ஞாயிறு, 20 ஜூன், 2010

நூறாவது மொக்கை
ஒரு நாள் நான் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாசலில் திடீரென்று சப்தம்.

மாமோய் மாமோய், இங்க வாங்க, இந்த மூட்டைய ஒரு கை புடிங்க

என்னமோ ஏதோன்னு போய்ப் பார்த்தா ஊரிலிருந்து என் மச்சினன் ஆட்டோவிலிருந்து இறங்கி ஒரு மூட்டைய இறக்கிக்கொண்டு இருக்கிறான். மூட்டைய இறக்கிட்டு பார்த்தா மச்சினனையையும் காணோம். மூட்டையையும் காணோம். உள்ள இருந்து சத்தம் மட்டும் கேக்குது. “மாமோவ், அந்த ஆட்டோக்காரனுக்கு வாடகையை கொடுத்து அனுப்பிச்சுட்டு வாங்கஅப்படீன்னு. காலங்காத்தால வம்பு என்னத்துக்குன்னு வாடகையைக் கொடுத்து ஆட்டோவை அனுப்பிச்சுட்டு வந்தா, அக்காளும் தம்பியும் குசுகுன்னு என்னமோ பேசீட்டு இருந்தாங்க. என்னப்பாத்ததும் பேச்ச நிறுத்தீட்டாங்க.

நான்: என்ன மாப்பிள்ள, திடீர்னு இந்தப்பக்கம் வந்திருக்கிறீங்க, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” 


(அப்படீன்னு கேட்டுட்டு திருப்பியும் கம்ப்யூட்டர் முன்னால வந்து உக்கார்ந்தேன். மச்சின்னும் வந்து பக்கத்துல அடக்க ஒடுக்கமா நின்னான். அவன் நிக்கிரதப்பாத்தவுடனே ஏதோ வில்லங்கம் வரப்போகுதுன்னு நெனச்சேன். மேல படீங்க)

மச்சினன்: மாமோவ் என்ன பண்ணீட்டிருக்கீங்க?

நான்:  மாப்பிள்ள இதுதான் கம்ப்யூட்டரு. அதுல நானு அப்பிடியே ஏதாச்சும் பண்ணீட்டிருப்பேன்.

மச்சினன்: என்ன பண்றீங்க, எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன், நானும் தெரிஞ்சுக்கறேன்.

நான்: மாப்பிள்ள, இதுல இன்டர்நெட்டுனு ஒண்ணு இருக்கு, அதுல இல்லாத வசயமே ஒலகத்துல இல்ல, அத த்தான் நான் பாத்துட்டிருக்கேன்.

மச்சினன்: ஆமாங்க, மாமா, அதுதான் பேப்பர்லயே எல்லா நியூசும் வருதே, அப்பறம் இதுல எச்சா என்ன பாப்பீங்க.

நான்: அட மட மாப்பிள்ள, இதில வலைப்பதிவுன்னு ஒண்ணு இருக்கு. அதுல போய் பாத்தா நெறய விசயத்தைப்பத்தி நெறயப்பேரு விதவிதமா எழுதியிருப்பாங்க, அதயெல்லாம் படிச்சா நெறய விசயம் தெரிஞ்சிக்கலாம் மாப்பிள்ள.

மச்சினன்: அப்படீங்களா மாமா, நீங்களும் எதாச்சும் எழுதறீங்களா மாமா

நான்: ஆமாம் மாப்பிள்ள, நானும் மூணு வலைத்தளம் வச்சிருக்கேன்.

அதுங்கள்ல எழுதினா ஏதாச்சும் பணங்காசு வருமுங்களா.

நான்: பணமெல்லாம் ஒண்ணும் வராதுடா மாப்பிள்ள

மச்சினன்: அப்பறம் எதுக்கு விடிய விடிய இதுல உக்காந்து கண்ணைக் கெடுத்துக்கிறீங்க.


நான்: உங்க அக்கா சொல்லிக் குடுத்துட்டாளாக்கும். நாலு பேரு படிச்சுட்டு நல்லா எழுதீருக்கீங்கன்னு சொன்னா சும்மா தலை குளுகுளுன்னு ஆகுதில்ல, அதுக்குத்தான் மாப்பிள்ள எழுதறது.

மச்சினன்: இப்படி எழுதறவங்கள எல்லாம் எங்கயாச்சும் நேர்ல பாத்துப்பீங்களா

நான்: சில பேரு பாத்துப் பேசீக்குவாங்க. நானு யாரையும் பாத்ததில்லே.

