ஞாயிறு, 13 ஜூன், 2010

நான் வம்பினில் சிக்கினேன்

 
வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜம்பம் பிரசித்தி பெற்றது. இதனால் நான் எப்படி வம்பில் சிக்கினேன் என்று பார்க்கலாமா?
நான் நிலக்கடலை ஆராய்ச்சிப் பண்ணையில் சேரும்போது கடலைக்காய் அறுவடைக்காலம். கடலைக்காயில் இரண்டு வகை உண்டு: 1. குத்துக்காய்
2. கொடிக்காய். குத்துக்காய் அறுவடை செய்வது சுலபம். மண்ணில் சரியான ஈரப்பதம் இருக்கும்போது செடியைப்பிடித்து இழுத்தால் செடி வேருடனும் காய்களுடனும் வந்து விடும். மண்ணுக்குள் அதிகம் காய்கள் நிற்காது. ஆனால் கொடிக்காய் தரையோடு படர்ந்திருக்கும். அதை மம்மட்டி அல்லது களைக்கொத்து கொண்டு வெட்டித்தான் பிடுங்கவேண்டும். அப்படியும் பல காய்கள் மண்ணிற்குள் நின்றுவிடும். இதற்கு அதிகம் ஆட்கள் தேவைப்படும்.
இதற்காக கோயமுத்தூர் விவசாய பொறியியல் துறையில் டிராக்டரில் பொருத்தக்கூடிய கருவி ஒன்று கண்டு பிடித்திருந்தார்கள். அதைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக எங்கள் பண்ணைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதை கொண்டுவந்திருந்த டிராக்டர் டிரைவர் எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்தவன். என்னை விட 10 வயது மூத்தவன். அதிகமாக சர்வீஸ் போட்டவன். அதனால் அவன் என்னுடன் கொஞ்சம் உரிமையுடன் பழகுவான். அவன் சொன்ன ஒரு அறிவுரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருந்தது.
இப்படி கொஞ்சம் நெருக்கமானபடியால் ஒரு நாள் பக்கத்திலுள்ள ஒரு ஹோட்டலுக்கு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்தோம். நான் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவன். ஒரு நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆபீஸ் நடைமுறைகள், சர்வீஸ் ரேங்குகள், சமூக அந்தஸ்து வித்தியாசங்கள் இவைகளில் எல்லாம் எந்த அனுபவங்களும் இல்லாதவன். ஆனால் வேட்டைக்காரன்புதூர் மக்களுடைய பார்வையில் நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர். நான் ஒரு டிரைவருடன் சேர்ந்து காபிக்கடைக்குப் போய் டிபன் சாப்பிட்டது மாபெரும் அகௌரவமான செயல். தனியாகக்கூட நான் காபிக்கடைக்குப் போய் அங்கு வரும் பாமர கூலித்தொழிலாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. எது வேண்டுமென்றாலும் ஆள் அனுப்பி வேண்டியதை வாங்கிக்கொண்டு வரச்செய்து ஆபீசில் என்னுடைய அறையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும்இப்படியிருக்க நான் என்னைவிட பல படிகள் கீழே உள்ள ஒரு டிரைவருடன் எப்படிப்போய் காப்பிக்கடையில் சாப்பிடலாம் என்பது ஒரு பெரிய செய்தியாகி விட்டது.  


