வியாழன், 2 டிசம்பர், 2010

பணமும் புகழும்

மனிதனை இவ்வுலகில் செயலாற்ற ஊக்குவிக்கும் காரணிகள் என்னவென்று என் கிட்னி(!) (கிட்னி எங்கே இருக்கிறது என்று கவுண்டமணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்) மூலமாக சிந்தித்தேன். அவ்வாறு சிந்தித்ததில் தெரிய வந்தது மனிதனை ஊக்குவிப்பது பணமும் புகழும்தான் என்பதாகும்.

பணத்தின் அவசியம் எல்லோருக்கும் தெரியும். ஆகவே அதை சேர்த்துவதில் மனிதனின் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் கோடிக்கணக்கில் சேர்த்து ஸ்விஸ் பேங்கில் போட்டுவைப்பதில் யாருக்கு என்ன உபயோகம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை விடுங்கள்.

இந்தப் புகழுக்கு ஆசைப்பட்டு மனிதன் என்னென்ன செய்கிறான் பாருங்கள்? புகழை விரும்பும் எல்லோரும் முதலில் செய்ய முயல்வது தேச அல்லது சமுதாய சேவை. அதற்கு அவன் சொல்லும் காரணங்கள், "என்னிடம் அதிகமான பணம் சேர்ந்து விட்டது. அவ்வளவு எனக்குத்தேவையில்லை. ஆகவே நாட்டு மக்களுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்" இது ஒரு வகை. இன்னொன்று, என்னுடைய மனச்சாட்சி உறுத்துகிறது, நான் இந்த சமுதாயத்திலிருந்து எவ்வளவோ ஆதாயங்களைப் பெற்றிருக்கிறேன், ஆகவே இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்தாகவேண்டும், இல்லையென்றால் என் மனச்சாட்சி தூங்காது, இப்படியாக ஒன்று.

சமுதாயத்தில் இப்படி சொல்லிக்கொண்டு தன்னை முன்னேற்றிக்கொள்ளும் ஆசாமிகள் நிறையவே உண்டு. ஆனால் பதிவுலகத்தில், எல்லோரும் முகமூடியுடன் உலா வரும் ஒரு மாயா உலகத்தில் ஒருவர் நான் இந்த சமுதாயத்தை சீர்திருத்தப்போகிறேன் என்று ஆரம்பித்திருக்கிறார். தமிழ்ப் பதிவர்களைப்பற்றி அவருக்கு அதிகம் தெரியாது என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. தெரிந்திருந்தால் இப்படி ஒரு யோசனை அவருக்கு வந்திருக்காது.



என்னைப்போன்ற சாதா பதிவர்களை விட்டுவிடுங்கள். இந்தப் பிரபல பதிவர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறது. அவர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் ஆயுள் முழுக்க எழுதிக்கொண்டு இருக்கலாம். பிரபல பதிவர்களை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்று தெரியுமா? முன்னுக்குப்போனால் கடிக்கும், பின்னுக்குப்போனால் உதைக்கும் என்ற கதைதான். இந்தப் பதிவர்களை வைத்துக்கொண்டு சமூக புனர் நிர்மாணம் செய்வதாக அவர் எல்லாப் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சமீப காலமாக பதிவுலகில் விறுவிறுப்பு நிறைய குறைந்திருக்கிறது. மூக்குடைத்தல், புனைவுகள் எழுதுதல், கண்ணியமான குடும்பங்கள் போன்றவைகளைக் காணவில்லை. இவராவது கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

14 கருத்துகள்:

  1. என்னங்க அப்பிச்சி, ஓட்டுப்பொட்டிய எல்லாம் காணமே, என்னாச்சுங்க?

    பதிலளிநீக்கு
  2. Prabhu said...

    //என்னங்க அப்பிச்சி, ஓட்டுப்பொட்டிய எல்லாம் காணமே, என்னாச்சுங்க?//

    இந்த ஓட்டை வாங்கி என்ன ஊடா கட்டமுடியும்? அதான் எலெக்ஷன் வருதில்ல, எல்லாரும் அங்க போயி ஓட்டுப்போடட்டும். அங்க போட்டாலாவது ஆயிரம் ஐந்நூறுன்னு கெடைக்கும். பதிவுல ஓட்டுப்போட்டு யாருக்கு என்ன பிரயோஜனம்?

    பதிலளிநீக்கு
  3. அய்யா,என்ன விஷயம்? ஒண்ணும் புரியல...

    பதிலளிநீக்கு
  4. கலாநேசன் said...

    //அய்யா,என்ன விஷயம்? ஒண்ணும் புரியல.//

    ஒண்ணுமில்லீங்க, கலாநேசன். இந்த ஓட்டுப்பெட்டி, வருகைப்பதிவேடு இதெல்லாம் வேஸ்ட்டுன்னு மனசுக்குப்பட்டுது. எடுத்திட்டேன். ஆனா, பதிவை தமிழ்மணத்துல தானா இணைக்கிறதுக்கு அதுக வேணும்போல இருக்கு. அதனால திரும்பவும் சேத்தீருக்கேன். ஒண்ணும் ரகளையெல்லாம் இல்லீங்க.

    பதிலளிநீக்கு
  5. சினிமா காரர்களுக்கு மட்டும்தான் சமூக அக்கறை இருக்க வேண்டுமா? அரசியல் வாதி ஆக அணைவருக்கும் உரிமை உண்டு அல்லவா? இது ஜன நாயக நாடு. எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டுங்க சாரே! பதிவர்கள் மட்டும் என்றால் இளக்காரமா என்ன!?

    விடுங்க. இது தெரிந்த கதைதான். கடைசியில்..... ச்சீ சீ ........இந்த பழம் புளிக்கும் கேஸ்தான். வேடிக்கை பார்க்கலாம். காத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. //அவ்வாறு சிந்தித்ததில் தெரிய வந்தது மனிதனை ஊக்குவிப்பது பணமும் புகழும்தான் என்பதாகும்.///

    என்னே அறிய கண்டுபிடிப்பு தாத்தா ..?

    பதிலளிநீக்கு
  7. // பிரபல பதிவர்களை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்று தெரியுமா? முன்னுக்குப்போனால் கடிக்கும், பின்னுக்குப்போனால் உதைக்கும் என்ற கதைதான். /

    ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலைங்க .!!

    பதிலளிநீக்கு
  8. யாரை சொல்கிறீர்கள் என தெரியவில்லை! ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  9. எனக்கு ஒரே உதறலா இருக்கு? நீங்க ‘பிரபல பதிவர்’ன்னு சொல்றது என்னை இல்லையே?

    பதிலளிநீக்கு
  10. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //எனக்கு ஒரே உதறலா இருக்கு? நீங்க ‘பிரபல பதிவர்’ன்னு சொல்றது என்னை இல்லையே?//

    உங்கள் கேள்வியிலிருந்து நான் தெரிந்து கொண்டது.

    1.நீங்கள் ஒரு பிரபல பதிவர். ஆகவே எங்காவது உங்களைப்பார்க்க நேர்ந்தால் எட்டடி தள்ளி நிற்கவேண்டும்.

    2.உங்களுக்கு உதறல் வியாதி இருக்கிறது. ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கவும். அப்படியே என்னுடைய அடுத்த பதிவின் கடைசி வரியையும் பார்க்கவும். சுட்டி இதோ:
    http://swamysmusings.blogspot.com/2010/12/1943-50.html

    பதிலளிநீக்கு