மச்சினன்: அப்படிப் பாக்கறப்போ என்ன பேசீப்பாங்க மாமா

நான்: பொதுவா அவங்க எல்லாம் பெரிய ஓட்டல்லதான் சந்திப்பாங்க. அப்படியே எதாச்சும் வாங்கி குடிச்சுட்டே மூணு நாலு மணி நேரம் பொது சமாசாரங்களப் பேசீட்டிருப்பாங்க.

அத்தன நேரம் என்ன குடிப்பாங்க மாமா

நான்: பீரு, பிராந்தின்னு என்னென்னமோ வாங்கி குடிப்பாங்க.

மச்சினன்: ஏன் மாமா, நீங்களும் அப்படி எங்காச்சும் ஓட்டலுக்கு போவீங்களா?

நான்: பாத்தியா மாப்பிளே, ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, இப்ப என்னையே கடிக்க வந்துட்ட பார்த்தியா? இதுக்குத்தான் மடப்பசங்க கூட எல்லாம் பேசப்படாதூங்கறது.

மச்சினன்: மாமா, மாமா இப்படிக் கோவிச்சுக்கிறீங்களே, நான் சும்மா தமாசுக்கு கேட்டனுங்க மாமா. அது போகட்டும் மாமா. அதென்னமோ பதிவருங்க ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்குவாங்கன்னு அக்காகிட்ட சொன்னீங்களாமே, அது எதுக்கு மாமா இதுல சண்டையெல்லாம் கூட வருமா.

நான்: அதுடா மாப்பிள்ள, டாஸ்மாக்ல நம்மூரு ஆளுங்க குடிச்சுப்போட்டு வரப்போ அதயும் இதயும் பேசி, சண்டை போட்டுவாங்க இல்லியா, அந்த மாதிரி இவுங்களும் ஒவ்வொரு நாளைக்கு சண்டை போட்டுக்குவாங்க. இப்படித்தான் பாரு, ஒரு நாளு ரண்டு பேரு பெரிய ஓட்டல்ல குடிச்சுப்புட்டு வரப்போ ஒருத்தரு இன்னொருத்தரு மூக்கை ஒடச்சுப்புட்டாரு. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போகவேண்டி ஆயிடுச்சு.

மச்சினன்: மாமா, நீங்க எங்காச்சும் போயி இந்த மாதிரி வில்லங்கத்துல மாட்டிக்காதீங்க மாமா, அப்பறம் ஊர்ல என்ற மானம் மரியாதியெல்லாம் கப்பல்ல ஏறீடும் மாமா.

நான்: அட மடப்பயலே, நானு அப்படியெல்லாம் போகமாட்டேண்டா.

மச்சினன்: அது சரீங்க மாமா, அக்கா சொல்றமாதிரி, இந்தக்கருமத்துக்கு ஒரேயடியா தல முளுகிட்டு வேற வேல பாக்கலாமில்லீங்களா மாமா, ஏன் இந்தக் களுதையப் புடிச்சுட்டு அளுகிறீங்க.

நான்: அப்படி இல்ல, மாப்பிள்ள, இப்ப நானு இத உட்டுட்டுப் போறேன்னு வச்சுக்கோ, அப்பறம் நாலு பேருபயந்தாங்குள்ளிஅப்படீம்பாங்க. அதுவுமில்லாமெ ரிடைர்டு ஆன பொறகு பொளுது போறதுக்கு வேற என்ன பண்ணறது? நாலு பேரு அடிச்சுக்கற பாத்தா அப்படியே பொளுது நல்லா போயிருதில்ல.

மச்சினன்: அப்படீங்களா மாமா, எதுக்கும் அக்கா மனசு நோகறாப்பல எதையும் செஞ்சுடாதீங்க. வயசான காலத்துல அக்கா கண்ணுல தண்ணி வரப்படாதுங்க.

நான்: அதெல்லாம் ஒங்க அக்காளை பூப்போஙதான் வச்சுட்டிருக்கனப்பா, நீ எதுக்கும் கவலைப்படாத.

மச்சினன்: சரீங்க மாமா, ஊர்ல வேலைகளையெல்லாம் அப்படியப்படியே போட்டுட்டு ஓடியாந்தனுங்க. நானு ஒடனே ஊருக்குப் போகோணுங்க, போயிட்டு அப்பறமா ஒரு நளைக்கு சாவகாசமா வரணுங்க.

