புதன், 19 அக்டோபர், 2011

பதிவுகளில் போட்டோக்களை பெரிதாகப் பார்க்க

பதிவுகளில் பலரும் போட்டோக்கள் போடுகிறார்கள். நானும் போட்டுக்கொண்டு இருக்கிறேன். அவைகளின் மேல் கர்சரை வைத்து இடது சிங்கிள் கிளிக் பண்ணினால் போட்டோக்கள் பெரிதாகவும் நன்றாகவும் தெரிகின்றன.
மேலும் அந்தப் பதிவில் உள்ள எல்லாப் போட்டோக்களும் கீழே தம்ப்நெய்ல் அளவில் தெரிகின்றன. அதில் எதை வேண்டுமானாலும் கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம். அல்லது மௌசை இடது கிளிக் செய்தாலும் அல்லது மௌஸ் ரோலரை சுழற்றினாலும் படங்கள் மாறுகின்றன.

இத்துடன் நான்கு படங்கள் இணைத்திருக்கிறேன். சோதனை செய்து பார்க்கவும்.

இதை பலர் ஏற்கனவே அறிந்திருக்கலாம். அவர்கள் இந்தப் பதிவைப் பார்த்து கேலி செய்யலாம். அவர்களுக்கு கேலி செய்ய ஒரு பதிவு போடுவதில் மகிழ்கிறேன். ஆனால் நான் இந்த நுட்பத்தை இப்போதுதான் அறிகிறேன். என் போல் இருப்பவர்களின் தகவலுக்காக இந்த தகவலைப் பதிவிடுகிறேன்.

தகவல் தொழில்நுட்பப் பதிவர்களின் மன்னிப்பைக் கோருகிறேன். (அவர்களின் சாம்ராஜ்யத்தில் அத்து மீறி நுழைந்ததற்காக)

15 கருத்துகள்:

 1. chrome browserஇல் HOVER ZOOM என்ற நீட்சியை நிறுவிக்கொண்டால் மவுசை அதன் மேல் வைத்தவுடன் பெரிதாக காட்டும். கிளிக் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. அதன் லிங்க் இதோ..
  https://chrome.google.com/webstore/detail/nonjdcjchghhkdoolnlbekcfllmednbl?hc=search&hcp=main

  பதிலளிநீக்கு
 2. //bandhu said...
  chrome browserஇல் HOVER ZOOM என்ற நீட்சியை நிறுவிக்கொண்டால் மவுசை அதன் மேல் வைத்தவுடன் பெரிதாக காட்டும். கிளிக் செய்ய வேண்டிய தேவையும் இல்லை.//

  நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது. ஆனால் முழு பக்கத்திற்கு பெரிது பண்ணுவதில்லை.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா இன்னொரு தொழில் நுட்ப பதிவர் ....பதிவர்களுக்கு கொண்டாட்டம்தான் !

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல்.

  //தகவல் தொழில்நுட்பப் பதிவர்களின் மன்னிப்பைக் கோருகிறேன். (அவர்களின் சாம்ராஜ்யத்தில் அத்து மீறி நுழைந்ததற்காக)//

  ஹிஹிஹி... யாரும் தொழில்நுட்பத்தை குத்தகைக்கு எடுக்கலை சார். அதனால யார் வேண்டுமானாலும் எழுதலாம். தகவல் சேர்ந்தால் போதும்.

  :) :) :)

  பதிலளிநீக்கு
 5. இதை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் பகிர்வுக்கு நன்றி.
  படங்களில் முருகனை எடுத்துக்கொண்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 6. பயனுள்ள தகவல்... நான் தேடிக் கொண்டிருந்தது இது.

  நட்புடன்,
  http://tamilvaasi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. நல்ல தகவல்தானே சொல்லியிருக்கீங்க! அப்புறம் எதுக்கு மன்னிப்பு? எல்லாப் படங்களும் கலக்கல் ஐயா!+

  பதிலளிநீக்கு
 8. அய்யா எனக்கும் நீங்க சொன்னதுக்கப்புறம் தான் தெரியும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. விக்கி அவர்களை வழி மொழிகின்றேன்

  தமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா...

  http://veeedu.blogspot.com/2011/10/blog-post_19.

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள திரு.கந்தசாமி அவர்களுக்கு,
  கற்றுக் கொள்வதிலும்,கற்றுக் கொடுப்பதிலும் வயது முக்கியமில்லை. நாம் அனுப்பும் மின்னஞ்சலில் BCC (Blind carbon copy)என்ற வசதி உண்டு. To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியும், CC என்ற இடத்தில் மற்ற முகவரியும், insert addresses என்ற இடத்தில் வலது ஓரத்தில் show BCC என்றும் இருக்கும்.இதைச் சொடுக்கினால் வரும் BCC என்ற இடத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரி To என்ற இடத்தில் உள்ளவர்க்குத் தெரியாது.
  அன்புடன்,
  வ>க.கன்னியப்பன்

  பதிலளிநீக்கு