கல்யாண முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாண முறைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 செப்டம்பர், 2011

மங்கல வாழ்த்து பாடல் – வசனமும் பாடலும்



கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.
மங்கல வாழ்த்து பாடல்  வசனமும் பாடலும்
வெள்ளாளக் கவுண்டர்களின் கல்யாணங்களில் முக்கியமானது மங்கலவாழ்த்து. இதைப்ற்றி போன பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன்.அதற்கு வந்த பின்னூட்டங்களில் தெய்வசுகந்தி அவர்கள் இந்தப்பாடலை திரு.நா.கணேசன் அவர்கள் தொகுத்து அவருடைய பதிவில்போட்டிருப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அந்தப் பாடலை கல்யாணங்களில் எப்படிப் பாடுவார்களோ, அதேமாதிரியாக ஒரு குடிப்பையனைப் பாட வைத்து அதை சி.டி. யாககோவையில் வெளியிட்டுள்ளார்கள். இந்த பாட்டானது வட்டத்துக்கு வட்டம் சிற்சில மாறுதல்களுடன் பாடப்படுகிறது. ஆதலால் திரு.கணேசன் அவர்களின் தொகுப்புக்கும் பாட்டுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். நான் அதை இன்னும் ஒப்பு நோக்கவில்லை.
இரண்டாவது, அந்தப் பாடல் 19 ½ நிமிடம் பாடப்படுகிறது. அவ்வளவுநீளப் பாட்டை யூட்யூப்பில் ஏற்றமுடியாது என்பதால் அதை இரண்டுபாகமாக ஏற்றியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் அதைத் தரவிறக்கிஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக கல்யாணப்படங்கள் போதிய அளவில் கிடைக்காததால் ஒரே  படத்தைப் போட்டு இருக்கிறேன். படிப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.



இத்துடன் கொங்கு வேளாளர்களின் பழக்கங்கள் பற்றிய தொடர் முடிகிறது. இத்தொடரில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன. அவை தற்கால சமுதாயக் கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவை நடைமுறையில் இருப்பவை. அவைகளை மாற்றினால் இந்தத் தொடர் செயற்கையாக இருக்கும் என்று நான் கருதியதால் அவைகளை அப்படியே பிரசுரித்தேன்.

தவிர இவை மீள் பதிவுகள் ஆனதால் அவைகளை நான் திருத்த விரும்பவில்லை. எந்தக் கருத்துக்கும் மாற்றுக்கருத்துகள் இருந்தே தீரும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று நம்புகிறவன் நான். ஆகவே எப்படிப்பட்ட மாற்றுக் கருத்துகளுடன் பின்னூட்டங்கள் வந்தாலும் அவைகளை பிரசுரிக்கவே விரும்புகிறேன் (அவை ஆபாசமாக இருந்தால் தவிர).










செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கல்யாணத்தில் பெண்ணெடுக்கும் சீர்







மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மாப்பிள்ளை கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது இங்கே பெண் வீட்டில் பெண்ணுக்கு பெண்ணெடுக்கும் சீர் நடக்கும். பெண்ணை மணப்பெண்ணாக சிங்காரித்து மணவறையில் கொண்டு வந்து உட்கார வைப்பார்கள். பொண்ணோட தாய்மாமன், தாய்மாமன் இல்லாவிட்டால் மாமன் மொறையில் உள்ள ஒருவர் பொண்ணுக்கு மணமாலையைப் போடுவார். பிறகு நெருங்கிய சொந்தத்தில் மாமன் மொறையில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு புது வேஷ்டி, துண்டு கொடுத்து உடுத்த வைப்பார்கள். எல்லோருக்கும் நாவிதர் தோளில் ஒரு பூச்சரம் போடுவார். எல்லாரும் போய் பொண்ணோட ரெண்டு கையிலயும் சந்தனம் பூசி ஆசீர்வதித்துவிட்டு (அதாவது மொய்ப்பணம் கொடுத்துட்டு) வந்து நின்று கொள்வார்கள். இதுல என்ன கருத்துன்னா, மொற மாப்பிள்ளைக சம்மதத்தோடதான் இந்தக்கல்யாணம் நடக்குதுங்கறத எல்லாத்துக்கும் காட்டற சீர் இது. மொற மாப்பிள்ளைக்குத்தான் அக்கா புள்ளயக் கட்டறதுக்கு மொத உரிமை உண்டு. அவன் சம்மதிச்சாத்தான் அடுத்தவங்களுக்கு பொண்ணைக் கட்டிக்குடுக்கலாம். இப்பல்லாம் இந்த வழக்கம் மாறிப்போச்சுங்க.
எல்லோரும் ஆசீர்வதித்து முடிந்தவுடன் நாசிவன்இன்னும் பொண்ணெடுக்கிற மாமன்மார் யாராச்சும் இருக்கீங்களா, இருந்தா உடனே வாங்கோஅப்படீன்னு மூணு தடவ கூப்பிடுவான். எல்லாரும் வந்திருப்பாங்க. இருந்தாலும் மொறைக்கு இப்படிச் செய்யோணும். அப்புறம் சீர்க்காரம்மா. சரி இனி நாட்டாங்கல்லுக்குப் போய்ட்டு வந்திடலாம்னு பொறப்படுவாங்க.
இந்த நாட்டாங்கல்லுக்குப் போற சீர் இருக்குதுங்களே, இது ரொம்ப சரித்திர முக்கியத்துவம் உள்ளதுங்க. பழய காலத்துல ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாட்டமைக்காரர் இருப்பாருங்க. ஒரு பகுதியில பல ஊருங்க இருக்கும். ஒவ்வொரு ஊருக்கும் அதன் எல்லையைக் குறிக்க நாலு பக்கமும் கல்லு நட்டிருப்பாங்க. இதை நாட்டுக்கல் என்று சொல்வார்கள். கால ஓட்டத்தில் இது நாட்டாங்கல் என்று ஆகிவிட்டது. ஆட்டுக்கல்லை எங்கூர்ல ஆட்டாங்கல் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஒரு ஊருக்கு நாட்டாமைக்காரர் வருகிறார் என்றால், அந்த ஊர்க்கவுண்டர் இந்த நாட்டாங்கல் வரை சென்று அவரை வரவேற்று அழைத்து வரவேண்டும். ஒரு வீட்டில் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் என்றால் நாட்டாமைக்காரருக்கு கண்டிப்பாக அழைப்பு உண்டு. அவர் முகூர்த்த நேரத்திற்கு சற்று முன்பாக வருவார். அவரைப் பெண் வூட்டுக்காரர்கள் அனைவரும், மணப்பெண் உட்பட, சென்று வணங்கி வரவேற்று மேளதாளத்துடன் மணப்பந்தலுக்கு அழைத்து வரவேண்டும். இப்போது அந்த நாட்டாமை வழக்கொழிந்து போனாலும் அந்த வழக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த சீர் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுதான் மணப்பெண் நாட்டுக்கல்லுக்கு சென்றுவரும் சீர் எனப்படுகிறது. இப்போது ஊர் எல்லையில் கல் நடும் பழக்கம் எல்லாம் மறைந்து விட்டபடியால், மணப்பந்தலுக்குப் பக்கத்திலேயே ஒரு கல்லை நட்டு வைத்து, மணப்பெண் அது வரையில் போய் வருவது என்ற வழக்கம் வைத்திருக்கிறார்கள். பெண்ணை நாட்டுக்கல் வரை மாத்துப்போட்டு அழைத்துப்போய் அங்கு ஒரு போளமுடியில் மாத்துப்போட்டு நிற்க வைப்பார்கள். பிறகு சீர்க்கார அம்மா சோற்றில் உருட்டப்பட்ட உருண்டைகளைக்கொண்டு திருஷ்டி சுற்றிப்போடுவார்கள். பிறகு கற்பூரம் பற்றவைத்து சாமி கும்பிடுவார்கள். இந்த சீர் முடிந்த்தும் பெண்ணைக்கூட்டிக்கொண்டு போய் பெண்ணின் அறையில் விட்டுவிடுவார்கள்.
இதற்குப்பிறகுதான் மாப்பிள்ளையை கோவிலிலிருந்து மணப்பந்தலுக்குக் கூட்டிக்கொண்டு வருவார்கள்.




