சனி, 23 ஜூலை, 2011

நான் பைத்தியத்திலிருந்து மீண்டேன்



ஊருடன் ஒத்து வாழ்.

உலகத்தோடொட்ட ஒழுகல் பல கற்றும் கல்லாதார் அறிவிலாதார்

*****புரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

இந்த முதுமொழிகளை யெல்லாம் தெரிந்திருந்தும் விதியின் வசத்தால் என் மதி மயங்கி நான் ஒரு பைத்தியக்காரன் ஆனேன்.

என்னுடைய பதிவில் உள்ள பின்னூட்டங்கள், ஓட்டுப்பட்டைகள் ஆகியவற்றை நீக்கினேன். விளைவு மிகவும் மோசமாகப் போய்விட்டது. தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் தீக்குளிப்பு, தற்கொலை, ரயில் முன்பு பாய்தல் ஆகியவை மிகவும் அதிகரித்துவிட்டன.

என்னுடைய பதிவைப் படிக்கும், படிக்காத வாசகர்களும், சக பதிவர்களும், நலம் விரும்பிகளும் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று முதல் என்னுடைய பதிவில் பின்னூட்டங்களைப் போட வசதி செய்துள்ளேன். ஓட்டுப்பதிவு பட்டைகளையும் ஒவ்வொன்றாக இணைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடந்து முடிந்தவுடன் அந்த ஓட்டுப்பட்டைகள் தயாராகி விடும்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தயாராக சில காலம் பிடிக்கும்.

இப்போது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அப்படி மகிழ்ச்சி அடையாதவர்கள் யாராவது இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தினால் அவர்களை திஹாருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து தரப்படும்.

13 கருத்துகள்:

  1. எனக்கு திஹாரில் ஒரு சீட். நான்தான் முதலில் வந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ரூம் ரிசர்வ் பண்ணீட்டனுங்க.

    பதிலளிநீக்கு
  3. வாங்க சார், வாங்க, ரண்டு சர்ச்சைக்குரிய பதிவா எழுதினால் ஐன்பது பின்னூட்டங்கள் ரெடி! வசதி எப்படி!

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஷர்புதீன், எழுதீடறனுங்க. வேற என்ன வேலை.

    பதிலளிநீக்கு
  5. நெல்லை சந்திப்பில் நீங்கள் பேசியதை சி.பி.எஸ்-சின் வலைப்பதிவில் வாசித்தபோதே சற்றுக் குழம்பினேன். கருத்துச் சொல்லவாவது அனுமதிக்கலாமே என்று! நல்ல திருப்பம் ஐயா! ‘ நல்லா எழுதியிருக்கீங்க,’ன்னு பாராட்டவாச்சும் வாய்ப்பு கொடுத்தீங்களே! :- )

    பதிலளிநீக்கு
  6. நல்ல விஷயம் ஐயா! பின்னூட்டம் இடுவதின் மூலம் உங்களுடன் பேசுவது போன்ற ஒரு உணர்வு உண்டாவது உண்மை. அதனால் பின்னூட்ட வசதியை மீண்டும் வைத்தமைக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  7. நன்றி சேட்டைக்காரன் & வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
  8. எனக்கு. முக்கியமானவருக்கு பக்கத்து ரூம் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க சார்! திஹாரில்.

    பகலில் ஏ சி யும் இரவில் ஹீட்டரும் வேணும் மறந்தராதீங்க............

    பதிலளிநீக்கு
  9. // ! ஸ்பார்க் கார்த்தி @ said..
    எனக்கு. முக்கியமானவருக்கு பக்கத்து ரூம் கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க சார்! திஹாரில்.

    பகலில் ஏ சி யும் இரவில் ஹீட்டரும் வேணும் மறந்தராதீங்க............//

    கனிமொழி அம்மா காலி பண்ற ரூம் சரிப்படுமுங்களா?

    பதிலளிநீக்கு
  10. NIZAMUDEEN said...
    Vasathikku nandi! (sorry for thanglish)
    வாங்க, வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பின்னூட்ட வசதியை மீண்டும் வைத்தமைக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு