ஞாயிறு, 6 ஜூன், 2010

நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை, ஆனைமலை. பாகம் - 1


நான் இந்தப் பண்ணையில்தான் என்னுடைய முதல் வேலைக்கு சேர்ந்தேன் என்று சொல்லியிருக்கிறேன். கூடவே என்னுடைய வகுப்புத்தோழனும் சேர்ந்திருந்தான். அவனுக்கும் எங்களுடைய மேல் அதிகாரிக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால், தன்னுடைய பாட்டிக்கு உடம்பு சரியில்லைஎன்று தந்தி வரவழைத்து, லீவு போட்டுவிட்டுப் போய்விட்டான். என்னுடைய மேல் அதிகாரியும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார். நான் ஒருவனாக எல்லா வேலைகளையும் பார்த்ததில் எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லாமல் போய் (டைபாய்டு காய்ச்சல்) லீவில் போகவேண்டியதாய் விட்டது. கணக்கு வழக்குகளெல்லாம் முடிக்கவில்லை.

இதற்கிடையில் என் அதிகாரி டூட்டியில் சேர்ந்துவிட்டார். நான் உடம்பு சரியில்லாமல் லீவீல் போனது உண்மைதானா என்று பார்ப்பதற்காக என் வீட்டிற்கும் ஒரு முறை வந்து போனார். கணக்கு வழக்குகளை தான் சரி செய்வதாகக் கூறிவிட்டு சென்றார். நான் ஓரளவு நிம்மதியடைந்தேன்.

இரண்டு மாதத்தில் என் உடம்பு சரியானது. டூட்டியில் சேர்ந்தேன். எனக்கு சாப்பாடு செய்து போடுவதற்காக என்னுடைய பாட்டியையும் அழைத்து வந்து விட்டேன். ஒரு வீடு பார்த்து செட்டில் ஆனோம். காலையில் 8 மணிக்குப் போய் ஆபீசரைப் பார்த்தேன். பண்ணைக்குப்போய் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு விட்டு மதியத்திற்கு மேல் ஆபீசுக்கு வரச்சொன்னார்.

பண்ணைக்குப்போனால் அங்கு ஒரு ஆச்சரியம் ! என்னுடைய வகுப்புத் தோழன் அங்கே இருந்தான். பண்ணை ஆபீசுக்கு வெளியில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனிடம் நீ பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லையா என்று கேட்டேன். ஏனென்றால் சீனியாரிட்டி பிரகாரம் அவன்தான் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லை, எனக்கு பொறுப்பு கொடுக்கவில்லை என்றான். இது என்ன புது குழப்பம் என்று சிறிது நேரம் குழம்பிவிட்டு, பிறகு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதாக கையெழுத்து போட்டேன். அது வரை பொறுப்புகளை எங்களுக்கு கீழ் பதவியில் இருந்த ஒருவன் வைத்துக்கொண்டு இருந்தான். சாதாரணமாக இப்படி நடப்பது நடைமுறை இல்லை.

என்ன விவரம் என்று விசாரித்தால், என் வகுப்புத்தோழன் லீவில் போனதே மேல் அதிகாரியுடன் கருத்து வேற்றுமை காரணமாகத்தானே. அது ஏன் என்றால் என் தோழன் கணக்கு வழக்குகளில் கொஞ்சம் தில்லுமுல்லு செய்திருக்கிறான். இது எனக்குத்தெரியாது. (நான் அப்போது சரியான வெள்ளைச்சோளம்). அதை அதிகாரி கண்டுபிடித்ததினால்தான் இவன் லீவு போட்டுவிட்டு ஓடிப்போய்விட்டான். அதனால் அவன் லீவில் இருந்து திரும்பி வந்ததும் அவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை.