சனி, 17 செப்டம்பர், 2011

கல்யாண சீர்கள் – இணைச்சீர்.


இது ஒரு மீள் பதிவு.


இந்த சீர் சில ஊர்களில் மிக முக்கியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம் இதில் வரவு இருக்கிறது. பொதுவாக எல்லோருடைய வீட்டிலும், பெண் பிள்ளைகள் இருந்தால் செலவுதான். அவர்களுக்கு துணிமணிகள், நகை நட்டுகள், திரட்டிச்சீர், கல்யாணம், வளைகாப்பு, பேருகாலம், குழந்தைக்கு பேர் சூட்டுதல், குழந்தைக்கு காது குத்து, அதுக்கு திரட்டிச்சீர், கல்யாணம், இப்படி செலவுகள் தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கும். இந்த தொடர் கதையில் பெண் பிள்ளைகளிடமிருந்து வரும்படி பெருவதற்கு உண்டானது இந்த இணைச்சீர் ஒன்றுதான். அதுவும் வீட்டில் ஆண் பிள்ளை இருந்தால் மட்டுமே நடக்கக் கூடியது.

இணைச்சீர் செய்வது மாப்பிள்ளையின் சகோதரி. வசதியுள்ளவர்கள் இதற்காக ஒரு தனி மணவறை போடுவார்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை. சீர் செய்யும் இடத்தை சாணிபோட்டு வளிச்சு கோலம் போட்டு புள்ளார் புடிச்சு வச்சு பூசை சாமானெல்லாம் எடுத்து வைக்கோணும். அப்பறம் பொறந்தவ தன்னோட சீர்வரிசைகளை ஒரு போளமூடியில வச்சு அங்க புள்ளாருக்கு முன்னாடி கொண்டுவந்து வச்சுடுவாள். சீர் வரிசை என்னன்னா மாப்பிள்ளைக்கு வேட்டி, துண்டு, சட்டை, அப்பறம் எதாச்சும் நகை இல்லைன்னா பணம், இதெல்லாம் இருக்குமுங்க. அப்புறம் மாப்பிள்ளயக்கூட்டீட்டு வந்து அங்க ஒரு மணையப் போட்டு உக்கார வைப்பாங்க. சீர் பண்ற சகோதரி பண்ணாடி தொணை மாப்பிள்ளையா பக்கத்தில நிப்பாருங்க.

சீர்க்காரம்மா இந்த சீர் சாமான்களுக்கு தண்ணி சுத்திப்போட்டு எடுத்து அந்த சகோதரி கையில குடுப்பாங்க. அந்தப்புள்ள அந்தப்போள மூடிய தலைல வச்சுட்டு மாப்பிள்ளையை மூணு சுத்து வலமாச் சுத்து வந்து அதைய மாப்பிள்ள கிட்ட கொடுக்குமுங்க. மாப்பிள்ள அந்த புதுத்துணிகள ரூம்ப்புக்கு எடுத்துட்டுப் போயி உடுத்திட்டு வந்து மணையில உக்காருவாருங்க. அப்பறம் பொறந்தவ நகையை எடுத்து மாப்பிள்ளைக்கு போடுவாங்க. நகை இல்லேன்னா பணத்தை எடுத்து கையில கொடுப்பாங்க. நகை/பணத்தை வாங்கிட்டு மாப்பிள்ளை சும்மா இருக்கு முடியுமாங்க. அவரும் தன் பங்குக்கு சகோதரிக்கு நகையோ பணமோ குடுப்பாருங்க. அப்பறம் பூசையப் பண்ணி சாமி கும்பிட்டுட்டு ரூம்ப்புக்கு போயிடுவாங்க.

