Foto afkomstig van: de Luie Motorfiets site.
நாட்டு நடப்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
சட்டங்கள் சாதாரண மனிதர்களைப் பாதுகாக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் காவல் துறைக்கு ஒரு புகார் கொடுக்கப்போனால் என்னென்ன கஷ்டங்கள் உண்டாகும் என்பது அனுபவித்தால்தான் தெரியும்.
நேற்று நான் ஒரு ரோட்டில் கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். ரோடு நல்ல அகலம். மணி காலை 11.30. ரோட்டில் டிராபிக் அதிகமில்லை. நான் 40 கி.மீ. வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஒரு கார் வலது புறம் திரும்புவதற்காக சிக்னல் போட்டு ஹெட்லைட்டையும் போட்டு விட்டான். நான் காரை நிறுத்தினேன்.
பின்புறம் டமால் என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. சரி, வம்பு வந்து விட்டது என்று கீழே இறங்கிப் பார்த்தேன். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் கீழே விழுந்து கிடக்கிறான். உடனே அங்கு கூடியவர்கள் அவனை கைத்தாங்கலாக எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள்.
என்ன நடந்திருக்கிறது என்றால், அவன் கூட இன்னொரு பைக்கில் வந்து கொண்டிருந்த தன் நண்பனுடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறான். நான் காரை நிறுத்தியதைக் கவனிக்கவில்லை. நேரே பைக்கைக் கொண்டுவந்து என் காரில் மோதியிருக்கிறான். அவன் பிரேக் கூட போடவில்லை. அவ்வளவு அஜாக்கிரதையாக பைக் ஓட்டியிருக்கிறான். ஹெல்மெட்டும் இல்லை.
நான் இந்த விபத்துக்கு எள்ளளவும் காரணமில்லை. அவன் கூட வந்தவர்கள் இதை உணர்ந்து கொண்டதாலும், அவனுக்கு இரத்தக்காயம் எதுவும் ஏற்படாததாலும், அவன் மயக்கமடையாமல் நல்ல நினைவுடன் இருந்ததாலும் என்னைப் போகவிட்டார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன்தான் காருக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பின்புற பம்பர் கழன்று விட்டது. இன்சூரன்ஸ் கிளெய்ம் போட்டு மாற்றினாலும் எனக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும். அடுத்த வருஷம் இன்சூரன்ஸில் "நோ க்ளெய்ம்" போனஸ் கிடைக்காது. அதில் ஒரு 1500 ரூபாய் போகும். ஆக மொத்தம் 2500 ரூபாய் தண்டம்.
ஆனால் நான் திருப்திப் பட்டுக்கொண்டேன். வந்த சனியன் இந்த 2500 ரூபாயோடு போயிற்றே, இல்லாமல் அந்த மடையனுக்கு தலையில் அடிபட்டு மயக்கமாயிருந்தால் நான் அந்த இடத்தை விட்டு வந்திருக்க முடியாது. போலீஸ் வரவேண்டும். அடிபட்டவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஸ்டேட்மென்ட் கொடுக்கவேண்டும். ஜாமீனுக்கு ஆள் பிடிக்கவேண்டும்.
அடிபட்டவன் பிழைத்து விட்டால் ஓரளவிற்கு எனக்கு வழி பிறக்கும். அப்போதும் அவன் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் கேஸ் போடுவான். போலீஸ் அவனுக்குச் சாதகமாகத்தான் ரிப்போர்ட் எழுதுவார்கள். வருடக்கணக்கில் கேஸ் நடக்கும். நான் கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டிற்கும் நடந்து கால் செருப்பு தேய்ந்து போகும். ராத்திரியில் தூக்கம் வராது. முக்கியமாக பதிவுகள் எழுதும் ஆர்வம் போய்விடும். (பதிவுலகத்திற்கும் உங்களுக்கும் எவ்வளவு நஷ்டம்!!!!!!)