அது மட்டுமல்லாமல் அவனை துன்புறுத்தவும் செய்திருக்கிறார். அவனுக்கு எந்தப்பொறுப்பும் கொடுக்கவில்லை. ஆபீசுக்குள்ளும் விடுவதில்லை. தினமும் ஒரு பியூன் அவனுக்கு ஏதாவது ஒரு நொண்டிக்காரணம் காட்டி காலையில் ஒரு மெமோகொண்டுபோய் கொடுப்பான். மாலையில் அதற்கப்பதில் வாங்கி வருவான். இப்படி தினந்தோறும் நடந்து வந்திருக்கிறது. நான் டூட்டியில் சேரும்போது இந்த மெமோ பைல் ஏறக்குறைய நூறு பக்கம் ஆகிவிட்டது. அந்தப் பியூனுக்கு இந்த வேலை ஒன்றுதான். இதைப்பொன்ற அவமானகரமான நிலை வேறு ஒன்றும் இருக்காது.

நாலைந்து நாளில் அவனுக்கு மாற்றல் உத்திரவு வந்துவிட்டது. என் மேலதிகாரிதான் மெட்ராஸ் ஆபீசுக்கு எழுதி இந்த மாற்றல் வந்தது என்று பின்னாளில்தான் எனக்குத் தெரிய வந்தது. இப்படியாக மூன்று மாதத்தில் சர்க்கார் ஆபீஸின் கெடுபிடிகள் அத்துபடியாயின.

28 கருத்துகள்:

  1. ஒரே ஒரு விஷயம் புரியவில்லை. அந்த படம்???

    பதிலளிநீக்கு
  2. // இப்படியாக மூன்று மாதத்தில் சர்க்கார் ஆபீஸின் கெடுபிடிகள் அத்துபடியாயின. //

    சர்க்கார் ஆபிசுகள் இன்னமும் அப்படித்தான் இருக்கு என நினைக்கின்றீர்களா?..

    நிலக்கடலை பண்ணைக்கும், முதலில் போட்டு இருக்கும் படத்திற்கும் என்ன சம்மந்தம்?

    பதிலளிநீக்கு
  3. நன்றாகா போகிறது.
    உங்கள் வகுப்புத் தோழர் பின் நாட்களில் எப்படி இருந்தார்,
    திருந்தி நேர்மையான அதிகாரியாக இருந்தாரா?

    பதிலளிநீக்கு
  4. அய்யா, இது எந்த வருசத்து கதைங்க.
    ஆரம்பத்திலேயே ஒரு ஆள வெளிய தள்ளியாச்சு.

    //(நான் அப்போது சரியான வெள்ளைச்சோளம்). //

    இன்னும் என்னென்ன வெளிய வருமோ.

    பதிலளிநீக்கு
  5. வலைச்சரம் அறிமுகத்தில் இடம்பெற்றதற்கு
    வாழ்த்துக்கள், சார்!

    பதிலளிநீக்கு
  6. தகுடுதத்தம் செய்பவதும்
    பழி வாங்கும் செயலும்
    எங்குமே உண்டுதான் சார்!

    தக்கவர்தான் விழிப்போடு
    இருந்துகொள்ளவேண்டும்.

    இதை பாகம் - 1ல் விளக்கினீர்கள்.
    தொடர்வதற்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சரவணகுமரன் said:

    //ஒரே ஒரு விஷயம் புரியவில்லை. அந்த படம்???//

    நிலக்கடலைச்செடி பார்த்திருக்கீங்களா சரவணன், அந்த சேலை மாதிரி பச்சையாக இருக்கும், அதுக்காகத்தான் சரவணன், ஹிஹிஹி, எப்படி நம்ம சமாளிப்பு.

    பதிலளிநீக்கு
  8. இராகவன் நைஜீரியா சொன்னது:

    //சர்க்கார் ஆபிசுகள் இன்னமும் அப்படித்தான் இருக்கு என நினைக்கின்றீர்களா?..//

    சர்க்கார் ஆபீசுகள் என்றும் மாறாதவை.