இந்த சீரு நடக்கறப்போ ஒறம்பறைங்க நெறைய பேரு ஊட்டுக்குப்போயிருப்பாங்க. இதைப்பாக்கறதுக்கு கொஞ்சம் பேருதான் இருப்பாங்க. இவ்வளவுதானுங்க இணைச்சீரு.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

கல்யாண வீட்டில் பெண்ணைக் காணோம்?


கல்யாண சீர்கள் – 5 வெத்திலை புடித்தல்



இந்த சீர் எதுக்காக செய்யோணும்எப்படி செய்யோணும்அப்படீங்கறதே ரொம்ப பேருக்குத் தெரியாது என்பது ஒரு வருத்தமான உண்மைஎன்ன காரணம்னாஇந்த சீர் செய்யஆரம்பிக்கிறபோது ஏறக்குறைய நடுராத்திரி ஆகிவிடும்.வந்தவங்கள்ல முக்காலே மூணுவீசம் பேர் தூங்கப் போயிடுவாங்க.


 ரெண்டாவது காரணம்இப்பெல்லாம்கல்யாணங்க மண்டபத்திலதான் நடக்குதுஅதனாலஇந்தச்சீருக்கு அவசியமில்லாம போயிட்டுது.

மொதல்ல இந்தச்சீரு எதுக்குன்னு சொல்றேன்முந்திக்காலங்களிலே கல்யாண முகூர்த்தம் பொண்ணு ஊட்லதான்நடக்கும்மாப்பிள்ளை ஊட்ல செய்யவேண்டிய சீர்களைஎல்லாம் செஞ்சுட்டுமாப்பிள்ளை ஊட்டுக்காரங்களெல்லாம்பொண்ணோட ஊருக்குப்போவாங்கஅவங்களைபொண்ணூட்டுக்காரங்க வரவேத்து ஒரு ஊட்ல தங்கவைப்பாங்கஅந்த ஊட்டுக்கு மாப்பிள்ளை விடுதின்னு பேரு.அப்புறம் காத்தால முகூர்த்த நேரத்துக்கு முன்னாலஎல்லாருமா சேர்ந்து கோயிலுக்குப் போய்விட்டு அப்புறம்முகூர்த்த மண்டபத்துக்கு போவாங்க.