அடிபட்டவன் துரதிர்ஷ்டவசமாக இறந்து விட்டான் என்றால் அவ்வளவுதான். நான் மண்டையைப் போடும் வரைக்கும், அதன் பிறகு என் வாரிசுகளையும் இந்த ஏழரை நாட்டுச் சனி விடாது.
இந்த விளைவுகளை நினைக்கும்போது, இந்த 2500 ரூபாய் செலவு ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது.
இப்படி என்னைக் காப்பாற்றிய அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
நீங்கள் எழுதியதைப் போல் நாட்டு நடப்புகளைப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. அதுவும் சென்னையில் மெட்ரோ இரயிலுக்காக வழித்தடங்கள் மாற்றப்பட்டு இருப்பதால், ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியில்,ஷேர் ஆட்டோக்களுக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கும் இடையே கார் ஒட்டி கஷ்டப்பட்டு வீண் வம்பை விலைக்கு வாங்குவானேன் என்று நான் இப்போது காரையே எடுப்பதில்லை.
பதிலளிநீக்குதலைக்கு வந்தது; தலைப்பாகையோடு போச்சுன்னு சொல்லுங்க. ஏழரையார் எப்ப வருவார், எப்படி வருவார்ன்னு ஆருக்குத்தானுங்ணா தெரீது??
பதிலளிநீக்குஅப்பப்பா.....
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவு எழுதுற ஆள் என்று அவனுக்குத் தெரிஞ்சிருந்தா அவன் ஏண்டா முட்டினோம் என்னு யோசிப்பான்.....பின்னாடி விஷ போத்தலோடதான் அவலைவான் போல
பதிலளிநீக்குகாவல் நிலையம் என்பது பணம் கறக்கும் நிலையம். அங்கும் சிபாரிசு வேண்டும்.ஆலயங்களும் அப்படியே.எனக்கு மிகவும் கசப்பான அனுபவம்.
ஊழலின் அவதாரம். இறைவன் இதுவும் வினைப்பயன் என்றால்,லஞ்சம் பெறுவதற்கே படைத்துள்ளானா //?ஒரு துறையை.ஏழைகள்,நடுத்தரமக்கள் பாவப்பட்ட பிறவிகள்.
நாட்டு நடப்புகள் நியாயமாக நடப்பவர்களுக்கு பயம், நஷ்டம்
பதிலளிநீக்குஏற்படுத்துகிற மாதிரிதான் இருக்கிறது..
நல்லவேளை... பதிவுகள் தொடர்ந்து வரும்!
பதிலளிநீக்குசார் சரியா சொன்னீங்க.அவன் செய்த தப்புக்கு எல்லாருமே கஷ்டப்படனும்
பதிலளிநீக்குநல்ல வேளை அவன் பிழைத்தான் அதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நிம்மதியே
சார் போகும்போது இதையும் படியுங்களேன்
http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.html
http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_6.html
பதிலளிநீக்குஉண்மைதான்! நாம் ஒழுங்காக சென்றாலும் இப்படி அவர்களாக வந்து தொல்லை கொடுப்பவர்களை என்ன செய்வது? போதாக்குறைக்கு பாலம் கட்டுகிறேன் என்று சாலைகளை குறுக்கி வைத்து கஷ்டப்படுத்துகிறார்கள்!
பதிலளிநீக்குஇந்த காரு கருமாந்திரம் வேண்டாம்கிறதுக்கு இன்னொரு வலுவான காரணம் கிடைச்சிடுச்சு........
பதிலளிநீக்குகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
பதிலளிநீக்குநன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.
பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
-இந்தியன் குரல்
நிஜம் தான்.
பதிலளிநீக்குநாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதிருக்கிறது.
நன்றி ஐயா.
He is seven and a half for you and you are seven and a half for him.
பதிலளிநீக்குஉண்மைதான் நட்டு நடப்பு ரொம்ப பயமாகத்தான் இருக்கு
பதிலளிநீக்கு//முக்கியமாக பதிவுகள் எழுதும் ஆர்வம் போய்விடும்//
பதிலளிநீக்குச்சூ அப்பா இப்பவே கண்ண கட்டுதே