வியாழன், 20 ஜனவரி, 2011

கொஞ்சம் குழம்பலாமா?


ஒரே மாதிரியான பதிவுகள் சலிப்புத்தட்டும். அதற்காக நான் சினிமா விமரிசனம் எழுத முடியுமா? ஆகவே ஆன்மீகத்தில் கொஞ்சம் நம் சரக்கை விற்கலாமென்ற முடிவின் பயனே இந்தப் பதிவு.

நான்  யார்?



இதைத் தெரிந்து கொண்டால் முக்தியடையலாம் என்று காலம் காலமாக ஆன்மீக குருமார்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் முக்தியடையலாம் என்று ஆசைப்பட்டு இந்த சோதனையில் இறங்கினேன்.

கேள்வி: நீ யார்?
பதில்:   நான் கந்தசாமி.

கே:   அது உன் பெயர். நீ யார்?
:     நான் ஒரு மனிதன்.

கே:   அது உன் உருவத்தின் பெயர். அது நீயல்ல.
:    அப்படியானால் நான் யார் என்று நீங்களே சொல்லுங்கள்

கே:   இல்லை. நீதான் உன்னை அறிய வேண்டும்.
:    எனக்குத்தான் தெரியவில்லையே ஸவாமி, நீங்களே சொல்லப்படாதா?

கேநீயாகத் தெரிந்து கொண்டால்தான் உனக்கு ஞானம் வரும்.
:    என்னால் முடியவில்லையே?

கே:   உன்னால் முடியும். தீவிரமாக முயற்சி செய்.
:    ஆகட்டும், முயற்சிக்கிறேன்,  ஸ்வாமி.


இப்படியாகப் பேசிப் பேசியே நம் கழுத்தை அறுப்பவர்கள்தான் ஆன்மீகக் குருக்கள். ரமண மகரிஷி என்பவரின் உபதேசங்கள் எல்லாம் இப்படியே இருக்கும். நானும் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு இந்த ஆன்மீகப் பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். இந்தக் கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு என்னுடைய ஆராய்ச்சி மூளையைப் பயன்படுத்திக் கண்டு பிடித்தது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் ஆத்மாவின் ஸ்வரூபம். அதனால் எல்லோரும் ஒருவரை ஒருவர் வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது.

ஆஹா, என்ன ஒரு பரோபகாரத் தத்துவம் என்று நானும் முதலில் மயங்கி விட்டேன். பிறகுதான் உண்மையைப் புரிந்து கொண்டேன். எல்லோரும் சமம் என்பது உண்மைதான். ஆனால் அதில் சில வரைமுறைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன். என்னவென்றால் குருவிற்கு அதிக காணிக்கை கொடுப்பவர்கள் அவர்களுக்குள் சமம். ஆனால் குறைவாக காணிக்கை கொடுப்பவர்களுக்கும் அவர்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. குருவே அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடுவார். அருகில் அமர்த்திக்கொள்வார். மற்றவர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தால் கூட ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். இன்னும் பல காரணங்களினால் மக்கள் வேறுபடுகிறார்கள். அவைகளை விவரித்தால் பதிவு முடிவு பெறாது.

குரு என்பவர் சாதாரண லௌகீக விவகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களும் காவி கட்டிய சம்சாரிகள்தான் என்று புரிந்து கொண்டேன். உண்மையான துறவிகள் இருக்கலாம். அவர்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.


28 கருத்துகள்:

  1. நீங்க யாரு எனக்குத் தாத்தா ?
    நான் யாரு உங்களுக்குப் பேரன் !
    ஹி ஹி .. நானும் குழப்பலாம்னு இருக்கேன் ..
    அடுத்த பதிவு இது பத்தித்தான் தாத்தா ..

    பதிலளிநீக்கு
  2. ஞானிகள் வானில் இருந்து குதிக்கவில்லை. நம்மில் ஒருவரே. அந்த ஒருவர் நிச்சயம் நாமாக இருக்கலாம். எவரொருவர் தம் கடமையை சரியாக செய்கிறாரோ, அவர் யாரையும் தேடி போவதில்லை. வாழ்ந்த வாழ்க்கைக்கும், வாழுகின்ற வாழ்க்கைக்கும் திருப்தியடைவார்கள். திருப்தியடையாதவர்களே யார் யாரையோ தேடி போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா! இறைவனுக்கும் நமக்கும் இடையே எந்த இடைத்தரகரும் தேவையில்லை. இதை உணர்வதே ’நான் யார்?’ என்ற கேள்விக்கு விடையறிவதற்கான முதல் கட்டம் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. // அதற்காக நான் சினிமா விமரிசனம் எழுத முடியுமா? //

    ஏன் நீங்கள் சினிமா விமர்சனம் எழுதக்கூடாதா இல்லை முடியாதா?? இது நமக்கு நாமே இட்டுக்கொண்ட சில எல்லைகள் அவ்வளவுதான். தேவை எனில் நீங்களும் ஒரு சினிமா விமர்சனம் எழுதிப்பாருங்களேன்! எதனை ரசமாய் இருக்குமென்று எங்களுக்குத்தான் தெரியும். தாசி அபரஞ்சி யை தொடர்ந்து எழுதி எல்லோரையும் உங்கள் பாக்கம் வரவழைத்து மறந்து போச்சா???

