உண்டுதானே? அதை பலூன் மாதிரி வீங்கச் செய்தால் திரும்பி பழைய அளவுக்கு வருமா?
இல்லீங்க, நெஜமாகவே சாப்பிடும்போது தேவையைப் பொருத்து தண்ணீர் சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் 200 மிலி தண்ணீர் சாப்பிடவேண்டியது அவசியம். இல்லாவிடின் உணவு சரியாக ஜீரணமாகாது. அரை மணி நேரம் அலாரம் வைத்து சாப்பிட வேண்டிய அவசியம்.
நீக்குசாப்பாட்டினால் தொந்தி வராது. வயிறு சாப்பிட்டவுடன் சிறிது பெரிதாகும். ஆனால் அப்படியே பெரிதாக இருந்து விடாது.
ஆனால் மூன்று வேளை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு மட்டும்தான் இந்த விதிகள் பொருந்தும். ஒவ்வொரு உணவிற்கும் இடையில் உணவு அளவிற்கு நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்களுக்கு வேறு விதிகள் உள்ளன. அவர்கள் கேட்டால் ஒரு பதிவு போடப்படும்.
கலாய்க்கறதா இருந்தா மொதல்லயே சொல்லிப்போடுவனுங்க.
நீக்குஅவர்கள் கேட்டால் ஒரு பதிவு போடப்படும். - இதோ... நான் கேட்டுவிட்டேன். நான் ரொம்பவும் நொறுக்குத்தீனிகள் சாப்பிடுபவன். பதிவு போடுங்க... அதுல என்ன குண்டு போடப்போறீங்கன்னு படிக்க ஆவலா இருக்கேன்.
நீக்குPlease show proof from science You'r making statements in public forum which reach so many Therefore it's your responsibility to add proofs
பதிலளிநீக்குMr. Nameless,
நீக்குPlease search the google for this topic. You will find hundreds of articles for and against the drinking of water during meals. Just remember they are all mostly from developed countries where salt intake is very very less than India, especially Tamilnadu.
Another thing is if I suggest that suicide will end all your problems, will you commit it? Don't you have brain? Should you not analyse any information you come across for its relevance to you?
Opinions expressed in blogs are only one's own perceptions and following them is at your own discretion.
Why do you hide behind the "Nameless"? You are not traceable. It is total cowardice.
Mr Kandasamy
நீக்குNo it's not cowardice. Just because there's a facility in Google blogs, like in yours, for posting anonymously, readers use it to post comments. It cannot be called hiding ID cowardly as your blog posts are on ordinary matters of everyday life like eating and sleeping and my comments thereon are decently worded. There's no secret sharing of information or like that. Why shouldn't comments be anything - with ID or w/o it? Your blog is open to all to read and post.
Different readers may have different reasons for posting anonymously. My reason is that it is my comments, not my ID, which are relevant to you. My name is useless to you. Still you can put up a disclaimer that unanymous comments won't be entertained This will help me to know you are interested in the ID of your commentators and I'll definitely post with name.
Now that you want to know, let me inform you that my name is Pa Vinayagam. I post my feedback comments in many blogs in that name; and sometimes, out of laziness, unanimously They're decently worded in English and in Tamil I have a blog in English https://throughalookingglassalaymanreflects.wordpress.com
Next my comments on the contents of your message
You are posting scientific information Whether to drink water with meal or not is a medical information But you have not adduced any basis for that If it is an ordinary personal experience it is ok to write w/o any supporting evidence But it is a medical information Your argument is ''I'll post any medical information w/o any evidence and it's for readers to go and trace the evidence'' No one will accept that It's your responsibility to give that also
நீக்குNext you say readers should not lap up what's offered by you. In that case readers won't take you seriously. You are an old man with a lot of experiences in life and readers look upon you with confidence. You are saying in effect that they shouldn't take you seriously at all.
If I go to google for such information, why should I come to you?
Pa Vinayagam
https://throughalookingglassalaymanreflects.wordpress.com
தமிழ்மணத்தில் ''மறுமொழியாளர்கள்எ'' என்ற பகுதியைத் திறந்து என் பெயரையும் நான் போட்ட மறுமொழிகளையும் பார்க்கலாம்.