இப்ப பொண்ணூட்டுல எல்லாரும் தயாரா இருக்கிறாங்களாஅப்டீன்னு தெரியாம அந்த ஊருக்குப் போய்ட்டோமுன்னுவச்சுக்குங்கஅங்க ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்து முகூர்த்தம்நடத்த முடியாத நெலமயாப் போயிருந்ததுன்னு வச்சுக்குங்க.அப்ப என்ன பண்ண முடியும்மாப்பிள்ளை ஊட்டுக்காரங்கவெறுங்கையோடதானே திரும்பி வரவேண்டும்அது ஒருபெரிய மானக்கேடுதானுங்களேஇந்த மாதிரி நிலமைஏற்படுவதைத் தடுக்க அந்தக்காலத்துல ஒரு சடங்குவச்சிருக்காங்கஅதுதானுங்க இந்த வெத்தில புடிக்கிற சீரு.  
மாப்பிள்ளை ஊட்டுல இருந்து ஒரு ஐந்து பேருபொண்ணூட்டுக்கு போய் இந்த சீரை செய்துவிட்டு வருவார்கள்.அப்ப அங்க நிலைமை சரியாய் இருக்கிறதா என்றுகவனிப்பார்கள்அவர்கள் பொண்ணு ஊட்டுல இருந்து திரும்பிவந்ததுக்கு அப்புறம்தான் மாப்பிள்ளை ஊட்ல இருந்துபொண்ணு ஊட்டுக்கு புறப்படுவார்கள்.
இந்த சீரு செய்யறதப்பத்தி விவரமாச்சொல்றனுங்கமொதல்லமாப்பிள்ளை ஊட்ல சாமி கும்பிடற எடத்தைச் சுத்தம் பண்ணி,புள்ளார் புடிச்சு வச்சு பூச சாமானெல்லாம் எடுத்துவைக்கோணுமுங்கவெத்திலை பாக்கு தனியா ஒரு தட்டத்துலஎடுத்து வைக்கோணுமுங்கமாப்பிள்ளைப் பையனைக்கூட்டீட்டுவந்து ஒரு முக்காலி போட்டு சாமி கும்பிடற எடத்துலஉக்கார வைக்கோணுமுங்கஅப்புறம் பூச பண்ணி சாமிகும்புட்டுட்டு எல்லோரும் கற்பூரத்தைத் தொட்டுக் கும்பிட்டுட்டுதிண்ணீரு எடுத்து நெத்தியில வச்சுக்கோணுகுங்கஅப்பறம்ஒரு அஞ்சு சமங்கலிப் பொம்பளைகளைக் கூப்பிட்டுஅவங்களுக்கு வெத்திலை பாக்கு கொடுக்கோணுமுங்கஅவங்கசீர்க்காரரைக் கும்புட்டுவிட்டு அந்த வெத்தில பாக்கைஅவங்கவங்க சீலை மடியில வாங்கிக்குவாங்கஅதாவது அந்தஅஞ்சு பேரும் மாப்பிள்ளைப் பையனை ஆசீர்வாதம்பண்ணினதா ஐதீகம்இதையெல்லாம் குனுப்பமா படிச்சுஅர்த்தத்தை மனசுல பதிச்சுக்கோணுமுங்கஎன்னமோ சீருபண்ணறதெல்லாம் வெறும் சடங்குன்னு ரொம்பப்பேருநெனச்சுக்கிட்டு இருக்காங்கஅதெல்லாம் வெவரமில்லாதவங்கபேசற பேச்சு.
அப்புறமா ஒரு அஞ்சு பேரு (ஆம்பிளைங்க பொம்பிளைங்கசேர்ந்துபுறப்பட்டு பொண்ணு ஊட்டுக்குப் போவாங்கஅங்கயும்சாமி கும்பிடோணுமுங்கபொண்ணுப் புள்ளைய கூட்டீட்டுவந்து முக்காலில உக்கார வச்சு மாப்பிள்ளை ஊட்ல கும்பிட்டமாதிரியே சாமி கும்பிட்டுட்டு அஞ்சு மங்கிலியப்பொம்பளைகளுக்கு வெத்திலை பாக்கு கொடுப்பாங்க.அவங்களும் தங்களோட சீலை மடியில பயபக்தியோடசீர்க்காரரைக் கும்பிட்டு வாங்கீக்குவாங்க.
அப்பறம் மாப்பிள்ளை ஊட்ல இருந்து போனவங்க எல்லாம்பொண்ணூட்ல கை நனைக்கோணுமுங்கஅதாவது பந்தியிலஉக்காந்து சாப்பிடோணுமுங்கமொதல்லயே சாப்பிட்டுட்டுவந்திருந்தாலும் திரும்பவும் பந்தியில உக்காந்துசாப்பிட்டோம்னு பேர் பண்ணோணுமுங்கஇல்லீன்னா அதுவெவகாரமாயிடுமுங்கஇதில பல கருத்து தெளிவாகுதுபாருங்கஒண்ணு ஊட்டுக்கு வந்தவங்களை விருந்துவச்சுத்தான் அனுப்போணும்கிறதுரெண்டாவது பொண்ணூட்லசாப்பாடெல்லாம் ஒழுங்கா பண்ணீருக்காங்களா அப்படீங்கறசமாசாரம்நாளைக்கு நம்ம பையன் மாமியா ஊட்டுக்கு வந்தாஒழுங்கா சாப்பாடு கிடைக்குமாங்கறதை இதை வச்சுகண்டுபிடிச்சறலாம் பாருங்க.
இப்படி கை நனைச்சதுக்கப்புறம் மாப்பிள்ளை ஊட்ல இருந்துவந்தவங்கெல்லாம் சொல்லீட்டு திரும்பிப் போவாங்கஇவங்கதிரும்பிப்போயி எல்லாம் சரியாயிருக்குதுன்னுசொன்னதுக்கப்புறம்தான் மாப்பிள்ளையை கூப்புட்டுட்டுஎல்லோரும் பொண்ணு ஊட்டுக்கு பொறப்படுவாங்க.
தொடரும்