எரியெனக் கென்னும் புழுவோ வெனக்கென்னும்
இந்த மண்ணும்
சரியெனக் கென்னும் பருந்தோ வெனக்கென்னுந்
தான் புசிக்க
நரியெனக் கென்னும் புண்ணா யெனக்கென்னுமிந்
நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனாலென்ன பேறெனக்கே.
இது தமிழ் பாட்டு
என்பதினால் பதவுரை, அரும்பதவுரை, பொழிப்புரை, கருத்துரை ஆகிய எதுவும் தேவையில்லை என்று
நினைக்கிறேன். அப்படி தேவைப்படுகிறவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையிலுள்ள புளியமரத்திற்கு சென்று அதனடியில்
மூன்று இரவுகள் தூங்கினால் எல்லா உரைகளும் உள்ளங்கை நெல்லியெனத் தெளிவாகும்..
ஏன் இந்தக் கொலை வெறி என்றால் அப்புறம் எப்படி இரண்டு நாளைக்கு ஒரு பதிவு போடுவது? இப்படித்தான்!!!!
பதிலளிநீக்குசூப்பரா இருக்கு சார்.. ( புளியமரத்துக்குகீழ நின்னு.. நானா யோசனை பனண்ணினேன்..)
பதிலளிநீக்கு:-)))))
///அப்படி தேவைப்படுகிறவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையிலுள்ள புளியமரத்திற்கு சென்று அதனடியில் மூன்று இரவுகள் தூங்கினால் எல்லா உரைகளும் உள்ளங்கை நெல்லியெனத் தெளிவாகும்..///
பதிலளிநீக்குஹா.ஹா.ஹா.ஹா.ஹா...............
சார் பாட்டு ஓரளவுக்கு புரிகிறது. இது பட்டினத்தார் பாடலா?
பதிலளிநீக்குஅருமையான பாடல்;
பதிலளிநீக்குநன்றி ஐயா
ம் ...
பதிலளிநீக்குபதிவு மிக அருமை...மிகஸ் சிறந்த கருத்துகள். பெரியவங்க நீங்க சொன்னா நல்லா கருத்தாதான் சொல்லியிருப்பீங்க. கடைசியில ஒரு விஷயம் உங்ககிட்ட ரகசியாமா சொல்லனும் யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க. அமெரிக்காவுல புளியம் மரம் எங்க இருக்குனு நான் தேட ஆரம்பிச்சுட்டேன் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஅ
பதிலளிநீக்குதினம் பதிவு போட என்ன செய்யணும்? ஹிந்தி கவிதை எழுதலாமா? :)
பதிலளிநீக்குஇது போன்ற கொடுமை செய்தால் புளியமரத்தில் தூக்கு மாட்டி இளைஞர் தற்கொலை. கைப்பற்ற கடிதத்தில் திரு சாமி என்று எழுதியிருக்கிறது. தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும் என்று தினத்தந்தியில் வருமே?
பதிலளிநீக்குபரவாயில்லையா?
கருத்துரை எழுதியிருக்கலாமே?