நீக்குPa Vinayagam
https://throughalookingglassalaymanreflects.wordpress.com
Mr. ......
நீக்குBlog is there to share personal experiences. It is not a scientific journal. For expressing personal experiences, I don't think that I have to quote references.
Learning from others experience is one way of gaining knowledge. One need not blindly believe in other's experiences. It is only to stimulate one's thinking and not more than that.
As I have already mentioned that if I say suicide is a panacea for all human problems and if somebody takes it literally, it is foolishness.
Anyhow I am immensely thankful to you for having taken pains to answer my comments.
Hope you are aware that such arguments should not be taken as personal affrontation and we should stop at that level.
No I disagree. It may be your personal experiences but your blogpost gives medical information based on your experiences: digestion and what induces or prevents it. Perfect medical matter.
நீக்குAll medical information is based on a variety of personal experiences of various people. To arrive at a medical discovery, physicians may examine 1000s of people. Sometimes on themselves also. (the theme of the famous novel Dr Jekyll and Mr Hide). Your doctor, in wanting to know what is ailing you and the reasons for that, asks you first about your personal history: What have you eaten last? Have you had a sound sleep? etc.
Whether readers may themselves go and examine the basis for your post or not is your guess or wish.
You've known my name. Has it helped you in any way? Your name doesn't matter to me at all. If it is any other Samy, instead of Kandasamy, will the meaning of your words change? A rose by any other name will smell as sweet !
Your age and your attitude are quite at variance. Usually people mellow with age but in your case, you are hardening with age. As we grow old, we grow to take men and matters philosophically and become more forgiving. Your are an octogenarian now. Even if you become a nonagenarian or centenarian, that life will be lonely with your faculties going down. Lets bid farewell to all - our loved ones and others - with a smile on our faces. It's too late to be a gentleman. Be quick and smile.
Let not the world say: 'He left the name at which the world grew pale !'
With these words (not mine, but Samuel Johnson's), bidding farewell to you. I'll never enter here.
Dear Mr. ...
நீக்குYou may disagree with many things I write about. But it is a known fact that when people have no valid points to argue, they resort to personal abuse. That is what you are doing now. I have no grievance against you for this because this is the normal human behaviour of which you are no exception.
Wish you get the meaning of what I say.
Mr. P Vinayagam,
நீக்குAssume, You are going to a Doctor for your sickness. Doctor is prescribing some medicine. Will ask the doctor about the evidence that how this medicine heals your sickness? When you pay the doctor and don't ask for evidence, why are you asking evidence when you read for free?
Have you once read the Title? Read the full contents. Mr. Kandaswamy has explained and justified how it functions. Even if he gives proof as a link, how can you believe that the proof is correct. Because that proof is also an essay like this. You will not be convince by the proof too. Becauase, you have already made up your mindset.
Moreover, it is his wish to give proof or not. Because you are not paying anything to read.
How shamelessly you are commenting about one's age and attitude??? Ridiculous.
Thank you.
நீக்குஐயா
பதிலளிநீக்குபண்டைக்காலத்தில் மூன்று வேளை சாப்பாடு என்பது மிகவும் அரிது. காலையில் ஒன்றும் சாப்பிடாமல் அல்லது நீராகாரம் மற்றும் அருந்திவிட்டு கொஞ்சம் பழைய சோத்தை மதியம் சாப்பிட்டுவிட்டு இரவு மட்டும் வயறு நிறைய சரியான சாப்பாடு சாப்பிடும் பழக்கம் உள்ள காலத்தில் இந்த சொல் உண்டாகியிருக்கலாம்.
ஒரு சின்ன மலையாள கதை தமிழில்.