    ஆன்மிகம், முக்தி , ஞானம் இதெல்லாம் நமக்கு எதற்கு ? அதெல்லாம் வேலை வெட்டி அற்றவர்கள் , சோம்பேறிகளின் வேலை. நமக்கு இருக்கும் நேரத்தில் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நேர்மையும், தெய்வ நம்பிக்கையும் ,அடுத்தவர்க்கு உதவும் நல்ல மனமும், பிறரை கெடுக்காத குணமும் இருந்தால் போதும். உங்களுக்கு தெரியாதா ஏன்னா?? :))

    பதிலளிநீக்கு
  5. இன்னும் கொஞ்சம் குழப்பியிருக்கலாம்.. :)

    பதிலளிநீக்கு
  6. //அவர்களும் காவி கட்டிய சம்சாரிகள்தான் என்று புரிந்து கொண்டேன். //


    உண்மைதான். நாளைக்கு என்ன குழம்பு வைக்கணும் என்ற கவலை மட்டும் இருக்காது.
    மத்தபடி ஒரு மடத்தைக் கட்டிக் காப்பாத்தறது சுலபமில்லை.

    இதுக்கிடையில் மறுநாள் பிரசங்கத்தில் தான் எப்படியெல்லாம் முன் எடுத்த அவதாரங்களில் இருந்தோமுன்னு 'யோசிச்சு ' மக்களுக்குச் சொல்லணும் என்ற கடமை வேற இருக்கே. சாமி.....சாமி.

    பதிலளிநீக்கு
  7. நல்ல குருவைத் தேடி அடைவது அவ்வளவு சுலபமில்லை. சங்கரரே மிகுந்த பிரயாசைக்கப்புறம்தான் அவருடைய குருவைத் தேடி அடைய முடிந்தது.

    பதிலளிநீக்கு
  8. //ஆனால் அவர்களும் காவி கட்டிய சம்சாரிகள்தான் என்று புரிந்து கொண்டேன். //

    எங்கள் பதிவில் இருக்கும் சாமியாரை நினைத்து இந்த வரியை எழுதுனீர்களா அய்யா?

    பதிலளிநீக்கு
  9. Samudra said...

    :)

    வாங்க, சமுத்ரா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கோமாளி செல்வா said...

    //நீங்க யாரு எனக்குத் தாத்தா ?
    நான் யாரு உங்களுக்குப் பேரன் !
    ஹி ஹி .. நானும் குழப்பலாம்னு இருக்கேன் ..
    அடுத்த பதிவு இது பத்தித்தான் தாத்தா ..//

    தூள் கெளப்புங்க, பேராண்டி.

    பதிலளிநீக்கு
  11. கோமாளி செல்வா said...

    //நீங்க யாரு எனக்குத் தாத்தா ?
    நான் யாரு உங்களுக்குப் பேரன் !
    ஹி ஹி .. நானும் குழப்பலாம்னு இருக்கேன் ..
    அடுத்த பதிவு இது பத்தித்தான் தாத்தா ..//

    தூள் கெளப்புங்க, பேராண்டி.

    பதிலளிநீக்கு
  12. தமிழ் உதயம் said...

    //ஞானிகள் வானில் இருந்து குதிக்கவில்லை. நம்மில் ஒருவரே. அந்த ஒருவர் நிச்சயம் நாமாக இருக்கலாம். எவரொருவர் தம் கடமையை சரியாக செய்கிறாரோ, அவர் யாரையும் தேடி போவதில்லை. வாழ்ந்த வாழ்க்கைக்கும், வாழுகின்ற வாழ்க்கைக்கும் திருப்தியடைவார்கள். திருப்தியடையாதவர்களே யார் யாரையோ தேடி போகிறார்கள்.//

    நன்றாகச் சொன்னீர்கள், தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    //சாமியின் மனஅலைகள் :)//

    வாங்க வக்கீல் சார், கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. கக்கு - மாணிக்கம் said...