நான்: சரிப்பா, போயிட்டு வா. ஒங்கம்மா கிட்ட சொல்லு, மாமா நல்லாத்தான் இருக்கறாரு, அக்காதான் சும்மா மனசப்போட்டு அலட்டீக்குது அப்படீன்னு, சரியா.

45 கருத்துகள்:

 1. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. எப்படியோ பொழுதை போககுன்னா சரி..சரிங்க மாப்பிள்ளைக்கு கோழி..கீழி.. அடிச்சீங்களா? 100க்கு வாழ்த்துங்க.

  பதிலளிநீக்கு
 3. நூறு பதிவுக்கு நூறு வாழ்த்துக்கள். கலக்கிப்புட்டீங்க டாக்டர்.

  பதிலளிநீக்கு
 4. LK said:

  //நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

  நன்றி எல்.கே.அவர்களே.

  பதிலளிநீக்கு
 5. தாராபுரத்தான் சொன்னது:

  //எப்படியோ பொழுதை போக்குனா சரி..சரிங்க மாப்பிள்ளைக்கு கோழி..கீழி.. அடிச்சீங்களா? 100க்கு வாழ்த்துங்க. //

  வாழ்த்துக்கு நன்றிங்க.

  நம்மூட்டு அம்மா சுத்த சைவங்க. கோழி அடிச்சா நான்தான் கொழம்பு வைக்கோணுங்க. அதான் நாம கம்ப்யூட்டரே கதின்னு கிடக்கறதாச்சே, அப்பறம் கோழி எப்படி அடிக்கறதுங்க?

  பதிலளிநீக்கு
 6. Phantom Mohan said:

  //நூறு பதிவுக்கு நூறு வாழ்த்துக்கள். கலக்கிப்புட்டீங்க டாக்டர்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ஏந்தம்பி, மொளச்சு மூணு எலை உடலே, அதுக்குள்ள நீங்க கலக்காத கலக்கலா? அதுக்கு முன்னாடி நம்மது ஒண்ணுமே இல்லைங்க.

  பதிலளிநீக்கு
 7. பாவம் உங்க மாப்பிள்ளை டரியல் ஆகிப் போய் இருப்பார். இப்படி பயப்படுத்தி இருக்க வேண்டாம்.
  :)

  100க்கு வாழ்த்துகள் ஐயா !

  பதிலளிநீக்கு
 8. சார்,

  நூறு , வெகு சீக்கிரம் ஆயிரமாக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. கோவி.கண்ணன் சொன்னது:

  //பாவம் உங்க மாப்பிள்ளை டரியல் ஆகிப் போய் இருப்பார். இப்படி பயப்படுத்தி இருக்க வேண்டாம்.
  :)

  100க்கு வாழ்த்துகள் ஐயா !//

  மிக்க நன்றி கண்ணன்.

  மாப்பிள்ள ஊர்ல போயி என்ன சொன்னாரோ தெரியலீங்க, இண்ணிக்கு ஒரு பெருங்கூட்டமே வர்ரதா தகவல் வந்திருக்குதுங்க.

  பதிலளிநீக்கு
 10. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  முடிவு சரியா அமையலையே?

  பதிலளிநீக்கு
 11. King Viswa said:

  //சார்,

  நூறு , வெகு சீக்கிரம் ஆயிரமாக வாழ்த்துக்கள்.//

  ரொம்ப ரொம்ப நன்றி, விஸ்வா,

  நூறு பதிவுக்கு ஒன்றரை வருடம் ஆயிற்று. இன்னும் 900 பதிவிற்கு ஏறக்குறைய பதிமூன்றரை வருடம் ஆகும். அவ்வளவு நாள் வாழ வாழ்த்தியதிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

  பதிலளிநீக்கு
 12. சி.கருணாகரசு சொன்னது:

  //நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  முடிவு சரியா அமையலையே? //

  நன்றி, கருணாகரசு.

  பதிவு போட்டு நாளாயிடுச்சுங்கற அவசரத்துல கற்பனை வறண்டு போச்சுங்க.

  உங்க ஐடியா எதாச்சும் இருந்தா சொல்லுங்க. அடுத்த பதிவுல சேத்துடறேன்.

  பதிலளிநீக்கு
 13. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  பல நூறுகளை விரைவில் எட்ட வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. Dr.M.K.முருகானந்தம் said:

  //நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  பல நூறுகளை விரைவில் எட்ட வாழ்த்துகிறேன். //

  வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் ஆரூடம் பலிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துகள்!
  நகைச்சுவையாக இருந்தாலும் நீங்கள் வலைபதிவர்களை பற்றி சொன்னதெல்லாம் உண்மைதான் :)

  பதிலளிநீக்கு
 16. Robin said:

  //வாழ்த்துகள்!
  நகைச்சுவையாக இருந்தாலும் நீங்கள் வலைபதிவர்களை பற்றி சொன்னதெல்லாம் உண்மைதான் :)//

  நன்றி ராபின்.