ஒரு நம்பூதிரி பிராமணன், நல்ல சாப்பாட்டு பிரியன். அவனை மன்னரிடம் "இந்த பிராமணன் சாப்பாட்டில் பீமன். எவ்வளவு சாப்பாடு போட்டாலும் சாப்பிடுவான்." என்று அறிமுகப்படுத்தினர். மன்னரும் அதையும் பார்த்து விடுவோம் என்று ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்து பிராமணனை சாப்பிட சொன்னார். பிராமணனும் வைத்த பொருட்கள் ஏதும் மீதம் வராமல் எல்லாவற்றையும் சாப்பிட்டான். சாப்பிட்டபிறகு மன்னர் அவனிடம் " சாப்பாடு போதுமா? இனியும் சாப்பிட முடியுமா? " என்று கேட்டார். அதற்கு அவன் "திருப்தியாக சாப்பிட்டேன், இனியும் சாப்பாடு தேவையில்லை. வயிற்றில் இடமில்லை. " என்று கூறினான்.
மன்னன் பரிமாறுபவனிடம் " நீ போய் அந்த நெய் பாயச குடத்தைக் கொண்டு வா" என்று கூறினார். பிராமணன் நெய் பாயசம் முழுதும் குடித்து தீர்த்தான். மன்னர் அவனிடம் " வயிற்றில் இடமில்லை என்று கூறினாய். இப்போது பாயசத்திற்கு எங்கிருந்து இடம் கிடைத்தது?" என்று வினவினார். அதற்கு அவன் " திருமேனியைக் காண பெரிய மக்கள் கூட்டம் கூடியிருக்கும் போது திருமேனி வரவே எப்படி நீங்கி வழி விடுகின்றனரோ அவ்வாறே சாப்பிட்ட சாப்பாடு நெய் பாயசத்திற்கு வழி விட்டது" என்று கூறினான்.
அதுபோன்று திருப்தியாக நல்ல சாப்பாடு மூச்சு முட்ட சாப்பிட்டாலும் தண்ணீர் குடிக்க கொஞ்சம் இடம் கிடைக்கும். ஆகவே நன்றாக சாப்பிடவே இதை சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
--
Jayakumar
பிளாக்குன்னா இதுதான் பிளாக். நாலு பேரு வந்து பார்த்து தப்பு ரைட்டுன்னு சொன்னாத்தான் விறுவிறுப்பு கூடும்! இதுக்குத்தான் முனகாலத்தில் கூடிக் கும்மியடிக்கிறதுன்னு சொன்னாங்க. நடுவில இந்தப் பழக்கம் விட்டுப்போச்சு. பதிவுலகம் நசித்துக்கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.
பதிலளிநீக்குஇந்த தண்ணி சண்டை நிரந்தரமானது போலும். தெரு குழாயடி சண்டை, வயல் தண்ணி பாய்ச்ச சண்டை, கேரளா தமிழ்நாடு முல்லைப்பெரியாறு சண்டை, கர்நாடகா தமிழ்நாடு காவேரி சண்டை, ஆந்திரா தமிழ்நாடு பாலாறு சண்டை, என்று விரிந்த சண்டையில் தற்போது பதிவுலகில் சண்டை. நல்லவேளை பதிவுலகில் கைகலப்புக்கு இடம் இல்லை.
பதிலளிநீக்கு--
Jayakumar
பதிவர்களிடையே கைகலப்பு நடந்த கதை உங்களுக்குத் தெரியாதா? நீங்க அப்போ பதிவுலகிற்குள் வரவில்லையோ என்னமோ.
நீக்குபதிவுலகில் கைகலப்பிற்கு இடமில்லை என்று யார் சொன்னது? ஆறு வருடத்திற்கு முன்பு இரண்டு பதிவர்கள் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நன்றாக தீர்த்தவாரி நடத்திவிட்டு வெளியில் வந்து அண்டர்கிரவுண்ட் நடைபாதை அருகே ஒருவர் மற்றவர் மூக்கில் ஒரு குத்து விட்டு மூக்கை உடைத்து விட்டார். ஏகப்பட்ட ரத்தம். பக்கத்திலேயே ஜெனரல் ஹாஸ்பிடல் இருந்தது தவிர அங்கு ஒரு பதிவு எழுதும் டாக்டரும் இருந்து அவரைக் காப்பாற்றினார்கள். இது பதிவுலகில் பெரிய சுனாமியை உண்டாக்கியது. பதிவர்னா அந்தக்காலத்தில் தீர்த்தவாரி நடத்தினால்தான் அவரை பதிவர்னு ஒப்புக்கொள்வாங்க.