    // அதற்காக நான் சினிமா விமரிசனம் எழுத முடியுமா? //

    ஏன் நீங்கள் சினிமா விமர்சனம் எழுதக்கூடாதா இல்லை முடியாதா?? இது நமக்கு நாமே இட்டுக்கொண்ட சில எல்லைகள் அவ்வளவுதான். தேவை எனில் நீங்களும் ஒரு சினிமா விமர்சனம் எழுதிப்பாருங்களேன்! எதனை ரசமாய் இருக்குமென்று எங்களுக்குத்தான் தெரியும். தாசி அபரஞ்சி யை தொடர்ந்து எழுதி எல்லோரையும் உங்கள் பாக்கம் வரவழைத்து மறந்து போச்சா??? //

    எல்லோரும் செய்வதை நாமும் செய்தால் நம்மை எப்படி வித்தியாசப் படுத்திக்கொள்ள முடியும்? சுத்தமான அக்மார்க் சுயநலம் + Ego. அவ்வளவுதான் மாணிக்கம்.

    பதிலளிநீக்கு
  15. கையேடு said...

    //இன்னும் கொஞ்சம் குழப்பியிருக்கலாம்.. :)//

    முடியலீங்க, அப்புறம் பொறுமையும் இல்லீங்க.

    பதிலளிநீக்கு
  16. துளசி கோபால் said...

    //உண்மைதான். நாளைக்கு என்ன குழம்பு வைக்கணும் என்ற கவலை மட்டும் இருக்காது.

    மத்தபடி ஒரு மடத்தைக் கட்டிக் காப்பாத்தறது சுலபமில்லை.//

    நன்றாகப் புரிந்து வைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. சேட்டைக்காரன் said...

    //ஐயா! இறைவனுக்கும் நமக்கும் இடையே எந்த இடைத்தரகரும் தேவையில்லை. இதை உணர்வதே ’நான் யார்?’ என்ற கேள்விக்கு விடையறிவதற்கான முதல் கட்டம் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி ஐயா!//

    ஆன்மீகப் பாதையில் பல நெறிகள் இருக்கின்றன. குடும்பத்தில் இருப்பவன் எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் செய்யவேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. Gopi Ramamoorthy said...

    //நல்ல குருவைத் தேடி அடைவது அவ்வளவு சுலபமில்லை. சங்கரரே மிகுந்த பிரயாசைக்கப்புறம்தான் அவருடைய குருவைத் தேடி அடைய முடிந்தது.//

    சரியாகச் சொன்னீர்கள், ராம்மூர்த்தி. நல்ல குருவை அடைய நாமும் பக்குவப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் இணையும்போதுதான் உண்மையான குரு-சிஷ்ய உறவு ஏற்படும்.

    பதிலளிநீக்கு
  19. கும்மி said...

    //எங்கள் பதிவில் இருக்கும் சாமியாரை நினைத்து இந்த வரியை எழுதுனீர்களா அய்யா?//

    உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன். இப்படி பலர் இருப்பதால்தான் உண்மையாக இருக்கும் ஒன்றிரண்டு துறவிகளும் மறைக்கப்படுகிறார்கள்.

    நான் அறிந்த ஒரு துறவி, பிறப்பால் பிராமணராக இருந்தாலும் பிராமணல்லாதாருக்கும் வேதம் கற்பித்து துறவு கொடுத்திருக்கிறார். அவரை நான் உண்மையான துறவியாக மதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. அவர்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

    நானும்..................

    பதிலளிநீக்கு
  21. ஜோதிஜி said...

    அவர்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

    நானும்..................

    வாங்க, ஜோதிஜி. கண்ணுல பட்டா சொல்லி அனுப்புங்க.

    பதிலளிநீக்கு
  22. //எனக்குத்தான் தெரியவில்லையே ஸவாமி, நீங்களே சொல்லப்படாதா// அவருக்குத் தெரிஞ்சா சொல்ல மாட்டாரா? அவரை ஏன் தொல்லை பன்னினீங்க? நீங்க அவரை நீங்க யார்னு கேள்வி கேட்டு இதே பதில்களை அவருக்குச் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. //இதுக்கிடையில் மறுநாள் பிரசங்கத்தில் தான் எப்படியெல்லாம் முன் எடுத்த அவதாரங்களில் இருந்தோமுன்னு // நல்ல் நகைச்சுவை துளசி கோபால் அவர்களே, இன்னும் பூக்கூடைக்குள் வைத்து அனுப்பப்பட்ட பிட்டு படங்களை பார்த்ததை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொலைக் கேசில் இருந்து தப்பிக்கும் உபாயத்தையும் யோசிக்க வேண்டுமே.

    பதிலளிநீக்கு
  24. அமர பாரதி, உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  25. என்னைப் பொறுத்தவரை GOD IS FEELING
    அந்த உணர்வுக்கும், நமக்கும் இடையில் இடைத் தரகர் எதற்கு?

    பதிலளிநீக்கு
  26. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //என்னைப் பொறுத்தவரை GOD IS FEELING
    அந்த உணர்வுக்கும், நமக்கும் இடையில் இடைத் தரகர் எதற்கு?//

    இறை உணர்வில் இந்தத் தெளிவு இருந்துவிட்டால் அப்புறம் மதச்சண்டைகள் அர்த்தமற்றதாகி விடும்.

    பதிலளிநீக்கு