புதன், 14 டிசம்பர், 2011

தொழிற்சாலைகளும் விவசாயமும்



இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் அரசு மறைமுகமாக விவசாயத்தை நசுக்குகிறது என்கிற உண்மை பலருக்குத் தெரியாது. தொழிற்சாலைகளுக்கு நிலம் சலுகை விலையில் தரப்படுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கும், இயந்திரங்கள் வாங்குவதற்கும் சலுகை வட்டியில் கடன்கள் கொடுக்கப்படுகின்றன. தொழிற்சாலை ஆரம்பித்து பல வருடங்களுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப் படுகின்றன.

இவற்றையெல்லாம் அனுபவிப்பவர்கள் யாரென்று பார்த்தால் ஏற்கனவே தொழில்துறையில் ஏகபோக உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் பணமுதலைகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல்வாதிகளும்தான். இத்தகைய முதலாளிகளில் பெரும்பான்மை ஆசாமிகளின் வழிமுறை என்னவென்றால் – பேங்குகளில் ஏகப்பட்ட கடன் வாங்கி தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டியது. ஆரம்பித்திலிருந்தே பொய்க் கணக்குகள் எழுதி பெரும்பகுதி பணத்தை ஸ்வாஹா செய்து ஸ்விஸ் வங்கிகளில் போட்டுவிடுவது. சில வருடங்கள் கழித்து நஷ்டம் என்று சொல்லி தொழிற்சாலையை மூடிவிடுவது.

இந்த தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளினாலும் மற்ற ஆசை வார்த்தைகளினாலும் மக்கள் விவசாய வேலைக்குப் போகாமல் இந்த தொழிற்சாலைகளுக்கு சென்று விடுகிறார்கள். இவர்களுடன் இந்த விவசாயிகள் போட்டிபோட முடியாமல் நிலத்தை விற்றுவிடுகிறார்கள் அல்லது கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த கொள்கை நீடிக்குமானால் இந்தியா எதிர்காலத்தில் கல்லையும் மண்ணையும் சாப்பிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கும்.

6 கருத்துகள்:

  1. சரியாகச் சொன்னீங்க ஐயா,
    விளைநிலங்களை விலைநிலங்கள் ஆக்கிவிட்டு
    வாழ்வின் தற்போதைய நிலைக்காக விவசாயிகள்
    நிலை மாறுகையில் .. வருங்காலத்தில் உன்ன உணவு கிடைக்குமா
    என்பது கேள்விக்குறியாகவே உள்ளது....

    ஆள்வோர்களும் .. சாமானியர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு காட்டாது
    பெரும் பணக்காரர்களுக்கும் பண முதலைகளுக்கும்
    வாழ்வை முன்னேற்றுவதிலேயே குறியாக உள்ளனர்..
    எங்கே செல்லும் இந்த பாதை......

    பதிலளிநீக்கு
  2. பிறப்பால் நானும் விவசாய குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் இந்த கஷ்டம் எனக்கே எளிமையாக விளங்குகிறது. விவசாய கூலி வேலைகளுக்கு இப்போதெல்லாம் ஆட்களே கிடைப்பதில்லை. அதனால் விவசாயம் செய்வதையே நிறுத்திவிடுமாறு என் பெற்றோருக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். வயதான காலத்தில் அவர்கள் துன்பபடுவதை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை. என்ன செய்ய

    பதிலளிநீக்கு
  3. உண்மை நிலையை எண்ணி வேதனைதான் வருகின்றது.
    "கல்லையும் மண்ணையும் உண்டுதான் வாழமுடியும்" என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அப்படி உண்ண, வாழமுடியுமா ப்ரொஃபஸர் சார்?

    பதிலளிநீக்கு
  4. //NIZAMUDEEN said...
    உண்மை நிலையை எண்ணி வேதனைதான் வருகின்றது.
    "கல்லையும் மண்ணையும் உண்டுதான் வாழமுடியும்" என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அப்படி உண்ண, வாழமுடியுமா ப்ரொஃபஸர் சார்?//

    முடியாதென்பது அனைவரும் அறிந்ததே! ஒரு கருத்தை மிகவும் அழுத்தமாக சொல்ல இவ்வாறான உதாரணங்கள் காட்டுவது தமிழ் இலக்கிய மரபு என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு இலக்கணத்தில் ஒரு பெயர் இருக்கிறது. எனக்கு நினைவு வரவில்லை.

    பதிலளிநீக்கு
  5. http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_26.html

    விழாவிற்கு அவசியம் நீங்கள் வருவிர்கள் என்று நம்பிக்கையில் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. இரு மாதங்களுக்கு முன்பு தஞ்சை சென்றிருந்தேன், வயல் எல்லாம் தொழிற்சாலைகள் அல்லது பிளாட் போட பட்டுள்ளது......உங்களது பதிவை படித்தவுடன் இந்த பண முதலைகள் பற்றி கோபம்தான் வருகிறது !

    பதிலளிநீக்கு