இலவசம் என்றாலே மக்களுக்கு ஒரு ஆர்வம் வந்து விடுகிறது. அது தேவையோ இல்லையோ, வாங்கிக்கொள்வார்கள். அதிலும் ஒன்றுடன் திருப்தி அடையமாட்டார்கள். இரண்டு, மூன்று என்று எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவிற்கும் ஆசைப்படுவார்கள். ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கொடுக்கப்படும் இலவச பைகளை இன்னொன்று என்று கேட்டு வாங்காதவர்கள் அபூர்வம். (நானும் அப்படித்தான்). இலவச சேலைகளுக்கு ஆசைப்பட்டு கூட்டத்தில் சிக்கி உயிர்த்தியாகம் செய்த பெண்மணிகளின் கதைகள் தமிழ்நாட்டில் அநேகம்.
கம்ப்யூட்டருக்கான பல இலவச மென் பொருட்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இவைகளைப் பற்றி நம் பதிவுலகத் தோழர்களும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள். இந்த மென்பொருட்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.
பல மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதன் காரணம் அந்த தளங்கள் விளம்பரங்களை வெளியிடுகின்றன. அதிலிருந்து வருமானம் கிடைத்து விடுகிறது. இந்த இலவச மென்பொருட்கள், தங்கள் தளத்தை அதிக வாசகர்கள் பார்க்கட்டும் என்பதற்காகத்தான்.
சில தளங்கள் தங்கள் இலவச மென்பொருட்களுடன் வேறு சில புரொக்ராம்களையும், உங்களுக்குத் தேவை இல்லாவிட்டாலும் கொடுத்து விடுவார்கள். அந்த புரொக்ராம் ஆபத்தில்லாமலும் இருக்கலாம், சில சமயம் ஆபத்துடனும் இருக்கலாம். ஆகவே இலவச மென்பொருட்களைத் தரவிறக்கும்போது இந்த கூடுதல் மென்பொருட்களும் சேர்ந்து வராமலிருக்க ஜாக்கிரதையாக இருக்கவும்.
உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மற்றும் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் தனிப்பட்ட விவரங்கள் பல கம்பெனிகளுக்கு பல காரணங்களுக்காகத் தேவைப்படுகின்றன. இந்த மாதிரி விவரங்களைச் சேகரிப்பதற்காகவும் பல இலவச மென்பொருட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
பெரிய மென்பொருள் தயாரிக்கும் கம்பெனிகள் கூட அவர்களின் லீகல் வெர்ஷனை உபயோகிக்கிறார்களா இல்லை பைரேடட் வெர்ஷனை உபயோகப்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிக்க இலவசமாக சில மென்பொருட்களைக் கொடுப்பார்கள். அவைகள் இந்த உளவு வேலையையும் செய்யும்.
தவிர இந்த மென்பொருட்களை விளம்பரத்திற்காகவும், 30 நாட்கள் அல்லது 60 நாட்களுக்கு இலவசமாகக் கொடுப்பார்கள். அதை உபயோகப்படுத்திப் பார்ப்பவர்களில் ஒரு சதம் நபர்கள் அந்த மென்பொருளை விலைக்கு வாங்கினாலும் அவர்களுக்கு லாபமே.
ஆகவே இலவச மென்பொருட்களைத் தரவிறக்குமுன் யோசியுங்கள்.
1. அந்த மென்பொருள் உங்களுக்கு அவசியமா?
2. அந்த வேலையைச் செய்யும் மென்பொருள் உங்களிடம் ஏற்கெனவே இல்லையா?
3. அந்த மென்பொருளை உங்கள் நண்பர்கள் யாரேனும் உபயோகப்படுத்தி பயனடைந்திருக்கிறார்களா?
4. உங்கள் கம்ப்யூட்டரில் நல்ல ஆன்டிவைரஸ் புரொக்ராம் நிறுவியிருக்கிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்ற பதில் வந்தால் அந்த மென்பொருளைத் தரவிறக்குங்கள்.
இலவசமாக கிடைக்கிறது என்பதால் எனக்கு ஒன்று, எங்க ஆத்தாளுக்கு ஒன்று என்று ஆசைப்பட வேண்டாம்.

