வியாழன், 13 டிசம்பர், 2012

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே

நான் இந்த பிளாக்கிலிருந்து விடை பெற்றுப் போய் ஏறக்குறைய பத்து நாட்கள் ஆகின்றன. வேர்டு பிரஸ்ஸில் ஒரு பிளாக் ஆரம்பித்தேன். அவர்கள் எதற்கெடுத்தாலும் துட்டு கேட்கிறார்கள். மேலும் நான் ஒரு HTML Code ஐ பதிவு செய்ய முயற்சித்தேன். முடியவில்லை.

சிரங்கு பிடித்தவன் கையும் பிளாக் எழுதினவன் கையும் சும்மா இருக்காதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?

அதுவுமில்லாமல் என் பதிவின் புள்ளி விவரங்களைப் பார்த்தேன். கொஞ்சம் நன்றாக இருக்கிறது.


ஆகவே "சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி, சொரணை கெட்டவளே" என்றபடி திரும்பி கூகுளாண்டவரே கதி என்று சரண்டைந்து விட்டேன். என்ன இருந்தாலும் "தெரியாத தேவதையைவிட தெரிந்த சைத்தானே மேல் அல்லவா".

15 கருத்துகள்:

  1. நான் பதிவிலிருந்து விலகுகிறேன் என்றபோது பல நண்பர்கள் விலகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். திரும்பி வந்த போதும் பலரும் என்னை வரவேற்றார்கள். அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த பின்னூட்டப் பெட்டி எங்கோ ஒளிந்து கொண்டது. இப்போதுதான் தேடிப்பிடித்தேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா,
    வாங்க,வாங்க‌
    நேற்றே பின்னூட்டம் போட தேடினேன். கோபத்தில் பின்னூட்ட பெட்டியை மூடி வைத்தீர்கள் போல் நினைத்தேன்.

    எதையும் கண்டுக்காமல் உங்களுக்கு சரி என்று பட்டதை தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி!!!

    பதிலளிநீக்கு
  3. வருக! வருக!! வழக்கம்போல ருசிகரமான, காரமான தகவல்களைத் தருக.

    பதிலளிநீக்கு
  4. ஏன் போறீங்கனு சண்டை போடலாம்னு வந்தா.. உங்க ப்ளாக் திறக்கவில்லை..

    நல்லவேளை .. தப்பீச்சீங்க...!!!!

    :-)

    பதிலளிநீக்கு
  5. நேற்றே வாசித்து விட்டு, பின்னூட்ட பெட்டி காணாமல் சென்றேன்.

    நீங்கள் திரும்பியதில் மகிழ்ச்சி.

    எனக்கு தெரிந்தவரை இணையத்தில் விவாதத்தில் இறங்குவது வீண் (பல முறை அடிபட்டதால் தான் சொல்கிறேன்) விவாதத்தால் யாரும் தன் கருத்தை மாற்றி கொள்ள போவதில்லை. எல்லா கருத்தும் அவரவர் பார்வையில் சரி. எனவே கருத்துக்களால் காயபடாமல், அவற்றுக்கு பதில் சொல்லி சண்டையில் இறங்காமல் நாம் பாட்டுக்கு எழுதவேண்டும் என்று நினைக்கிறேன் ; இதை தான் எனக்குள் அடிக்கடி சொல்லி கொள்கிறேன். உங்களை விட பல வயது இளையவன் என்றாலும் உங்களுக்கும் அன்புடன் சொல்ல விரும்புவது இது தான் !

    பதிலளிநீக்கு
  6. உடனே வாசித்தபோதும் பின்னூட்ட வசதி தடைப்பட்டு இருந்தது.
    சுவாரசிய எழுத்துக்குச் சொந்தக்காரர், நீங்கள் திரும்பியது மகிழ்வே!
    பதிவுலகப் பாடம் கற்றுத் தேறி விட்டீர்கள் எனக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தவறு நடந்திருந்தது. சரி செய்து விட்டேன். தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. அமைதியா இருந்தோம் நாங்க. நம்ம அண்ணன் எங்குட்டு போய்டுவாரு நம்மளை உட்டுப் போட்டுங்ற ஒரு தெகிரியம்தான்!!

    பதிலளிநீக்கு
  8. மிக்க மகிழ்ச்சி. நடுவில் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தபோது உள்ளேயே அனுமதி இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது!!

    பதிலளிநீக்கு
  9. அன்பிற்கிய ஐய்யா...உங்கள் பதிவுகளை வரிவிடாமல் படிப்பேன்..கலமகளை ..தினமணியை..படிக்கிற மாதிரி..சிரிப்பேன்..சிந்திப்பேன்..பாராட்டுவேன்..(மனதுக்குள்)ஆனால் பதில் எழுதியதில்லை..நீங்கள் விடைபெறுகிறேன் என்ற போது உண்மையில் அழுதேன்..வருந்தினேன்..ஆனால் இன்று “கீரையை வழுச்சுப்போடுடி கிறுக்கச்சி” யாய் நீங்கள் ”மீண்டு” வந்த்தது..மகிழ்ச்சி..பாராட்டுக்கள்.சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் ஆர்வக் கோளாறு அதிகம் உடைவர் என்பது எங்களுக்குத் தெரியும்.தொழில் நுட்ப விஷயங்கள் உட்பட பலவற்றை சோதித்துப் பார்க்கிறீர்கள். கணினி படித்த இளைஞர்கள் கூட html கோடிங்கில் மாற்றம் செய்யத் தயங்குகிறார்கள். ஆனால் தைரியமாக நீங்கள் செய்கிறீர்கள்.உங்களின் இந்தப் பண்பு எனக்கு பிடித்த ஒன்று.

    பதிலளிநீக்கு
  11. >போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட

    வாங்கோ வாங்கோ.

    (இது பிராமண 'வாங்கோ' இல்லை. அச்சு அசல் யாழ்ப்பாணத் தமிழ்)

    பதிலளிநீக்கு