    //நிலக்கடலை பண்ணைக்கும், முதலில் போட்டு இருக்கும் படத்திற்கும் என்ன சம்மந்தம்?//

    சரவணனுக்கு போட்டிருக்கும் பதிலைத் தயவு செய்து பார்த்துக்கொள்ளவும் :-)

    பதிலளிநீக்கு
  9. அமைதி அப்பா சொன்னது:

    //நன்றாக போகிறது.
    உங்கள் வகுப்புத் தோழர் பின் நாட்களில் எப்படி இருந்தார்,
    திருந்தி நேர்மையான அதிகாரியாக இருந்தாரா?//

    இல்லை, மேலும் மோசமாகத்தான் போனார், ஆனால் தன் சொந்த வாழ்க்கையில் இப்போது மிகவம் சௌகரியமாக இருக்கிறார். ஆனால் என்னுடைய நிம்மதி அவருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
  10. பட்டாசு சொன்னது:

    //அய்யா, இது எந்த வருசத்து கதைங்க.
    ஆரம்பத்திலேயே ஒரு ஆள வெளிய தள்ளியாச்சு.

    //(நான் அப்போது சரியான வெள்ளைச்சோளம்). //

    இன்னும் என்னென்ன வெளிய வருமோ//

    தம்பி, இந்தக்கதை நடந்தது 1956 ம் வருஷம்.

    நெறய விஷயம் இருக்குது தம்பி, ஆனா ஒண்ணும் தப்பா பண்ணலைங்க.

    பதிலளிநீக்கு
  11. Nizmudeen said:

    //தகுடுதத்தம் செய்பவதும்
    பழி வாங்கும் செயலும்
    எங்குமே உண்டுதான் சார்!

    தக்கவர்தான் விழிப்போடு
    இருந்துகொள்ளவேண்டும்.

    இதை பாகம் - 1ல் விளக்கினீர்கள்.
    தொடர்வதற்காகக் காத்திருக்கிறேன்//

    உலகம் பலவித மனிதர்களால் ஆனது என்பதை விளக்கத்தான் எல்லாவற்றையும் பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. Nizamudeen said:

    //வலைச்சரம் அறிமுகத்தில் இடம்பெற்றதற்கு
    வாழ்த்துக்கள், சார்!//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நிஜாமுதீன்.

    பதிலளிநீக்கு
  13. நடிகைகளின்/ நடிகர்களின் படத்தை போட்டு தான் விவசாயம் patriya பதிவிற்கு வாசகர்களை கொண்டு வர வேண்டும், என்ற எண்ணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    உங்களைப் போன்ற ஒரு படித்த, பண்பு உள்ள பதிவரிடம் நான் இதை எதிர்பார்க்க வில்லை.

    படத்தை முடிந்தால் அகற்றுங்கள், நம் தமிழ் வலைப் பதிவு வாசகர்கள் எல்லா விதமான பதிவுகளையும் விரும்பி படிக்கும் குணம் உள்ளவர்கள்.

    பதிலளிநீக்கு
  14. இத்தோடா !!........பாருங்கையா .......!!!!!!
    நல்ல மனோதத்துவம் தெரிந்தவர்தான் நீங்க !!
    அது சரி........ பதிவுளை வீட்டில் காட்டுவீகளா சார்?

    நல்லாத்தான் கீது !!

    பதிலளிநீக்கு
  15. என்னமோ நடக்குது. புரிந்தும் புரியாமலும் இருக்கு. ஆனால் விறுவிறுப்பாக போகுது. தொடரும்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  16. ஐயா, வலைசர அறிமுகம் என்னை இங்கு வர வைத்தது....மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள்....... அதும் சரவணனுக்கு போட்டிருக்கும் பச்சை கலர் பதில் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  17. சார்,

    நான்கூட பதிவின் தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ "கடலை போடுவது" பற்றிய பதிவோ என்று எண்ணிவிட்டேன். மன்னிக்கவும்.