நாடுகளுக்கிடையிலேயே தண்ணி சண்டை நடக்கும்போது பதிவர்களுக்கு இடையே நடக்கும் இந்த சண்டை ஒரு சுண்டைக்காய்.
ஒரு டவுட் ,தண்ணி குடிக்கும் போது சாப்பிடலாமா?
பதிலளிநீக்குஇது எல்லாக் குடிமகன்களும் செய்வதுதானே. இதில் என்ன டவுட்?
நீக்குபலரின் ஐயம் போக்கும் பதிவு! நன்று!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குமுன்பு எனது வேலைநாட்கள் திங்கள் தொடங்கி வெள்ளிவரை வேலை தலைத்தில் மதிய உணவின் போது கோலாவும் அருந்தி வந்தேன். ஒரு பிரச்சனைகளும் இல்லை. மிக நன்றாகவே இருந்தது.
கோலா இனிப்பு கெடுதிகள் உடலுக்கு கொடுக்கும் என்பதல் தற்போது மிகவும் குறைத்து கொண்டு வருகிறேன்.
நம்ம நாட்டவர்களுடன் உணவு அருந்தும் சந்தர்பங்களில் தண்ணி குடிக்க கூடாது இப்படியான அறிவுரைகள் சொல்வதை நானும் அவதானித்து இருக்கிறேன்.
சிந்திக்கத்தூண்டும் பகிர்வு ஐயா.
பதிலளிநீக்குThank you Sir.
பதிலளிநீக்குThis is the post, I was expecting for a long time.
முதன் முதலில், தண்ணி சாப்பிடுவதே உடம்புக்கு கெடுதல்...!
பதிலளிநீக்குஅப்படியா?
ஆம்! ஒரு நோயாளி தண்ணி சாப்பிட்டு (குடிக்கும் தண்ணி (H2O) தான்! ) உடம்பு கெட்டுது என்றான். எப்படி? விஸ்கியோட தண்ணி கலந்து அடிச்சான்; ரம் கூட தண்ணி கலந்தது அடிச்சான். பிராந்தி கூட தண்ணி கலந்து அடிச்சான். எதோட தண்ணி (குடிக்கும் தண்ணி (H2O) தான்! ) கலந்து அடிச்சாலும் போதை ஏறி ஏறி உடம்பு கெட்டுதாம். அதனாலே குடிக்கும் தண்ணி தான் எல்லா கெடுதலுக்கும் காரணம் என்றானாம். காரணம் H2O தான் common variable (factor); அதை எதோட கலந்து சாப்பிட்டாலும் உடம்பு கெடுதாம். அப்படி இருக்கு தண்ணி குடிப்பதை பற்றிய விவாதம்; அதனாலே நம்ம பங்குக்கு ஒரு தமாஷ் பின்னூட்டம்.
பதிவு எழுதுவதை விட அதற்க்கு மறுமொழி எழுதுவது சுலபம்! As I said in my last post, I may not be writing any more frequently.
But, ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்று ஒரு பழமொழி இருக்கு என்று சிலர் சொல்வது எனக்கு கேட்கிறது. ஆனால், பழமொழி மேலே எனக்கு என்றும் நம்பிக்கை இல்லை; வேண்டுமென்றால், அதற்க்கு பதிலாக ஒரு புதுமொழி சொல்வேன். ஆனால், அது 'அப்படி இப்படி' இருக்கும். அதனாலே, அந்த புதுமொழி இங்கு வேண்டாமே!
அன்புள்ள
நம்பள்கி!
பின்குறிப்பு: ஆம்! நானே தான். எனது பாஸ்வேர்டு எல்லாம் மறந்து விட்டது. இதை எழுதியது நானே தான்!
நம்பள்கி நலமாக இருக்கிறீர்களா?
பதிலளிநீக்கு//தண்ணி சாப்பிடுவதே உடம்புக்கு கெடுதல்...!//
தண்ணீருக்கு தமிழில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறதல்லவா :)