இதை என்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்கள் வந்து சொன்னார்கள். அப்போதுதான் புரிந்தது, கிராமம் என்றால் என்ன என்று. பிறகு சுதாரித்துக்கோண்டேன். வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜபர்தஸ்தை போகப்போக புரிந்து கொண்டேன். அவர்கள் வீடுகளெல்லாம் மிகப்பெரியதாய் இருக்கும். ஒவ்வொருவர் வீட்டு மெயின் ஹாலிலும் ஆளுயரத்திற்கு இரண்டு யானைத் தந்தங்கள் ஒரு ஸ்டேண்டில் பொருத்தி வைத்திருப்பார்கள். அவர்களை வேலைக்காரர்கள் எல்லாம் பார்த்து பேசவே மாட்டார்கள். எல்லாம் கணக்குப்பிள்ளை அல்லது மேஸ்திரி மூலமாகத்தான் நடக்கும்.
இது மாதிரி தஞ்சாவூரில் வேலை பார்த்தபோதும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். நேரில் பார்த்தது இல்லை. அங்கு ஒரு பெரிய மிராஸ்தார். அவர் எப்பொழுதும் அவர் வீட்டு மாடியில்தான் இருப்பார். அவரைப் பார்க்க வருபவர் யாராயிருந்தாலும் மாடிக்குச்சென்றுதான் பார்க்கவேண்டும். மாடியில் ஒரு சேர்தான் உண்டு. அதில் அவர் உட்கார்ந்திருப்பார். வருபவர்கள் நின்று கொண்டுதான் அவரைப் பார்த்து பேசிவிட்டுப் போகவேண்டும். ஒருக்கால் யாராவது ரொம்பப் பெரிய மனுஷன் (கலெக்டர் மாதிரி) வந்துவிட்டால், அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். இது எப்படி இருக்கு?
தொடரும்….


15 கருத்துகள்:

  1. //அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். //

    நல்லா எழுதுறீங்க.. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் மாலை வேளையில் வீட்டு மாடியில் பேசிக்கொண்டிருப்பார் பெரியவர். அவரை ச்சுற்றி வித விதமான நாற்காலிகள் இருக்கும் (முக்காலி, ஸ்டூல், நாலு பேர் உட்காரும் விதமான மரபெஞ்ச், கைப்பிடி வைத்த/வைக்காத நாற்காலிகள், குஷன் வைத்த நாற்காலிகள், ஸ்டீல் நாற்காலிகள் போன்றதெல்லாம்). வீட்டுக்குள்ள இருக்கிறதை விதவிதமாக் கொண்டு வந்து போட்டிருப்பாங்க அவ்வளவுதான். ஸ்பெஷலா வாங்கிறதெல்லாம் இல்லை..

    யாராவது வீடு தேடி வந்தால் அவரை உட்கார வைக்கும் இடத்தைப் பொறுத்து அவருக்கும் இவருக்கும் என்ன உறவென்று கண்டுபிடிக்கலாம்.. சிலரை, வந்த உடனேயே பேசி அனுப்பிவிடுவார்

    பதிலளிநீக்கு
  2. சீமாச்சு சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புதைக்கும் போது ஏசி ரூம் கேட்டு இருபாரோ...

    பதிலளிநீக்கு
  4. //தஞ்சாவூரில் வேலை பார்த்தபோதும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். நேரில் பார்த்தது இல்லை//

    பண்ணையார்கள் செயல் அப்படித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. ***அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். இது எப்படி இருக்கு?***

    பரவாயில்லைங்க! நல்லாவே இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள கந்தசாமி ஐயா,
    நான் ஒரு கவுண்டன் தான்,நானும் வேட்டைக்காரன் புதூர்தான்,ஆனால் எனக்கு தெரிந்து சிலரெ இப்படி கவுரவம் பார்க்கின்றனர்,எனக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் நண்பர்கள் உள்ளனர்,நான் அவர்களுடன் சேர்ந்து டாஸ்மாக்குக்கே செல்வேன்,தயவு செய்து ஜாதி என்னும் மாட்டை அடித்து விரட்டுங்கள்,

    பதிலளிநீக்கு
  7. இன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    பதிலளிநீக்கு
  8. //என்னை விட 10 வயது மூத்தவன். அதிகமாக சர்வீஸ் போட்டவன். அதனால் அவன் என்னுடன் கொஞ்சம் உரிமையுடன் பழகுவான். அவன் சொன்ன ஒரு அறிவுரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருந்தது//

    //அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். //

    How come you can insult an elder in singular form? At the same time telling ill of others.

    You Hypocrite.

    பதிலளிநீக்கு
  9. Samy said:

    //என்னை விட 10 வயது மூத்தவன். அதிகமாக சர்வீஸ் போட்டவன். அதனால் அவன் என்னுடன் கொஞ்சம் உரிமையுடன் பழகுவான். அவன் சொன்ன ஒரு அறிவுரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருந்தது//

    //How come you can insult an elder in singular form?//

    You have not correctly comprehended the true meaning of my remarks . If two people behave with liberty, they usually address each other in a singular form. This is never meant to be an insult? Consult some seniors who will put you in the right perspective.

    //அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். //

    // At the same time telling ill of others.//

    Telling lies about somebody can only be called as telling ill of others. How can telling a truth become "telling ill of others"? I am of the opinion that you suffer from some sort of prejudice. Better to avoid it.

    பதிலளிநீக்கு
  10. Samy,
    I tried to see your profile which is not available. So you are a coward hiding behind a mask. I have to tell you that your comments will not be published in my blog.

    பதிலளிநீக்கு
  11. @கவுண்டர்
    ..
    நிகழ்வு நன்றாக் இருக்கிறது..
    நிறைய எழுதுங்கள் சார்....





    @Samy said...
    How come you can insult an elder in singular form? At the same time telling ill of others.
    //

    அய்யா சாமி..எதுக்கு குதிக்கிறீங்க?..
    அவரு என்னா, தப்பா சொல்லியிருக்காரு?...

    அடுத்தவரை குறை சொல்லும்முன்,
    மொதல்ல ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு..உம்மோட கருத்துக்களை எழுதும்.
    சும்மா ஏதோ ஒரு பேரை வெச்சுக்கிட்டு சலம்ப வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  12. இந்த பதிவை படிக்கும்போது எனக்கு வேறொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தின் தலைசிறந்த திரைப்பட நிறுவனமான (அட, AVM இல்லீங்கோ) மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி திரு சுந்தரம் அவர்களும் இப்படித்தானாம். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது அவருக்கு மட்டுமே ஒரு நாற்காலி இருக்குமாம். வேறு யார் வந்தாலும் (கண்ணதாசன், கருணாநிதி தவிர்த்து) நின்ருக்கொண்டுதான் பேச வேண்டுமாம்.

    அதற்காக அவரை பற்றி தவறாக நினைக்க வேண்டாம். அப்படி செய்ய ஒரு காரணம் உண்டு. திரைப்பட ஷூட்டிங்கில் வேறு யாராவது வந்து சாவகாசமாக உட்கார்ந்துக் ஒண்டு பேசி தன்னுடைய நேரத்தை வீணடிப்பதை சுந்தரன் அவர்கள் விரும்ப மாட்டாராம். அதனால் தான் அப்படி.

    தொடர்ந்து எழுதுங்கள் சார். சுவாரஸ்யமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. பின்னூட்டம் இட்ட ராசராச சோழன், அமைதி அப்பா, வருண், அனானி, பட்டாபட்டி, கிங் விஸ்வா அனைவருக்கும் நன்றி பல.

    எல்லோருக்கும் தனித்தனியாக பதில் போட ஆசைதான்.

    நான் எவ்வளவுதான் முயன்று ஜாதி, இன, மத வாதங்களைத் தவிர்க்க விரும்பி எழுதினாலும் ஏதாவது ஒரு விதத்தில் சிலர் தாக்குகிறார்கள். பொது அரங்கில் ஆடவந்த பிறகு விமரிசனங்களுக்கு கலங்கக்கூடாது என்று அறிவு கூறினாலும், மனது சஞ்சலப்படுவதை நிறுத்த முடியவில்லை. மனம் சோர்வடைகிறது. அதனால்தான் இந்த பின்னடைவு.

    அதற்காக பதிவுகள் போடுவதை நிறுத்த மாட்டேன். பொருத்தருள்க.

    பதிலளிநீக்கு
  14. உங்க வேதனையை நானும் ஆனைமலையில் அனுபவித்திருங்கங்க.

    பதிலளிநீக்கு
  15. தாராபுரத்தான் சொன்னது:

    //உங்க வேதனையை நானும் ஆனைமலையில் அனுபவித்திருங்கங்க.//

    வாழ்க்கையின் பல கட்டங்களில் பலவிதமான அனுபவங்களைப் பெற்றதினால்தான் இன்று நிம்மதியாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு