ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நடைமுறையில் இருக்கிறதா? பல பதிவர்கள் மிக நம்பிக்கையுடன் பதிவுகள் எழுதுகிறார்கள். இந்தியா மறுமலர்ச்சி அடையும், அடைந்தே தீரும், என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தியா கண்டிப்பாக மறுமலர்ச்சி அடையும். எப்போது?
அடிப்படையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எப்போது நல்ல தலைவர்கள் உண்டாவார்கள். மக்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகும்போது அப்படிப்பட்ட தலைவர்கள் ஏற்படுவார்கள்.
ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் தேவைகள் எப்படியாவது அவர்களுக்கு கிடைக்கும்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்தி விடுகிறார்கள்.
அப்படி தங்களுடைய ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை.
கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு. அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.
என்னுடைய தாழ்மையான கருத்து என்ன வென்றால்... நம் பிள்ளைகள் எல்லாரும் வாழையடி வாழையாக பெற்றவர்களிடம் இருந்து நல்ல விடயங்களை கற்கிறார்களோ இல்லையோ...கெட்ட விடயங்களை பல மடங்கு அதிகமாக கற்கிறார்கள். பிள்ளைகளை திருத்த பள்ளிகள் கொஞ்சம் உதவலாம். ஆனால் பெற்றவர்களைத் திருத்த எந்தப் பள்ளி உள்ளது? அதனால், குழந்தை வளர்ப்பில் மிகக் கீழான நிலையில் உள்ள பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை பிரித்து 5 வயதில் இருந்தே எது தவறு எது சரி என்பதை நன்கு உணர்த்தி வளர்த்தால் ஒழிய நாளைய குடிமகன்களை நம்மால் திருத்த முடியாது! பெற்றொர்களை திருத்த யாராலும் முடியாது...அய்ந்தில் வளைந்ததை அய்ம்பதில் நிமிர்த்த முடியாது! ஆனால் அய்ந்தில் இருப்போரை நிமிர்ந்தே இருக்கும் படி ஒரு 30 வருடங்கள் செய்தால் போதும்! இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ... நல்லரசாகிவிடும்!
பதிலளிநீக்கு- அய்ந்திலே வளைந்த குடிமகன்! (டாஸ்மாக் இல்லைங்க)
நல்லவை நடக்கும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்டும் என்றுதான்
பதிலளிநீக்குஅனைவரும் விரும்புகிறோம்.
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்..
இந்த நிலை மாறவேண்டும். பாலியல் பலாத்காரம் என்பது நாட்டின் வளர்ச்சியை மெல்ல மெல்ல குறைத்துவிடும். எந்த பெற்றோர்களும் தங்களது பெண் குழந்தைகளை மேல் படிப்புக்கு அனுப்ப மாட்டார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.
பதிலளிநீக்குபெண்களின் வளர்ச்சி கண்டிப்பாக நாட்டிற்கு வேண்டும்.
இன்னும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ வேண்டும். மறுபடி ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். நிச்சயமாகக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. போதுமான உயரம் வந்தாயிற்று. இனி இறங்க வேண்டியதுதான்!
பதிலளிநீக்குவருத்தப் படாதீர்கள் ஐயா. நம்பிக்கை தான் வாழ்க்கை. ஒரு நாள் நல்ல நாளாக விடியும்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கனவு காண்பதில் உள்ள சுகம் என்று கனவிலேயே இருந்தால் இந்திய நாடு எப்போது உருப்படும்?
பதிலளிநீக்குஆங்கில புத்தாண்டு (2013) நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்க்கை நிலை உயர்ந்திருக்கிறது. தரம் உயர்ந்திருக்கிறதா.?அடிப்படைக் காரணங்களை யாரும் திருத்திக் கொள்ளத் தயாராயில்லை. பிற்ப்பொக்கும் மனிதரில் ஏன் இந்த வேறுபாடு.?கேள்வி கேட்போம். பதிலை உள்வாங்கிக் கொள்ள யாரும் தயாராயில்லையே.
\\ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது.\\ தமிழ்நாட்டில் போன ஆட்சியின் போது கிடைத்த இலவசங்களை வைத்து இந்தியா முழுசுக்கும் கணக்கு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன். இந்தியாவில் அனைவருக்கும் இது கிடைக்கிறதா என்று உறுதியாகத் தெரியவில்லை. அப்படி கிடைச்சிருந்தா ஏன் Bihar காரன் தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு வரான்? இதெல்லாம் மக்களை மயக்க நிலையில் வைத்து கொள்ளையடிக்க கொடுக்கப் படும் இலவசங்கள். தொடர முடியாது அல்லது சாராயத்தை வித்து குடியைக் கெடுத்து வரும் பணத்தில் கொடுக்க வேண்டியிருக்கும். ஒன்று மக்கள் திருந்த வேண்டும் இல்லை ஒரு நல்ல அரசியல்வாதி நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும். இதே இந்தியர்கள் விடுதலைப் போராட்டத்தின் போது இருந்த நிலையும், கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது வரும் தேச பக்தியும் நிஜ அரசியலில் வந்தால் எல்லாம் சரியாகிப் போகும் ஆனால் அது நடக்காமல் பார்த்துக் கொள்ளத்தான் சினிமாவும் தொலைக்காட்சியும் இருக்கின்றனவே....:((
பதிலளிநீக்குஉண்மை.
நீக்கு