வயசானவங்க கிட்ட
இருக்கிற ஒரு பெரிய துர்க்குணம் என்னன்னா, எதையாச்சும் புடிச்சுகிட்டு, தொணதொணன்னு
பேசிக்கிட்டே இருக்கறதுதான். (இப்ப நான் பதிவில பண்ணுகிறேன் பாருங்க, அந்த மாதிரி).
“நாங்கல்லாம் அந்தக்காலத்தில”
அப்படீன்னு ஆரம்பிச்சா அன்னக்கி பூராவும் அதையே வேறு வேறு வார்தைகள்ல பேசிக்கிட்டே
இருப்பாங்க. சங்கீத வித்வான்கள் இதை “சங்கதி” பாடறது என்பார்கள். ஒரே பல்லவியை வெவ்வேறு
பாணியிலே ஒரு பத்து இருபது தடவை பாடுவார்கள். எவ்வளவு அதிக தடவை பாடுகிறாரோ அந்த அளவுக்கு
அவர் பெரிய வித்வான்.
ஆனா இந்தக் கெளடுக
பேசறது ஒரே கழுத்தறுப்பா இருக்கும். பொண்டாட்டி சத்தமா ஒரு கொரல் கொடுத்தாத்தான் இது
நிக்கும். பேராண்டிகளெல்லாம் ஒரே ஓட்டமா ஓடி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவார்கள்.
சில பெரிசுக, எதிர ஆள் இல்லாட்டியும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மூளையில்
இரண்டொரு மறைகள் வயதானதினால் லூசாகி இருக்கும். அதனால்தான் இந்த தனி ஆவர்த்தனம்.
அடுத்த தலைமுறைக்காரங்க
என்ன செய்தாலும் தப்பு கண்டு பிடிப்பாங்க. இந்தக் காலத்துப் பசங்க சட்டை, பேன்டெல்லாம்
வாங்கற பணம் ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு மாதச்செலவுக்கு மேல் இருக்கும். என் நண்பர்
ஒருவர் பேராண்டி வாங்கி வந்த துணியின் விலையைக் கேட்டிருக்கிறார். அவன் அதன் உண்மை
விலையில் பாதி சொல்லியிருக்கிறான். அவரும் இவ்வளவு விலையா என்று சொல்லிவிட்டு, அவர்
வேலையைப் பார்க்கப் போய்விட்டார். இரண்டு நாள் கழித்துத்தான் அதன் உண்மை விலையை யாரோ
அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் பேரனைக் கூப்பிட்டு
என்னிடம் ஏன் அப்படி சொன்னாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பேரன் “ நான்
உண்மை விலையைச் சொல்லியிருந்தால் உங்களுக்கு “ஹார்ட் அட்டேக்” வந்திருக்குமே, அதனால்தான்
உண்மை விலையைச் சொல்லவில்லை” என்று சொன்னானாம். இது எப்படியிருக்கு பாருங்க. ஆனாலும்
பேராண்டி விவரமாத்தான் சொல்லியிருக்கிறான்.
இதுதான் தலைமுறை
இடைவெளி. இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை வயதானவர்களின் இளமைக்கால பொருளாதாரத்திலிருந்து
மிகவும் மாறுபட்டது. அதை வயதானவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆகவேதான் இந்த இடைவெளி.
வயதானவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் இன்றைய இளைய சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உங்களால்
முடியாது. ஆகவே அவர்களை அனுசரித்துக் கொண்டு போனால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாயிருக்கும்.
சரியாச் சொல்லி இருக்கீங்க. காலத்துக்கு ஏத்தமாதிரி எல்லாம் நடக்குதுன்னு விட்டுறணும். அப்பத்தான் நாம் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கமுடியும்.
பதிலளிநீக்குசரியாச் சொல்லி இருக்கீங்க. காலத்துக்கு ஏத்தமாதிரி எல்லாம் நடக்குதுன்னு விட்டுறணும். அப்பத்தான் நாம் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கமுடியும்.
பதிலளிநீக்குநமக்குத்தான் தனி ஆவர்தனத்துக்கு ப்ளொக் இருக்குதுங்களே:-))))
சரியாகச்சொன்னீங்க ஜயா.....
பதிலளிநீக்குஇதுதான் தலைமுறை இடைவெளி. இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை வயதானவர்களின் இளமைக்கால பொருளாதாரத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. அதை வயதானவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆகவேதான் இந்த இடைவெளி. வயதானவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் இன்றைய இளைய சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உங்களால் முடியாது. ஆகவே அவர்களை அனுசரித்துக் கொண்டு போனால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாயிருக்கும்.////
பதிலளிநீக்குமிகச்சரியாக சொல்லி இருக்கீங்க!
கரெக்ட்தான். ஆனா செம் சைட் கோல்.
பதிலளிநீக்குசரியாச் சொல்லி இருக்கீங்க.
பதிலளிநீக்கு//பாலா said...
பதிலளிநீக்குகரெக்ட்தான். ஆனா செம் சைட் கோல்.//
இதில ஒரு சௌகரியம் பாருங்க, ஒருத்தரும் சண்டைக்கு வரமாட்டாங்க, இல்லீங்களா? எப்படி நம்ம ஐடியா?
நீங்கள் எழுதியதைப் படித்தபிறகு, நான் என் பதிவுகளை கவனமாக எழுத வேண்டும் என்னும் எண்ணம் வருகிறது. இல்லையென்றால் என்னையும் கிழடு ஏதோ எழுதுகிறது என்று எண்ணு வார்கள் அல்லவா.?
