சனி, 27 நவம்பர், 2010

கேதார் யாத்திரை முடிவு

கேதார் யாத்திரை ஜூலை மாதம் போய் வந்தோம். இப்போது நடப்பது நவம்பர் மாதம். நான்கு மாதத்திற்கு மேல் ஒரு பயணப்பதிவை தொடர்வது பதிவுலக தர்மங்களின்படி நியாயமல்ல. ஆகவே இந்தப்பதிவுடன் இந்தப்பயணத் தொடரை மங்களகரமாக முடித்துக்கொள்கிறேன்.

மறுநாள் ரிஷிகேசத்திற்கு சென்று விட்டு, அதற்கடுத்த நாள் புறப்பட்டு டில்லி வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஒரு நாள் ஆக்ரா போய்வந்தோம். படங்களை தனி பதிவாகப் போடுகிறேன்

அடுத்த நாள் டில்லியிலிருந்து புறப்பட்டு பிளேன் சவாரியாக கோவை வந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் செய்த முதல் காரியம் ரசம் சாதம் சாப்பிட்டதுதான்.

சுபம்.

16 கருத்துகள்:

  1. என்னங்க அப்பிச்சி, இப்படி திடுதிப்புனு முடிச்சிட்டீங்க?

    பதிலளிநீக்கு
  2. Prabhu said...

    //என்னங்க அப்பிச்சி, இப்படி திடுதிப்புனு முடிச்சிட்டீங்க?//

    ஆமா, பேராண்டி, ஜவ்வு முட்டாய் மாதிரி எத்தன நாளைக்கு ஒரே மேட்டர இளுக்கறது? போரடிச்சுப்போகாது?

    அப்புறம் நாட்டுல எத்தனையோ பிரச்சினைங்க எனக்காக காத்துட்டிருக்குது.

    இப்பப்பாரு ஒரு பதிவரு பதிவர்களையெல்லாம் கூட்டுச்சேர்த்து சமுதாய மறுமலர்ச்சி/புரச்சி செய்யப் போறாராம். இப்படி செஞ்சா நாட்டுல மத்தவங்க எல்லாம் எப்படி பொளைக்கறது. மொதல்ல அத தடுத்து நிறுத்தோணும்.

    அதனாலதான்...

    பதிலளிநீக்கு
  3. கோவை வந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் செய்த முதல் காரியம் ரசம் சாதம் சாப்பிட்டதுதான்.
    //

    வரவர குசும்பா எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. ஹா.ஹா..


    அடுத்து சிங்கை பயணம்.. அதுக்கு ரெடியாகுங்க பாஸ்...

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பயணத்தொடர் – ஆனால் திடீரென முடிந்துவிட்டதே என்ற வருத்தம். பகிர்வுக்கு நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  5. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் ஐயா!!!!

    உங்கள் தொழில் சார்ந்த விவசாயம் பற்றி ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மட்டும் செய்து வாழ்வது இயலுமா!!!என்ன மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்? குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்...விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர் செய்ய நினைப்பது மடமையா?இல்லை செய்ய முடியும் என்றால் அதற்கு அடிபடையாக செய்ய வேண்டியவை யாவை?
    அதிகமான் அதிங்க பிரசங்கி கேள்விகளுக்கு மன்னிக்கவும்...

    -
    கிறுக்கன்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பயணத்தொடராய் இருந்தது. ஆனால் சீக்கிரம் முடித்துவிட்டீர்களே என்ற வருத்தம்.

    பதிலளிநீக்கு
  7. கிறுக்கன் said...

    //அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் ஐயா!!!!

    உங்கள் தொழில் சார்ந்த விவசாயம் பற்றி ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மட்டும் செய்து வாழ்வது இயலுமா!!!என்ன மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்? குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்...விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர் செய்ய நினைப்பது மடமையா?இல்லை செய்ய முடியும் என்றால் அதற்கு அடிபடையாக செய்ய வேண்டியவை யாவை?//

    இதைப்பற்றி ஒரு தனி பதிவு எழுதினால்தான் உங்கள் கேள்விக்கு ஓரளவிற்கு பதில் சொல்ல முடியும். செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பட்டாபட்டி.. said...

    //கோவை வந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் செய்த முதல் காரியம் ரசம் சாதம் சாப்பிட்டதுதான்.//

    //வரவர குசும்பா எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. ஹா.ஹா..//

    1. உண்மைக்கு இந்தக்காலத்துல என்ன மதிப்பு பாத்தீங்களா, மக்களே?
    2. குறும்பு அல்லது குசும்பு கோயமுத்தூர்க்காரனுக்கு உடன் பிறப்பாயிற்றே, விடமுடியுமா?

    //அடுத்து சிங்கை பயணம்.. அதுக்கு ரெடியாகுங்க பாஸ்...//

    2011 ல் சாமி சத்தியமா, எப்படியும் வந்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. கலாநேசன் said...

    //நிறைவான தொடர்//

    நன்றி, கலாநேசன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  10. வெங்கட் நாகராஜ் said...

    //நல்லதொரு பயணத்தொடர் – ஆனால் திடீரென முடிந்துவிட்டதே என்ற வருத்தம். பகிர்வுக்கு நன்றி அய்யா.//

    கொஞ்சம் சப்ஜெக்ட் பழசாகி விட்டதோ என்ற சந்தேகம் வந்து விட்டது. அதனால்தான்.

    பதிலளிநீக்கு
  11. கோவை2தில்லி said...

    //அருமையான பயணத்தொடராய் இருந்தது. ஆனால் சீக்கிரம் முடித்துவிட்டீர்களே என்ற வருத்தம்//

    நன்றி "கோவை2டில்லி" அவர்களே. வருத்தம் வேண்டாம், இன்னொன்று ஆரம்பித்தால் போயிற்று. செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தெய்வசுகந்தி said...

    //ரொம்ப சீக்கிரம் முடிச்சுட்டீங்க!!//

    காலத்தின் கட்டாயம். ஒன்றையே ரொம்ப நாளைக்கு தமிழ் டி.வி. சீரியல் மாதிரி ஜவ்வா இழுக்கப்படாதுங்க.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ளவருக்கு... தங்களின் கேதார் பற்றிய பதிவை முழுமையாக படித்தேன்......அருமையாக உள்ளது ...
    எனயுங்கள் பதிவுகளை தவறாமல் படித்து .கருத்து கொடுப்பதோடல்லாமல்,,, பதிவுலகை பற்றிய ஞானத்தையும் வளர்த்து கொள்வேன் தங்கள் ஆதரவுடன்,,,,,,,,,

    பதிலளிநீக்கு