    அந்த போட்டோவுக்கான சமாளிப்பு சூப்பர் சார். உங்களுக்கு சமாளிப்பு திலகம் என்று பட்டமே கொடுக்கலாம் போங்க.

    சென்ற வாரம் மூன்று நாட்கள் உங்கள் ஊருக்குதான் வந்திருந்தேன். ஆனால் பணிச்சுமை காரணமாக யாரையும் சந்திக்க இயலவில்லை. மறுபடியும் வரும்போது உங்களை சம்திக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  18. ராம்ஜி_யாஹூ சொன்னது:

    //நடிகைகளின்/ நடிகர்களின் படத்தை போட்டு தான் விவசாயம் patriya பதிவிற்கு வாசகர்களை கொண்டு வர வேண்டும், என்ற எண்ணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    உங்களைப் போன்ற ஒரு படித்த, பண்பு உள்ள பதிவரிடம் நான் இதை எதிர்பார்க்க வில்லை.

    படத்தை முடிந்தால் அகற்றுங்கள், நம் தமிழ் வலைப் பதிவு வாசகர்கள் எல்லா விதமான பதிவுகளையும் விரும்பி படிக்கும் குணம் உள்ளவர்கள்.//

    1.என்னைப்பற்றிய நல்ல எண்ணங்களுக்கு மிகமிக நன்றி, ராம்ஜி.

    2.இன்றைய உலகில் கவர்ச்சி எல்லா இடங்களிலும் கோலோச்சி நிற்பதால் அந்தப்படத்தை போட்டுவிட்டேன், மன்னிக்கவும், இனி இதுபோல் செய்வதில்லை.

    3.இந்தப்படத்தைப்பற்றி கமென்ட்டுகள், பதில்கள் போட்டுவிட்டபடியால் இனி அந்தப்படத்தை எடுத்தால் நன்றாக இராது.

    4.தமிழ் வலைப்பதிவு வாசகர்கள் (சில பதிவர்கள் நீங்கலாக) மிகவும் தெளிவானவர்கள் என்னும் உங்கள் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அன்புடன் மலிக்கா சொன்னது;

    //என்னமோ நடக்குது. புரிந்தும் புரியாமலும் இருக்கு. ஆனால் விறுவிறுப்பாக போகுது. தொடரும்ம்ம்ம்ம்ம்ம்//

    ஒண்ணும் இல்லை, மலிக்கா, என்னுடைய பழைய ஞாபகங்களை இங்கே பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

    கொஞ்சம் சிரமம் பார்க்காமல் என்னுடைய பழைய பதிவுகளைப் பார்த்தீர்களானால் தொடர்ச்சி புரிந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  20. கக்கு-மாணிக்கம் சென்னது:

    //அது சரி........ பதிவுளை வீட்டில் காட்டுவீகளா சார்?//

    ஏன் மாணிக்கம், வயசான காலத்துல நான் இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன், அது புடிக்கலயா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
  21. ஜெய்லானி சொன்னது:

    :-))

    வாங்க ஜெய்லானி, ஒரு பிராக்கட் போட்டா ஸ்மைலி, இரண்டாப்போட்டா? என்னங்க என்னத்தேட வச்சுட்டீங்க, கூகுளாண்டவரு கிட்ட இல்லே போகணும்.

    சரி,என்னமோ, நல்லதாத்தான் போட்டிருப்பீங்க, அதனால அத அப்பறம் பாத்துக்கலாம், இப்ப பின்னுகளுக்கு பதில் போடற வேலையைப்பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  22. RR said:

    //அதும் சரவணனுக்கு போட்டிருக்கும் பச்சை கலர் பதில் என்னை மிகவும் கவர்ந்தது.//

    இருபது வருஷம் காலேஜ் பசங்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்கேன். அவங்க பண்ணாத குறும்புகளா? அதயெல்லாம் சமாளிச்ச எனக்கு இது முடியாதுங்களா?

    ஆனா பாருங்க இப்ப ஒரு வம்பாயிப்போயிடுச்சு. நம்ம ராம்ஜி, படத்த எடுத்துடுங்க அப்படீங்கறாரு. படத்த எடுத்தா சரவணனுக்கு குடுத்த பதில் வீணாய்ப்போயிடும்.

    இதுதான் இருதலைக்கொள்ளி எறும்புங்கறது.

    ஏனுங்க, படம் டீசண்ட்டா இல்லீங்களா?

    பதிலளிநீக்கு
  23. //
    ஆனா பாருங்க இப்ப ஒரு வம்பாயிப்போயிடுச்சு. நம்ம ராம்ஜி, படத்த எடுத்துடுங்க அப்படீங்கறாரு. படத்த எடுத்தா சரவணனுக்கு குடுத்த பதில் வீணாய்ப்போயிடும்.

    இதுதான் இருதலைக்கொள்ளி எறும்புங்கறது.

    ஏனுங்க, படம் டீசண்ட்டா இல்லீங்களா?
    //

    படம் டீசண்ட்டா தானுங்க ஐயா இருக்கு. ராம்ஜி அவர்கள் படம் மோசமாக இருப்பதாக கூறவில்லை என்று நினைகின்றேன்; படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லாமல் இருகின்றேதே என்று கூறுகின்றார் என்ரே எண்ணுகின்றேன்.

    நடு கூடத்துல குடும்பத்தோடு நாம உட்கார்ந்தது பார்க்கும் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 மற்றும் அனேக திரைப்படத்துல வர பெண்மணிகளை விட இந்த பெண் பல மடுங்கு அதிகமான ஆடை உடுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    நீங்கள் கூறியிருக்கும் "மன்னிக்கவும், இனி இதுபோல் செய்வதில்லை" என்ற பதிலில் இருந்து உங்கள் நேர்மை புலபடுகின்றது :-).

    வழக்கம் போல கலக்குங்கள் ஐயா.

    நன்றி
    RR

    பதிலளிநீக்கு
  24. RR said:


    //நீங்கள் கூறியிருக்கும் "மன்னிக்கவும், இனி இதுபோல் செய்வதில்லை" என்ற பதிலில் இருந்து உங்கள் நேர்மை புலபடுகின்றது :-).//

    உங்க மாதிரி பல பேரினுடைய ஆதரவு கிடைப்பதால்தான் இன்னும் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

    நன்றி,நன்றி,நன்றி.

    பதிலளிநீக்கு
  25. உங்கள் நிலக்கடலை ஆராய்ச்சிப் பண்ணை அனுபவங்கள் சூப்பர். ஜுலை பயண ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது. வரும்போது சொல்லுங்கள் சார். முடிந்தால் சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. வெங்கட் நாகராஜ் சொன்னது:

    //உங்கள் நிலக்கடலை ஆராய்ச்சிப் பண்ணை அனுபவங்கள் சூப்பர். ஜுலை பயண ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளது. வரும்போது சொல்லுங்கள் சார். முடிந்தால் சந்திக்கிறேன்.//

    நன்றி, நாகராஜ். என்னுடைய பயண விவரங்களை ஈமெயிலில் அனிப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. பட்டாசு சொன்னது:
    //அய்யா, இது எந்த வருசத்து கதைங்க. ஆரம்பத்திலேயே ஒரு ஆள வெளிய தள்ளியாச்சு.
    //(நான் அப்போது சரியான வெள்ளைச்சோளம்). //
    இன்னும் என்னென்ன வெளிய வருமோ//

    அய்யா சொன்னது,
    //தம்பி, இந்தக்கதை நடந்தது 1956 ம் வருஷம்.

    நெறய விஷயம் இருக்குது தம்பி, ஆனா ஒண்ணும் தப்பா பண்ணலைங்க.//

    அய்யா மேலும் என்னென்ன சுவையான விஷயங்கள் வருமோ என்கிற எதிர்பார்ப்புல கேட்டேனுங்க.

    பதிலளிநீக்கு