பதிலளிநீக்குஇதை நான் ஆமோதிக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையாக சொல்லி இருக்கின்றீர்கள். அடிக்கடி இந்த்ப் பக்கம் வருகிறேன் ஐயா.
பதிலளிநீக்குபழம் இனிக்கும் .காய் கசக்கும் .
பதிலளிநீக்குமுதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு .
இளமை அவசரத்தின் கோலம். கண்டதை விழுங்கும் வேட்கை . துடிப்பின் வேகம் தடுமாற்றத்தின் காட்சி .
உண்மைதான், கிழவர்கள் எல்லாம் புத்திசாலிகள்தான் என்பதை எங்களுக்கு உணர்த்திய உங்கள் சாமர்த்தியம்.
பதிலளிநீக்குஅண்ணியாரே, சூடாக ஒரு கப் பில்டர் காப்பி நம்ம அண்ணாத்தேக்கு வேண்டுமாம். கூடவே எனக்கும் என்று சொல்லவேண்டியதில்லை.
//துளசி கோபால் said...
பதிலளிநீக்குசரியாச் சொல்லி இருக்கீங்க. காலத்துக்கு ஏத்தமாதிரி எல்லாம் நடக்குதுன்னு விட்டுறணும். அப்பத்தான் நாம் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கமுடியும்.//
கரெக்டா சொன்னீங்க, துளசி கோபால். இதைத்தான் மனமுதிர்ச்சி என்று சொல்லலாம். இந்த முதிர்ச்சி வரவில்லையென்றால் எல்லோருக்கும் சிரமம்.
//K.s.s.Rajh said...
பதிலளிநீக்குசரியாகச்சொன்னீங்க ஜயா....//
நன்றி Rajah.
//ஸாதிகா said...
பதிலளிநீக்குமிகச்சரியாக சொல்லி இருக்கீங்க!//
நன்றி ஸாதிகா.
//சே.குமார் said...
பதிலளிநீக்குசரியாச் சொல்லி இருக்கீங்க.//
நன்றி குமார்.
//G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குநீங்கள் எழுதியதைப் படித்தபிறகு, நான் என் பதிவுகளை கவனமாக எழுத வேண்டும் என்னும் எண்ணம் வருகிறது. இல்லையென்றால் என்னையும் கிழடு ஏதோ எழுதுகிறது என்று எண்ணுவார்கள் அல்லவா.?//
அப்படி நினைக்கவேண்டாம் GMB. நம்மளால முடிஞ்சத எழுதறோம். பிடிச்சவங்க படிக்கட்டும். நம்ம அனுபவம் யாருக்காவது உபயோகமானா சரி.
//NIZAMUDEEN said...
பதிலளிநீக்குஇதை நான் ஆமோதிக்கிறேன்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஜாமுதீன் அவர்களே.
//Kailashi said...
பதிலளிநீக்குஅருமையாக சொல்லி இருக்கின்றீர்கள். அடிக்கடி இந்த்ப் பக்கம் வருகிறேன் ஐயா.//
வாங்க, வாங்க. நானும் உங்க பக்கம் வாரேன்.
//nidurali said...
பதிலளிநீக்குபழம் இனிக்கும் .காய் கசக்கும் .
முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு .
இளமை அவசரத்தின் கோலம். கண்டதை விழுங்கும் வேட்கை . துடிப்பின் வேகம் தடுமாற்றத்தின் காட்சி .//
கருத்துக்கு மிக்க நன்றி, நீடூரலி அவர்களே.
//கக்கு - மாணிக்கம் said...
பதிலளிநீக்குஉண்மைதான், கிழவர்கள் எல்லாம் புத்திசாலிகள்தான் என்பதை எங்களுக்கு உணர்த்திய உங்கள் சாமர்த்தியம்.
அண்ணியாரே, சூடாக ஒரு கப் பில்டர் காப்பி நம்ம அண்ணாத்தேக்கு வேண்டுமாம். கூடவே எனக்கும் என்று சொல்லவேண்டியதில்லை.//
இந்த சாமர்த்தியம் இல்லைன்னா உங்க கிட்ட குப்பை கொட்ட முடியுமா?
காப்பி மட்டும் போதுமா? நீங்க வந்தீங்கன்னா யானை பிரியாணியே போட்டுடலாம்!!!!!!!
இன்றைய இளைய சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உங்களால் முடியாது. ஆகவே அவர்களை அனுசரித்துக் கொண்டு போனால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாயிருக்கும்./
பதிலளிநீக்குஅருமையான சங்கதி!
periyavarkal solvadhu ellaame thavarendru sollivida mudiyaadhu,,,,,,
பதிலளிநீக்கு"அனுசரித்துக்கொண்டு போங்கள் அதுவே மகிழ்ச்சிக்கான வழி" என அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குபெரியவரகள் தங்கள் அனுபவத்தை கண்டிப்பாக எழுத வேண்டும். அவர்கள் எழுதும் பதிவுகள் காலத்தால் நிலைத்து நிற்கும். இளைஞர்களுக்கு அதன் அருமை இப்போது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் அவர்களுக்கு புரியும் நேரம் வரும் போது அது அவர்களுக்கு ஒரு வேதமாக இருக்கும். அதனால் உங்களை போல உள்ள பெரியவர்கள் கணீடிப்பாக உங்களுக்கு தெரிந்த நல்ல அனுபவங்களை எழுதி இந்த வலை என்னும் பாதுகாப்பு பெட்டகதில் சேகரித்து வைக்க வேண்டும்
பதிலளிநீக்கு