  என்னங்க, நம்ம வலையுலக ரகசியத்தைப்பற்றி இப்படி படார்னு போட்டு உடைச்சிட்டீங்க.

  இப்ப சொல்றேன், நல்லாக் கேட்டுக்குங்க. எல்லாரும் நல்லவங்க, என்ன, அப்பப்ப சகோதர, சகோதரி பாசம் அதிகமாய்ப்போகும். அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கலாமா?

  பதிலளிநீக்கு
 17. டாக்டர் சார் கேக்கணும்ன்னு நெனச்சு மறந்து போயிட்டேன்! மத்த ரெண்டு போட்டோ ஓகே, குஷ்பூவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

  பதிலளிநீக்கு
 18. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  Sri....

  பதிலளிநீக்கு
 19. வேலுவுக்கும் ஸ்ரீக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 20. Phantom Mohan said:

  //டாக்டர் சார் கேக்கணும்ன்னு நெனச்சு மறந்து போயிட்டேன்! மத்த ரெண்டு போட்டோ ஓகே, குஷ்பூவுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்?//

  மாப்புள்ள, ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, கடைசீல நம்ம கிட்டயே வந்துட்ட பாத்தியா?

  ஆமா, குஷ்பூன்னா அது என்ன பூ, நான் பாத்ததேயில்லையே?

  பதிலளிநீக்கு
 21. வாழ்த்துக்கள் டாக்டர் ...
  தொடர்ந்து ரெட்டை சதம் விரைவில் அடியுங்கள் ...
  மீண்டும் வாழ்த்துக்கள் வணக்கங்களுடன் !

  பதிலளிநீக்கு
 22. அமைதி அப்பா, நியோ.

  தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 23. சதம் அடித்தமைக்கு வாழ்த்த்துக்கள்... கலக்கிட்டிங்க...

  பதிலளிநீக்கு
 24. சந்ரு சொன்னது:

  //சதம் அடித்தமைக்கு வாழ்த்த்துக்கள்... கலக்கிட்டிங்க... //
  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, சந்ரு.

  பதிலளிநீக்கு
 25. அருமையான விடயங்கள் ,, அத்துடன் சென்சரிக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. சதத்திற்கு வாழ்த்துக்கள்.பார்த்துக்கொண்டே இருங்கள்.உங்கள் மாப்பிள்ளையும் வெகு விரைவில் ஒரு வலைப்பூ பின்னி விடுவார்.

  பதிலளிநீக்கு
 27. ஸாதிகா சொன்னது:

  //சதத்திற்கு வாழ்த்துக்கள். பார்த்துக்கொண்டே இருங்கள்.உங்கள் மாப்பிள்ளையும் வெகு விரைவில் ஒரு வலைப்பூ பின்னி விடுவார். //

  நன்றி சகோதரி - நியாயமா என் வயசுக்கு மகளே என்றுதான் கூறவேண்டும். இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்.

  வலையுலக நடைமுறைப்படியும், உலக தடைமுறைப்படியும், அந்த வலைப்பூவை நான்தான் பின்னி பூச்சூடவேண்டும். :-)

  பதிலளிநீக்கு
 28. "பிரபாவுக்கும்", "வெறும்பயலு"க்கும் நன்றி.

  "வெறும்பய"ன்னு எழுதறதுக்கு ரொம்ப வேதனையாயிருக்கு தம்பி.

  பதிலளிநீக்கு
 29. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  இன்னும் தூங்காம முழிச்சிருந்து அசத்துங்க டாக்டர் பதிவுலகத்தில்..

  பதிலளிநீக்கு
 30. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு பதிவுகள் எழுதுங்கள் - படிக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 31. அய்யா..

  100 வது இடுகைக்கு வாழ்த்துகள். (வாழ்த்துச் சொல்ல வயசில்லை.. இருந்தாலும் வலையுலக நடைமுறைப்படி சொல்லிப்புட்டோமுங்க..)

  ஒன்னரை வருடத்தில் 100 ஒரு சாதனைதாங்க... இங்க 60+ க்கே முக்கி முனகிகிட்டு இருக்கோமுங்க..

  பதிலளிநீக்கு
 32. அப்புறம் ஒரு சிறிய திருத்தம்... கோச்சுகிடாதீங்க...

  இது 100 விசேஷ இடுகை என்று இருக்க வேண்டுமுங்க...

  பதிவு / வலைப்பதிவு / வலைப்பூ = blog

  இடுகை = post.

  தங்களின் வலைப்பூவில் / பதிவில் / வலைப்பதிவில் இது 100 இடுகை.

  நன்றி : பழமைபேசி ஐயா

  பதிலளிநீக்கு
 33. //நாலு பேரு அடிச்சுக்கற பாத்தா அப்படியே பொளுது நல்லா போயிருதில்ல.//

  குசும்பு நல்லாதான் இருக்கு

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. போட்டோவுல ஒரு அம்மினி யாருங்க அது ?...!!

  பதிலளிநீக்கு
 35. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்:).

  பதிலளிநீக்கு
 36. இராகவன் நைஜீரியா சொன்னது:

  //அப்புறம் ஒரு சிறிய திருத்தம்... கோச்சுகிடாதீங்க...

  இது 100 விசேஷ இடுகை என்று இருக்க வேண்டுமுங்க...

  பதிவு / வலைப்பதிவு / வலைப்பூ = blog

  இடுகை = post.

  தங்களின் வலைப்பூவில் / பதிவில் / வலைப்பதிவில் இது 100 இடுகை.//

  இதுல கோவிக்கறதுக்கு என்னங்க இருக்கு.

  சில திரட்டிகளில் "பதிவை இணைக்க" என்று கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் அந்த சொல்லை உபயோகித்தேன். "பதிவு = இடுகை = Post " என்றுதான் இன்னமும் நம்புகிறேன். நான் தவறாக இருக்கலாம். பதிவுலக நண்பர்கள் யாராவது விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 37. ஜெய்லானி சொன்னது:

  //போட்டோவுல ஒரு அம்மினி யாருங்க அது ?..//

  ஏனுங்க இது குசும்பில்லாம வேற என்னங்க? ஒரு கவுண்டிச்சி அம்மா படம் அந்த எடத்துல தேவைப்பட்டது. கூகுளில் பார்த்தப்ப இந்தப் படம்தான் கெடச்சுது. அப்பறம்தான் தெரிஞ்சுது அது குஷ்பு அம்மான்னு. ஆனாலும் படம் அம்சமா பொருத்தமா இருக்குது இல்லீங்களா?

  பதிலளிநீக்கு
 38. பழமை பேசி, வானம்பாடிகள், வேலு.ஜி, வெங்கட் நாகராஜ், அன்புடன் மலிக்கா, இராகவன் நைஜீரியா, ஜெய்லானி ஆகிய அனைவருக்கும் அவர்களுடைய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 39. உங்க நூறாவது மொக்கையைப் படிச்சு எனக்கு தூக்கம் போச்சு!!
  நான் நிம்மதியா குறட்டை விட்டு தூங்கற தூக்கம் நீங்க சொல்ற பதில்ல தான் இருக்கு. என் கேள்வி இதோ:

  அந்த மாப்பிள்ள கொண்டு வந்த மூட்டைல என்ன இருந்தது?

  பதிலளிநீக்கு
 40. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சொன்னது:

  //உங்க நூறாவது மொக்கையைப் படிச்சு எனக்கு தூக்கம் போச்சு!!
  நான் நிம்மதியா குறட்டை விட்டு தூங்கற தூக்கம் நீங்க சொல்ற பதில்ல தான் இருக்கு. என் கேள்வி இதோ:

  அந்த மாப்பிள்ள கொண்டு வந்த மூட்டைல என்ன இருந்தது?//

  அய்யய்யோ, அது பெரிய தேவலோக ரகசியம் ஆச்சுங்களே, அதச்சொல்லோணும்னா ஏகப்பட்ட பேரு கிட்ட பர்மிசன் வாங்கோணுமுங்களே?

  இருந்தாலும் தூங்க முடியலைன்னு சொல்றீங்க, காத கிட்ட கொண்டு வாங்க, சொல்றேன். கிராமத்துலே இருந்து கொண்டுவர மூட்டையில என்ன பணமா இருக்கும், கத்தரிக்காயும் வெண்டைக்காயும் வாளக்காயும்தான் இருக்கும். ஆனா, இன்னிக்கு காய்கறி விக்கிற வெலைல அதுக பணத்துக்கு மேலதான்.

  பதிலளிநீக்கு