உண்மை இலவசமென எல்லாவற்றையும் சேர்த்து கொண்டால் அதிக பிரச்சனைதான்
பதிலளிநீக்குபயன் தரும் பதிவு
பதிலளிநீக்குதரவிறக்கும் முன் கவனிக்க வேண்டியவைகளை
பட்டியலிட்டிருந்தது நிச்சயம் அனைவரும் அவசிய
அறிந்து கொள்ளவேண்டியவைகள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 2
பதிலளிநீக்குஹிஹி.... எனக்குக் கூட முன் அனுபவம் இருக்கிறது! ஃபெனாயில் டெட்டால் போட்டுக் கழுவ வேண்டியிருந்தது!
பதிலளிநீக்குவிஷம் இனாமாகத் தருகிறேன் என்றால் கூட வாங்க நம்மில் அனேகம் பேர் முண்டியடித்து முன்னில் நிற்பார்கள்.அதனால்தான் சில நிறுவனங்கள் இந்த மாதிரி தங்களுக்கு உபயோகப்படும் மென்பொருட்களை நம் தலையில் கட்டுகின்றன.நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.
பதிலளிநீக்குஏதாவது ஸ்பைவேர் புதைந்து இருந்தாலும் இருக்கும். இலவசம்னாலே வம்புதான் சார். :)
பதிலளிநீக்குநல்ல அறிவுரை.
பதிலளிநீக்குஇலவச மென்பொருட்களைத் தரவிறக்குமுன் யோசிக்க வேண்டுயவை என்னென்ன என்று சுட்டிக்காட்டியிருப்பதற்கு நன்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.
பதிலளிநீக்குஎதெற்கெடுத்தாலும் இலவசம் என்று அலைபவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த விழிப்புணர்வு கட்டுரை இது!
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் பகிர்வுகள்..
பதிலளிநீக்குசில நாட்களாக உங்கள் பதிவுக்கு வர முடியவில்லை. நான் பெரும்பாலும் கூகிள் க்ரோம் உலவியை உபயோகிக்கிறேன். உங்கள் வலையும் இன்னுன் சில வலைகளும் முழுவதும் வராமல் தொல்லை கொடுக்கிறது. இப்போது மொஜில்லா ஃபைர்ஃபாக்ஸ் மூலம்தான் வந்தேன். பிரச்சினை எங்கே என்று தெரியவில்லை. இதுவரை நான் எந்த மென் பொருளையும் பணம் கொடுத்து தரவிறக்கியதில்லை. So far so good.
உங்கள் உலவியில் ஏதாவது Addon புரொக்ராம்கள் தடைபட்டிருக்கலாம்.
நீக்குஉங்கள் கணிணியில் ஆன்டிவைரஸ் புரொக்ராம் நிறுவியிருக்கிறீர்களா?
இந்தப் பிரச்சினை சமீபத்தில் வந்தது என்றால் Restore option ஐ பயன்படுத்தி முந்தின நாளைக்கு செல்லலாம்.
அல்லது கூகுள் குரோம் உலவியை uninsall செய்து விட்டு மீண்டும் நிறுவலாம்.
அல்லது மொசில்லா பயர்பாக்சையே கொஞ்ச நாளைக்கு உபயோகிக்கலாம்.
என்னுடைய பிளாக்குடன் வேறு சில பிளாக்குகளும் தெரிவதில்லை என்கிறீர்கள். அந்த பிளாக்குகள் ஒன்றிரண்டு லிஸ்ட் கொடுக்க முடியுமா?
உண்மைதான்... இலவசங்களை எல்லாம் உபயோகித்து கணினியை கெடுத்துவிடக் கூடாது.
பதிலளிநீக்குஎனது கணணி முடங்கி விட்டது .கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய ஓன்று .
பதிலளிநீக்குநான் ஏதும் செய்யவில்லையே? எப்படி முடங்கியது, உடனே கவனியுங்கள்.
நீக்குஅவசியமில்லாத மென்பொருள்களை தரவிறக்கம் செய்து தலைவலியை வாங்கிக் கொள்ள கூடாதுதன்.நன்று சொன்னீர்கள்
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா.